இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், ஆகஸ்ட் 10, 2011

இரவு வான் நோக்குதல் ஆகஸ்ட் 2011



கோள்களின் நிலைகள்
ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 9 வரை




சூரியன் உதிக்கும் முன் தெரியும் கோள்கள்:
புதன்: இம்மாத ஆரம்பத்தில் மாலை நேரக் கோளாக இருக்கும் புதன், மூன்றாம் வாரத்தில் Aகாலை நேர கோளாக மாறுகின்றது. செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஓரளவு இக்கோளைக் காண இயலும். இக்கோள் சிம்மம் விண்மீன் தொகுதியில் உள்ளது.
செவ்வாய்: காலை சுமார் 2 மணிக்கு இக்கோள் உதமாகிறாது. அதிகாலை கிழக்கு வானில் நன்கு தெரியும். இக்கோள் மிதுனம் தொகுதியில் உள்ளது.
வியாழன்: இம்மாதம் காலைவானில் பிரகாசமான இருப்பது இதுவே ஆகும். இதைக் காலை மேற்கு வானில் நன்கு காணலாம். இது மேஷம் தொகுதியில் உள்ளது.
( குறிப்பு : காலை நேர விண்மீன் தொகுதிகளை அடையாளம் காண கடந்த ஜனவரி மாத துளிர் இரவு வான் வரைபடத்தை உபயோகிக்கலாம்)
சூரியன் மறைந்தபின் தெரியும் கோள்கள்:
வெள்ளி: இம்மாத அதிகாலை விடியும் நேரத்தில் கிழக்கு அடிவானில் உள்ளது. பின்னர் இம்மாத மூன்றாம் வாரத்திலிருந்து மாலை நேர கோளாக மாறுகின்றது. இக்காலம் முழுவதும் சூரியனுக்கு மிகமிக அருகில் உள்ளதால் இதைக்காண இயலாது இக்கோள் கடகம் விண்மீன்தொகுதியிலிருந்து சிம்மம் தொகுதிக்குச் செல்கிறது
சனி: சனிக்கோளை சூரியன் மறையவும் மேற்கு அடிவானிலிருந்து சுமார் 30 டிகிரி உயரத்தில் தெரியத் தொடங்கும்.இம்மாதம் முழுவதும் கன்னி விண்மீன் தொகுதியில் சித்திரை நட்சத்திரத்திற்கு சற்று மேற்கில் காணலாம்.
சில முக்கிய வான் நிகழ்வுகள்:
ஆகஸ்ட் 13: முழுநிலவு
ஆகஸ்ட் 16: வெள்ளிக் கோள் சூரியனுக்கு நேர் பின்புறமாக அமைதல் (superior conjucation)
ஆகஸ்ட் 17: புதன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைதல்.
ஆகஸ்ட் 18: நிலவு சேய்மைத் தொலைவில் இருத்தல் ( apogee).
ஆகஸ்ட் 23: நெப்டியூன் சூரியனுக்கு நேர் எதிரே அமைவதால் சூரியன் மறையவும் கிழக்கே உதிக்கும். தொலை நோக்கி வழியாக இக்கோளை காணலாம்.
ஆகஸ்ட் 25: செவ்வாய் அதிகாலை கிழக்குவானில் பிறைநிலவுக்கு சுமார் 5 டிகிரி கிழக்கே இருத்தல்
ஆகஸ்ட் 29: அமாவாசை.
ஆகஸ்ட் 30: நிலவு பூமிக்கு அண்மைத் தொலைவில் உள்ளது (perigee)
செப்டம்பர் 3: புதன் சூரியனிலிருந்து அதிகபட்சமாக 18 டிகிரி மேற்காக பிரிந்து இருத்தல். அதிகாலை கிழக்குவானில் புதனை சுமார் 5.15  5.45 மணிக்குள் ஓரளவு காண இயலும் நாள்.
சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தமிழகத்தில் நன்கு தெரியும் சில நாட்கள்:
ஆகஸ்ட் 12: பிரகாசமான நட்சத்திரம் போன்று தெரியும் இது தென்மேற்கு திசையில் மாலை சுமார் 7.04க்குத் தெரியத்தொடங்கி வடகிழக்கு நோக்கி சுமார் 7.11 வரை செல்லக் காணலாம். அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரயமானது தென் மாவட்டங்களில் சுமார் 76டிகிரியாகவும் வட மாவட்டங்களில் சுமார் 67 டிகிரியாகவும் இருக்கும்
நன்றி :  திருமிகு.பார்த்தசாரதி, கல்பாக்கம் .       http://tnsfkanchi.blogspot.com/2011/08/2011.html

2 கருத்துகள்:

  1. Thank you for the sky chart in Tamil. it is a remarkable map.
    Is it possible to give sky chart in Color ? to distinguish planets and starts.
    for ISS location, kindly include Heavensabove [ www.heavens-above.com/ ] link for giving better understanding on the path.

    பதிலளிநீக்கு
  2. ///Is it possible to give sky chart in Color ?///
    This skychart is originally for the children's science magazine "Thulir".
    The planets can be very easily identified by the symbols in the chart.

    //for ISS location, kindly include Heavensabove [ www.heavens-above.com/ ] link for giving better understanding on the path.///
    Good suggestion. As I told earlier, this page is a reproduction of an article from"Thulir" magazine published especially for rural Tamil children.
    Thank you for your comments and support.

    பதிலளிநீக்கு