வணக்கம். ,நாங்கள், NCSC, வழிகாட்டி கையேடு தயாரிப்புக்காக, அதன் மூளை புயல் அமர்வுக்காக, Brain storming session என்பதை கொஞ்சம் விளையாட்டாய் சொன்னேன். அப்போது நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கு அருகில் காகிதத்தால் கூடு கட்டும் குளவி பார்த்தேன். அதனை படமும் பிடித்தேன். பின் அது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் அதனை இத்துடன் இணைத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.
நன்றி.
நன்றி.
என்றும் அன்புடன்,
மோகனா .
பேப்பர் .கூடு கட்டும் குளவி..
நம்மில் பெரும்பாலோருக்கு குளவியை நன்றாகவே தெரியும். நம்வீடுகளில் மண் வீடு கட்டுமே .. அதுதானே..! அந்த குளவி மண் வீடு கட்டினால், வீட்டில் குழந்தை பிறக்கும் என்றுகூட சொல்வார்களே.. அந்த குளவிதான் இது பட்டாம் பூச்சி இனத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, இது தேனீயும் அல்ல, எறும்பும் அல்ல. பயிர்களை சாப்பிடும், பூச்சிகளை குளவி வேட்டையாடும்.சூழல் மண்டலத்தின் நெருங்கிய நண்பன்தான் குளவி.இவை துருவப் பிரதேசம் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன. இதன் எடை 1 கிராமுக்கும் குறைவே. வாழ்நாள் 12-22 நாட்களே.குளவி இனத்தில்,சுமார், 100,000௦௦௦ இனங்கள் உள்ளன. பெரும்பாலும் இவை ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றன. சில குளவிகள் தனியாகவும், சில கூட்டு சமூக வாழ்க்கையும் நடத்துகின்றன. பெரும்பாலும் இவை கூடு கட்டுவதில்லை. ஆனால் சில குளவிகள் அற்புதமாக வீட்டை கட்டுகின்றன. குளவிகளுக்கு, எறும்புகள் போலவே, கூட்டுக் கண்கள உண்டு.குளவிகள், கம்பளிப் புழுவாய் இருக்கும் போது ஒட்டுண்ணியாகவும், வளர்ந்து முதிர்ந்த பருவத்தில் தேன் மற்றும் மகரந்தத்தை உண்பவர்களாகவும் இருக்கின்றன. சமூக குளவிகள், சர்வபட்சிணிகள். எதை வேண்டுமானாலும், போட்டு தள்ளும்.சில குளவிகள் ஆச்சரியமான பழக்கம் , வழக்கம், உடையவை.இதில் மஞ்சள் சட்டைகாரன் என்ற குளவி, இறந்த விலங்குகளை தன் குஞ்சான கம்பளிபுழுவுக்கு பொறுக்கி வந்து தரும்.சில இனங்களில், கம்பளிப் புழு தன் உடலில் இருந்து, தேன் போல ஒரு சுரப்பை முதிர்ந்த குளவிக்குத் தரும்.மஞ்சள் சட்டைக்காரன் குளவி, தன் குஞ்சு கம்பளிக்கு, தேனீக்களின் கூட்டிலிருந்து தேனைத் திருடிவந்து கொடுக்கும் .
பெரும்பாலான சமூக குளவிகள், பேப்பர் கூடுதான் கட்டு கின்றன.குளவியின் இனம் மற்றும் இருக்கும் இடம் பொறுத்தே கூடுகள் கட்டப் படுகின்றன. இவை மரத்திலோ, பொந்திலோ, தரையில் உள்ள பள்ளங்களிலோதான் தங்களின் கூட்டை கட்டுகின்றன. இவைகளுக்கு, தேனீக்கள் போல, மெழுகு சுரக்கும் சுரப்பி கிடையாது. இவை மரத்தின் கூழிலிருந்து, பேப்பரை உற்பத்தி செய்கின்றன. ,இவை, சிதைந்து போன மரங்களிலிருந்து,மரத்தூளைக்கொண்
கூடுகட்டும் குளவிகள், சுமார் 1 100 வகைகள் உள்ளன. குளவிகள், இணைதேடுவதற்காக பறக்காது..பருவம் வந்த இளைய ராணியுடன், ஆண் இணையும். அதன் பின் பெண்ணின்வயிற்றிலுள்ள ஒரு பந்து போன்ற அமைப்பில், ராணி ஆணின் விந்து செல்களை சேமித்து வைத்திருக்கும்..எனவே, ஒவ்வொரு முறை முட்டையிடும்போதும்.சேமித்து வைத்துள்ள விந்தே, முட்டையுடன் இணைந்து, பெண் குளவிகள் உருவாகின்றன. இதில் கருவுற்ற முட்டைகளும், கருவுறாத முட்டைகளும் இருக்கின்றன. ஆனால் கருவுற்ற முட்டையிலிருந்து, பணிப்பெண்ணும், கருவுறாத முட்டையிலிருந்து, ஆணும் உருவாகின்றன. , பல முட்டைகளிலிருந்து, கரு உருவாக்க முடியாத மலட்டு குளவிகளேப பிறக்கின்றன.
Mobile:94430 44642
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக