இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

புதன், ஜனவரி 26, 2011

மாநில செயலாளர், வேண்டுகோள்

அன்பிற்குரிய அறிவியல் இயக்க நண்பர்களுக்கும்.மாநில நிர்வாகிகளுக்கும்,மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கும் ,பொதுகுழு உறுப்பினர்களுக்கும்,அறிவியல் இயக்க ஆர்வலர்களுக்கும் வணக்கம்.
அனைவருக்கும் கல்வி இயக்கமும் ,தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து இலவச கல்வி உரிமை சட்டம் -2009 குறித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தை நடத்தி வருவது தாங்கள் அறிந்ததே .
கல்வி மக்களின் அடிப்படை உரிமை என்பதை தமிழகம் முழுவதும் உரத்து சொல்வோம்.
அறிவொளியில் துவங்கிய கல்விபயணம் மீண்டும் எழுச்சியோடு துவங்கியிருக்கிறது.
அனைவரும் பங்கேற்போம்.பயணத்தை வெற்றி பெற செய்வோம்.
இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
குறிப்பாக மாநிலம் முழுவதும் ௧௨௨ கலைக்குழுக்கள் ஜனவரி 23 ம் தேதி கலைப்பயணம் துவங்கியிருக்கிறது.
30 மாவட்டங்களில் 122 கலைக்குழுக்கள் 20 நாட்களில் 9760 நிகழ்சிகளை நடத்த உள்ளது.
20 லட்சம் மக்களை சந்திக்க உள்ளனர்.அரசோடு நாம் இனைந்து நடத்தும் மிகப்பெரிய நிகழ்ச்சி .
இந்நிகழ்ச்சியின் முலம் நாம் செய்ய வேண்டியது.
1.மக்களிடம் கல்வி உரிமை சட்டம் குறித்து தெளிவாக எடுத்து செல்வோம்.
2.கிராம கல்வி குழுவை வலுப்படுத்துவோம்.
3.குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்திடுவோம்.
அறிவியல் இயக்கத்திற்காக நாம் செய்ய வேண்டியது.
1.ஒரு கலைக்குழு ஒருநாளைக்கு குறைந்த்தபட்சம் 20 உறுப்பினர் பதிவு சேர்க்க வேண்டும்.20 நாட்களுக்கு 400 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட வேண்டும்.
2.ஒரு கலைக்குழு ஒருநாளைக்கு குறைந்த்தபட்சம் 250 ருபாய் புத்தகங்களை விற்பனை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.
3.துளிர்,ஜந்த்தர்மந்த்தர் ,விழுது,அறிவுத்தேன்றல் சந்தா சேகரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
4.அறிவியல் இயக்கம் குறித்து அறிமுகம் செய்ய வேண்டும்.
5.புதிய நபர்களை அடையாளங் காண்போம்.
6.கிராம கல்வித்திரிவிலவை சிறப்பாக நடத்துவோம்.
7.மாவட்டங்களில் செய்த பணிகளை ஆவணப்படுத்துவோம்.
8.மாவட்டக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் நிகழ்சிகளில் பங்கேற்க செய்வோம்.
நம்மால் முடியும்.
சிரமங்களைத்தாண்டி நமது பயணம் தொடர்கிறது.
நாம் வெல்வோம்.
அன்புடன்
எஸ்.டி.பாலகிருஷ்ணன்
மாநிலப் பொதுசெயலாளர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக