இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

உலக புகைப்பட தினம் (ஆகஸ்டு 19) – 2012 - புகைப்படப் போட்டிகள்


தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மக்கள் மத்தியில் பல்வேறு அறிவியல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  வருகின்ற (19-08-2012)
19 ஆம் தேதி உலக புகைப்பட தினத்தை கொண்டாடும் வகையில் லேனா கலர் லேப் மற்றும் சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றமும் இணைந்து 

பள்ளி மாணவர்களுக்கு "இயற்கை காட்சி" என்ற தலைப்பிலும்,
கல்லூரி மாணவர்களுக்கு "சமூக பிரச்சனை" என்ற தலைப்பிலும்,
பொதுமக்களுக்கு "சுற்றுச்சூழல் பாதிப்பு" என்ற தலைப்பிலும்   

புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள்

1,புகைப்பட அளவு : 10” x 8”
2,புகைப்படம் சேலம் மாவட்டத்திற்குள் அண்மையில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்,
3,புகைப்படம் எடுக்கப்பட்ட நாள், நேரம், இடம், எனது சொந்தப்படைப்பு என்பதற்கான  எழுத்துப் பூர்வமான உறுதிமொழி மற்றும் போட்டியாளரின் சுய விபரங்களை (Bio Data) வெள்ளைத் தாளில் எழுதி இணைக்கவும்.
4,நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் தலைப்பை மையப்படுத்தி மட்டுமே இருக்க வேண்டும் 
5,புகைப்படம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட புகைப்படக் கருவியின் பெயர் மற்றும் சிறப்புகளை குறிப்பிடவும்.
6,பள்ளிக் / கல்லூரி சார்ந்த மாணவ போட்டியாளர்கள் என்பதற்கான பள்ளி / கல்லூரி முதல்வரின் கடிதம் இணைக்கவும். 
7,புகைப்படங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-08-2012
8,நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது 
9,போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
10,சிறந்த தேர்வாகும் படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்,
11,போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைவரும் உலக புகைப்பட தினத்தன்று சேலம் கருப்பூர் பெரியார் பல்கழைக்கழகத்தில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும்
12,இப்போட்டியில் பங்கேற்கும் புகைப்படங்களைஅக்டோபர் மாதம் 6, 7 தேதிகளில்  மகேந்திரா பொறியியல் கல்லூரி மல்லசமுத்திரத்தில் நடைபெறும் மாநில அளவிலான இளைஞர் அறிவியல் திருவிழா 2012 மற்றும் அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் அனைவரின் பார்வைக்காகவும் கண்காட்சியாக வைக்கப்படும்
பரிசளிப்பு நிகழ்ச்சிவிபரங்கள்
நாள் - 19 - 08 - 2012 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம் - காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம் - பெரியார் பல்கழைக்கழகம், கருப்பூர், சேலம்


வெற்றிபெற்றவர்களுக்கு பெரியார் பல்கழைக்கழக துணைவேந்தர் முனைவர்.கீ.முத்துச்செழியன் அவர்கள் பரிசளித்துப் பாராட்டவுள்ளார்.

நிகழ்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக புகைப்பட துறை, குறும்பட துறை, பத்திரிக்கை துறைஇதழியல் துறைகளை  சார்ந்த பெருமக்களை அழைக்க உள்ளோம்.

(புகைப்படங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டிய கடைசி தேதி 15-08-2012)

அனுப்ப வேண்டிய முகவரி 
R.ஜெயக்குமார்,
கன்னந்தேரி (அஞ்சல்) 
கொங்கணாபுரம் (வழி) 
சங்ககிரி (வட்டம்)
சேலம் மாவட்டம்.
அஞ்சல் குறியீட்டு எண் : 637 102
அலை பேசி : 99651 61995

மேற்கண்ட தகவலை தங்கள் பள்ளி / கல்லூரி / நிறுவன மாணவர் / உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி போட்டிகளில் கலந்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி
 அன்புடன் 
R.ஜெயக்குமார்,
99651 61995
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
          புகைப்பட தினப் போட்டிகள் 
      தமிழ்நாடு அறிவியல் இயக்கம்


இத்தகவலை தகவிறக்கம் செய்ய இவ்  இணைப்பை சொடுக்கவும்  
http://www.mediafire.com/view/?jkabtzk3je63e3b

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக