இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், ஏப்ரல் 18, 2018

துளிர் இல்ல செய்தி

துளிர் இல்ல செய்தி:  குகை கிளை சார்பில் துளிர் இல்லம் துவங்க ஆலோசனை கூட்டம் இன்று (4-3-2018) மாலை 7 முதல் 8 வரை திருமிகு.சண்முகசுந்தரம் ஐயா அவர்கள் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் G.சுரேஷ் கலந்துகொண்டு அறிவியல் பாடலுடன் தேசிய அறிவியல் தினம் குறித்து கலந்துரையாடினார், துளிர் இல்லம் துவங்குவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். திருமிகு.ஜடாபிரிசில்ல மற்றும் நகுல்காஸ்ட்ரோ உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர். கூட்ட முடிவு: 18-03-2018 மாலை துளிர் இல்ல துவக்கி (விழா) நடத்துவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக