இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், டிசம்பர் 07, 2010

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் அழைப்பு

நண்பருக்கு வணக்கம்,

மாநில அளாவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவை K.P.R கல்லூரியில் கடந்த 3,4, மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது, இதில் நமது மாவட்டத்தை சார்ந்த 5 குழுக்களில் ஆங்கில வழி இளையவர் பிரிவின் குலூனி பள்ளி மாணவி தேசிய மாநட்டிற்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார், சிறந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளராக சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவிக்கப்பட்டார் ,
மேலும் வருகின்ற 27 முதல் 31 வரை சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நமது மாவட்டத்தின் சார்பாக தொண்டர்களாக கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர், கிளை, தகவல் தொடர்பு முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் எந்தெந்த தேதிகளில் கலந்துகொள்ள முடியும் என்பது உட்பட மாவட்ட செயலாளர் இடம் தெரிவிக்கவும், பின்பு மாநில செயலாளருக்கு அனுப்பப்பட்டு முன்பதிவு மற்றும் தேவைகளின் அடிப்படையில் தாங்கள் மாநில மையத்தால் அழைக்கப்படலாம் ,
மாநில மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட உத்தேச திட்டங்கள்

27,28 & 29 மாலை வரையில் ஆய்வறிக்கை சமர்பித்தல், பின்

27 - மயில்சாமீ அண்ணாதுரை பங்கேற்ப்பு & பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள்,

28 - கண்காட்சி & Video conference முறையில் நாட்டிலுள்ள பல்வேறு விஞ்ஞானிகள் உடன் குழந்தை விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

30 - அறிவியல் சுற்றுலா & அப்துல்கலாம் உடன் கலந்துரையாடல்

31 - நிறைவு விழா - முதன் முறையாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி (வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள்) பங்கேற்ப்பு

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு மலர் விளம்பரங்களை வரும் 12 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் , மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான நன்கொடை ரசீது
ரூ 500 ( × 20) மற்றும் ரூ1000 (× 20) உள்ளது வாய்ப்புள்ளவர்கள் வசூலித்து தருமாறும் வேண்டுகிறோம்

அன்புடன்
சுரேஷ்.G
98945 35048
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் NCSC 2010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக