இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், டிசம்பர் 28, 2010

இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்











அனைவருக்கும் கல்வி இயக்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - விழிப்புணர்வுப் பிரச்சாரம் பயிற்சி முகாம்கள் மற்றும் கலைக்குழுக்கள் மூலம் நடத்த உள்ளது தாங்கள் அறிந்ததே, அதன் ஒரு பகுதியாக மாநில அளவில் 31.11.2010 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கற்பகம் கலந்துகொண்டார், தொடர் நிகழ்வாக சேலம் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தை 07/12/2010 அன்று நிகழ்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கற்பகம், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சஹஸ்ரநாமம், மாவட்ட பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட இணை செயலாளர் திருமிகு.சுரேஷ் ஆகியோர் அணுகி விவாதிக்கப்பட்டது அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் திட்டமிடல் கூட்டம் சேலம் தேர்வீதி நகரவை நடுநிலை பள்ளியில் (டிசம்பர்,21) நடைபெற்றது. கூட்டத்தில் எஸ்.எஸ்.எ. முதன்மைக்கல்வி அலுவலர்,BRC மேற்பார்வையாளர்கள்,DIET விரிவுரையாளர்,VEC ஒருங்கிணைப்பாளர்கள்,ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பாக நிகழ்வின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.கற்பகம், மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சஹஸ்ரநாமம், மாவட்ட பொருளாளர் திருமிகு.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட இணை செயலாளர் திருமிகு.சுரேஷ் மற்றும் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பயிற்சி முகாம் தேதிகள், இருதரப்பு ஒத்துழைப்பு, கலைப்பயணம் குறித்து திட்டமிடப்பட்டது. கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பர் 23,24 தேதிகளில் ஜெயராம் கல்லூரியில் நடைபெற்றது இன் நிகழ்வு புதிய தொடர்புகளுக்கு வாய்பளித்தது மட்டுமின்றி ரூ 12,000 அளவிலான அறிவியல் இயக்க புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது, 75 உறுப்பினர்கள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், மற்றும் நமது சார்பில் 10 முதன்மை கருத்தாளர்கள் மற்றும் 25 வட்டார அளவிலான கருத்தாளர்கள் கலந்துகொண்டனர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் உறுப்பினர்களான கருத்தாளர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துரை வழங்கினர்
குழந்தைகள் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - திருமிகு.தங்கராஜா - பதிர்க்கையாளர் - தினமணி - சேலம்,
குழந்தைகள் உரிமைகள் - திருமிகு.நிறைமதி - குறும்பட இயக்குனர், கவிங்ஞர், ஊடகவியலாளர் - த.மு.எ.க.ச - சேலம்,
இயலா குழந்தைகள் கவனிப்பு - திருமிகு. அசோகன் முத்துசாமி -எழுத்தாளர் - மாற்றுதிறனாளிகள் சங்க பொறுப்பாளர், மற்றும் செயலாளர் த.மு.எ.க.ச - சேலம்,
சுகாதாரம் - நல வாழ்வு - சத்துணவு - திருமிகு சுரேஷ் குமார், மாவட்ட இணை செயலாளர், TNSF, சேலம் உருக்காலை , & திருமிகு திருநாவுகரசு கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியர் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனை சேலம்,
பெண்கள் உரிமை - திருமிகு சசிகலா, மாவட்ட துணை தலைவர், ஆசிரியர்.
மந்திரமா தந்திரமா - திருமிகு தில்லைகரசி - மாவட்ட கருதலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்
அறிவியல் விளையாட்டுகள் - திருமிகு தாமோதரன் - மாவட்ட செயற்குழு உறுப்பினர்.
அறிவியல் பாடல்கள் - திருமிகு.வசந்தி, முதன்மை கருத்தாளர், மேட்டூர் & திருமிகு சுரேஷ். மாவட்ட இணை செயலாளர்
புத்தக விற்பனை - திருமிகு.கோபால், திருமிகு.நமசிவாயம், திருமிகு.ஜானகிராமன்,திருமிகு. லால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக