வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற வேலைகள் மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது .
கிளை மாநாடுகள் மே மாதத்தில் நடத்தி முடிப்பது என 12/05/2011 வாரந்திர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,
சேலம் மாவட்டத்தின் மாநகரக் கிளை அமைப்பு கூட்டம் மற்றும் மாநகரக் கிளை மாநாடு 19-05-2011 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது, மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகஸ்ரநாமம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுகுழு உறுப்பினர்கள் திருமிகு.சசிகலா, திருமிகு.பாலசரவணன் மற்றும் மாவட்ட செயலாளர் திருமிகு.ராமமூர்த்தி உள்ளிட்ட மாநகர அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர், இதில் புதிய மாநகர கிளை அமைக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளையில் 21 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநகர கிளை நிர்வாகிகள் : தலைவர்-திருமிகு.கற்பகம், செயலாளர்-திருமிகு.லால், பொருளாளர்-திருமிகு.ஐடா பிரிஸில்லா.
இம்மாதம் 23 உறுப்பினர்களுக்கான ஆண்டு சந்தா அனுப்பப்பட்டுள்ளது.
2.அறிவியல் பிரச்சாரம்
துளிர் இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழா நிகழ்ச்சி
மாநில செயற்க்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட தலைவரிடம் கலந்து ஆலோசித்து துளிர் இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழா நிகழ்ச்சியை மே மாதம் 28 மற்றும் 29 ந்தேதி மஹேந்திரா பொறியியற் கல்லூரியில் நடத்தத் திட்டமிடப்பட்டது.
துளிர்இல்ல மற்றும் துளிர்இல்லம் அமைக்க வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்து கலந்துக் கொள்ளும்படி, கடிதம் மூலம் அனைத்து கிளைகளுக்கும் 11/05/2011 தகவல் தரப்பட்டது.
23 & 27/05/20011 அன்று மகேந்திரா கல்லூரிக்கு சென்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டமிடல்களை கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வருடன் இணைந்து திருமிகு.ராமமூர்த்தி, திருமிகு.பாலசரவணன் மற்றும் திருமிகு.சுரேஷ் செய்தனர்
சேலம் மாவட்ட அறிவியல் இயக்க துளிர்இல்லங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாகவும், புதிய துளிர்இல்லங்களை அமைக்கும் முயற்சியாகவும் “துளிர்இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழா” கடந்த 28 (சனி) மற்றும் 29 (ஞாயிறு) இரு நாட்கள் தங்கும் முகாமாக மகேந்திரா பொறியியல் கல்லூரியில் (மல்லசமுத்திரம்) நடைபெற்றது,
கருத்தரங்கம்
மாவட்டக்குழுவின் முடிவின்படி சர்வதேச வேதியியல் ஆண்டையொட்டி மருந்துப் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் ஜுன் மாதத்தில் சென்னையில் ஹெல்த்பாரத்தில் கேட்டு கருத்தாளரை ஏற்பாடு செய்வது. மாவட்டத்தில் மருத்துவர் லஷ்மிநரசிம்மன் அவர்களையும் அழைப்பது என்று 12/05/2011 வாராந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
எளிய அறிவியல் பரிச்சோதனைப் பயிற்ச்சி முகாம்.
பயிற்ச்சிக்காக மாவட்டம் தயாராக உள்ளது. மாநில வழிகாட்டுதல் மற்றும் கருத்தாளர்க்ளை எதிர்நோக்கியுள்ளோம். மாநிலம் இதற்கு உடனடியாக உதவி செய்யக் கேட்டுக்கொள்கிறோம்.
சர்வதேச வேதியல் ஆண்டு
மாவட்ட செயற்குழுவின் வழிகாட்டுதலின் படி சர்வதேச வேதியல் ஆண்டை கொண்டாடும் வகையில், 18/05/2011 அன்று மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வேதியியல் துறை முனைவார்கள் சங்கர், காலிங்க்ஸ் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரை மாவட்டசெயலாளர் திருமிகு ராமமூர்த்தி, பொருளாளர் திருமிகு.சுரேஷ் சந்தித்து கல்லூரியுடன் இணைந்து இவ்வாண்டு முழுதும் நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
கல்லூரி நிகழ்ச்சிகளாக : அறிக்கை சமர்பித்தல், புகைப்படம், கட்டுரை, வினாடிவினா போட்டிகள் மற்றும் வேதியியல் கண்காட்சி நடத்துவது, கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து கிராமப்பகுதிகளில் மந்திரமா தந்திரமா, வான் நோக்குதல், குடிநீர், உணவு தர ஆய்வு மற்றும் மருந்து சார்ந்த கருத்தரங்கம் போன்ற அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, கல்லூரி மாணவர்களுக்கான வேதியியல் சிறப்புரை நம் மாநில கருத்தாளர்களை கொண்டு நடத்துவது,
3.கல்வி
மாநில கல்வி உபக்குழு மாநாடு - வரவேற்ப்புக்குழு அமைத்தல்.
மாநில கல்வி உபக்குழு மாநாட்டிற்கு வரவேற்ப்புக்குழு அமைக்கும் கூட்டம் 04/05/2011 அன்று தாரமங்கலத்தில் நடைபெற்றது. அதில் மாநில செயலாளர் திருமிகு சுப்ரமணி அவர்களும், மாவட்டசெயலாளர் திருமிகு ராமமூர்த்தி, முன்னால் மாவட்டசெயலாளர் திருமிகு ஜெயமுருகன், திருமிகு செங்குட்டுவேல், திருமிகு ரமேஷ் திருமிகு கார்த்திக், தொழிலதிபர் திருமிகு தாரை குமரவேல் அவர்களும் மற்றும் கிளை உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
அதில் வரவேற்ப்புக்ழுத் தலைவராக திருமிகு தாரை குமரவேல் அவர்களும், செயலாளராக திருமிகு செங்குட்டுவேல் அவர்களும், பொருளாளராக் திருமிகு ரமேஷ் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில கல்வி உபகுழு மாநாட்டில் பொதுநிகழ்ச்சி நடத்துவது. அதில் சிறப்புரை, மந்திரமா தந்திரமா மற்றும் குழந்தைகள் நிகழ்ச்சி நட்த்துவது என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
மாநாட்டிற்கு அனைத்து கிளைகளும் பொருள் மற்றும் வேலைகளை பகிர்ந்து செய்ய கேட்டுக்கொள்வது என முடிவெடுக்கப்பட்ட்து.
மாநில கல்வி உபகுழு மாநாடு தேதி ஜுன் 25,26ஐ ஜுலை 2,3 ஆக நடத்துவது என்று மாநில செயலாளர் திருமிகு.பாலகிருஷ்ணான் அவர்களிடம் கலந்தாலோசித்து மாற்றப்பட்டுள்ளது.
மாநில கல்வி உபக்குழு மாநாடு – திட்டமிடல் கூட்டம்.
மாநில கல்வி உபக்குழு மாநாட்டிற்காக திட்டமிடல் கூட்டம் மே மாதம் 10 ந்தேதி நடைப்பெற்றது. கூடட்த்தில் திருமிகு. சகஸ்ரராமம் மாநில செயற்குழு உறுப்பினர், திருமிகு. ராமமூர்த்தி, திருமிகு. சுரேஷ், திருமிகு. பாலசரவணன், திருமிகு ராம்பாபு, திருமிகு. செங்குட்டுவேல், திருமிகு. சீனிவாசன், திருமிகு. ராஜேந்திரசோழன், திருமிகு. ஜானகிராமன், திருமிகு. ரமேஷ், திருமிகு. கார்த்திக், திருமிகு. சந்தோஷ், திருமிகு. மெளலிதரன் மற்றும் திருமிகு. நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மாநிலத்துடன் கலந்து பொதுநிகழ்ச்சி மற்றும் குழந்தைகள் கலைநிகழ்ச்சி நடத்துவது. பொதுநிகழ்ச்சியாக மந்திரமா? தந்திரமா? – கருத்தாளர்கள் திருமிகு.சேதுராமன் மற்றும் திருமிகு.தில்லைக்கரசி, வான்நோக்குதல் – திருமிகு.ஜெயமுருகன் மற்றும் உமாசங்கர், கல்வி குறித்து கருத்துரை திருமிகு .J. கிருஷ்ணமூர்த்தி அல்லது திருமிகு.தமிழ்செல்வன், கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றிய மாநிலம் தயாரித்த நாடகத்தை குழந்தைகளை கொண்டு நடத்துவது பொறுப்பு இமயபாலன்.
மாநாட்டிற்கு தேவைப்படும் நிதியை (ரூ.40,000) தாரமங்கலம் கிளை வசூல் செய்வது என்றும் மற்ற கிளைகள் அந்தந்த பகுதியில் வசூல் செய்து மாநாடு சிறப்பாக நடைபெற உதவி செய்வது. ஜுன் மாதத்தில் இருந்து வசூல் செய்வது.
மாநாடு தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடத்த மண்டபம் உறுதி செய்யப்பட்டது.
மாநாட்டிற்கான நன்கொடை புத்தகம் தயாராகிவிட்டது, ஜூன் 5 இல் இருந்து நன்கொடை வசூலிப்பது என்று தாரமங்கலம் கிளை முடிவெடுத்துள்ளது, மற்ற கிளைகளையும் நன்கொடை வசூல் செய்ய மாவட்டமையம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது,
26/05/2011 அன்று தாரமங்கலம் கிளை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கலந்துகொண்டு மாநாடு ஏற்பாடு பற்றி ஆலோசித்தார்,
01/06/2011 அன்று வரவேற்புக்குழு தலைவர் திருமிகு.தாரை குமாரவேலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது,
புத்தக வாசிப்பு முகாம்.
ஈரோடு சத்தியமங்கலத்தில் மாநிலஅளவில் மூன்று நாள் தங்கும் முகாமாக புத்தக வாசிப்பு முகாம் நடைப்பெற்றது. அதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் இருந்து 19 ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
4.அறிவியல் வெளியீடு
மாநிலத்தில் இருந்து புத்தகங்கள் வந்துள்ளது. புத்தகங்களின் மதிப்பு ரூ 18875.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் பவளவல்லி, தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு. சந்தோஷ், ரமேஷ், கார்த்திக், மற்றும் ராஜேந்திரசோழன், ஜானகிராமன், சாந்தஷீலா ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 255 துளிர் விற்பனை செய்கின்றனர்.
ஒரு துளிர் ஆயுள் சந்தா அனுப்பப்பட்டுள்ளது.
30 அறிவுதென்றல் வாங்கப்பட்டது
புத்தக விற்பனை :
25/05/2011 - மாவட்ட இணை செயலாளர் திருமிகு.அந்தோனி ஜோதி நம்பி அவர்களின் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் ரூபாய்: 350
28/05/2011 - துளிர் இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழாவில் ரூபாய்: 450
5.சமம்
நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை ,வரும் காலங்களில் மாவட்ட செயற்க்குழு, நிர்வாகக்குழு மற்றும் சமம் உபக்குழு சிறப்புகவனம் செலுத்தி சிறய அளவிலாவது நிகழ்சிகளை செயல்படுத்த முயசிக்க வேண்டும்.
6.வளர்ச்சி
நிகழ்சிகள் எதுவும் நடைபெறவில்லை ,வரும் காலங்களில் மாவட்ட செயற்க்குழு, நிர்வாகக்குழு மற்றும் வளர்ச்சி உபக்குழு சிறப்புகவனம் செலுத்தி சிறய அளவிலாவது நிகழ்சிகளை செயல்படுத்த முயசிக்க வேண்டும்.
7.இதர
மாவட்ட இணை செயலாளர் திருமிகு.அந்தோனி ஜோதி நம்பி அவர்களின் திருமணம் 15/05/2011 அன்று மாந்தையிலும், திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி 25/05/2011 அன்று மேட்டூரிலும் நடைபெற்றது.
மாவட்ட நிகழ்வுகளை பகிர்ந்துக்கொள்ளவும், தகவல் சேமிப்பாகவும் வலைப்பூவில் (www.tnsfsalem2009.blogspot.com) பதிவேற்றம் செய்யப்படுகிறது,
இம்மாத மாவட்ட வரவு செலவு விபரம்
வரவு : ரூபாய் 4657
செலவு : ரூபாய் 4660
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக