அன்பு நண்பர்களே..
வணக்கம். இந்த சுட்ட மனிதனையும். உறைந்த மனிதனையும் பாருங்கள். ஆல்ப்ஸ் ..மலையின் ..ஓரத்தில்..!!அழகிய ..ரைன் நதி.. இன்நதி ..ஓரத்தில்..!!
இஞ்சி மம்மி...!
நண்பா , நீங்கள் பார்க்கும் படம், ஆப்பிரிக்காவின், எகிப்திய பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இயற்கை மம்மி.
மம்மி என்ற சொல் அரேபிய மொழியிலிருந்து வந்ததாம்..இதுதான் மிக வயதான மம்மியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 5 ,400௦௦. கருவின் நிலையில், கவிழ்ந்து காணப்படும் இதன் பெயர், இஞ்சி மம்மி. நிறத்தை வைத்தும, முடி சிவப்பாக இருப்பதாலும் இப்படி பெயரிடப்பட்டது. இது எகிப்திய கெபெளின் பாலைவனத்தில் , இயற்கையாக மணலில் சூரிய வெப்பத்தில் கருவாடு ஆக்கப்பட்ட மம்மி. நம்ம ஊர்லே கடற்கரையிலே கருவாடு காயப்போட்டு இருப்பாங்களே .. அதுபோல்தான் இதுவும். வெயிலில் உடலின் 75 % நீர் ஆவியாகி போனபின்பு பாக்டீரியா அதன் உடலை சிதைக்க முடியாது. மம்மியின் அருகில் கிடக்கும் மண் பானைகள் ,இறந்த மனிதன் அவனின் சொர்க்க/பாதாள வாழ்க்கை வாழ உணவு, பொருள்கள் மற்றும் நீர் அவனுடன், அவனை புதைத்தவர்கள் வைத்துள்ளனர். கல்லறையின் மேல் ஏராளமான கற்கள் அடுக்கப்பட்டு இருந்தன.. என்ன ஓநாய்கள் உடலை கூறு போடாமல் இருக்கவே..!
இப்போது இது லண்டனிலுள்ள அருங்காட்சியத்தில்.. அறை எண் 64ல் ..!..ஓட்சி...பனிமனிதன்...!
ஒட்சி போட்டிருந்த பொருட்கள் இவை..!
--
Prof.S.Mohana, TNSF,
Mobile:94430 44642
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக