இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், ஏப்ரல் 18, 2018

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் - 2018

திருச்சிக்கு அருகே திருவானைக்காவலில் பிறந்தவரும், முதன் முதலாக இந்தியாவிலேயே பயின்று இந்தியாவிலேயே ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவரும், உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த  தமிழருமான சர் சி.வி.ராமன். நோபல் பரிசை பெற காரணமான அவரது இயற்பியல் கண்டுபிடிப்பு (அணுத்திரண்மச் சிதறல்)  பற்றிய ஆய்வு முடிவை உலகுக்கு வெளியிட்ட நாள் பிப்ரவரி 28யை  தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்து கொண்டாடிவருகிறது, 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தேசிய அறிவியல் தினம் மாநிலம்முழுதும் அறிவியல் நிகழ்ச்சிகள், அறிவியல் சொற்பொழிவுகள்,  எளிய அறிவியல் ஒளி பரிசோதனைகள் (ராமன் விளைவை விளக்கும் வகையில்), சர் சி.வி.ராமன் முகமுடி அணிந்து ஊர்வலங்கள், சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பை விளக்கும் காணொளி, நழுவுபட காட்சிகள், அறிவியல் பாடல்கள் மற்றும் அறிவியல் கட்டுரை, ஓவியம், குறும்படம் என பல்வேறு போட்டிகளை நடத்தியும்  பள்ளி,  கல்லூரி, துளிர் இல்லங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு வகைகளில் கொண்டாடினர் ,

அதன் பகுதியாக அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை பள்ளி மாணவர்களிடையே வளர்க்கும் விதத்தில்   சேலம் மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகள் தளவாய்பட்டி (A.P.J.அப்துல்கலாம் துளிர் இல்லம்), தாரமங்கலம் வட்டத்திலுள்ள எம்.ஜீ.ஆர். காலனி, ஆ.பா.வட்டம்(மேரி  கியூரி துளிர் இல்லம்), கிருஷ்ணம்புதூர், செங்கோடனுர், மாட்டையாம்பட்டி, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளிலும், நல்லண்ணம்பட்டி, கன்னந்தேறி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளிலும்,தொளசம் பட்டி சிவகாமி அம்மாள் துவக்க பள்ளியிலும் , ஆத்தூர் திரு.சின்னசாமி அய்யா அரசு உதவி பெரும் பள்ளியிலும், மற்றும் சேலம் எருமைபாளயம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, அரசு உயர் நிலைபள்ளி, கருங்கல்பட்டி வீரலட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய பகுதிகளில் சர் சி.வி.ராமன் 1968 ஆம் ஆண்டு அவரது 80ஆவது வயதில் பள்ளி சிறுவர்களுக்காக அளித்த சொற்ப்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரையை மாணவர்கள் வாசித்து கலந்துரையாடினார், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் அறிவியல் உறுதிமொழி எடுத்தனர், மேலும் அறிவியல் பாடல், சர் சி.வி.ராமன் வாழ்க்கை வரலாறு குறித்த கருத்துரை, என நிகழ்ச்சிகள் நடைபெற்றது கருத்தாளர்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர்கள், ஜெயமுருகன், சுரேஷ் , பழனி, ராஜாங்கம், சந்திரசேகர், ஜெயக்குமார், செங்கோடன், விஜயலக்ஷ்மி,செங்கோட்டுவேல், சந்தோஷ், அரவிந்தன், சண்முகராஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர் ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக