ஏப்ரல் மாத வேலை அறிக்கை.
1.அமைப்பு
நிர்வாகக்குழுக் கூட்டம் 14/04/2011 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.
செயற்குழுக் கூட்டம் 28/04/2011 அன்று மாலை 7 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது. அதில் மாநில செயற்குழுக் கூட்ட முடிவுகள் மற்றும் அதையொட்டி 14/04/2011 நடைப்பெற்ற நமது மாவட்ட நிர்வாக்குழு கூட்டமுடிவுகள் செயற்குழுவில் அறிக்கை அளிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து வாராந்திரக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் வியாழன் மாலை நடைபெறுகிறது.
2.அறிவியல் பிரச்சாரம்
துளிர் வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மேட்டூர் (கொளத்தூரில்) உள்ள நிர்மலா மேல்நிலைப் பள்ளி மாணவன் திருமிகு டேவிட்குமார், கன்னங்குறிச்சி கிளை செயலாளர் திருமிகு அய்யனார் ஆகிய இருவரும் மேட்டுப்பாளையத்தில் நடைப்பெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
3.கல்வி
மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாநிலகல்வி உபக்குழு மாநாடு சேலத்தில் தாரமங்கலம் பகுதியில் நடத்துவது என்று மாவட்ட நிர்வாக குழுவால் பரிந்துரை செய்யப்பட்டு செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்காக 29/04/2011 அன்று மாலை தாரமங்கலத்தில் கூட்டம் நடைப்பெற்றது, இதில் திருமிகு சகஸ்ரராமம் மற்றும் திருமிகு பாலசரவனன், திருமிகு செங்குட்டுவேல் திருமிகு ரமேஷ் திருமிகு கார்த்திக் மற்றும் தாரமங்கலம் கிளை நண்பர்கள் கலந்துக் கொண்டனர். 04/05/2011 அன்று தாரமங்கலத்தில் கூட்டம் நடத்தி வரவேற்ப்புக்குழு அமைப்பது என்றும், மாநில நிர்வாகிகளை அழைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தொழிலதிபர் திருமிகு தாரை குமரவேல் அவர்களை வரவேற்புக்குழு தலைவராக நியமிப்பது என்று ஆலோசனை வழ்ங்கப்பட்டது.
4.அறிவியல் வெளியீடு
உலக புத்தக தினத்திற்கு மாநிலத்திலிருந்து புத்தகம் வந்ததும் விற்பனை செய்வது .
5.சமம்
சர்வதேச மகளிர் தினம் போட்டியில் பங்குகொண்ட கல்லூரி, பள்ளிகள் மற்றும் ஆர்வலர்களின் படைப்புகளான கட்டுரை மற்றும் ஓவியம், மாவட்ட அளவில் தேர்வு செய்து ஒவ்வொன்றிலும் சிறந்த மூன்று படைப்புகள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது. போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட இணை செயலாளர் திருமிகு. செங்குட்டுவேல் அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும், திருமிகு கற்பகம் அவர்கள் இணை ஒருங்கிணைப்பளராகவும் இருந்து சிறப்பாக நடத்தினர்.
6.இதர
கண்ணியமான தேர்தல்.
கண்ணியமான தேர்த்லுக்கான கூட்டமைப்பு என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் 2000 அடித்து 8/4/2011 ஞாயிறு மாலை 6 மணியளவில் புதிய பஸ் நிலையத்தில் விநியோகிக்கப்பட்டது.
வெ. ராமமூர்த்தி,
மாவட்ட செயலாளர்.
94864 86755.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக