1.அமைப்பு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் 10 வது மாவட்ட மாநாடு 24-07-2011, ஞாயிறு அன்று ஜான்சன் பேட்டையிலுள்ள சுனில் மைத்ரா நினைவரங்கில் நடைபெற்றது.
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற வேலைகள் மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது .
திருமிகு S.நமச்சிவாயம் அவர்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட அலுவலகம் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை செயல்படுகிறது,
மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு தபாலில் அனுப்பப்பட்டது.
மாநில மாநாடு ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் வானவில் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் P.சகஸ்ரராமம், B.S.இளங்கோ, J.பாலசரவணன், V.ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகளாக மாவட்டப் பொருளாளர் G.சுரேஷ், மாவட்ட்த் துணைத்தலைவர்கள் K.P.சுரேஷ்குமார், R.பவளவள்ளி, K.சந்திரசேகர், மாவட்ட இணை செயலாளர்கள் D.திருநாவுக்கரசு, N.கோபால் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் S.அய்யணார், E.தில்லைக்கரசி, சாந்தஷீலா, பேராசிரியர்.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநில மாநாட்டில் சேலம் மாவட்ட சார்பாக புதிய மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக P.சகஸ்ரராமம், B.S.இளங்கோ, J.பாலசரவணன், V.ராமமூர்த்தி,K.P.சுரேஷ்குமார், R.பவளவள்ளி மற்றும் M.கற்பகம் அவர்களும், புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களாக P.சகஸ்ரராமம் மற்றும் V.ராமமூர்த்தி அவர்களும் தேர்தெடுக்கப்பட்டனர்.
24/08/2011 அன்று தாரமங்கலம் கிளையின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 12 பேர் கலந்துகொண்டனர். மாவட்டப் பொருளாளர் G.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
2.அறிவியல் கல்வி பிரச்சாரம்
ஜுலை 30,31 அன்று சென்னை இந்திய கணிதவியல் மையத்தில் (IMSc) நடைபெற்ற அறிவியல் கல்வி பிரச்சார உபக்குழு மாநாட்டிற்கு, உபகுழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (&மாவட்ட துணைத் தலைவர்) K.P.சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் G.சுரேஷ், அருண்குமார், மௌலீதரன் மற்றும் S.அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு அக்டோபர் 23ம் தேதி காக்காபாளையத்திலுள்ள நாலெட்ஜ் கல்லூரியில் நடத்துவதற்கு கல்லூரியின் முதல்வரை மாவட்ட துணைத் தலைவர் K.சந்திரசேகர், கன்னந்தேரி கிளைச் செயலாளர் R.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து அனுமதி பெற்றனர்.
ஹிரோசிமா நாகசாகி தினம்
09/08/2011 அன்று ஹிரோசிமா நாகசாகி தினம் நிகழ்ச்சி கன்னந்தேரி கிளை சார்பாக கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், நல்லண்ணம்பட்டி கிளை சார்பாக நல்லண்ணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மற்றும் நமது மாவட்ட அலுவலகத்திலும் நடைபெற்றது. நிகழ்ச்சி கருத்தாளர்கள் – மாவட்ட துணைத் தலைவர் K.P.சுரேஷ்குமார், பார்த்திபன். நிகழ்ச்சிகளில் மாவட்ட துணைத் தலைவர் K.சந்திரசேகர், R.ஜெயக்குமார், செங்கோடன், V.ராமமூர்த்தி, S.அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறிவியல் கண்காட்சி
12/08/2011 அன்று சேலம் மரவனேரி பகுதியிலுள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு மாவட்டத் தலைவர் Dr.R.சாம்சன் ரவீந்திரன் கலந்துகொண்டு, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
துளிர் இல்லம்
22/08/2011 அன்று ஆத்தூர் மலர் மெட்ரிக் பள்ளியில் துளிர் இல்ல துவக்க விழா நடைபெற்றது. அதில் மாவட்ட இணைச் செயலாளர் N.கோபால், ஆத்தூர் கிளைத் தலைவர் ஆ.அர்த்தநாரி மற்றும் கிளைச் செயலாளர் பா.ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
23/08/2011 அன்று கன்னந்தேரி கிளையின் சார்பாக கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் இல்ல துவக்க விழா நடைபெற்றது. அதில் மாவட்ட துணைத் தலைவர் K.சந்திரசேகர், மாவட்டப் பொருளாளர் G.சுரேஷ், கிளைச் செயலாளர் R.ஜெயக்குமார் மற்றும் கிளைத் தலைவர் தமிழரசன் கிளை பொருளாளர் பச்சமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். 30 மாணவர்கள் கலந்துகொண்டனர், துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களாக பள்ளியின் முன்னாள் மாணவிகள் V.தெய்வானை மற்றும் M.கோமதி நியமிக்கப்பட்டுள்ளனர்
3.கல்வி
மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம்
07/08/2011 அன்று ஆத்தூரில் மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. பேராசிரியர் முருகேசன் மற்றும் கிளைச் செயலாளர் பா.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உள்ளிட்ட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். “கரும்பலகையில் எழுதப்படாதவை” என்ற புத்தகம் வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பு
26/08/2011 அன்று நகரமலை அடிவாரம் பகுதியில் நண்பர் காந்தி அவர்கள் இல்லத்தில் மாலை நேர வகுப்பு மாலை 7.30 மணியளவில் துவக்கப்பட்டுள்ளது, மாநில செயற்குழு உறுப்பினர் P.சகஸ்ரநாமம் மாணவர்களிடையே கலந்துரையாடினார் மாவட்ட பொருளாளர் G.சுரேஷ் ஒருங்கிணைத்தார் 12மாணவர்கள் கலந்துகொண்டனர்.4.அறிவியல் வெளியீடு
LIC ஊழியர்களின் மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் S.நமச்சிவாயம் மற்றும் S.அய்யனார் ஆகியோரால் புத்தக விற்பனை செய்யப்பட்டது
20/08/2011 அன்று மாலை 5 முதல் 9.30 வரை மாவட்ட அலுவலகத்தில் G.சுரேஷ், S.நமச்சிவாயம் மற்றும் S.அய்யனார் ஆகியோரால் புத்தகங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 240 துளிர் இதழ் வாங்கப்பட்டு நமது மாவட்ட துளிர் முகவர்கள் சீனிவாசகர், T.அந்தோணி ஜோதிநம்பி முறையே 20 இதழ்களும், K.ராஜேந்திரசோழன், M.ஜானகிராமன், P.கார்த்தி, R.ரமேஷ், சந்தோஷ்குமார், S.K.செங்கோட்டுவேல், G.சுரேஷ், D.திருநாவுகரசு, K.P.சுரேஷ்குமார், J.பாலசரவணன், N.கோபால், T.ஜெயமுருகன், R.சசிகலா, S.ராம்பாபு, V.ராமமூர்த்தி முறையே 10 இதழ்களும், R.பவளவள்ளி, V.சீனிவாசன் முறையே 5 இதழ்களும் விநியோகிக்கின்றனர்.
5.சமம்
சர்வதேச மகளிர் தினப்போட்டியில் மாநில அளவில் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு ஆத்தூர் திரு சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி மாணவன் மு.ரமேஷ், எட்டாம் வகுப்பு அவர்களும்,
கட்டுரைப்போட்டியில் (கல்லூரி அளவில்) மூன்றாம் பரிசு நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவி நிரோஷா, முதலாம் ஆண்டு, ஆங்கில துறை அவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஜுலை 30 அன்று மாநில சமம் உபக்குழு மாநாட்டிற்கு சேலம் மாவட்டத்திலிருந்து யாரும் செல்லவில்லை.
ஆகஸ்ட் மாதம் 30 அறிவுத்தென்றல் இதழ் வாங்கப்பட்டு உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது
6.வளர்ச்சி
சேலம் மாவட்ட மாநாடு 24/07/2011 நடைபெற்றதால், மாநில வளர்ச்சி உபக்குழு மாநாட்டிற்கு சேலம் மாவட்டத்தில் இருந்து யாரும் செல்லவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக