இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, டிசம்பர் 11, 2010

இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், விழிப்புணர்வு பிரச்சாரம்.

தமிழக அரசின் பள்ளி கல்வித் துறையின் அனைவருக்கும் கல்வி இயக்கமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து தமிழகம் முழுவதும் , இலவச ஆரம்பக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் ஓவ்வொரு அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியிலும் உள்ள கிராமக் கல்விக் குழுவின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக பிரச்சார இயக்கத்தை நடத்த உள்ளோம்,

இப்பிரச்சாரத்தின் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கிராமக் கல்விக் குழுவின் பொறுப்பு மற்றும் அவசியத்தை ஒவ்வொரு குழுவும் அறிந்து தங்கள் பகுதி அரசு மற்றும், அரசு உதவிபெறும் பள்ளியை மேம்படுத்தவும், அதனை அனைத்து வகையான தகுதி பெற்ற பள்ளியாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளச் செய்வதுடன் தங்கள் பள்ளிகளை தங்களே முன்வந்து முனேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும், அதற்க்கான அனைத்து வகையான வழிகாட்டலும் கிராமக் கல்விக் குழுவிற்கு வழங்கப்பட உள்ளது,

இதற்காக மாநிலம், மாவட்டம், வட்டார வள மையம் (BRC), பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (CRC) அளவிலான பயிற்சிகள் அறிவியல் இயக்க உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், சுய உதவிக்குழுப் பெண்கள், தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட உள்ளது,

எனவே நமது சேலம் மாவட்டத்தில் உள்ள இருபது வட்டரதிற்கும் மற்றும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளி தொகுப்பு கலந்தாய்வு மையம் (174) அளவில் இருந்து ஆர்வலர்கள் (அறிவியல் இயக்க உறுப்பினர்கள், மருத்துவர்கள் & வழக்கறிஞர்கள்) தேவை உள்ளது எனவே தங்கள் பகுதியில் , கிளையில் உள்ள ஆர்வமான மேற்கண்ட நபர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

மேலும் இவ்வியக்கத்தை வலுப்படுத்த கலைக் குழுக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களும் கிராமம் தோறும் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர், நமது சேலம் மாவட்டத்தில் மூன்று வட்டாரத்திற்கு ஒன்று என்ற வகையில் 7 கலைக் குழுக்கள் (7 × 12 = 84 கலைஞர்கள்) தேவை (கலைஞர்களுக்கு மதிப்புதியம் தரப்படும்) எனவே கலை ஆர்வமும், சமுக தாகமும் கொண்ட நண்பர்கள் தொடர்புகொள்ளவும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக