“ மாவட்ட செயற்குழுக் கூட்ட அறிக்கை ” (4வது கூட்டம்.)
பாரட்டுக்கள் :
1) பிப்ரவரி 26, 27 தேதிகளில் மதுரையில் நடைப்பெற்ற "இளைஞர் அறிவியல் திருவிழா" நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தில் இருந்து 7க் குழு பங்குப் பெற்றது. மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 கட்டுரையில் 3 கட்டுரை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது.
விபரங்கள் - 1. சோனா தொழில்நுட்பக் கல்லூரி
2. ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
3. அம்மாபேட்டை அறிவியல் இயக்க கிளை உறுப்பினர்கள் கார்த்திக், அருண், மௌளிதரன் மற்றும் ராஜசேகர்.
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 குழுவினர் ஆகும்.
2) 2011 – சர்வதேச மகளிர் தின போட்டிகளை நமது மாவட்டத்தில் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி அதிகப்படியான அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களை பங்கேற்க செய்து விரைவில் சான்றிதழ்களை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ச.க.செங்குட்டுவன் மற்றும் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர், M.கற்பகம் அவர்களுக்கு.
3) கல்வி உபக்குழுவின், ஆசிரியர் இணையம் சார்பில் மாதம்தோறும் நடைபெறும் புத்தகவாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்கும் ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும்.
4) தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அறிவியல் நிகழ்சிகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும்,
அமைப்பு :
1. கிளைகள் மாநாடு மே மாத்தில் நடத்தி முடிப்பது,
2. மாவட்ட மாநாடு ஜுன் 15 – ஜுலை 15க்குள் நடத்துவது,
3. மாவட்ட மாநாட்டையொட்டி சேலம் மாவட்ட அறிவியல் இயக்க வரலாறு புத்தகம் வெளியிடுவது. அதில் கிளைகள் பற்றிய தொகுப்பு இடம் பெறுவது. ஆகையால் புத்தகத்தில் இடம்பெறவேண்டிய தங்கள் கிளை மற்றும் நிகழ்வுகள் பற்றிய விவரங்களை மே 15ந்து தேதிக்குள் அளிக்குமாறு வேண்டுகிறோம். இதனை திருமிகு. ஏற்காடு இளங்கோ அவர்கள் வழிகாட்டுதலுடன் குழு செயல்படுத்தும் ..
4. மாநில மாநாட்டிற்கு முன்பு நடைபெறும் மாநில உபக்குழுக்கள் மாநாட்டிற்கு மாவட்ட உபக்குழுவின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ப்பது.
அறிவியல் பிரச்சாரம் :
1. துளிர் இல்லத்திற்கான கோடை அறிவியல் திருவிழா தலைவர் உதவியுடன் இரண்டு நாள் முகாம் நடத்துவது.
2. ஒவ்வொரு கிளையும் ஒரு துளிர் இல்லம் அமைப்பது.
3. மாநில துளிர் இல்ல பயிற்சி முகாமுக்கு நமது மாவட்டத்தில் இருந்து 3 நபர்கள் பங்கேற்ப்பது.
4. மேட்டுபாளையத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ல் நடைபெறும் துளிர் திறனறிதல் தேர்வில் பங்கேற்ற குழந்தைகளுக்கான துளிர் அறிவியல் திருவிழா நிகழ்ச்சிக்கு குழைந்தைகள் இருவர் மற்றும் திருமிகு அய்யனார் அவர்கள் பங்கேற்ப்பது.
5. அறிவியல் இயக்க கருத்தாளர்கள் உருவாக்குவதற்கு மாநிலம் நடத்தும் எளிய அறிவியல் பரிசோதனை பயிற்ச்சி முகாம் சேலத்தில் நடத்த முற்சிப்பது.
1) சர்வதேச வேதியல் ஆண்டு ( IYC )
மாவட்ட குழு பரிந்துரைத்துள்ள கீழ்கண்ட நிகழ்வுகளை நட்த்துவது
1. குடிநீர் கள ஆய்வு செய்து குடிநீர் தரத்தை பரிசோதிப்பது- ஒருங்கிணைப்பாளர் திருமிகு.இளங்கோ,
2. வேதியல் ஆண்டு மற்றும் இளைஞர்கள் – டாக்டர். காலிங்ஸ்
3. பொதுமக்களுக்கான நிகழ்ச்சி – டாக்டர் கோவிந்தராஜன். 2,3 வது நிகச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் தலைவர் திருமிகு.சாம்சன் ரவிந்திரன் அவர்கள்.
4. மருந்துகளை பற்றி (தரம் மற்றும் செயல்படும் விதம்) கருத்தரங்கம் மே 7ல் ஏற்பாடு
செய்வது பிறகு மக்களிடம் நிகழ்ச்சிகளை கொண்டு செல்வது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ராம்பாபு மற்றும் திருமிகு G.சுரேஷ் அவர்கள்.
5. பல் சம்பந்தமாக அறிவியல் இயக்கம் மற்றும் விவேகானந்தர் கல்லூரியுடன் இணைந்து
மருத்துவ முகாம் நடத்துவது.
2) சர்வதேச வன ஆண்டு ( IYF )
மாவட்ட குழு பரிந்துரைத்துள்ள கீழ்கண்ட நிகழ்வுகளை நடத்துவது
1 ஏற்காட்டில் கனிமச்சுரங்கங்களினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஆய்வு செய்வது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P. சுரேஷ்குமார் அவர்கள்.
2. சாலையோரங்களில் இந்திய வகை மரங்கள் அழிக்கப்பட்டு அந்நியவகை மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்.
3. ஏற்காட்டில் கல்லூரி மாணவர்களை கொண்டு பேரணி-தாவரங்கள் பற்றிய ஆய்வு..
4. சமூகவனகாடுகளின் இன்றைய நிலை. 2,3,4 நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் திருமிகு கோபால் அவர்கள்.
5. சிட்டு குருவிகள் பற்றி ஆய்வு. பறவைகள் ஆர்வலர்கள் துணையுடன் ஆய்வு செய்வது.
கல்வி:
1) மாநில கல்வி உபக்குழு மாநாடு
மாநில செயற்குழு முடிவின்படி மாநில கல்வி உபக்குழு மாநாடு ஜுன் மாதம் 25,26 ஆக இரண்டு நாட்கள் நடத்துவது. மாநாடு தாரமங்கலத்தில் தாரமங்கலம் கிளை நடத்துவது. இதற்கு மற்ற கிளைகள் அனைத்து உதவிகளையும் செய்வது. மே மாதம் மாலை 4 மணிக்கு வரவேற்ப்புக்குழு அமைத்து மாநாட்டு வேலைகளை திட்டமிட்டு நடத்துவது. (வரவேற்ப்பு கூட்டத்திற்கு வாய்புள்ள அனைவரும் பங்கேற்கவும்)
2) ஆசிரியர் இணையம் ஒன்றிய அளவில் அமைப்பது.
ஆத்தூர், கெங்கவள்ளி மற்றும் தலைவாசல் – திருமிகு. சீனிவாசன் ஆசிரியர் அவர்களும்,
தாரமங்கலம் மற்றும் ஓமலூர் – திருமிகு செங்குட்டுவன் ஆசிரியர் அவர்களும்
மேட்டூர் மற்றும் மேச்சேரி – திருமிகு சுப்ரமணி அவர்களும்
இடைப்பாடி மற்றும் சங்ககிரி – திருமிகு ஜெயகுமார் ஆசிரியர் அவர்களும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவது என்று செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது..
அறிவியல் வெளியீடு:
1. மண்டல புத்தக மையம் மீண்டும் செயல்படுவது. மண்டல ஒருங்கிணைப்பாளராக திருமிகு கற்பகம் அவர்கள் செயல்படுவது
2. மாநிலத்திலிருந்து புத்தகம் வந்தபிறகு உலக புத்தக தின விற்பனை செய்வது.
மேற்கண்ட திட்டமிடல்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து கிளை மற்றும் உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு வேலைப் பகிர்வின் மூலம் ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டுகிறேன்.
வணக்கங்களுடன்
V.ராமமூர்த்தி,
மாவட்ட செயலாளர்.
94864 86755
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக