தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் வெள்ளி இடை நகர்வு பயிற்சிமுகாம் 27/05/2012ஞாயிற்றுக் கிழமை மாலை விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் திருமிகு.சுரேஷ் அவர்களின் அறிவியல் பாடல்களுடன் துவங்கிய முகாமை மாவட்ட செயலாளர் திருமிகு.ராமமுர்த்தி அவர்கள் ஒருங்கிணைத்து துவக்கஉரையாற்றினார், மாவட்ட கருத்தாளர் திருமிகு.ராஜேந்திரசோழன் அவர்கள் ஈரோடு பயிற்சிமுகாமில் கலந்துக்கொண்டு கற்றுக்கொண்ட தகவல்களை விளக்கி வெள்ளி நகர்வை காண எளிய செயல்முறைகளை விளக்கினார், தொடர்ந்து வானியல் மாநில கருத்தாளர் திருமிகு ஜெயமுருகன் அவர்கள் வானியல் பாடல்களுடன் வெள்ளி நகர்வு குறித்து விளக்கினார் தொலைநோக்கி கொண்டு சூரிய கரும்புள்ளிகளை காட்டினார், பயிற்சிக்கு மாவட்டத்தின் , தலைவாசல், மேட்டூர், கன்னந்தேரி, நல்லெண்ணம்பட்டி, கன்னங்குறிச்சி, சேலம் தாரமங்கலம், ஓமலூர் ஒன்றியங்களில் இருந்து 20 பேர் கலந்துக்கொண்டு பயிற்சிப் பெற்றனர், ஜூன் 6 அன்று ஒன்றிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்
அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக