கடித எண் : 22 தேதி : 07-12-2011
1.அமைப்பு
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரந்திரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருமிகு.நமசிவாயம் அவர்களால் தன்னார்வத்துடன் நிர்வகிக்கப்படுகிறது.
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்
சர்வதேச வேதியியல் ஆண்டு 2011 ( IYC – 2011 )
IYC யின் நிகழ்ச்சியாக விஞ்ஞான் பிரச்சார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 09, 10 & 11 நவம்பரில் நடத்திய பயிற்சி முகாமிற்கு சேலம் மாவட்டத்தின் சார்பாக திருமிகு டோமினிக், திருமிகு ராஜேந்திரசோழன், திருமிகு கணபதி ராணி மற்றும் திருமிகு சகிராபேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். நால்வரும் பயிற்சி, களப்பணிகள் மற்றும் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பயிற்சியில் கலந்து கொள்ள தகவல் கொடுத்து வாய்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் கருத்தாளர்களாக தங்களால் முடிந்த நிகழ்ச்சிகளை செய்வதாக கூறியுள்ளனர்.
வானியியல் கழகம்
இந்திய வான் இயற்பியல் மையம், பெங்களூருவில் 18,19/11/2011 ஆகிய இரு நாட்கள் நடத்திய பகல் நேர வான் நோக்கு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு T ஜெயமுருகன் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மாநில அளவில் ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அதில் அவர் நமது மாவட்டத்தில் இயங்கி வரும் வானியியல் கழகம் மற்றும் தொலைநோக்கிகளை பரவலாக நமது அறிவியல் இயக்க நண்பர்கள் பயன்படுத்துவது சம்பந்தமாக ஒரு கருத்துரை வழங்கியுள்ளார். பக்கத்திலுள்ள மாநிலத்தின் வானியியல் கருத்தாளார்களின் தொடர்பு கிடைத்துள்ளது. வானவியலைப் பற்றி பயிற்சி முகாம் நடத்தும்போது மாநில, மாவட்ட அளவில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆவலுடன் உள்ளார். இந்நிகழ்ச்சி அகில இந்திய அளவில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
அறிவியல் நிகழ்ச்சி
14/11/2011 அன்று திருச்சங்கோடு வேலாகவுண்டம்பட்டி கொங்கு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் எழுத்தாளரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான திருமிகு.ஏற்காடு இளங்கோ, அவர்களின் அறிவியல் உரையும், மாவட்ட கருத்தாளர் திருமிகு தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும் நடைபெற்றது. அறிவியல் இயக்கத்திற்கு நன்கொடையாக பள்ளியின் சார்பில் ரூ 500 வழங்கப்பட்டது.
துளிர் திறனறிதல் தேர்வு
26/11/2011 அன்று நடைபெற்ற துளிர் திறனறிதல் தேர்வு நமது மாவட்டத்தில் 4 இடத்தில் நடைபெற்றது. 1. ஆத்தூரில் சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி - மாவட்டப் பொதுகுழு உறுப்பினர் திருமிகு மூர்த்தி, 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கன்னந்தேரி – திருமிகு பார்த்திபன், 3 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி நல்லண்ணம்பட்டி – திருமிகு.மகேந்திரன், 4 கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி - திருமிகு ஆண்டனி, திருமிகு.சுப்ரமணி ஆகியோர் தேர்வுகளை நடத்தினர். தமிழ் மூத்தோர் பிரிவில் 52, இளையோர் பிரிவில் 259, ஆங்கிலம் மூத்தோர் பிரிவில் 8, இளையோர் பிரிவில் 20 என மவட்டதில் மொத்தம் 339 பேர் கலந்து கொண்டனர்.
தேர்வு மையத்தில் அனுபவமுள்ளவர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வாராந்திர கூட்டதில் ஆலோசனை வழங்க பட்டது.
மாவட்ட அளவில் நிகழ்வை திருமிகு.K.P. சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
10/11/2011 அன்று மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை சிறப்பாக நடத்தி
கொடுத்த காக்கப்பாளையம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு திருமிகு G சுரேஷ் சென்று நன்றி தெரிவித்து வந்தார்.
19,20/11/2011 ஆகிய நாட்களில் திருமிகு K.P. சுரேஷ்குமார், திருமிகு G சுரேஷ், திருமிகு அருண்குமார், திருமிகு ஜனார்த்தன் மற்றும் திருமிகு மௌலீதரன் ஆகியோர் கலந்து கொண்டு வேலைகளை பகிர்ந்து செய்தனர்.
19,20/11/2011 ஆகிய இரு நாட்கள் ஈரோட்டில் மாணவர்களின் ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் 24,25&26/11/2011 சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நடுவர்களாகவும் சேலம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் மண்பரிசோதனை மைய வல்லுனர் திருமிகு பாலசுப்ரமணியம், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமிகு சியமளா மற்றும் சேலம் உருக்காலையில் மெட்டலார்ஜிகள் பொறியாளரும், இளநிலை மேலாளருமாகிய திருமிகு திரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பெரியார் பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் திருமிகு அனில், திருமிகு சுரேந்திரபாபு மற்றும் திருமிகு சுதாகர் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
24,25/11/2011 ஆகிய இரு நாட்கள் திருமிகு K.P. சுரேஷ்குமார் மற்றும் திருமிகு G சுரேஷ் கலந்து கொண்டு மாநாட்டு வேலைகளை பகிர்ந்து கொண்டனர்.
மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரியில் நவம்பர் மாதம் 24 வியாழன் 25 வெள்ளி மற்றும் 26 சனி ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சேலம் மாவட்டத்திலிருந்து 7 குழு கலந்து கொண்டது. மாநில அளவில் தேசிய மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 குழுவில் சேலம் உருக்காலை ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த J.ராகுல் குழுவினர் ஆங்கிலம் முதுநிலைப் பிரிவிலும், ஆத்தூர் திரு சின்னசாமி ஐய்யா உதவிபெறும் நடுநிலைப் பள்ளியை சார்ந்த D.விமலேஸ் குழுவினர் தமிழ் இளநிலைப் பிரிவிலும் தேர்வு பெற்றனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாவட்ட மற்றும் மாநில அளவில் சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மாவட்டக் குழுவின் சார்பில் வாழ்த்துக்கள்.
3.கல்வி
25/11/2011 அன்று ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில் நுட்பக்
கல்லூரியில் இரவு 9 மணிக்கு நடைபெற்ற ”சாக்சர் பாரத் திட்டம்” –க்கான திட்டமிடல்
கூட்டத்தில் திருமிகு G சுரேஷ் மற்றும் திருமிகு பழனி ஆகியோர் மாவட்ட கல்வி உபகுழுவிற்காக நமது மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.
4.அறிவியல் வெளியீடு.
30 அறிவுதென்றல் வாங்கப்பட்டது.
துளிர் 10 ஆண்டு சந்தா மற்றும் 10 உறுப்பினர் ஆண்டு சந்தா அனுப்பப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு.சந்தோஷ், ரமேஷ், கார்த்திக், ஸ்ரீனிவாசகர் மற்றும் ராஜேந்திரசோழன் ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 135 துளிர் விற்பனை செய்கின்றனர்.
மாநில மாநாட்டில் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் ஆர்டர் செய்யபட்ட துணிப்பை வந்துவிட்டது விற்பனைக்கு உள்ளது வேண்டுவோர் அணுகவும்.
புத்தக விற்பனை
நவம்பர் மாத புத்தக விற்பனை இயக்கம்.
ஆத்தூரில் புத்தக விற்பனை செய்ய புத்தகங்கள் 12/11/2011 அன்று திருமிகு.S.அய்யானார், திருமிகு.G.சுரேஷ் மற்றும் திருமிகு நமசிவாயம் அவர்களால் எடுத்து வைக்கபட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
ஆத்தூரில் 14,16/11/2011 ஆகிய இரு நாட்கள் ஆத்தூர் கிளை நூலகத்திலும், 15/11/2011 அன்று பாரதியார் மேல்நிலைப் பள்ளியிலும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.நமசிவாயம் அவர்களால் புத்தக விற்பனை ரூ.5397 செய்யப்பட்டது. இப்புத்தக விற்பனைக்கு ஆத்தூரில் கிளைச் செயலாளர் திருமிகு சீனிவாசன். கிளைத் தலைவர் திருமிகு.அர்த்தநாரி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பழனி உள்ளிட்ட கிளை நண்பர்கள் வேண்டிய ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர்.
துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்ற கன்னந்தேரியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு நமசிவாயம் அவர்களால் புத்தக விற்பனை ரூ 1592, நல்லண்ணம்பட்டியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு S.அய்யானார் அவர்களால் புத்தக விற்பனை ரூ430 செய்யப்பட்டது.
5.சமம்
6.வளர்ச்சி
7.இதர
06/11/2011 அன்று முழு நாளும் மாவட்ட அலுவலகம் திருமிகு S.அய்யானார், திருமிகு.M..கலையரசன் மற்றும் திருமிகு G.சுரேஷ் அவர்களால் சுத்தம் செய்யபட்டது.
தொலைநோக்கி வாங்குவதற்கு சென்னை கோமஸ்கடைக்கு முன்பணம் ரூ 10000 வரைவோலை அனுப்பபட்டது.
10/11/2011 அன்று Department of Science and Technelgy நடத்திய Inspire அறிவியல் கண்காட்சியில் நடுவர்களாக அறிவியல் இயக்கம் சார்பாக திருமிகு திரவியம், திருமிகு பெலிக்ஸ், திருமிகு சதிஸ் மற்றும் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு.D.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடுத்த மாநில செயற்குழு கூட்டம் 7,8/1/2012 ஆகிய இரு நாட்கள் சேலத்தில் நடத்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவின்படி சேலம் உருக்காலையின் திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு உருக்காலையின் பொது மேலாளரை மோகன் நகர் கிளை தலவர் திருமிகு சர்மா, கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம்
மற்றும் திருமிகு.K.P. சுரேஷ்குமார் ஆகியோர் சந்தித்து அனுமதி பெற்றனர்.
டிசம்பர் மாதம் செய்ய திட்டமிட்ட வேலைகள்
தமிழகத்தின் தென்மாவட்டங்களின் புவி அமைப்பை ஆய்வு செய்ய ஜெர்மன் விஞ்ஞானி திருமிகு கெயில் அவர்கள் வந்துள்ளார். அவரை கொண்டு கல்லூரி மற்றும் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சி நடத்தவதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
நல்லண்ணம்பட்டி கிளை கூட்டம் விரைவில் நடத்துவதாக கிளை தலைவர் திருமிகு செங்கோடன் அவர்கள் தெரிவித்துள்ளார். தாலுக்கா பொறுப்பாளர் வேண்டிய உதவிகளை செய்யவும்.
இரயிலில் புத்தக விற்பனை செய்ய திட்டமிடப்பட்ட்து பொறுப்பு திருமிகு.கோபால்.
அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்டு செய்யாமல் உள்ள கீழ்கண்ட வேலைகளை திட்டமிட்டு செயல்படுத்துவது.
உபகுழுக்கள் மற்றும் தாலுக்கா குழுக்கள் கூட்டம் நடத்துவது.
பெரியார் பல்கலை கழகத்தில் கிளை மற்றும் துளிர் இல்லம் துவக்குவது. பொறுப்பு திருமிகு P.சகஸ்ரநாமம்.
மரக்கன்று நடுவது. பொறுப்பு திருமிகு K.P. சுரேஷ்குமார்.
ஜேஸிஸ் உடன் விஜயகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துவது. பொறுப்பு திருமிகு.K.P. சுரேஷ்குமார்.
அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடத்துவது. திருமிகு பாலசரவணன், திருமிகு லால், திருமிகு சசிகலா ஆகியோர் ஒருங்கிணைப்பில் சேலம் நகரக் கிளை உதவியுடன் நடத்துவது. ”ஆளுக்கொருக்கிணறு” என்ற புத்தகம் வாசிக்க எடுத்து கொள்வது.
சென்னையில் வேலை செய்யும் தங்கள் குழந்தைகள் அல்லது தெரிந்தவர்களின் பெயர் கைப்பேசி மற்றும் முகவரிகளை என்னிடம் தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளின் திட்டமிடல் மற்றும் பங்கேற்பில் நிர்வாக்குழு, செயற்குழு மற்றும் பொதுகுழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இயக்க வளர்ச்சிக்கு உதவும்படிக் கேட்டு கொள்கிறேன்.
கிளைச் செயலாளர்கள் மற்றும் தாலுக்கா பொறுப்பாளர்கள் மாதம் ஒரு முறையேனும் கிளைக் கூட்டம் நடத்தி கிளை உறுப்பினர்களுக்கு மாத அறிக்கையை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்
வெ.ராமமூர்த்தி - 94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக