இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

புத்தகங்களின் அருமைபற்றி…. தொகுப்பு: பாவலர் பொன்.க


‘உங்கள் பிறந்த நாள் பரிசாக மதிப்புள்ள  எந்தப்  பொருளை எதி;பார்க்கிறீர்கள் ?–  மக்கள் கேள்வு‘என்றைக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும் புத்தகங்களைத்தான்’ - லெனின்.
      
‘ஒரு குழந்தைக்கு வாங்கித்தரும் மிகச் சிறந்த பரிசு என்னவாக இருக்க வேண்டும்? – பத்திரிகையாளர்      
‘புத்தகமாகத்தான் இருக்க வேண்டும்’ –   வின்ஸ்டன் சர்ச்சில்

‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாகக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் ?’ –; காகாகலேல்கர்.-      
‘ஒரு நூலகம் கட்டுவேன் ‘; - மகாத்மா காந்தி

‘தனிமைத் தீவில் ஓர் ஆண்டு நீங்கள் தள்ளப் பட்டால் என்ன செய்வீர்கள் ?’  -நிருபர்         -‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’- ஜவகர்லால் நேரு.

‘மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது? ‘– பத்திரிகையாளர்.
‘புத்தகங்கள்தான்’ - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

‘சில மணி நேரத்தில் சென்று சேரும் விமானத்தைத் தவிர்த்துவிட்டு இரு நாள்கள் நேரம் எடுத்துக்  கொள்ளும் மகிழ்வுந்தில், பம்பாய் பயணத்தைத் தாங்கள் மேற்கொண்டது ஏன் ?’ – நிருபர்            
‘புத்தகங்கள் படிக்கும் வசதிக்காகத்தான்’ - பேரறிஞர் அண்ணா.

‘துப்பாக்கிகளை விட பயங்கரமான ஆயுதங்கள் எவை ?’ – நண்பர் - ‘புத்தகங்கள்தான்’ - மார்டின் லூதர்கிங்.

‘வழக்கிற்காக வருகை தந்த நீங்கள் எங்கே தங்க விரும்புகிறீர்கள்?’- இலண்டனில் வரவேற்பாளர்      
‘ஒரு நல்ல நூலகத்திற்கு அருகி;ல்.’ காந்தியடிகள்

‘பெண்கள் முன்னேற என்ன செய்ய வேண்டும்?’ – பத்திரிகையாளர்.
‘அவர்கள் கையில் இரு;க்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களைக் கொடுக்க வேண்டும்.’                - ஈ.வெ.ரா. பெரியார்

‘நேரம் காலம் பார்ப்பதில் நம்பிக்கையில்லாத நீங்கள் உங்களுக்கு நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சை இப்போது வேண்டாம் சில நாள்கள் தள்ளிப் போடுங்கள் என்று சொல்லுவது ஏன்? ’ -நிருபர்
‘இன்னும் சில நூல்கள் படித்து முடிக்க வேண்டியுள்ளது.’– சி.என்.அண்ணாத்துரை

‘சிறைச்சாலையில் நீங்கள் எந்த மாதிரியான சலுகைகளை எதிர்பார்க்கிறீர்கள்?’ – சிறை அதிகாரி    
‘எனக்கு வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். புத்தகங்களைப் படிக்க அனுமதித்தால் மட்டும் போதும்’  - நெல்சன் மண்டேலா.

‘உன்னைத் தூக்கிpலிடும் நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய் பகத்சிங்?’ – சிறைஅதிகாரி                                                                    
‘ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளருடன் பேசிக்கொண்டிருக்கிறான்’ -- புத்தகம் படித்துக் கொண்டிருந்த பகத்சிங்.

‘புத்தகங்கள் வெறும் அச்சடித்த காகிதக் கட்டுகளல்ல… நம் தோள்மீது கைபோட்டுக் கனிவோடு பேசும் நண்பர்கள்.  கவலை போக்கிக் கண்ணீர் துடைக்கும் கருணைக் கரங்கள்…புரட்சியை இசைக்கும் புல்லாங்குழல்கள்… முன்னேற்றத்தை முழக்கும் முரசங்கள்… விழிப்புணர்வூட்டும் விளக்குச் சுடர்கள்.. மனதுக்கு மகரந்தம் பூசி மகிழ்விக்கும் மகோன்னதங்கள்’   -- வெ.இறையன்பு

தான் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு படத்தின் ஒப்பந்த முன்பணத்தில் நூறு டாலர்களுக்குப் புத்தகங்கள் வாங்கும் பழக்கமுடையவர் - சார்லிசாப்லின்

-குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப் பட்டபோது நூலகத்தை நோக்கி நடந்தவர்            - பேரறிஞர் இங்கர்சால்.

இன்றளவும் உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மாஸ்கோ நூலகம்தான் -ஒருகோடியே நாற்பது இலட்சம் நூல்கள்.

நேற்றைய நிகழ்வினை நிரல்படச் சொல்பவை… இன்றைய இலக்கினை இசைபட உரைப்பவை.. நாளைய வாழ்விற்கு நம்பிக்கை விதைப்பவை… புத்தகங்கங்கள் நம்மோடு பேசத் துடிக்கின்றன… பேசிப்பாருங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக