அன்புடையீர், வணக்கம் !
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
துளிர் வினாடி வினா
இந்த ஆண்டும் துளிர்
வினாடி வினா ஆகஸ்ட் 4ஆம் தேதி (சனிக்கிழமை) சேலம் C.S.I Good
Shepherd Matric மேல்நிலைப்
பள்ளி (கோட்டை)யில் நட்த்துகிறது.
அனுமதி முற்றிலும் இலவசம். (நுழைவுக் கட்டணம் கிடையாது)
எனவே துளிர் வினாடி
வினா நிகழ்ச்சியில் தங்கள் பள்ளியின் மாணவர்களை கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
துளிர் வினாடி வினாவில் கேட்கப்படும்
கேள்விகள் பள்ளி பாடங்களில் இயற்பியல், வேதியியல்,உயிரியல், சமூக அறிவியல்,
வானியியல், கணக்கு(கணித ஆண்டு), ஆற்றல் (ஆற்றல் ஆண்டு) மற்றும் துளிர் ஜந்தர் மந்தர் ஆகியவற்றிலிருந்து கேட்கப்படும்
குழுவில் பங்குபெறும்
மாணவர்கள் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.
1.
ஒவ்வொரு பிரிவிற்கும் 3 மாணவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்க
வேண்டும்
2.
6,7,8 பிரிவு வகுப்பிற்கு தலா ஒருவர்
3.
9,10 பிரிவில் 9 ஆம் வகுப்பில் இருவர், 10 ஆம் வகுப்பில்
ஒருவர்
4.
11,12 பிரிவில் 11 ஆம் வகுப்பில் இருவர், 12 ஆம் வகுப்பில்
ஒருவர்
5.
ஒன்றியத்திலிருந்து மாநிலம் வரையிலும் பிரிவுகள் இதுதான்
6.
இதில் எந்த மாற்றமும் கூடாது
7.
மாணவர்கள் பள்ளி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என்றுதான்
பங்கேற்க வேண்டும்.
கலந்து கொள்ளும் குழுவை
பற்றிய தகவல்களை துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம் அவர்களிடம் தகவல் கொடுக்கும்படிக் கேட்டு கொள்கிறோம். தகவலில்
மாணவர்களின் பெயர், தலைமை ஆசிரியர் பெயர்,பள்ளியின் முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி
மற்றும் கைபேசி எண்களை கொடுக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
பதிவுக்கு கடைசி நாள் 30/07/2012.
நன்றி.
இப்படிக்கு,
M.கற்பகம்,
(மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
துளிர் வினாடி வினா)
96594 53089, 78717 99969.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக