இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, ஆகஸ்ட் 03, 2019

ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் துப்புரவு / Health, Hygiene and Sanitation


ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் துப்புரவு / Health, Hygiene and Sanitation
முனைவர் .திருநாவுக்கரசு தர்மலிங்கம்.Ph.D., கல்வி ஒருங்கிணைப்பாளர் (தேசிய குழந்தைகள்  அறிவியல் மாநாடு) மின்னஞ்சல்: rajammicrocare@gmail.com  செல் பேசி : +91-9751456001

ஆரோக்கியம் என்பது, மனிதனின் உடல், மனம், சமூகநலவாழ்வு, மற்றும் நோயின்மை அல்லது பலவீனமின்மை போன்ற காரணிகளை உள்ளடக்கியது என்று அதன் பரந்துபட்ட உணர்வில் விவரிக்கின்றது.

சுகாதாரம் என்பது நோய் உண்டாக்கும் நோய் கிருமிகளை தடுக்கும் முறை ஆகும்.
தூய்மைபடுத்தும் முறையானது (எ.கா. கைகழுவுதல்) நுண்கிருமிகள், அழுக்கு மற்றும் மண் ஆகியவற்றை நீக்கி தொடர்ச்சியான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான

துப்புரவு என்பது பொதுவாக, குப்பைகளை சேகரிப்பது, மனிதர்களின் சிறுநீர்,மலம், கழிவுநீர் ஆகியவற்றைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவது, இந்தசேவை மூலம்,சுகாதார நிலைமைகளை பராமரிப்பதும் ஆகும்

கருபொருளின் நோக்கம்  - மனிதர்ககளைப் பற்றிமட்டுமில்லாமல், முழுசுற்றுச்சூழல், உடல்நலம், சுகாதாரம், சுகாதாரப் பணிகள், ஆகியவற்றை ஆவண செய்தல், அறிவியல் தொழில்நுட்பம், மற்றும் புதுமையான அணுகுமுறைகள் மூலமாக ஆராய்வதும் ஆகும்

ஆய்வுக்கான சுருக்கம்
1. வாழும் உயிரினங்களின், ஆரோக்கியம்,சுகாதரம் ,துப்புரவு பற்றிய உலகளாவிய சூழலை புரிந்து கொள்ளவது,            
2. துப்புரவு பற்றாக்குறை, பொருளாதார உற்பத்தித்திறன் மீது தாக்கத்தையும்.  தனிநபர், குடும்பம், சுற்றுச்சூழல்அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டையே பாதிப்புக்கும் உள்ளாக்கும். துப்புரவு பற்றாக்குறை காரணமாக ஏற்பாடும் முக்கிய   பிரச்சினைகளை ஆய்வு செய்வது  
3.மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே காணப்படும் ஆரோக்கியக் குறைபாடானது மனநலம், மனஅழுத்தம், பதட்டம்,உணவுமுறை மற்றும் தூக்கமின்மைபோன்றகாரணிகளுடன்இணைந்துள்ளது. மேலும், இது இயல்பான உடற்பயிற்சி குறைவு  போன்ற காரணங்களாலும் இருக்கலாம். அவர்களின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்வது
4.நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் வழங்குவதின் மூலம் அவர்களின் வாழ்க்கைமுறையினை மேம்படுத்துதல் மேலும் பணிபுரியும் இடங்களிலும், வெளி இடங்களிலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் பற்றி ஆராய்வது

துப்புரவுத் துறை சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள்
உலகமக்கள் தொகையில் சுமார் 40% மக்கள் துப்புரவு சார்ந்த சுகாதாரக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
போதுமான துப்புரவு மற்றும் சுகாதாமின்மையால் வரும் வயிற்றுப்போக்கு நோயினால் நாள் ஒன்றுக்கு சுமார்  ஆறாயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.

துப்புரவுத் துறை சந்திக்கும் மிகப்பெரிய சவால்கள்
உலகமக்கள் தொகையில் சுமார் 40% மக்கள் துப்புரவு சார்ந்த சுகாதாரக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.
போதுமான துப்புரவு மற்றும் சுகாதாமின்மையால் வரும் வயிற்றுப்போக்கு நோயினால் நாள் ஒன்றுக்கு சுமார்  ஆறாயிரம் குழந்தைகள் இறக்கிறார்கள்.

துப்புரவு அணுகுமுறையின் மூலம் உற்பத்தித்திறனுக்கான முன்முயற்சி
  சுகாதாரம் ( குறிப்பாக சோப்பு போட்டு கை கழுவுதல்
  பெருகிவரும் குழந்தை இறப்பு
  மற்றும் பெருகிவரும் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களின் எண்ணிக்கை

பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் செயல்முறை மூலம் விளக்குதல்
சோப்புப் போட்டு கை கழுவுதல், சுகாதாரமான உணவு, மாதவிடாய் காலத்தூய்மை மற்றும் மேலாண்மை, பாதுகாப்பான முறையில் மலம் நீக்குதல், திடக்கழிவு மேலாண்மை

WASH (WATER, SANITAION AND HYGIENE) -கருத்துரு
தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் ஆகிய ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைபாடுகளின் தாக்கம் வலுவாக ஒன்றுடன் ஒன்று இணைந்து இருப்பதால் இவை அனைத்தும் ஒன்றாக கருதப்படுகின்றது

Ø  1 பில்லியன் மக்கள் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும்  உணவு கிடைக்கப்பெறாத நிலையில் உள்ளனர்.
Ø  ஊட்டச்சத்து குறைபாடு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை குறைக்கின்றது
Ø  பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியாவதற்கு காரணமாக இருக்கிறது
Ø  5-வயதிற்குட்பட்ட 1-மில்லியனுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவுடன் காணப்படுகிறார்கள்.
Ø  சுகாதாரம், துப்புரவு மற்றும் நீர்வழங்கல்,ஆகியவை ஆரோக்கிய மேம்பாட்டுக்கானமுன்னுரிமைகள் ஆகும்
Ø  வளர்ச்சியுற்ற உலகில் சுகாதாரம், துப்புரவு மற்றும் நீர் வழங்கல் ஆகிய முக்கிய காரணிகள் தொடர்ச்சியாக நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுஇருக்கின்றன

திட்ட ஆலோசனைகள்
திட்டம் - 1
உயிர் வடிகட்டுதல் / நுண்ணுயிரேற்ற செய்முறைகளின்  மூலமாக தண்ணீரின் தரத்தை உயர்த்தி மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல்.
Ø  சுமார் 30% குடிநீர் தரத்துக்கு இணையான நீர், கழிப்பறைகள்கழுவுவதற்குப் பயன்படுகின்றது
Ø  வீடுகளில் உற்பத்தி ஆகும் அழுக்குத் தண்ணீர் (சமையலறை, குளியல் மற்றும் கழிவுதலின் மூலம்             உருவாகும் நீர்) மறு சுழற்சி செய்யப்பட்டுகழிப்பறைகள் மற்றும் தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது
Ø  கூழாங்கற்கள் மற்றும் நீர்த்தாவரங்கள் கொண்டு தயாரிக்கப்படும் Reed Bed என்றும் சொல்லப்படும் நாணல் படுக்கைகளில் செலுத்தப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும் நீர் மேற்கூறிய செயல்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப் படுகின்றது

நோக்கம்:
பல்வேறு வகையான வீட்டுத்தேவைக்குப் பயன்படும் தண்ணீரை அளவிலும், தரத்திலும் மதிப்பீடு செய்வது,
நீரில் வளரும்  நுண்ணுயிரி மற்றும் தாவர இனங்கள் அதன் வழியாக கடந்து செல்லும் நீரின் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை புரிந்துகொள்வது,     
அந்தப் படுக்கையின் வழியாக செல்லும் நீர் மறு சுழற்சிக்காக படுக்கையில் தங்கும் நேரத்தின் அளவையும், மறுசுழற்சிக்குப் பிறகு வெளிவரும் நீரின் தரத்தில் அந்த கால அளவு ஏற்படுத்தும் தாக்கத்தையும் அறிந்துகொள்வது

செயல்முறை
1)வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திய தண்ணீரின் (சமையலறை குளிப்பதற்கு, சுத்தம் செய்வதற்கு)மாதிரிகளை சேகரித்து அதில் நுண்கிருமிகளின் தன்மை மற்றும் நீரின் இயல்பு தன்மை ஆகியவற்றை பரிசோதியுங்கள்.
2)சுத்தமான கூழாங்கற்கள், அடுத்து சரளைமண் கொண்டு, நெகிழி (Plastic) உருளையை நிரப்பி நாணல் படுக்கையை (Reed Bed) உருவாக்குங்கள்.   மேலும் அதில் ஈர நிலத்தில் வளரும் தாவரங்களை வளருங்கள். (குளங்களில் நீர்விளிம்பில் வளரும் தாவரங்கள்)
3)பயன்படுத்திய நீரை உருளையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்லுமாறு தண்ணீரைப் பாய்ச்சுங்கள்.
4)பாய்ச்சிய தண்ணீருக்கும் படுக்கையிலிருந்து வெளிவரும் தண்ணீரின் தரத்திற்கும் உள்ள வேறுபாட்டை கவனியுங்கள்.
5)பாய்ச்சிய தண்ணீரானது நாணல் படுக்கையில் தங்கும் நேரத்தை அதிகப்படுத்தி அதிலிருந்து வெளிவரும் தண்ணீரின் தரத்தை பரிசோதித்து பதிவுசெய்யுங்கள்.
6)வீட்டுத்தேவைக்கு ஏற்ப, பயன்படுத்தும் தண்ணீரை சுத்தம்செய்யத் தேவையான நாணல்படுக்கையின் அளவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
எதிர்பார்க்கும் விளைவு
ஈரமான நிலங்களின் வழியாக ஓடும் நீரை சுத்தப்படுத்தும் வழிமுறைகளை அறிந்துகொள்வது. குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப ஒரு நாணல் படுக்கையை வடிவமைத்தல் மற்றும் அளவிடல்

செயல்திட்டம்: 2
குளத்தில்உள்ளதண்ணீரின்தரத்தை அளவீடாக அக்குளத்தில் உள்ள தாவரம் மற்றும் விலங்குகளின் பல்வகைமையை ஆய்வு செய்வது.
முன்னுரை
நீர் வாழ் உயிர்கள், நீரின் தரத்தைப் பொருத்து வாழும் உணர்திறன்  கொண்டுள்ளன. நீரின் தரம் குறைந்து வருவதால் தாவர மற்றும் விலங்கு சமுதாயங்களின் வாழ்வு முறையும் மாறியுள்ளன.
குளங்களில் உள்ள பல்வேறு வகையான நீரின் தரத்தை ஆய்வு செய்வதின் மூலம் அந்தக் குளங்களில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பை அறிந்து கொள்ள முடியும், மேலும் குளமாசுபாட்டுக்கு ஏற்ப அந்த உயிர்களின் சகிப்புத் தன்மையையும் புரிந்து கொள்ள முடியும்.
நோக்கம்
நீரில் வாழும் உயிரிகளின் வாழ்வு முறையில் குளத்தின் நீர் மற்றும் அதன் தரம் உண்டாக்கும் விளைவுகளைப் பற்றி புரிந்து கொள்வது.
நீர் மாசுபடும் அளவினைப் பொருத்து நீர்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அழிவு மற்றும் வாழும் திறன் பற்றிய ஆய்வினை மேற்கொள்வது

செயல்முறை
உங்கள் இடத்தில் உள்ள குளங்களின் பல்வேறு வகையான மாசுபாட்டின் நிலையைக் கண்டறியவும்,
பெரிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் இருப்பைக் கண்டறிந்து, அவற்றை அடையாளம் காணுங்கள்
குளத்திலிருந்து நீர் மாதிரியை சேகரித்து அவற்றின் தரத்தை சோதனை செய்யுங்கள் (இயல்புத் தன்மை, இரசாயனத் தன்மை மற்றும் நுண் கிருமிகள் அளவினை பரிசோதித்தல்).
நீரின் தரத்தை நீர் வாழ் உயிரினங்களின் இருப்புடன் தொடர்பு படுத்திப் பார்க்கவும்
எதிர்பார்ப்பு
நீர் வாழ் உயிரிகள் வாழும் தன்மையை ஊக்குவிப்பதற்காக நீரின் தரத்தை மாற்றம் செய்வது. (நீர்மாசுப்பட்டுஇருந்தால்மட்டும்)
நீர் சுற்றுச் சூழலில் மாசுபடுதலின் பாதிப்பினை புரிந்து கொள்ளுதல்.
நீரின் தரத்தை முன் கூட்டியே எதிர் கொள்ள நீர்வாழ் உயிரினத்தின் இருப்புதன்மை அல்லது வாழ இயலாத்தன்மை போன்ற காரணிகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவது

செயல்திட்டம்: 3  தலைப்பு: சுயசுகாதாரம்
நோக்கம்
அன்றாட வாழ்வில், குறிப்பாக மாணவர்களுக்கு சுய சுகாதாரம், ஆரோக்கியம் ஆகிய இரண்டுக்கும்
இடையே உள்ள தொடர்பு மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்துவது.
செயல்முறை
சுயசுகாதாரம் தொடர்பான முக்கிய கேள்விகளுடன் ஒரு கேள்வித்தாளை வடிவமைத்து உருவாக்கவும்
(குளியல், கைதொழில், சோப்பின்பயன்பாடு, முடி, நகம் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்து தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் பற்றிய)
ஆய்வின் திடீரென பங்கேற்காமல் போகும் மாணவர்களின்       எண்ணிக்கையை கணக்கிடவும் (ஒருமாதகாலம்அல்லது அதற்கும் மேலாக பங்கேற்காமால்) பங்கேற்காமல் போனதற்கான காரணங்களை மதிப்பீடு செய்யவும். காரணம், உடல் நலக்குறைபாடு என்றால் அதை அடையாளம் காணவும்.
தனிப்பட்ட சுகாதார வரைக் கூறுகளுக்கும், உடல் நலக்குறைபாடு வகைகளுக்கும் உள்ள தொடர்பினை மதிப்பீடு செய்யவும்.
ஆய்வுகளின் எத்தனை வகையான செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளை மாணவர்கள் தவறவிட்டார்கள் என்பதை கணக்கிட்டு பதிவு செய்து கொள்ளவும்.
ஆய்வில் முழுமையான முறையில் எத்தனை மாணவர்கள் பங்கேற்று சுய சுகாதார வழி முறைகளை பின்பற்றினார்கள் என்பதை கணக்கிட்டு பதிவு செய்யவும்
சுய சுகாதார நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றைப் பின்பற்ற வேண்டி முக்கியத்துவத்தையும் அதற்கான சரியான முறைகளையும் உருவாக்க வேண்டும்.
எதிர்பார்ப்பு
ஆய்வில் கிடைத்த அனுபவத்தின் மூலமாக குறிப்பாக சுய சுகாதார செயல்பாடுகளை பின்பற்றாமல் விட்டதின் மூலம் கிடைத்த முடிவுகளின் படி, சுயசுகாதாரம் நம் அன்றாட வாழ்வில் எவ்வாறு முக்கியமானது என்பதை நிறுவ வேண்டும்

செயல்திட்டம்: 4  குடிநீரின்தரத்தைஉயர்த்துதல்
நோக்கம்
பள்ளியில் சமூகத்தில் உள்ள குடி நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல் மற்றும் பருகுவதற்கு தகுதியுள்ள நீரை பொருத்தமான தொழில் நுட்பங்கள் மூலம் குடிநீராக மாற்றம் செய்தல்.
செயல்முறை
 உலர்ந்த கிருமி நீக்கம் செய்யப்பட்ட கண்ணாடி புட்டிகளில் அல்லது சிறிய கொள்கலன் மூலம் 100மிலி தண்ணீரை சேர்க்கவும். சேகரித்த நீரினை கல்லூரி, பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள ஆய்வுக் கூடத்தில் அதன் இயல்பு, (நிறம், மணம், கலங்கல் தன்மை இரசாயனம் PH, உலோகங்கள் முதலியன... மற்றும் நுண்ணுயிரிகள் (ஆல்கா, பாக்டீரியா முதலியன) பற்றிய ஆய்வு செய்தல் வேண்டும்.
ஆய்வின் மூலம் கிடைத்த நீரின் பண்புகளை ஆராய்ந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்ததுதானா என்று உறுதிபடுத்த வேண்டும். குடிப்பதற்கு உகந்தது இல்லையெனில், நீரினை பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு தகுந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவேண்டும்.
செயலாக்கத்திற்கு பிறகு நீரின் பண்புகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்
எதிர்பார்ப்பு - உயிர்வடிகட்டுதலின்பலாபலன்களைநிலைநாட்டுதல்.

முனைவர் .திருநாவுக்கரசு தர்மலிங்கம்.Ph.D., கல்வி ஒருங்கிணைப்பாளர் (தேசிய குழந்தைகள்  அறிவியல் மாநாடு) மின்னஞ்சல்: rajammicrocare@gmail.com  செல் பேசி : +91-9751456001

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக