இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், ஜூலை 18, 2012

இளைஞர் அறிவியல் திருவிழா 2012 - ‘நமது சமுதாயத்தை கண்டறிவோம்”


‘நமது சமுதாயத்தை கண்டறிவோம்”

இளைஞர் அறிவியல் திருவிழா 2012

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஓர் மக்கள் அறிவியல் இயக்கம்.   பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இதன் அங்கத்தினர்கள்.  மத்திய மாநில அரசு ஊழியர்களும், தன்னார்வத்தின் அடிப்படையில் அனைத்துப் பிரிவு மக்களும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  யுஐPளுNஇ டீபுஏளு மற்றும் Nஊளுவுஊ நேவறழசம என்ற அகில இந்திய அளவிலான அமைப்புகளோடு கல்விக்காகவும் அறிவியல் பரப்புதலுக்காகவும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தமிழில் அறிவியல் கருத்துக்களை கூறி, அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பரப்புதலை சென்னையை மையமாகக் கொண்டு தோன்றியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.  அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்ததன் மூலம் மாநிலம் முழுவதும் கிளைகளைப் பரப்பி மாநிலம் முழுவதும் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.

கல்வி, அறிவியல் பரப்புதல், சமம், அறிவியல் வெளியீடுகள் மற்றும் வளர்ச்சி என ஐந்து உபகுழுக்கள் இயங்கி வருகிறது.  அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காக ‘விஞ்ஞான சிறகு”, சிறுவர்களுக்கான அறிவியல் இதழாக ‘துளிர்”, ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ‘ஜந்தர் மந்தர்”, ஆசிரியர்களுக்காக ‘விழுது”, சுயஉதவிக்குழு பெண்களுக்காக ‘அறிவுத்தென்றல்”; என ஐந்து இதழ்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.  இத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்காக மாநில அளவிலும் பல போட்டிகளையும் நடத்தி வருகிறது.  குறிப்பாக 1993-ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை தமிழ்நாட்டில் வெற்றிகரமான ஒருங்கிணைத்து வருகிறது.  கல்வியிலும், அறிவியல் பரப்புதலிலும் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 2010-ஆம் ஆண்டு முதல் கல்லூரி இளைஞர்களுக்காக ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.  இதற்கு ‘இளைஞர் அறிவியல் திருவிழா” என பெயர் சூட்டியுள்ளது.  முதல் இளைஞர் அறிவியல் திருவிழாவை ஈரோட்டிலும், இரண்டாவது மாநாட்டை மதுரையிலும் நடத்தி, மூன்றாவது இளைஞர் அறிவியல் திருவிழாவை சேலத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

மூன்றாவது அறிவியல் திருவிழாவிற்கான மையப்பொருள்:-
‘இயற்கை சமூகம் விஞ்ஞானம்” என்பதே மையக்கருப் பொருள்.  மேற்கண்ட மையக் கருப்பொருளை அடிப்படையாக வைத்து,

கல்வி முறைகள்
சமூகத்தின் மீது அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம்
மூடநம்பிக்கையை அகற்றுதல்
சுற்றுச் சூழல் பாதுகாத்தல்
நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல்
கிராமப்புற வளர்ச்சி
ஆரோக்கியம் ரூ சுகாதாரம்
பெண் சமுத்துவம்

மேற்படி பிரச்சனைகளை நெருக்கமாக உற்றுநோக்கி, தெளிவாக ஆராய்ந்து, பொருத்தமான கேள்விகளை எழுப்பி பின்பற்றத்தக்க மாதிரிகளை உருவாக்கலாம்.  தீர்வுகளை முன் மொழிதல், மாற்று தீர்வுகளை முயற்சித்து பார்க்கலாம்.  களஆய்வு, பரிசோதனைகள் மூலம் அவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இளைஞர் அறிவியல் திருவிழாவில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?

17 – 23 வரையுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
2 முதல் 4 நபர்கள் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்.
ஒரு ஆய்வுக்கு ஒரு வழிகாட்டி ஆசிரியர் இருக்க வேண்டும்.
வழிகாட்டி ஆசிரியர் கல்லூரி பேராசிரியராகவோ, கல்வியாளராகவோ,
சமூக ஆர்வலராகவோ இருக்கலாம்.
ஒரு கல்லூரியில் இருந்து அதிகபட்சம் மூன்று ஆய்வு ஏடுகள் சமர்ப்பிக்கலாம்.

இளைஞர் அறிவியல் திருவிழா திட்டங்களின் முக்கிய அம்சங்கள்

புதுமையாக, எளிமையான மற்றும் நடைமுறைக்கு ஏற்றவாறு இருத்தல்
தினசரி வாழ்க்கை முறைகளை, சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து முடிவெடுத்தல்
களப்பணி விவரங்களை சேகரித்தல்
தகுதியான, பொருத்தமான எளிய தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்தல்
அறிவியல் முறைகள் மூலம் திட்டமிட்ட பலன்கள்
நிச்சயமான தொடர் கண்காணிப்பு முறைகள்
2 - 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் பிரதிநிதியாதல்
ஒவ்வொரு திட்டகுழுவும் ஒரு திட்ட வழிகாட்டியுடன் இருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 50 சிறந்த திட்ட குழுக்கள் மாநில அளவிலான இளைஞர் அறிவியல் திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்படும்
உடல் ஆரோக்கியம், இயந்திரவியல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் இவைகளுக்கு தனித்தனியாக திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சனைகளின் முக்கியத்துவம், புள்ளிவிவரங்கள் சேகரித்தல், ஆராய்தல், பரிசோதித்தல், செல்லுபடியாதல், தீர்விற்கு முயற்சித்தல், குழுவாக செயல்படுதல் இவற்றின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படும்
ஒவ்வொரு பிரிவின் (தலைப்பு) கீழும் 10 திட்டங்கள் மாநில அளவிலான விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படும்
இளைஞர் அறிவியல் திருவிழாவிற்கு பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்
சிறந்த திட்டங்களின் சுருக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் புத்தகமான வெளியிடப்படும்
பதிவுக்கட்டணம்: ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிவுக்கட்டணமாக ரூ.100/-க்கு வரைவோலை ‘Tamil Nadu Science Forum” Payable at Salem  என்ற பெயரில் எடுக்க வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:
பதிவுக்கான கால அவகாசம்: 2012 ஜீலை 31-ந் தேதிக்குள்
பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 2012 செப்டம்பர் 25-ம் தேதிக்குள்
பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுடன் கீழ்கண்ட தகவல்கள் இணைக்கப்பட வேண்டும்

1. திட்டத்தின் தலைப்புடன் குழுத் தலைவரின் பெயர், திட்ட வழிக்காட்டியின் பெயர், அவர் பணிபுரியும் நிறுவனப் பெயர்
2. பொருள்
3. கருச்சுருக்கம் (100 வார்த்தைகள் ஃ 20 வரிகள்)
4. அறிமுகம்
5. கருத்து
6. வழிமுறை
7. முடிவு மற்றும் விவாதங்கள்
8. சான்றுகள்
9. உங்களுடைய கருத்து
10. ஏற்று கொள்ளக்கூடிய பதில்

தேர்வு செய்யப்பட்ட திட்டங்கள் 2012 செப்டம்பர் 30 அன்று தகவல் கொடுக்கப்படும்
திட்டங்களை நேரில் சமர்பிக்கும் நாள் - 2012 அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதி
திட்டங்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் செய்யலாம்
பதிவு மற்றும் தொடர்புக்கு

மாநில ஒருங்கிணைப்பாளர்
பேராசிரியர் முருகேசன்
தமிழ் துறை
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
வடச்சென்னிமலை
ஆத்தூர் தாலுக்கா
சேலம் - 636 121.
கைப்பேசி : 99624 45442
மின்னஞ்சல் - tnsfsalemysf2012@gmail.com

மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர்
       Dr.S.கிருஷ்ணசாமி,
    Old 2/154>  தெற்கு 5வது வீதி,
    பல்கலைநகர் கிழக்கு,
    மதுரை 625 021.
    கைப்பேசி: 94421 58638.                            
                                                     இப்படிக்கு

                                                                                   பேராசிரியர் முருகேசன,                                                                                                                  
                                                                               மாநில ஒருங்கிணைப்பாளர்
                                                                      இளைஞர் அறிவியல் திருவிழா,
                                                                            தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

“Let us Discover our Society”
Youth Science Festival-2012
Organised by: Tamil Nadu Science Forum (TNSF)


Registration Form
1.     Title of the Project:
  1. Area of Study: Natural Science/ Social Science/  Engineering/ Technology
(Tick the appropriate study area)
3.     Name,address,email,mobile/phone of the Team Members                                                     Age 
           -----------------------------------------          --------------                               --------
            ------------------------------------------        ---------------                             --------
            -----------------------------------------          ----------------                           --------
            -----------------------------------------          ---------------                             -------
4.     Name, address, email, mobile/phone of the Guide:
5.     Name of the Institution of Guide:
6.     Fee details: DD------------------------------------
7.     Signature of the Team Members:
8.     Signature of the Guide:
(This form may be duplicated)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக