இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, மார்ச் 06, 2011

வாராந்திர கூட்டம் 03-03-2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் வாராந்திர கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் 03-03-2011 ( வியாழன் ) அன்று மாலை சரியாக 7 மணியளவில் நடைபெற்றது,

I) நடைபெற்ற வேலைகள்

1) மாநில அளவிலான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் - மாவட்ட கருத்தாளர்கள் கூட்டம் ( கல்வி உபகுழு ) :
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் - மாவட்ட கருத்தாளர்கள் கூட்டம் 26-02-2011 அன்று திருச்சியில் நடைபெற்றது, சேலம் மாவட்ட கருத்தாளர் திருமிகு.கற்பகம் கலந்துகொண்டார், மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய தகவல்களை தொகுத்து வழங்கவேண்டியுள்ளது.

2) மாவட்ட புத்தக இருப்பு கணக்கெடுப்பு ( அறிவியல் வெளியீடு உபகுழு ),
நமது அலுவலகத்தில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் 26-02-2011 அன்று கணக்கெடுக்கப்பட்டது, திருமிகு.கோபால், ராமமூர்த்தி,லால், அய்யனார் மற்றும் G.சுரேஷ் பங்கேற்றனர்.

3) மாநில அளவிலான இளைஞர் அறிவியல் திருவிழா (அறிவியல் பிரச்சார உபகுழு):
மாநில அளவிலான இளைஞர் அறிவியல் திருவிழா 2011 மதுரை மாவட்டம் அருள் ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றது, நமது மாவட்டத்தில் இன் நிகழ்வை திருமிகு.J.கார்த்திக் ஒருங்கிணைத்தார்,

நமது மாவட்டத்தில் 11 ஆய்வுகள் மாநில அளவில் பதிவு செய்திருந்தனர்,
அதில் 7 ஆய்வுகள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு சமர்பிக்கப்பட்டது,
இதில் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட10 சிறந்த ஆய்வுகளில், நமது மாவட்டத்தின் மூன்று ஆய்வுகள் தேர்வானது.

1) Construction and operation of a microbial fuel cell for bioelectricity generation towards Waste Abatement- Sona College of Technology, Salem
2) Study on attitude of parents regarding enrolment of students in govt. Schools- Youth Science Group, Tamil Nadu Science Forum’ Salem Unit
3) Existence and Removal of Superstition- Sri Sarada College for Women, Salam-16,


4) தேசிய அறிவியல் தினம் (பிப்ரவரி 28) நிகழ்வுகள் (அறிவியல் பிரச்சார உபகுழு):

i) 24/02/2011 அன்று சேலம் மாவட்டம் - விநாயகா வித்யாலய பள்ளியில் நடைபெற்றது - சர்வதேச வனவள ஆண்டு - நலுவுபட காட்சி - மாவட்ட இணை செயலாளர் திருமிகு.K.P.சுரேஷ்குமார், அறிவியல் விநாடி வினா - கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு, சர்வதேச வேதியல் ஆண்டு குறும்படம் & தொலைநோக்கி நிகழ்ச்சி - மாநில கருத்தாளர் திருமிகு. ஜெயமுருகன். அறிவியல் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை - திருமிகு.G.சுரேஷ், திருமிகு. முகுந்தன்.

ii) 28-02-2011 - மோகன் நகர் கிளை மற்றும் துளிர் இல்லம் சார்பாக ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில் திருமிகு.சுரேஷ்குமார் அவர்களின் அறிவியல் உரை மற்றும் அறிவியல் குறும்படங்களுடன் நடைபெற்றது நிகழ்சிகளை கிளை நண்பர்கள் (திருமிகு.மீனாட்சி சுந்தரம், பத்மநாபன், மணி,...) சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்

iii) 28-02-2011 - ஆத்தூர் கிளை மற்றும் துளிர் இல்லம் சார்பாக திரு சின்னசாமி ஐயா பள்ளியில் திருமிகு. தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சியுடன் நடைபெற்றது நிகழ்சிகளை கிளை நண்பர்கள் ( திருமிகு.அர்த்தநாரி,பா.ஸ்ரீநிவாசன், பழநி...) சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்

iv) 28-02-2011 -ராஜாஜி தொழில்நுட்பக் கல்லூரியில் , மாவட்ட தலைவர் முனைவர். சாம்சன்ரவீந்திரன் அவர்களின் சிறப்புரை, திருமிகு.சுரேஷ்குமார் அவர்களின் எளிய அறிவியல் பரிசோதனை மற்றும் திருமிகு.சகஸ்ரநாமம் அவர்களின் மனிதக் கதை நலுவுபட கட்சி நிகழ்சிகளுடன் நடைபெற்றது, நிகழ்சிகளில் அறிவியல் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை ( திருமிகு.நமசிவாயம்) நடைபெற்றது, நிகழ்ச்சிகளை அறிவியல் இயக்க உறுப்பினரும், கல்லூரி துறை தலைவருமான திருமிகு.ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்

II)திட்டமிட்ட வேலைகள்

1) மார்ச் - 8 “சர்வதேச பெண்கள் தினம்” – 2011
மகளிர் தினத்தை முன்னிட்டு கீழ்காணும் வகையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன
போட்டிக்கான தலைப்புகள்:

1 ஓவியப்போட்டி 6,7,8 - ம் வகுப்பு மாணவர்கள் " காடுகளும் மக்களும் "

2 கட்டுரைப்போட்டி 9, 10, 11, 12 - ம் வகுப்பு மாணவர்கள் " அன்றாட வாழ்வில் வேதியியல் "
( நன்மை பயக்கும் வேதியியல் / தீமை பயக்கும் வேதியியல் / சமையலறையில் வேதியியல் / நமது உடலில் உள்ள வேதியியல் )

3 கட்டுரைப்போட்டி கல்லூரி மாணவர்கள் " பெண்களும் வேதியியலும் "

4 கட்டுரைப்போட்டி அறிவியல் இயக்க, சுய உதவிக்குழு (சமம்) ஆர்வலர்கள் / ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள் " கடன் வளர்ச்சிக்கா ? துயரத்திற்கா ? "

கடைசிநாள் : மார்ச் 21,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ச.க.செங்குட்டுவன், 95003 06285

மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர், M.கற்பகம், 96594 53089,

மேலும் மார்ச் 8 அன்று ஆத்தூர் ஒன்றியத்தில் திருமிகு.கோபால் அவர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சிகள் நடத்த முடிவானது.

2) இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் - விழிப்புணர்வு பிரச்சார -கலைஞர்கள் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள் கூட்டம் 13/03/2011 நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக