இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், நவம்பர் 09, 2009

கலிலியோ இரவு 22, 23 & 24-10-2009 ( 23 )


சர்வதேச வானியல் ஆண்டு 2009 முன்னிட்டு சர்வதேச வானியல் கழகம் சார்பில் உலகம் முழுதும் கலிலியோ இரவு 22, 23 & 24-10-2009 தொலைநோக்கி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேலம் மாவட்டம் சார்பாக 24-10-2009 அன்று கன்னந்தேரி, அரசு நாடுநிலை பள்ளியில் (எடப்பாடி) தொலைநோக்கி நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியை பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமிகு.ஜெயக்குமார் ஒருங்கிணைத்தார், தலைமை ஆசிரியர் திருமிகு.சந்திரசேகர் தலைமையேற்றார், அறிவியல் இயக்கம் சார்பாக இணை செயலர் திருமிகு.சுரேஷ் மற்றும் திருமிகு.ஐடா பிரிஸில்லா கலந்துகொண்டனர் , வானியல் பாடல்கள் படபெற்று, தொலைநோக்கி வாயிலாக வியாழன் மற்றும் அதன் நிலவுகள் காண்பிக்கப்பட்டது, 300 இகும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
படங்களை காண :
நிகழ்ச்சி சர்வதேச வானியல் கழக வலைத்தளத்தில் காண

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக