மாவட்ட மாநாடு
தமிழ்நாடு
அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட 11வது மாநாடு 2013 ஜுலை 14ந் தேதி ஞாயிற்று கிழமை சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகிலுள்ள டான் பாஸ்கோ
அன்பு இல்லத்தில் காலை 11.00 மணிக்கு துவங்கியது.
முதலில் கடலூர் மாவட்ட அறிவியல்
இயக்க முன்னோடி திருமிகு K.P. நாராயணன்
அவர்களுக்கும், உத்ரகாண்ட்
மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தோருக்கும், தருமபுரி
இளவரசன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அடுத்தாக திருமிகு G. சுரேஷ் அவர்களின் பாடலுடன்
மாநாடு துவங்கியது. திருமிகு சசிகலா அவர்கள்
வரவேற்புரையாற்றினார்.
மாவட்டத்தலைவர் Dr. R. சாம்சன்ரவீந்திரன் அவர்களின் தலைமையுரையும், அருட்தந்தை காபிரியேல் அவர்கள்
வாழ்த்துரையும், மாநிலத்
த்லைவர் பேராசிரியர் N. மணி அவர்கள்
துவக்க உரையாற்றினார்கள்.
அதன்பிறகு மாவட்டச் செயலாளர்
திருமிகு V. ராமமூர்த்தி
வேலை அறிக்கையும், பொருளாளர்
திருமிகு G.
சுரேஷ்
அவர்கள் பொருளாளர் அறிக்கையும் சமர்பித்தார்கள். அதன்மீது விவாதநடைபெற்றது.
மதிய உணவிற்கு பிறகு மாவட்டச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு இமயபாலன் அவர்களின் நிகழ்ச்சியும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
திருமிகு அய்யணார் அவர்களின் கணித பயிற்சியும், மாவட்டக் கருத்தாளர் திருமிகு சத்தியமூர்த்தி
அவர்களின் ஓரிகாமி நிகழ்ச்சியும், மாவட்டக்
கருத்தாளர் திருமிகு தில்லைகரசி அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும் நடைபெற்றது. .
நிகச்சிகள் மாநாட்டில் பங்கேற்றவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பிறகு திருமிகு ஏற்காடு இளங்கோ
அவர்களின் “குரங்களிலிருந்து
மனிதன் பிறந்தானா?” என்ற நூலை
டாகடர் அறிவழகன் அவர்கள் வெளியிட திருமிகு பிரணவ் கார்த்திக் அவர்களும், சரவணமணியன் அவர்களும், மாவட்டத்தலைவர் Dr. R. சாம்சன்ரவீந்திரன் அவர்களும் பெற்று கொண்டார்கள்.
அதன் பிறகு நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கீழ்கண்ட நிர்வாகிகள் (11 பேர் நிர்வாகிகள், 37 பேர்
செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 26 பொதுக்குழு உறுப்பினர்கள் )தேர்ந்தெடுக்கப்பட்டனர்..
மாவட்ட இணைச் செயலாளர்
திருமிகு M. ஷாஹிரா அவர்கள் நன்றி
கூறினார்கள். இறுதியாக திருமிகு R. சசிகலா அவர்களின் பாடலுடன் சேலம் மாவட்டத்தின் 11வது மாவட்ட மாநாடு இனிமையாக நிறைவு பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக