அன்பார்ந்த அறிவியல் இயக்க நண்பர்களுக்கு வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நேற்று தேசிய அறிவியல் தினம் (28.02.2018) தாரமங்கலம் கிளை சார்பாக 5 தாரமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
இந்த தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பள்ளியில் கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் நமது மாவட்ட அறிவியல் இயக்கம் சர்.சி.வி.ராமன் எழுதிய வானம் நீல நிறமா? ( தமிழில் சி.எஸ்.வெங்டேஸ்வரன் ) என்ற ₹20 மதிப்புள்ள புத்தகத்தை ஒளிநகல்(xerox) எடுத்து ₹ 3 க்கு வழங்க ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு ராமன் விளைவை தெரிந்துகொள்வதோடு அல்லாமல் புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும் , அறிவியல் மேல் ஈடுபாட்டையும் , அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும் கொண்டு வர நமது சேலம் மாவட்டம் அறிவியல் இயக்கம் முயற்சி எடுத்து அதை நேற்று வெற்றிகரமாக செய்து முடித்தது.
மாவட்டத்தில் இருந்து திருமிகு.ஜெயமுருகன் மாவட்டத் தலைவர் , அவர்களும்
திருமிகு.சுரேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவரகளும்
தாரமங்கலம் பகுதிக்கே வந்து தேசிய அறிவியல் தின சிறப்புகளையும் , சர்.சி.வி.ராமன்அவர்களின் ராமன் விளைவு ( வானம் ஏன் நீல நிறமாக உள்ளது ) பற்றியும் அந்த ஐந்து பள்ளிகளுக்கும்
1.எம்.ஜி.ஆர் காலனி - ஜெயமுருகன் .(150 புத்தகம் வாசிக்கப்பட்டது )
2.செங்கோடனூர் - சுரேஷ்
3.ஆ.ப.வட்டம் - ஜெயமுருகன் (25 புத்தகம் வாசிக்கப்பட்டது)
4.மாட்டையாம்பட்டி - சுரேஷ் ( 25 புத்தகம் வாசிக்கப்பட்டது )
5. கிருஷ்ணம்புதூர் - ஜெயமுருகன் , சுரேஷ் ( 25 புத்தகம் வாசிக்கப்பட்டது)
6. சிவகாமி அம்மாள் பள்ளி - தொளசம்பட்டி (100 புத்தகங்கள் வாசிக்கப்பட்டது.)
விளக்கினார்கள் .மேலும் கூடுதலாக மாணவர்களுக்கு அறிவியல் மேல் ஆர்வம் ஏற்பட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த பாடல்களையும், அறிவியல் விழிப்புணர்வு பாடல்களை பாடியும் ஆர்வத்தை ஏற்படுத்தினார்கள்.
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை எங்களுக்கும் நடத்தி தாருங்கள் என்று பல பள்ளிகளில் இருந்து ( தாரமங்கலம் , ஓமலூர் , மேச்சேரி ஒன்றியங்களில் ) தலைமையாசிரியர்கள் கேட்டுள்ளார்கள் .
அந்த அளவுக்கு நேற்றைய தாரமங்கலம் அறிவியல் இயக்க நிகழ்வுகள் மாவட்ட முழுக்க பரவியுள்ளது.
இந்த நிகழ்வுக்கு ஆதரவு தந்த அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் , மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , தாரமங்கலம் கிளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட
திருமிகு.ஜெயமுருகன் மாவட்டத் தலைவர் , அவர்களுமக்கும்
திருமிகு.சுரேஷ் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அவரகளுக்கும்
தாரமங்கலம் அறிவியல் இயக்க கிளை நன்றியை தெரிவித்தது கொள்கிறது.🙏🏻🙏🏻
சி.சந்தோஷ்குமார் / செயலாளர் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் , தாரமங்கலம் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக