இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, ஜூன் 03, 2011

“கோடை அறிவியல் திருவிழா”



 
சேலம் மாவட்ட அறிவியல் இயக்க துளிர்இல்லங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாகவும், புதிய துளிர் இல்லங்களை அமைக்கும் முயற்சியாகவும் “துளிர்இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழா” கடந்த 28 (சனி) மற்றும் 29 (ஞாயிறு) இரு நாட்கள் தாங்கும் முகாமாக மகேந்திரா பொறியியல் கல்லூரியில் (மல்லசமுத்திரம்) நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தின் தலைவாசல், ஆத்தூர், கொங்கனாபுரம், எடப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம், மேட்டூர், மகுடஞ்சாவடி, அம்மாபேட்டை, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, நேய்க்காரப்பட்டி பகுதிகளில் இருந்து 180 குழந்தைகள் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட ஒருங்கினைப்பளர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இவர்களில் கிராமப் பகுதிகளில் இருந்தும் அரசுப்பள்ளிகளில் பயில்வோரும் பெரும் அளவில் கலந்துக்கொண்டனர்.
28/05/2011 சனிக்கிழமை - காலை நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மாவட்ட தலைவரும், கல்லூரியின் முதல்வருமான முனைவர்.சாம்சன்ரவீந்திரன் தலைமையேற்று நடத்தினார், மாவட்ட செயலாளர் திருமிகு. ராமமூர்த்தி அனைவரயும் வரவேற்றார், மாவட்ட துணைத்தலைவர் திருமிகு.சசிகலா அறிவியல் இயக்க செயல்பாடுகள் பற்றி விவரித்தார், மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை மாவட்ட துளிர்மைய கருத்தாளருமான திருமிகு.தியாகராஜன் துளிர்இல்ல செயல்பாடுகள் பற்றி விவரித்தார், சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய கிளை பொறுப்பாளர் திருமிகு. சந்திரசேகர் துவக்க விழாவிற்கான நன்றியுரை ஆற்றினார், தொடர்ந்து ஆத்தூர் கிளை செயலாளர் திருமிகு.ஸ்ரீனிவாசன் தலைமை ஏற்க்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா? தந்திரமா? விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது, மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.தியாகராஜன் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது, இரவும், 29 ஞாயிறு அதிகாலையிலும் தொலைநோக்கி வழியே இரவு வான்நோக்கு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கருத்தாளர் திருமிகு.உமாசங்கர் அவர்களின் விளக்கங்களுடனும் நடைபெற்றது ,

29/05/2011 ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை மாநில கருத்தாளர் திருமிகு.பாண்டியராஜன் அவர்களின் ஒருங்கிணைப்பில் குழந்தைகள் மூன்று குழுக்களாக முறையே மரம் ஓர்ஆய்வு, சமுதாய வரைப்படம், பல்லுயிர் நோக்கும் நடைபயணம் மேற்கொண்டனர், பின் அவர்களின் முறையான தொகுப்புரை நடைபெற்றது, கல்லூரியின் தாளாளர் திருமிகு பாரத்குமார் அவர்கள் குழந்தைகளை வாழ்த்தி புத்தகங்களை பரிசளித்தார், முன்னதாக மாநில செயலாளரும், ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த பேராசிரியர், திருமிகு.மணி அவர்கள் தாளாளருக்கு பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசளித்தார், “சர்வதேச காடுகள் ஆண்டு 2011” என்ற தலைப்பில் மாவட்ட இணை செயலாளர் திருமிகு.சுரேஷ்குமார் அவர்களும்,

மாவட்ட இணை செயலாளர் திருமிகு.செங்குட்டுவேல் தலைமை ஏற்க்க “பள்ளிக்கும் வீட்டிற்கும் அப்பால்” என்ற தலைப்பில் பாண்டிச்சேரி அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த கல்வியாளருமான திருமிகு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினார்,

பின்னர் குழந்தைகள் நான்குக் குழுக்களாக முறையே கருத்தாளர் திருமிகு.சத்யமூர்த்தி அவர்களின் ஜப்பானிய காகித மடிப்புக்கலை, திருமிகு.உமாசங்கர் அவர்களின் பகல்வானியல், திருமிகு.பாலசரவணன் மற்றும் திருமிகு.ஆண்ட்டோ அவர்களின் கதை சொல்லுதல், திருமிகு.ராஜேந்திரசோழன் அவர்களின் சர்வதேச வேதியியல் ஆண்டு 2011 ஐ கொண்டாடும் வகையில் வேதியியல் சோதனைகள் போன்ற நிகழ்வுகளில் பயிற்சி பெற்றனர்.

மாலை 2.30 மணியளவில் நடைபெற்ற நிறைவு விழாவை மாவட்ட துணை தலைவர் திருமிகு.ராம்பாபு தலைமையேற்று நடத்தினார், கல்லூரியின் சார்பில் இந்நிகழ்வை ஒருங்கிணைத்த வேதியியல்துறை முனைவர்.காலிங்ஸ் மற்றும் இயற்பியல்துறை முனைவர்.ராஜராஜன் அவர்களையும் சிறப்பித்து பரிசளித்தார், இந்நிகழ்வின் அனுபவங்களை பற்றி குழந்தைகளும் ஒருங்கிணைப்பாளர்களும் பகிர்ந்துகொண்டனர், தொடர்ந்து துளிர்இல்லங்கள் செய்யவேண்டியது குறித்து மாவட்ட துளிர்இல்ல ஒருங்கினைப்பளார் திருமிகு.சுரேஷ் பகிர்ந்துகொண்டார், இறுதியாக மாவட்ட இணை செயலாளர் திருமிகு.பலசரவாணன் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தாரமங்கலம் கிளையில் ஏற்கனவே தெரிவிதிருந்தபடி 45 துளிர் இல்லங்கள் அமைக்க உறுதியேற்றனர், மேலும் பரவலாக புதிய துளிர் இல்லங்களை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். புத்தக விற்பனை நடைபெற்றது, புதிய நண்பர்கள் அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராகினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக