இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், மே 23, 2011

“ கோடை அறிவியல் திருவிழா ”



     தேதி : 11/05/2011
கோடை அறிவியல் திருவிழா
நண்பர்களுக்கு வணக்கம்,

நமது மாவட்டத்தில் உள்ள துளிர் இல்லங்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாகவும்புதிய துளிர் இல்லங்களை அமைக்கும் முயற்சியாகவும்  துளிர் இல்ல குழந்தைகளுக்கான கோடை அறிவியல் திருவிழா இம் மாதம் 28 (சனி) மற்றும் 29 (ஞாயிறு)  இரு நாட்கள் தாங்கும் முகாமாக மகேந்திரா பொறியியல் கல்லூரியில் (மல்லசமுத்திரம்)  நடத்த திட்டமிட்டுள்ளோம், ஆகையால் தங்கள் கிளை/ ஒன்றியம்/ அரசு பள்ளி/ பகுதி சார்ந்த துளிர் இல்லங்களில் ஒவ்வொரு துளிர் இல்லத்தில் இருந்தும் 5 குழந்தைகள் வீதம் கலந்து  கொள்ள  செய்யவும்,  

துளிர் இல்லம் இல்லாத பகுதிகளில் தேர்வு  செய்யப்பட்ட மூத்த வயது குழந்தைகளில் 5 பேர் மட்டும்  பங்கேற்க செய்யவும் { அவர்கள் மாதம் குறைந்தது ஒரு கூட்டம் நடத்தி தொடர்ந்து செயல்படும் வகையில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை  பயில்பவர்களாகவும்,  (5ம் வகுப்பிற்கு கீழ் உள்ளக் குழந்தைகள் ஆர்வம் காரணமாக வந்தால் இணைக்கலாம் மேலும் 10 வயதிற்கு மேற்ப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள்  இருப்பின் கண்டிப்பாக துளிர் இல்லத்தில் இணைக்கவும்),  15 முதல் 20 குழந்தைகள் வரையில் ஒரு குழுவாக இணைந்து புதிய துளிர் இல்லமாக அமையவுள்ள குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும்,}

அறிவியல் திருவிழாவில் பல்வேறு அறிவியல் செயல்முறைகள், எளிய அறிவியல் பரிசோதனைகள், வேதியியல் பரிசோதனைகள்கணக்கும் இனிக்கும், மந்திரமாதந்திரமா? கதைகள் கூறுதல், தொலை நோக்கி மூலம் வான் நோக்குதல், கலந்துரையாடல், கண்காட்சி, குறும்படங்கள், பாடல்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆகையால் எத்தனை துளிர் இல்லங்களில் இருந்து எத்தனை குழந்தைகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கலந்துகொள்ள உள்ளனர் என்ற விபரங்களை  வரும் 15 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களுக்கு தெரியப்படுத்தவும், மேலும் விபரங்களுக்கு-

G.சுரேஷ் - மாவட்ட துளிர்இல்ல ஒருங்கிணைப்பாளர்98945 35048
V.ராமமூர்த்தி - மாவட்ட செயலாளர் – 94864 86755

v  நிகழ்ச்சிக்கு நுழைவு / பதிவு  கட்டணம் எதுவும் கிடையாது,
v  கண்டிப்பாக துளிர் இல்லத்தை பதிவு செய்யும் வகையில் முகாமில் கலந்து கொள்ளும் 5 பேருடன் மற்றும் துளிர் இல்லத்தில் இணைக்கப்பட உள்ள குழந்தைகளில் பெயர் பட்டியல் மற்றும் வயது, வகுப்பு போன்ற  தேவையான தகவல்களுடன் வரவும்,
v  எளிய படுக்கை வசதியுடன் வரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக