இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, நவம்பர் 27, 2010

மாநில அளவிலான தேசியகுழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான அறிவிப்புகள்

அன்புடையீர் வணக்கம்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பக நடைபெற்ற மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டு மாநில அளவிலான மாநாட்டில் சிறப்பாக ஆய்வு கட்டுரை சமர்பிக்க வாழ்த்துக்கள்,
மாநிலமாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆய்வுகளுக்கான முன்மதிப்பீடு ஏற்கனவே திட்டமிட்டபடி 20 மற்றும் 21 நவம்பர் தேதிகளில் கோவை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்துள்ளது.
மாநில மாநாடு 3, 4, 5 டிசம்பர் 2010 ல் கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும்.
மாநாட்டிற்கான வரைவு திட்டம் வருமாறு-
முதல் நாள்: டிசம்பர் 3 - பிற்பகல் 3 மணிமுதல் 5 மணி வரை பதிவு
7.00 - 9.00 விஞ்ஞானிகள் சந்திப்பு. 1
9.00 மணி இரவு உணவு.
இரண்டம் நாள்: டிசம்பர் 4 - 9.00 மணிக்கு 18 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரியின் 18 இடங்களில் 18 மரங்கள் நடும் விழா குழந்தைகள் மாவட்ட வாரியாக ஊர்வலமாகச் சென்று மரங்கள் நடவேண்டும். (இதற்கானதிட்டம் முந்தைய நாள் இரவு பகிர்ந்துகொள்ளப்ப்படும்.)
காலை 10.00 - 12.00 துவக்க விழா
12.00 - 2.00 மதிய உணவு
2.00 - 5.00 ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் (12 அறைகளில் )
5.00 - 7.00 விஞ்ஞானிகளை சந்தியுங்கள் 2 (மூன்று அரங்கங்கள்)
7.00 - 9.00 கலை நிகழ்ச்சிகள்
9.00 ­- 10.00 இரவு உணவு
10.00 – 12.00 மேகமூட்டம் இல்லாத நிலையில் இரவு வான் நோக்கல் அல்லது குழந்தைகளுக்கான திரைப்படம்
மூன்றாம் நாள்: டிசம்பர் 5 - காலை 9.முதல் 12.00 மணி வரை
குழந்தைகளுக்கான 10 வெவ்வேறு இணைஅமர்வுகள்
ஒருங்கிணைப்பு:- திருமிகு அ.அமலராஜன், மாநில செயற்குழு உறுப்பினர்.
கல்வி உரிமை சட்டம் மீதான ஆசிரியர்களுக்கான பணிமனை (இணை & தொகுப்பு அமர்வுகள்)
ஒருங்கிணைப்பு:- திரு சா.சுப்பிரமணி, மாநில செயலாளர்.
மாநாட்டில் கலந்துகொள்ள இதுவரை ஒப்புதல் அளித்துள்ள பிரமுகர்கள் விவரம்
1. முனைவர். D.K பாண்டே , மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, இந்திய அரசு,

2. முனைவர். வின்சென்ட் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தமிழ்நாடு,

3. முனைவர். ஆர். இராமானுஜம், விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம், சென்னை,

4. முனைவர். இந்துமதி, விஞ்ஞானி, கணிதவியல் நிறுவனம் சென்னை,

5. பேரா. மாரிமுத்து, தலைவர், உயிரினங்களின் செயல்பாடுகள் துறை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,

6. முனைவர். த.வி. வெங்கடேஸ்வரன், முதன்மை அறிவியல் அலுவலர்,

விஞ்ஞான் பிரசார், புதுடில்லி.

7. முனைவர். கே. கருணாகரன், துணைவேந்தர், அண்ணா பல்கலைக்கழகம், கோவை.
( தலைவர், ஆலோசகர் குழு, 18 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தமிழ்நாடு )

8. முனைவர். ச. கிருஷ்ணசாமி, தலைவர், உயிர் தொழில்நுட்பத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

இதுதவிர குழந்தை விஞ்ஞானிகளை மதிப்பீடு செய்ய 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் , விஞ்ஞானிகள் வருகை புரிய உள்ளனர்.
வருகை புரிய வாய்ப்புள்ள முக்கிய விருந்தினர்கள்
1. விஞ்ஞானி. அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி.
2. முனைவர். டி. ராமஸ்வாமி. ஐ.ஏ.எஸ். செயலர், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை.
3. திரு தேவ. ஜோதி. ஜெகராஜன் .ஐ,ஏ,எஸ். முதன்மைச் செயலர், கல்வித்துறை, தமிழ்நாடு.

மாநாடு நடைபெறும் இடம் கோவையிலிருந்து சுமார் 20 கிமி தொலைவில் அமைந்துள்ளது. எனவே கோவை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துசெல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. எனவே 3 ஆம் தேதி பிற்பகல் கோவையை அடையுமாறு தங்கள் பயணத் திட்டத்தினை வகுத்துகொள்ளவும்.
கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி அடைவதற்கான வழிகள்
(K.P.R. Institute of Engineering and Technology, S.F.No.204/2 Kollupalayam Village, Arasur, Coimbatore - 641 407, Phone No: 0422 2635600, web site: http://www.kpriet.com/ )
பேருந்தில் வருபவர்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சோமனூர் செல்லும் 20 ஏ பேருந்தில் ஏறி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கவும்.
அவினாசி வழியாக வருபவர்கள் கருமத்தம்பட்டியில் இறங்கி, நகரபேருந்தில் ஏறி கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி எல்.எம்.டபுள்யூ. எல்.பி.டி நிறுத்தத்தில் இறங்கி வரவும்.
இரயில் நிலையம் மற்றும் உக்கடம் வழியாக வருபவர்கள் 90, 90 ஏ மற்றும் கருமத்தம்பட்டி , சோமனூர் பேருந்தில் ஏறி வரவும்.
குறிப்பு : மாநாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டியவைகளில் முக்கியமான சில -
1) தங்கள் ஆய்வுக்கட்டுரை புத்தகம் (Project Book),
2) தினசரி நாட்குறிப்பு (log book),
3) இருபக்கம் மிகாமல் ஆய்வு சுருக்கம் (Abstract) ஆங்கிலத்தில்,
4) ஐந்து பக்கம் மிகாமல் ஆய்வு பெருக்கம் (Abridged version) ஆங்கிலத்தில்,
4) மூன்று எண்ணிக்கைக்கு மிகாமல் அட்டை (chart)
5) ஐந்து எண்ணிக்கைக்கு மிகாமல் ஆய்வை விளக்க புகைப்படம் (Photo),
5) ஆய்வை விளக்க செயல்படும் நிலையில் உள்ள ஆய்வு மாதிரி (Working Model),
6) புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு /நேர்காணல் கண்ட தாள்கள்….
மேலும் தங்கள் இதுவரை கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் சமர்பிக்காமல் இருந்தால் உடனடியாக சமர்பிக்கவும்

1) குழு (Maxi Size), குழந்தை விஞ்ஞானிகள் (passport size), வழிகாட்டி ஆசிரியர் (passport size) ஆகியோரின் புகைப்படங்களில், பின்வருவனவற்றை குறிப்பிட்டு (CD) குறுந்தகட்டில் பதிவு செய்து தரவும், (பெயர், குழு தலைவர் பெயரின் கீழ் குழு தலைவர் என குறிப்பிடவும், பள்ளியின் பெயர், மாவட்டம், கைபேசிஎண்)

2) மேலும் இருபக்கம் மிகாமல் ஆய்வு சுருக்கம் (Abstract) ஆங்கிலத்தில் மற்றும்
ஐந்து பக்கம் மிகாமல் ஆய்வு பெருக்கம் (Abridged version) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதே (CD) குறுந்தகட்டில் பதிவு செய்து தரவும்.

* கல்லூரி வளாகத்திலேயே டிசம்பர் 3 பிற்பகல் முதல், டிசம்பர் 5 மாலை வரை தங்கும் வசதி செயப்பட்டுள்ளது, ஆகையால் எளிய படுக்கை வசதியுடன் வரவும்,

* கல்லூரி நெடுஞ்சாலையில் இருந்து தொலைவிலும், நகரத்தில் இருந்து எல்லையிலும் உள்ளதால் எளிதில் வெளியில் சென்று வர இயலாது, ஆகையால் தேவையான மற்றும் அத்தியாவசியமான பொருட்களை உடன் எடுத்து செல்லவும்


தகவல் தொடர்பிற்கு:
K.P.சுரேஷ்குமார், செயலாக்கக் குழு உறுப்பினர் NCSC 2010 – 9443391777
S. சேதுராமன், மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் NCSC 2010 – 9942475155
முகமது பாதுசா, கோவை மாவட்ட செயலாளர் TNSF - 9486827773
N.மாதவன், மாநில ஒருங்கிணைப்பாளர் NCSC 2010 - 9443724762

வாழ்த்துக்களுடன்


கோ.சுரேஷ், ( 9894535048 )
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2010.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக