சர்வதேச பெண்கள் தின நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் மாதார் சங்கம் இணைத்து 08/03/2011 மாலை 4 முதல் 7 வரை ஆத்தூர் ஒன்றியம் பெத்தநாய்க்கம் பாளையம் தாலுக்காவில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் கிராமப்புற சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர், நிகழ்ச்சியை மாதர் சங்க பொறுப்பாளர் திருமிகு.பெருமா அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார், அறிவியல் இயக்க அறிவியல் வெளியீடு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கோபால் அனைவரையம் வரவேற்று அறிமுகஉரையாற்றினார், அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் திருமிகு.G.சுரேஷ் மகளிர் தின முற்போக்கு பாடலுடன், அறிவியல் இயக்கம், சமம் உபகுழு மற்றும் பெண்கள் ஆரோக்கியம் பற்றி உரையாற்றினார், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகி திருமிகு.தெவிட்டாமணி அவர்கள் சர்வதேச மகளிர் தினம், இன்றைய பெண்கள் நிலை மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அறிவியல் புத்தகங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.
மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆத்தூர் கிளை G.D நாயுடு துளிர் இல்லம் சார்பாக திரு சின்னசாமி ஐயா பள்ளியில் துளிர்இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு. பழனி அவர்களின் ஒருங்கிணைப்பில் சர்வதேச பெண்கள் தின கொண்டாட்டமாக ஓவியப்போட்டி நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக