அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டிற்கே! அறிவியல் சுயசார்பிற்கே! SCIENCE FOR PEOPLE ! SCIENCE FOR NATION !! SCIENCE FOR SELF-SUSTAINABILITY !!! அலுவலகம் : அறை எண் : 12, முதல்மாடி, எஸ்.எஸ் புஷ்பம் வணிகவளாகம், கௌரி திரையரங்கம் எதிரில், ஐந்து ரோடு, சேலம் -636004. 9751456001 , 9894535048 , 9486596174
இயக்கம் பற்றி
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம். Tamil Nadu Scince Forum, Salem
- சேலம், தமிழ்நாடு, India
- விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.
நாள்காட்டி
திங்கள், நவம்பர் 09, 2009
கலிலியோ இரவு 22, 23 & 24-10-2009 தொலைநோக்கி நிகழ்ச்சி ( 24 )
சர்வதேச வானியல் ஆண்டு 2009 முன்னிட்டு சர்வதேச வானியல் கழகம் சார்பில் கலிலியோ இரவு 22, 23 & 24-10-2009 தொலைநோக்கி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, சேலம் மாவட்டத்தில் 24-10-2009 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்க, அம்மாபேட்டை கிளையில் தொலைநோக்கி நிகழ்ச்சி நடைபெற்றது, அறிவியல் இயக்க கருத்தாளர் திருமிகு. தாமோதரன் கலந்துகொண்டு வானியல் விளக்கங்களை அளித்தார் , அம்மாபேட்டை கிளை நிர்வாகிகள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் தொலைநோக்கி வாயிலாக வியாழன் மற்றும் அதன் நிலவுகள் கண்டு வியந்தனர் ,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக