மூன்றாவது செயற்குழு கூட்ட அறிக்கை
1.அமைப்பு
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரந்திரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள்
திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்க
வேண்டும்.
மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
திருமிகு.நமசிவாயம் அவர்களால் தன்னார்வத்துடன் நிர்வாகிக்கப்படுகிறது.
இரண்டாவது மாநிலச் செயற்குழுக்
கூட்டம்
இரண்டாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 ஜனவரி 6 மற்றும்
7ந் தேதிகளில் சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. உணவு மற்றும் வேண்டிய
அனைத்தும் ஏற்பாடுகளும் மோகன் நகர் கிளைத்தலைவர் திருமிகு சர்மா, கிளைச்
செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், கிளைப் பொருளாளர் திருமிகு பத்மநாபன்,
கிளை உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி மாவட்ட உதவித் தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட
நிர்வாக்குழு உறுப்பினர் திருமிகு T.ஜெயமுருகன் ஆகியோரால் சிறப்பாக செய்யபட்டது.
உபக்குழு நிகழ்ச்சிகளில் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு G.சுரேஷ், திருமிகு J. பாலசரவணன், திருமிகு S. அய்யணார், திருமிகு சஹிரா பேகம், திருமிகு K.சந்திரசேகர், திருமிகு விஜியலக்ஷ்மி, ஆத்தூர்
கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன் ஆகியார்
கலந்து கொண்டனர்.
6ந்தேதி
இரவு தொலைநோக்கி நிகழ்ச்சி திருமிகு T.ஜெயமுருகன் அவர்களால் நடத்தப்பட்டது.
6ந் தேதி மாலை கூடங்குளம் அணுமின் உலை மற்றும் முல்லை பெரியாறு
அணை பற்றிய இரு கருத்தரங்குகள் நடைபெற்றது. மாவட்ட முழுவதும் இருந்து அறிவியல்
இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் திருமிகு P.சகஸ்ரநாமம் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்ட உணவு ஏற்பாடு ஊராட்சி தலைவர்
திருமிகு……………. அவர்களால் செய்யபட்டது.
மூன்றாவது மாநிலச் செயற்குழுக்
கூட்டம்
மூன்றாவது மாநிலச் செயற்குழுக் கூட்டம் 2012 மே 19 மற்றும் 20ந்
தேதிகளில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
4வது
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
4வது
நிர்வாககுழுக் கூட்டம் 09/02/2012 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திருமிகு Dr. R. சாம்சன் ரவீந்திரன் தலைமையில்
நடைபெற்றது. நிர்வாககுழு
உறுப்பினர்கள் மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு V.சீனிவாசன்
மற்றும் மாவட்டச்
செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு S. அய்யணார், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
5வது
மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்
23/03/2012 அன்று திருமிகு N. கோபால் அவர்கள் இல்லத்தில் திருமிகு M.கற்பகம் தலைமயில் 5வது நிர்வாக்குழு கூட்டம்
நடைபற்றது. நிர்வாககுழு உறுப்பினர்கள் திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு V.ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு M.கற்பகம், திருமிகு N. கோபால், திருமிகு ஏற்காடு இளங்கோ மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு R. K. லால், திருமிகு P.செங்கோடன், திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது மாவட்ட
செயற்குழுக் கூட்டம்
24/12/2011 அன்று இரண்டாவது மாவட்டச்
செயற்குழுக் கூட்டம் மாவட்ட உதவித் தலவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில்,
தாரமங்கலத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சீனிவாசகரின் Nice Kids Collegeல் நடைபெற்றது. கிளைச் செயலாளர் திருமிகு ரமேஷ், திருமிகு
சீனிவாசகர், திருமிகு விஸ்வநாதன், திருமிகு முரளிதரன், திருமிகு சந்தோஷ்குமார்
ஆகியோர் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகளை சிறப்பாக
செய்திருந்தார்கள். 16 செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கிளை மற்றும் துளிர் இல்லம்
28 துளிர் இல்லம் மாநிலத்தில் பதிவு செய்யபட்டுள்ளது.
(தாரமங்கலத்தில்-15, தலைவாசல்-3, ஆத்தூர்-1, சேலம் உருக்காலை-1,
நல்லண்ணம்பட்டியில்-3, கன்னந்தேரியில்-3, நெத்திமேடு-1, ஜாகிரம்மாபளையம்-1,)
ஆத்தூர் ஜி.டி.நாயுடு துளிர் இல்லம் என மொத்தம் 29 துளிர் இல்லங்கள் உள்ளது.
29/04/2012 அன்று குகை கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். 5 பேர் கொண்ட நிர்வாக குழு
தேர்தெடுக்கபட்டது. தலைவராக திருமிகு ரேவதி அவர்களும், துணைத் தலைவராக திருமிகு
செளடஸ்வரி அவர்களும், செயலாளராக திருமிகு கோகிலா அவர்களும், இணைச்செயலாளராக
ராம்பிரசாத் அவர்களும், பொருளாராக திருமிகு தாரணி அவர்களும் தெர்தெடுக்கபட்டனர்.
07/05/2012 அன்று குகை நிர்வாககுழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து
திருமிகு G.
சுரேஷ் மற்றும்
திருமிகு அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டார்.
2. அறிவியல்
கல்வி பிரச்சாரம்
தேசிய அறிவியல் தினப்போட்டிகள்
தேசிய
அறிவியல் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி
கொடுக்கபட்டது. தேசிய அறிவியல் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல்
ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி,
சொலவடை மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 5 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அளவில் கட்டுரைப் போட்டியில் இள்மபிள்ளை ஜோதி
வித்யாலாயா மெட்ரிக் பள்ளி மாணவ்ர் திருமிகு ஹரி முதலாம் இடமும், கதைப் போட்டியில் திருமிகு மாலதி அவர்கள்
இரண்டாம் இடமும், சொலவடைப் போட்டியில் திருமிகு நிர்மலா முதல் இடமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அறிவியல் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார்.
போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.
28/02/2012 அன்று அன்னபூர்ணி பொறியியல் க்ல்லூரியில் தேசிய அறிவியல் தின
நிகழ்ச்சி நடைபெற்றது. கருத்தாளாராக திருமிகு T.ஜெயமுருகன் அவர்களும், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு R. ஜெயகுமார் அவர்களும்
கலந்து கொண்டனர். 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
துளிர் இல்லம்
08/04/2012 அன்று செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில் 30
குழந்தைகளுக்கு திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் 3 மணி
நேரம் பாடல், கதை, விளையாட்டு, அறிவியல் என அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
குழந்தைகள் அனைவரும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
15,22,29/04/2012 மற்றும் 06/05/2015 ஆகிய நான்கு நாட்கள் செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில்
30 குழந்தைகளுக்கு திருமிகு G. சுரேஷ், திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர்
கருத்தாளர்களாக கலந்து கொண்டு அறிவியல் நிகச்சிகளை நடத்தினார்கள்.
13/05/2012 அன்று குகையில் சர்.சி.வி.ராமன் துளிர் இல்லத்தில் திருமிகு
கலையரசன் அறிவியல் நிகச்சிகளை நடத்தினார். திருமிகு சண்முகசுந்திரம், குகை கிளைத்
தலைவர் மற்றும் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளருமான திருமிகு ரேவதி ஆகியோர் கலந்து
கொண்டனர்.
15/05/2012 அன்று கன்னந்தேரியில் துளிர் இல்ல பயிற்சி மற்றும் நிகழ்ச்சி
நடைபெற்றது, 60 குழந்தைகள் கலந்து கொண்டனர். கருத்தாளாராக திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டார்.
துளிர் இல்ல பயிற்சிமுகாம்
10&11/03/2012 இரு நாட்கள் திருப்பூர் PEM Tech பள்ளியில் நடைபெற்ற மேற்கு மண்டல துளிர் இல்ல
கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் சேலம் மாவட்டம் சார்பாக மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு
G. சுரேஷ், திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
01/04/2012 அன்று துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்
மாவட்ட அளவில் தாரமங்கலத்தில் கிராம பெண்கள் மேம்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். திருமிகு G. சுரேஷ்,
திருமிகு
S. அய்யணார்
மற்றும் திருமிகு ஏற்காடு இள்ங்கோ, திருமிகு கலையரசன் மற்றும் மாநிலச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு சேதுராமன், மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு
அமலராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக கலநது கொண்டு சிறப்பாக பயிற்சியளித்தனர்.
14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி
முகாம் நடைபெற்றது. கருத்தாளர்களாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு பழனி,
திருமிகு ம்ணிகண்டன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருமிகு G. சுரேஷ், திருமிகு N. கோபால், ஆத்தூர் திருமிகு P.
சீனிவாசன்,
தலைவாசல் திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி, திருமிகு
கணேசன், திருமிகு மகேந்திரன், திருமிகு சித்ரா, திருமிகு பாக்யராஜ் திருமிகு
முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் நிகழ்ச்சி
03/01/2012 அன்று ஆத்தூர் மலர் மெட்ரிக்
பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிவியல் எழுத்தாளர் திருமிகு
ஏற்காடு இளங்கோ கலந்து கொண்ட அறிவியல் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர் 250
மாணவர்கள்.
மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல்
கல்லூரியில் 2012 ஜனவரி 5,6 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற்ற அறிவியல்
கண்காட்சியில் அறிவியல் இயக்க கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
16/01/2012 அன்று மேட்டூர் தாய் தமிழ்
பள்ளியில் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி
நடைபெற்றது. கலந்து கொண்டோர் 100 மாணவர்கள்.
02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டோர்
150 மாணவர்கள்.
13/04/2012 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்
தலைமயில் நடைபெற்ற தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் திருமிகு தில்லைக்கரசி அவர்களின்
மந்திரமா? தந்திரமா? மற்றும் திருமிகு G. சுரேஷ் அறிவியல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
12/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர்
திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நல்லண்ணம்பட்டி
பள்ளியில் நடைபெற்றது.
20/04/2012 அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர்
திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி காடையாம்பட்டி,
மாசிகவுண்டனூர் மற்றும் K.K.
நகர் பள்ளிகளில் நடைபெற்றது.
3.கல்வி
புத்தக வாசிப்பு முகாம்
26/01/2012 அன்று மாலை 6
மணிக்கு திருமிகு R.பவளவள்ளி அவர்கள் வீட்டில்
புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் ”ஆளுக்கொறு கிணறு” திருமிகு P.சகஸ்ரநாமம்,
திருமிகு R.சசிகலா திருமிகு R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு
கோபால், திருமிகு S. அய்யணார்,
திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
26/01/2012 அன்று மாலை 6
மணிக்கு திருமிகு R. சசிகலா அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. புத்தகம் ”வினயா”. திருமிகு R., சசிகலா, திருமிகு
R.பவளவள்ளி, திருமிகு G. சுரேஷ், திருமிகு ஐடா பிரிசில்லா, திருமிகு
நமச்சிவாயம், திருமிகு குரு அறுமுகம், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி
ஆகியோர் கலந்து கொண்டனர்.
28/04/2012 அன்று
நல்லண்ணம்பட்டியில் 3 துளிர் இல்ல குழந்தகளுக்கான புத்தக வாசிப்பு முகாம்
நடைபெற்றது. புத்தகம் “சார்லஸ் டார்வின்”. 30 புத்தகங்களை நல்லண்ணம்பட்டி பள்ளி தலைமயாசிரும்
மாவட்ட பொதுகுழு உறுப்பினருமான திருமிகு P.செங்கோடன் துளிர் இல்ல
குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து புத்தக வாசிப்பு முகாம் நடத்தினார். கருத்தாளராக
திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.
சக்சார் பாரத் திட்டம்
01/01/2012
அன்று மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில்
நடைபெற்றது. அதில் மாநிலச் செயலாளர் திருமிகு S சுப்ரமணி, திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண் எழுத்தறிவு
50%க்கு குறைவாக உள்ள மாநிலங்களில் BGVS மற்றும் NHR இணைந்து நடத்தும் ”சக்சார் பாரத்” என்னும் அகில இந்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்
மாநிலங்களில் கலைபயணம் நடைபெற்றது ஒரு
கலைகுழு ஈரோட்டிலிருந்து எடப்பாடி, சேலம், தர்மபுரி, ஆத்தூர் ஆகிய மூன்று
இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு விழுப்புரம் சென்றது. இந்நிகழ்வையொட்டி
நடைபெறும் “எனது கனவுகளில் எனது கிராமம்” என்னும் தலைப்பில் மக்கள் கருத்துதாள்
எழுதி வாங்குவது, விவாதங்கள் நடத்தி அதை தொகுப்பது போன்ற நிகழ்ச்சிகளும்
நடைபெற்றன. இந்நிகழ்வை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.சந்திரசேகர் சிறப்பாக ஒருங்கிணைத்து நட்த்தினார்.
கிராமக் கல்வி குழு பயிற்சி முகாம்
27,28
மற்றும் 29ந் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான கிராமக் கல்வி குழு
பயிற்சி முகாமில் திருமிகு J.பாலசரவணன் கலந்து கொண்டார்.
30,31/01/2012ல்
கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஆத்தூர்
கிளைத் தலைவர்
திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன், திருமிகு கற்பகம்,
திருமிகு தமிழய்யன் ஆகியோர் நமது இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டு பயிற்சி
பெற்றனர்.
கிராம கல்வி குழு
பயிற்சிகளில் கருத்தாளர்களாக கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர், நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், அரிசிபாளையத்தில் திருமிகு M.கற்பகம், திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P. சீனிவாசன், திருமிகு
தமிழய்யன், திருமிகு சாமிநாதன், திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து
கொண்டனர்.
பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி
கொண்டப்பநாய்க்கன்பட்டியில்
நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட பயிற்சிக்கு திருமிகு M.கற்பகம், திருமிகு சஹிரா பேகம், திருமிகு சீனிவாசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான
பயிற்சியில் இரு இடங்களில் கருத்தாளராக திருமிகு N. கோபால் கலந்து கொண்டார். அதில்
வேப்பிலைபட்டியில் 150 உறுப்பினர்களும், வாழப்பாடியில் 40 உறுப்பினர்களும் கலந்து
கொண்டனர்.
கன்ன்ங்குறிச்சி,
கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் சொர்ணபுரி பகுதியில் கருத்தாளராக திருமிகு சஹிரா
பேகம் கல்நது கொண்டார்.
தாரமங்கலத்தில்
திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு ரமேஷ், மேட்டூரில் திருமிகு இமயபாலன், திருமிகு
சுப்ரமணி, ஆத்தூரில் திருமிகு A.அர்த்தநாரி,
திருமிகு P. சீனிவாசன், காக்காபாளையத்தில் திருமிகு இமயபாலன்,
நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், திருமிகு G. சுரேஷ், கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர் ஆகியோர் கருத்தாளர்களாக
கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். மேற்கண்ட பயிற்சிகள் 2012 மார்ச் 19,20 & 21
தேதிகளில் நடைபெற்றது.
4.அறிவியல் வெளியீடு
30/12/2012 அன்று புத்தக இருப்பு
எடுக்கபட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன், திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யணார், திருமிகு நமச்சிவாயம் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் புத்தக இருப்பு
எடுப்பதில் பங்கேற்றனர்.
மாவட்ட
நிர்வாகிகள் 15
பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு.
சந்தோஷ், திருமிகு ரமேஷ், திருமிகு கார்த்திக், திருமிகு ஸ்ரீனிவாசகர் திருமிகு
செங்கோட்டுவெல் மற்றும் திருமிகு ராஜேந்திரசோழன் உதவி.பேராசிரியர் . சுதா, மேட்டுர்
கோவிந்தராஜன், ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 225 துளிர் மற்றும்
10 ஜந்தர்
மந்தர் விற்பனை
செய்கின்றனர்.
மாதந்தோறும்
30 அறிவுதென்றல்
வாங்கபடுகிறது.
பாரதி
புத்தகலாய புத்தகங்கள் பாலம் புத்தக மையம் மூலம் சுமார் ரூ 10,000 மதிப்புள்ள
புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது பணம் செலுத்தப்பட வேண்டும்.
திருமிகு
ஏற்காடு இளங்கோ அவர்களிடம் இருந்து ரூ 5700 க்கு புத்தகங்கள் வாங்கப்பட்டு
முழுமையாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
உறுப்பினர்
ஆயுள் சந்தா
7, உறுப்பினர் ஆண்டு சந்தா 632,
துளிர் ஆண்டு
சந்தா 88, துளிர் ஆயுள்
சந்தா
1, மற்றும் ஜந்தர்
மந்தர் ஆண்டு சந்தா 11, விழுது சந்தா - 0,
சேகரிக்கப்பட்டுள்ளது.
புத்தக விற்பனை
ஜனவரி 5 பட்டு வளர்ச்சி துறை நிகழ்ச்சியில் புத்தக விற்பனை
திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.542, துணிப்பை ரூ720)
சீலநாய்க்கன்பட்டியில்
வருமானவரி ஊழியர் சங்க மாநில மாநாட்டு 2012 ஜனவரி 6,7ந் தேதிகளில் நடைபெற்றது.
திருமிகு நேதாஜி அவர்கள் உதவியுடன் திருமிகு நமச்சிவாயம் அவர்கள் விற்பனை
செய்யபட்டது. (ரூ3011)
சேலம் உருக்காலையில்
நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.1655)
26/01/2012 அன்று சேலம்
தெய்வீக திருமண மண்டபத்தில் LIC
கலைவிழா நிகழ்ச்சியில் புத்தக விற்பனை
திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.3068). விற்பனையில் திருமிகு N. கோபால், திருமிகு நேதாஜி, திருமிகு R.பவளவள்ளி ஆகியோர் பங்க்
பெற்றனர்.
02/02/2012
அன்று உத்தமசோழபுரத்தில் DIET
ல் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது.
(ரூ.2615).
10/02/2012 அன்று
கன்னந்தேரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.1137).
28/02/2012 அன்று அன்ன்பூர்ணி பொறியியல்
க்ல்லூரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.986).
01/04/2012 அன்று தாரமங்கலம் துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான
பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.440).
12/04/2012 அன்று நல்லண்ணம்பட்டி பள்ளியில்
நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு
நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.255).
14/04/2012 அன்று தலைவாசலில் துளிர் இல்ல
ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.280).
16/04/2012 அன்று நல்லண்னம் பட்டி துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான
பயிற்சி முகாமில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால்
செய்யபட்டது. (ரூ.280).
22/04/2012 அன்று சாலைப் பணியாளர்கள் சங்க
மாநாட்டில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.300).
28/04/2012- தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு நிகழ்ச்சியில் புத்தக விற்பனை
திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1645).
19/05/2012 அன்று குஜராத்தி திருமண
மண்டபத்தில் வணிகர் சங்க நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் மற்றும்& கற்பகம் அவர்களால் செய்யபட்டது. (ரூ.1935).
5.சமம்
சமம் மாநில உபக்குழு சார்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில்
25,26/02/2012 நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தின் சார்பாக சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமிகு M.கற்பகம் அவர்கள் கல்ந்து கொண்டார்கள்.
சர்வதேச மகளிர் தினப்போட்டிகள்
சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல்
மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள்,
அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, மற்றும் கதை போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி
வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிளைப்பாளர்
திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் மற்றவர்களின்
உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும்
மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கபட்டது.
6.வளர்ச்சி
7.இதர
நிகழ்ச்சிகள்
தலைவாசலில் நடைபெற்ற தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவில் திருமிகு
N. கோபால் அவர்கள் கலந்து கொண்டு தலவாசல் ஊராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கு அறிவியல் வெளியீடு புத்தகங்களை பரிசளித்தார்.
தானே புயல்
தானே புயல் நிவாரணநிதி ரூ 11,200 வசூல் செய்யபட்டு
கடலூர் மாவட்டச் செயலாளர் திருமிகு ரஜினி அவர்களிடம் அளிக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன் அவர்கள் முதலவராக இருக்கும் மகேந்திரா
பொறியியல் கல்லூரி நிர்வாகம் மூலம் சுமார் ரூ. 2,00,000க்கு மேல் மதிப்புள்ள போர்வை மற்றும் பிஸ்கட் போன்ற
உணவு பொருள்களை கடலூர் மாவட்ட மக்களுக்கு அளித்து உத்வினார்கள்.
சென்னையிலிருந்து தொலைநோக்கி வாங்கபட்டுள்ளது. திருமிகு S. அய்யணார் மற்றும் திருமிகு தினேஷ் இருவரும் சென்னை சென்று தொலைநோக்கி பயிற்சி
எடுத்து கொண்டு தொலைநோக்கியை வாங்கி வந்தனர்.
சமச்சீர் கல்வி வழக்கு நிதி
சமச்சீர் கல்விக்கான பிரின்ஸ்
கஜேந்திரபாபு நடத்திய வழக்குக்கு நிதி மாநில செயற்குழுவில் கேட்டு கொண்டதற்கிணங்க
ரூ 11200 வசூல் செய்யபட்டு, மாநில மையத்திடம் தரப்பட்டது.
அன்புடன்
வெ.ராமமூர்த்தி
- 94864 86755
மாவட்ட
செயலாளர்,
சேலம் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக