தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் செயற்குழுக் கூட்டம் 27/05/2012 அன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தலைவர் முனைவர். சாம்சன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் கடந்த நான்கு மாத செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட செயலர் ராமமூர்த்தி அவர்களும் வரவு செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சுரேஷ் அவர்களும் சமர்ப்பித்தனர், தொடர்ந்து மாநில செயற்குழு அறிக்கை தகவல் கொடுக்கப்பட்டு, அடுத்த நான்குமாத செயல்பாடுகளின் திட்டமிடல் நடைபெற்றது, கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்,
அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக