அன்புடையீர், வணக்கம்!
தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் தமிழகம் முழுவதும் மக்களிடையே கல்லாமையைப் போக்குவதற்காக
ஆயிரக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்போடு அறிவொளி இயக்கத்தை ஒருங்கிணைத்தது முதலாக
குழந்தைகள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தேசிய ஆசிரியர் அறிவியல் மாநாடு, அறிவியல் கருத்தரங்குகள், குழந்தைகள் அறிவியல் திருவிழாக்கள் என
ஏராளமான அறிவியல் விழிப்புணர்வுப் பணிகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த 1945ஆம் ஆண்டில் ஆகஸ்ட், 6,9 தேதிகளில் ஜப்பானின் ஹிரோஷிமா-நாகசாகி
நகரங்களில் நிகழ்ந்த அணுகுண்டுத் தாக்குதலால் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள்
பலியானார்கள். அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டு ஹிபாகுஷாக்கள் என்ற தனி இனமே
உருவானது. இன்றும் உலகின் பல பகுதிகளில் போர்களும் பலிகளும் தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது.
எனவே தமிழ்நாடு
அறிவியல் இயக்கம் இக்கொடுரத் தாக்குதல் நடைபெற்ற தினங்களைப் போர்களுக்கு எதிரான
தினமாக அனுசரித்து அமைதியை வலியுறுத்தியும் அறிவியல் அமைதிக்கே, அறிவியல் ஒற்றுமைக்கே, அறிவியல் உலக சமாதானத்திற்கே என்பதை
வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டிகளை கடந்த பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறது.. இவ்விழிப்புணர்வு இயக்க நிகழ்வில் தங்கள் நிறுவனம் / கல்லூரி / பள்ளியின்
சார்பில் ஆர்வலர்கள் / ஆசிரியர்கள் / மாணவர்கள்
கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
போட்டிகளின்
விபரம் & விதிமுறைகள் :
பிரிவு
|
பங்கேற்போர்
|
தலைப்பு
|
அளவு
|
ஓவியம்
|
6,7,8 ம்
வகுப்பு மாணவர்கள்
|
“போரில்லாத
பூமி ”
|
30*45செ.மீ.சார்ட்
|
கட்டுரை
|
9,10,11
& 12 ம் வகுப்பு மாணவர்கள்
|
“அணு-நேற்று
இன்று நாளை ”
|
4 பக்க அளவில்
|
கவிதை
|
கல்லூரி மாணவர்கள்
|
“உயிர்
பொசுங்கும் வாடை வீசுதே ”
|
25 வரிகளில்
|
கட்டுரை
|
ஆசிரியர் / ஆர்வலர்
|
“அணு
இன்றி அமையாதா உலகு ”
|
4 பக்க அளவில்
|
v ஓவியப்போட்டி, கவிதை, கட்டுரைப்போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு நிலையிலும் சிறந்த முதல் மூன்று ஓவியங்கள், கவிதை, கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு மாநிலப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும்,
v ஓவியங்கள், கவிதை
& கட்டுரைகள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் : ஆகஸ்ட் 25
v ஓவியங்கள் (சார்ட் அட்டையில் மட்டுமே வரையப்பட வேண்டும்) / கவிதைகள் / கட்டுரைகள்
அட்டவனையில் குறிபிட்டுள்ள அளவுகளில் மட்டுமே இருக்க வேண்டும்,
v ஓவியம், கவிதை மற்றும்
கட்டுரைகளில் கண்டிப்பாக
போட்டியின் தலைப்பு, பெயர், வகுப்பு, பள்ளி, கல்லூரி, நிறுவன பெயரை எழுதவும்
v மேலும்
தங்கள் படைப்புகளில் (ஓவிய அட்டையின் பின்னால் / கவிதை, கட்டுரையின் இறுதியில்) பங்கேற்பபாளர்கள் வீட்டு முகவரியுடன் பள்ளி / கல்லூரி / நிறுவன முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி
எண் தெளிவாக குறிப்பிட
வேண்டும்,
v பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
ஓவியம் கவிதை & கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :
R.ஜெயக்குமார்,
கன்னந்தேரி (அஞ்சல்)
கொங்கணாபுரம் (வழி)
சங்ககிரி (வட்டம்)
சேலம் மாவட்டம்.
அஞ்சல் குறியீட்டு எண் : 637 102
அலை பேசி : 99651 61995
நேரில் கொடுக்க - வியாழன் தோறும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை
அறிவியல்
இயக்க அலுவலகத்தில்
தரலாம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
23,
M.K.S வணிக
வளாகம், முதல் மாடியில்,
(கௌரி திரையரங்கம் எதிரில்)
ஐந்து ரோடு, சேலம் - 636004. அலைபேசி எண் : 94864 86755
நன்றி.
அன்புடன்
R.ஜெயக்குமார்,
99651 61995
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஹிரோஷிமா-நாகசாகி தினப் போட்டிகள் 2012
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
( நன்றி : தேனீ மாவட்டம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக