Design, Development, Modeling and Planning for Sustainable Living
துணை ஆய்வுப்பொருள் – 4வடிவமைப்பு, வளர்ச்சி, மாதிரி மற்றும் நிலைப்புறு வாழ்விற்கான திட்டமிடல்
அனைத்து மாதிரி உருவாக்கங்களும் தோராயமானதாகும்…. எனினும், தோராயமான இயல்பின் மாதிரியை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும். – ஜியார்ஜ் பாக்ஸ்
தொழில் வளர்ச்சியின் ஆரம்பத்திலிருந்து நமது பூமி தன்னால் மீண்டும் உற்பத்தி செய்ய இயலாத வேகத்தில் அதன் இயற்கை வளங்களை நாம் நுகர்ந்து கொண்டு உள்ளோம். இன்றும் கூட, ஒவ்வொரு வருடமும் நமது அன்றாட வாழ்வில் அளவிற்கு அதிகமாக இயற்கை வளங்களை உபயோகித்து நமது அடுத்த தலைமுறைக்கு மட்டும் அல்லாமல் நமது வாழ்விற்கும் ஒரு நெருக்கடியை உண்டாக்கிக் கொண்டுள்ளோம். மெய்மையில், இயற்கை வளங்களை இன்றைய வேகத்தில் நாம் உபயோகிப்போமானால் அவற்றை மறு உற்பத்தி செய்ய 2030 வாக்கிலேயே பூமியைப்போல இரண்டு கோள்கள் தேவையாய் இருக்கும். ஏனெனில் நமது பூமி உற்பத்தி செய்வதைப் போல இரு மடங்கு அளவு இயற்கை வளங்களை உலக மக்கள் நுகர்கின்றனர். ஆகையால் நுகர்வோர்கள் அனைவரும் இதை மனதில் கொண்டு இந்த நியாயமற்ற மற்றும் நிலைப்புறுதலற்ற நுகர்வை நிறுத்த வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லாவிடில் இங்கு வளங்கள் மீதான ஒரு சீரிய குறைபாடும் பூமியின் தாங்கும் நிலைக்கு மீறிய வளக்குறைவும் உண்டாகும்.
பூமியின் மறு உற்பத்தியுடனான இயற்கைவள நுகர்வின் உறவு
1961இல்-0.74 பூமி 2016இல்-1.6 பூமி 2030இல்-2 பூமி
இயற்கைவளத் தேவையை நிறைவு செய்ய 2 பூமிகள் நமக்குத் தேவை
படம் 4.1. இயற்கைவள பற்றாக்குறையை காண்பிக்கும் வரைபடம்
நிலைப்புறு வாழ்விற்கான அறிவியல்
வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் இயற்கையில் கிடைக்கும் வளங்களையும் பொருட்களையும் பொருளாதார லாபத்திற்காக விவேகமற்ற வகையில் நுகரும்போது நீண்ட கால அடிப்படையில் அது மனித வாழ்வை பாதிக்கும். ஆகையால், வளங்களை உபயோகிப்பதன் காரணங்களையும் விளைவுகளையும் விமர்சனப் பூர்வமாக புரிந்து கொள்வது அவசியமாகும். உள்ளூர். மாநில, தேசிய மற்றும் உலகளாவிய இனம் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை செயல்திறமுடன் உபயோகித்தல் திட்டமிடல் மற்றும் மேளாண்மைக்கு இம்மாதிரியான புரிதல் முன் தேவையாக உள்ளது.
இயற்கை வளத்தை நிர்வகிப்பது நிலைப்புறு நிலையை நோக்கியவாறு அறிவியல் பூர்வமாக நமது செயல்களை செயல்படுத்த வடிவமைத்தல், திட்டமிடல், எதிர்கால நிலைமைகளின் நம்பகமான கணிப்புகள் ஆகியவற்றை சார்ந்துள்ளது. அனுபவ ஆய்வுகளின் முடிவுகள், நிபுணத்துவம் மற்றும் மக்களின் புத்திசாலித்தனம் ஆகியவற்றுடன் மேலாண்மை நடவடிக்கைகள் போன்ற திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தேவையாவையாகும். மேம்டு
வளங்களுக்கான திட்டமிடுதலில், மாதிரி உருவாக்கம், வடிவமைப்பு ஆகியவை முக்கிய இன்றியமையா கூறுகளாகும். அவை இன்றைய நாளின் அவசியத் தேவையுமாகும். மெய்நிகராக, வரலாற்றுச் செய்திகள் / நிகழ்வுகள் / தரவுகளிலிருந்து உருவகப்படுத்தப்பட்ட எதிர்கால காட்சி, மாதிரி உருவாக்கம், நிலைப்புறு எதிர்காலத்திற்கான திட்டமிடலில் உதவுகின்றன. நமது தேவைகளுக்காக தொடர்ந்து இயற்கை வளங்களை சூறையாடுவதை நாம் தொடர்வோமானால், அதனால் விளையும் வாழ்க்கைத்தர மாற்றம் பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கும் மற்றும் தொடர் விளைவுகளை முன் உணர்வதற்கும் இது உதவுகிறது. மேலும் இது வளங்களுக்கான திட்டமிடல், பங்கீடு செய்தல், அனைவருக்குமான நிலைப்புறு வாழ்விற்கான வழிகளை தோற்றுவிக்க சாத்தியமாக்குகிறது. உலகம் முழுவதும் தற்போது அக்கறை கொண்டுள்ள இயற்கைவள அடிப்படையின் அதிகபட்ச மாசற்ற மற்றும் தூய்மை அளவுகளை பாதுகாப்பதற்கும் அதிகரிப்பதற்கும் மாதிரி உருவாக்கம், வடிவமைப்பு மற்றும் திட்டமிடுதல் உபயோகம் உள்ளதாகிறது. பல்வகை உயிரி (தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், போன்றவை) மற்றும் உயிரில்லா (மண், நீர், காற்று, போன்றவை) வளங்கள், அவற்றின் இடையேயான உறவுகளை நுகர்வோர்கள் புரிந்துகொள்ள இது உதவுகிறது. கொள்திறன், உபயோக வரம்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை வள பாதுகாப்பு, அதன் மேலாண்மை, மற்றும் பலவற்றை திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் இம்மதிப்பீடுகளிலிருந்து வெளிப்படும் தரவுகளை உபயோகிக்கலாம்.
எனினும், நல்ல தெளிவிற்கும், புரிதலுக்கும் இம்மூன்று பண்பு கூறுகள் (மாதிரி, வடிவமைப்பு, திட்டமிடுதல்) கீழே விளக்கப்பட்டுள்ளது.
(அ) மாதிரி
மாதிரி என்பது சமன்பாடு, நிகழ்வு செவ்வக வரைபடம் (graph), நில வரை படம் (map) மற்றும் காட்சிகளைக் கொண்டு புரிந்து கொள்ளக்கூடிய அல்லது சூழலை விளக்கும் ஓர் அமைப்பு மற்றும் முறையான அணுகுமுறையாகும். மாதிரி என்பது அனுபவப்படாத அல்லது தற்போது காட்சிப்படுத்த இயலாத ஆனால் எதிர் காலத்தில் அதுபோல தோன்றக்கூடிய வாய்ப்புள்ளவற்றை உணரத்தக்க ஒரு நிலையை அல்லது அதன் இயல்பை புரிந்து கொள்ள உதவும். மாதிரியின் குறிகோள்களில் ஒன்று, ஓர் அமைப்பின் தோற்றங்கள் அல்லது மாற்றங்களின் விளைவுகளை ஒரு ஆய்வாளர் அல்லது உபயோகிப்பாளர் ஊகிப்பதற்கு உதவுவது. முன்னறிந்த தரவுகள் / முடிவுகளிலிருந்து எதிர்காலத்தில் உருவாகும் மாற்றங்களை இம்மாதிரிகள் எடுத்துரைக்கின்றன. இது ஏறத்தாழ உண்மையான அமைப்பின் நெருக்கமான ஒரு மாதிரியாக இருக்க வேண்டும். மறுபுறம், அது புரிந்துகொள்ள சிக்கலானதாகவோ அல்லது சோதனை செய்ய இயலாததாகவோ இருக்கக்கூடாது. ஆகையால் ஒரு நல்ல மாதிரி, மெய்மைக்கும் எளிமைக்கும் இடையே ஒரு சமநிலையை காக்க வேண்டும். மாதிரியின் மிக முக்கியமான முடிவு, அதன் செல்லதக்க நிலையாகும். அதில் பலவகை எடுத்துக்காட்டு அமைப்புகள் உள்ளன. அவை அனைத்தும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் வரம்பிற்குள் வருவதில்லை. ஆகையால், உடல் மாதிரி, திட்ட மாதிரி, கருத்தியல் மாதிரி, கணித மாதிரி என ஒரு நான்கு வகைகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன.
உடல் மாதிரி
இது ஒரு பருப்பொருளின் சிறிய அல்லது பெரிய நகலாகும். வடிவமைக்கப்பட்ட பொருள் சிறியதாக இருக்கலாம் (உம்: ஒரு அணு) அல்லது பெரியாதாக இருக்கலாம் (உம்: சூரியக் மண்டலம்). வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாம் ஆய்வு செய்ய இருக்கும் பருப்பொருளின் (உம்: ஒரு கோளம் அல்லது நிலப்படம்) சிறிய எளிய தோற்றமே உடல் மாதிரியாகும். மாதிரியின் தோற்றமும் அது பிரதநிதிப்படுத்தும் பொருளும் ஒத்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது ஒன்று மற்றதைப் போல இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற நிகழ்வுகளில் அதன் அனைத்து பண்பிற்கும் மிகச்சரியாக அலகுகளை பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும்.
படம் 4.2. மாதிரிக்கும் முன்வடிவத்திற்கும் உள்ள வேறுபாடுகள்.
திட்ட மாதிரி:
திட்ட மாதிரிகள், உடல் மாதிரிகளைக் காட்டிலும் மிகவும் கருத்தியலானது. அவைகள் எதார்த்ததுடன் காட்சி தொடர்பு கொண்டிருக்கும் அதே வேளையில், அவை பிரதநிதித்துவப்படுத்துபவை உடல் மாதிரியைக் காட்டிலும் மாற்று குறைவானதே. நிகழ் செவ்வக வரைபடம் மற்றும் விளக்க வரைபடம் ஆகியவை திட்ட மாதிரியின் கணித உறவை காட்சி வடிவில் பிரதநிதித்துவப்படுத்துவதாகும். வட்ட விளக்கப்படங்கள் (pie charts), பட்டை வரைபடங்கள் (bar charts), தொடர் பட்டை வரைபடங்கள் (histograms) அனைத்தும் சில உண்மை நிலையின் வடிவங்களாகும். ஆனால் உண்மையில் அவை எந்த ஒரு உடல் ஒத்திருப்பும் கொண்டிருப்பதில்லை. விளக்க வரைபடங்கள், சித்திரங்கள், நீல அச்சுகள் ஆகியவையும் திட்ட மாதிரியின் இதர பதிப்புகளாகும்.
படம் 4.3. ஒரு செல் கருவின் திட்ட மாதிரி
மாதிரிக்கும் முன்வடிவத்திற்கும் உள்ள வேறுபாடுகள்.
வ. எண்
உடல் மாதிரி
முன்வடிவம்
1
அவசியம் செயல்பட வேண்டியதில்லை
முழுவதும் செயல்படக்கூடியது, ஆனால் தவறுகள் இருக்கலாம்
2
எந்த அளவிலும் இருக்கலாம் (பொதுவாக சிறியதாகவும் ஆனால் ஒத்த அளவிலோ அல்லது பெரிதாகவும் இருக்கலாம்)
வெளிவரக்கூடிய உண்மையான தயாரிப்பின் அளவிலேயே இருக்கும்.
3
தயாரிப்பை விளக்கவும் காட்சிக்காகவும் உபயோகப்படுத்தப்படும்
செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும் அதை மேலும் செம்மை படுத்தவும் உபயோகப்படுத்தப்படும்,
4
பொருளை பிரதிபலிக்கும்படியாக அதன் வெளிப்புற தோற்றத்தை கொண்டிருக்கும்
பொருளின் முழு அக மற்றும் புற பாகங்களை கொண்டிருக்கும்
5
உருவாக்குவதற்கான செலவு குறைவு
உருவாக்குவதற்கு ஒப்பீட்டளவில் செலவு மிக்கது
கருத்தியல் மாதிரி
கருத்தியல் மாதிரி பல கருத்துக்களை ஒன்றிணைத்து ஒரு செயல்பாட்டை அல்லது நிகழ்வை விளக்குகிறது. இது ஒரு அமைப்பின் பிரதநிதித்துவமாகும். மாதிரி பிரதநிதிப்படுத்தும் ஒரு புலத்தை மக்கள் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவும் கருத்துகளின் தொகுப்பால் ஆனது. ஒரு கருத்தியல் மாதிரியின் முதன்மை நோக்கம் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை செயல்பாட்டையும் தெரிவிப்பதாகும். . ஒரு கருத்தியல் மாதிரி, சரியாக செயல்படுத்தப்படும்போது, அதன் அடிப்படை நோக்கங்களை பூர்த்தி செய்ய வேண்டும். ஓர் அமைப்பின் அனைத்து வளர்ச்சி வாழ்க்கை சக்கரத்தில் கருத்தியல் மாதிரி முக்கிய பங்கு வகிக்கிறது.
கருத்தியல் மாதிரி: வடிவமைப்பிற்கான திட்டம்
மன திட்டம்: உபயோகிப்பாளர் எவ்வாறு காண்கிறார் என்பது அவரது அறிவை அடிப்படையாகக்கொண்டது.
ஒரு பிரதிநிதித்துவத்தின் திட்டம் -( இடைமுகம் ( கருதுகோள்
( அறிவின் அடிப்படையிலான விளக்கம்
கணித மாதிரி
கணித மாதிரிகள் நான்கு வகைப்பாடுகளில் மிகவும் கருத்தியலானது. இந்த மாதிரிகள் அவற்றின் நிஜ வாழ்க்கையின் நேர் எதிர் பதிலி போல இல்லை. செயல்பாடுகள், சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்களாக மாற்றக்கூடிய எண்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி கணித மாதிரிகள் கட்டப்பட்டுள்ளன.
இது ஒர் அமைப்பை கணிதக் கருத்துகள் மற்றும் மொழியைப் பயன்படுத்தி விளக்குவதாகும். கணித மாதிரியை உருவாக்கும் செயல்முறை கணித மாதிரி உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை இயற்கை அறிவியல் (எ.கா., இயற்பியல், உயிரியல், பூவியியல், வேதியியல் போன்றவை), மற்றும் பொறியியல் துறைகள் (எ.கா., கணினி அறிவியல், மின் பொறியியல் போன்றவை), சுகாதார அறிவியல் (நோய் பரவுதல் போன்றவை) மற்றும் சமூக அறிவியலில் (அதாவது, பொருளாதாரம், உளவியல், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்றவை) பயன் படுத்தப்படுகிறது. இருப்பினும், கணித மாதிரி உருவாக்கம் என்பது பல்வேறு கணித கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையாகும் - வரைபடங்கள், சமன்பாடுகள், விளக்கவரைபடங்கள், சிதறல் மனைகள், மர வரைபடங்கள் (graphs, equations, diagrams, scatter plots, tree diagrams) போன்றவை உண்மையான சூழ்நிலைகளைக் குறிக்கிறது. அத்தகைய மாதிரி உருவாக்கம் வழக்கமாக பின்பற்றப்படும் பாய்வு விளக்கப்படம் (flow chart) பின்வருமாறு:
உண்மை உலகம் கணித உலகம்
Start here = இங்கு துவக்கம்
Real-world problem (often vague) = நிஜ உலக பிரச்சனைகள்
Well defined math problem = நன்கு வரையறுக்கப்பட்ட கணித சிக்கல்
Make assumptions, start simple = அனுமானியுங்கள், எளிமையாக தொடங்குங்கள்
Inform = தகவல்
Governing equations = சமன்பாடு நிர்வகித்தல்
Implications = தாக்கங்கள்
Solution to model behaviour validate = மாதிரி நடத்தைக்கான தீர்வு சரிபார்த்தல்
Solve with whatever it takes (analytic/asymptotic/numerical) = எதை எடுத்தாலும் தீர்வு காணவும் ( பகுப்பாய்வு / அறிகுறி / எண்கள்)
Data = தரவு
Validate = சரிபார்த்தல்
கணித மாதிரி பாய்வு விளக்கப்படம்
ஒரு கணித மாதிரியை பல்வேறு காரணங்களுக்க்காக பயன்படுத்தலாம்:
அறிவியல் புரிதலை வளர்க்க – அளவு வெளிப்பாட்டின் மூலம் ஒரு அமைப்பின் தற்போதைய அறிவை
ஒரு அமைப்பில் ஏற்படும் மாற்றங்களின் விளைவை ஆராய ஒத்துழைக்கிறது
முடிவெடுப்பதில் உதவுகிறது
STATIONERY PHASE = நிலைத்த நிலை
SIZE WEIGHT OF THE GRAIN = தானியத்தின் அளவு, எடை
EXPONENTIAL PHASE = அடுக்கேற்ற நிலை
LOG PHASE = பதிவு நிலை
IAG PHASE = IAG நிலை
TIME = காலம்
Fig.4.4 மக்காச்சோள ஆலை உயர் பருவ வளர்ச்சி பற்றிய கணித மாதிரியின் எடுத்துக்காட்டு (சிக்மாய்டு வளைவு)
வடிவமைப்பு
வடிவமைப்பு என்பது ஒரு பொருள், கருவி, துணைக்கருவி, கட்டமைப்பின் பண்பு ஆகியவற்றின் நலன் பெருக்க, அதன் செயல்திறனை மேம்படுத்த, வலுப்படுத்த, கையாள, பயன்படுத்த, நிர்வகிக்க, பொருள் மற்றும் ஆற்றலின் பயன்பாடு, தொழிலாளர் செலவு குறைக்க, அழகியல் மதிப்புகளுடன் எளிதான அணுகுமுறையை தருகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றின் வெவ்வேறு கொள்கைகள், அழகுணர்வு கூறுகளுடன் எந்தவொரு பொருளையும், பண்டத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நிலைப்புறு வாழ்க்கை சூழலில், இது பல்வேறு அன்றாட பயன்பாடுகள், கருவிகள், துணை கருவிகள், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அடிப்படையில் இது குறைந்தபட்ச உள்ளீடு மற்றும் அதிகபட்ச வெளியீட்டு பயன் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. பொருள் மற்றும் ஆற்றல் வடிவத்தில் பூமி வளங்களிலிருந்து குறைந்தபட்ச உள்ளீடு, கழிவுகளை குறைத்தல் மற்றும் அதன் பயன்பாட்டை மேம்படுத்துதல் ஆகியவை செயல்திறனை தீர்மானிக்கிறது. நிலைப்புறு வடிவமைப்பு சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கங்களை குறைக்க, பயனர்களின் ஆரோக்கியம் மற்றும் வசதியை பெருக்க முயல்கிறது. தற்போது, வடிவமைப்பு மூல வளங்களை பிரித்தெடுப்பதில் இருந்து உற்பத்தியின் இறுதி வரை முழு உற்பத்தியின் சுழற்சியை முறையாக செய்வதற்கு அணுகுகிறது. இது பொதுவாக வாழ்க்கை சக்கர வடிவமைப்பு, சுற்றுச்சூழல் வடிவமைப்பு அல்லது தயாரிப்பு வடிவமைப்பு என குறிப்பிடப்படுகிறது. வடிவமைப்பு நிலைப்புறுதலை நிலைநிறுத்தச் செய்வதற்கான உத்வேகத்தின் ஆதாரமாக 'இயற்கையை' பார்க்கிறது. வாழ்கை சக்கர வடிவமைப்பு, உருவாக்க நிலையிலிருந்து மறுஉருவாக்கம் வரை முக்கியமாக அதன் மூலப்பொருள் சேகரிப்பிலிருந்து, வாழ்வின் இறுதி வரை பொருட்கள் வளங்களின் ஓட்டத்தில் கவனம் செலுத்துகின்றது. இது அடிக்கடி சில முக்கியமான சுற்றுச்சூழல் அம்சங்களை (எ.கா. ஆற்றல் நுகர்வு) கவனிக்காது விட்டு விடுகிறது. எனவே வடிவமைப்பு, உற்பத்தியால் பெறப்பட்ட ‘சேவை / முடிவு’ விட குறைவாக உற்பத்தியைக் கொண்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். புதுப்பிக்க இயலாத வளங்களின் நுகர்வை குறைத்தல், கழிவுகளை குறைத்தல் மற்றும் ஆரோக்கியமான உற்பத்திச் சூழல்களை உருவாக்குதல் ஆகியவை நிலைப்புறுதலின் அடிப்படை நோக்கங்களாகும்.
(அ) தள திறனை மேம்படுத்துதல், (ஆ) புதுப்பிக்க முடியாத எரிசக்தி நுகர்வுகளைக் குறைத்தல், (இ) சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துதல், (ஈ) தண்ணீரைப் பாதுகாத்தல் மற்றும் சேமித்தல், (உ) அக சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் (ஊ) செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவை வடிவமைப்பின் குறிக்கோள்களாகும். வடிவமைப்பின் படிகள் கீழே உள்ள பாய்வு விளக்கப்படம் மூலம் காட்டப்பட்டுள்ளன:
optimize site potential = தள திறனை மேம்படுத்துதல்
minimize non-renewable energy consumption = புதுப்பிக்க முடியாத ஆற்றல் நுகர்வு குறைத்தல்
use environmentally preferable products = சுற்றுச்சூழலுக்கு ஏற்புடைய தயாரிப்புகளைப் பயன்படுத்துதல்
Principles of design for sustainability = நிலைப்புறு வடிவமைப்பின் கோட்பாடுகள்
protect and conserve water = தண்ணீரைப் பாதுகாத்தல் மற்றும் சேமித்தல்
enhance indoor environmental quality = உட்புற சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்துதல்
optimize operational and maintenance practices = செயல்பாடு மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்தல்
(இ) திட்டமிடல்
திட்டமிடல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான பயனுள்ள செயல்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையான தந்திரோபாய நடவடிக்கைகளாகும். இது பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்களை (மற்றும் குறைபாடுகளையும்) கருத்தில் கொண்டு மக்களின் நலனுக்கான மேம்பாட்டுத் திட்டத்தை உறுதி செய்யும் ஒரு அமைப்பாகும். சேகரிக்கப்பட்ட தரவின் பகுப்பாய்வு, தேவையான மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் பின்னர் வடிவமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றுடன் அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி இத்தகைய திட்டமிடல் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், தேவை அல்லது தேவையின் அடிப்படையில் உள்ளூர் முதல் உலகளாவிய பல நிலைகளுக்கு இது செய்யப்படலாம். சமீபத்திய காலங்களில், திட்டமிடுபவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம், சுத்தமான காற்று / நீர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலப் பயன்பாடு ஆகியவற்றில் அதிக அக்கறை செலுத்துவதற்கும், நீண்ட காலமாக வாழக்கூடிய சுய-நீடித்த சமூகங்களுக்கான உத்திகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குவதற்கும் அக்கறை கொண்டுள்ளனர். கீழேயுள்ள பாய்வு விளக்கப்படம் சுற்றுச்சூழல் பிராந்திய திட்டங்களில் சுற்றுச்சூழல் சமூகங்களைக் காட்டுகிறது.
Eco-region = சுற்றுச்சூழல் பகுதி
Input Here = இங்கே உள்ளீடு
Assemble = தொகுத்தல்
Share Result information for analysis = பகுப்பாய்வுக்காக முடிவு தகவல்களை பகிரவும்
Identify Conservation Targets = பாதுகாப்பு இலக்குகளை அடையாளம் காணுதல்
Identify Examples = எடுத்துக்காட்டுகளை அடையாளம் காணுதல்.
Set Conservation goal = பாதுகாப்பு இலக்கை அமைத்தல்
Provide Documentation Future Refinement = ஆவணங்களை எதிர்கால மேம்படுத்துதலுக்கு வழங்குதல்
Assemble Portfolio = துறைகளை ஒன்றிணைத்தல்
Evaluate and Refine Portfolio = துறைகளை மதிப்பீடு செய்து செலுமைபடுத்துதல்
Share result = முடிவைப் பகிர்தல்
Organise Information for = உயோகத்திற்காக தகவல்களை ஒழுங்கமைத்தல்
மூலம்: Anderson, M, Joseph Comer P, Grossman D, and Weakley S.A. 1999. பிராந்திய சூழல் பாதுகாப்பு திட்டங்களில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சூழல் சமூகங்களுக்கான வழிகாட்டுதல்கள். The Nature Conservancy 1999
உண்மையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள திட்டமிடலில் சமநிலையான முடிவெடுக்க இயற்கைச் சூழலை அது கருத்தில் கொள்கிறது. இந்த செயல்முறை சுற்றுச்சூழல் வளங்களின் பாதுகாப்பை சமூக இலக்குகளுடன் ஒருங்கிணைக்கிறது. இயற்கை வள திட்டமிடல் மற்றும் மேலாண்மை ஆகியவை மக்களும் இயற்கை நிலப்பரப்புகளும் பகுத்தறிவு வழிகளில் தொடர்பு கொள்ளும் முறையை நிர்வகிக்கின்றன. இது நில பயன்பாட்டுத் திட்டமிடல், நீர் மேலாண்மை, பல்லுயிர் பாதுகாப்புடன் விவசாயம், சுரங்கம், சுற்றுலா, மீன்வளம், வனவியல் மற்றும் பல தொழில்கள் மற்றும் நடவடிக்கைகளில் எதிர்கால நிலைப்புறுத் தன்மையை கொண்டுவருகிறது.
Import of raw portable water = குடிநீருக்காக சுத்திகரிக்காத நீரை கொண்டுவருதல்
Precipitation = மழை
Evapro-transpiration = ஆவியாதல் ஆவியுயிர்ப்பு
Urban Land Area = நகர்ப்புற நிலப்பரப்பு
Water supply = நீர் விநியோகம்
Urban drainage = நகர்ப்புற வடிகால்
Waste water collection = கழிவு நீர் சேகரிப்பு
Water treatment = நீர் சுத்திகரிப்பு
Storm water management = மழை நீர் மேலாண்மை
Overflow treatment = வழிந்தோடும் நீர் பராமரிப்பு
Waste water treatment = கழிவு நீர் சுத்திகரிப்பு
Groundwater = நிலத்தடி நீர்
Surface water = மேற்பரப்பு நீர்
படம் 4.6. நகர்புற நீர் சுழற்சி: முக்கிய கூறுகள் மற்றும் பாதைகள்
நிலைப்புறு வாழ்க்கைக்கான ஒட்டுமொத்த திட்டத்தின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
ஏற்புத் திறன்
கொடுக்கப்பட்ட சூழல் / உலகத்தால் தக்கவைக்கக்கூடிய அதிகபட்ச மக்கள் தொகை
மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள்
குடும்ப திட்டமிடல்
கல்வி
பெண்களின் நிலை
வீட்டுவசதி போன்றவை.
Design & Development = வடிவமைப்பு மற்றும் மேம்பாடு
Modeling & Simulation = மாதிரி மற்றும் இயக்குதல்
Planning & System = திட்டமிடல் மற்றும் அமைப்பு
Individual = தனி மனிதர்
Community = சமூகம்
Areas of Intervention = தலையீட்டிற்கான பகுதிகள்
Ecological Areas = சுற்றுச்சூழல் பகுதிகள்
Social Areas = சமூகப் பகுதிகள்
Eclonomical Areas = சூழல்பொருளாதார பகுதிகள் Study Based = ஆய்வு அடிப்படையிலானது
Study Based = ஆய்வு அடிப்படையிலானது
Awareness = விழிப்புணர்வு
Sustainable Living = நிலைப்புறு வாழ்க்கை
படம் 4.7. சுருக்கமான பாய்வு விளக்கப்படம்
திட்டத்திற்கான நோக்கம்
இயற்கை வளங்கள், நீர், காற்று, சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்குகள் (சிறியவை பெரியவை இரண்டும்), மனிதர்கள் இத்தியாதி மற்றும் இடைவினைகள் தொடர்பான பரந்த பகுதிகளில் திட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஆகியவை இத்துணை கருப்பொருளில் உள்ளன. இயற்கணிதம், முக்கோணவியல், வடிவியல், ஒருங்கிணைப்பு வடிவியல், திட வடிவியல், வகையீடு நுண்கணிதம் போன்ற எளிய கணித விதிகளைப் பயன்படுத்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கலை எளிதில் அறியலாம். இருப்பினும், வெவ்வேறு சமூக-பொருளாதார மற்றும் புவியியல் நிலைமைகளில் குழந்தைகளுடைய பல்வேறு வரம்புகளைக் கருத்தில் கொண்டு, மேலே விவரிக்கப்பட்ட எந்த பகுதிகளிலும் சிறிய மற்றும் தனித்துவமான திட்டத்தை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்படுகிறது. கீழேயுள்ள அட்டவணையில், குழந்தைகளின் வசதிக்காக கவனம் செலுத்தும் பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் பின்வரும் அட்டவணையில் வழங்கப்பட்டுள்ளன:
அட்டவனை-4.1: கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள்
அணுகுமுறை / கவனம்
மாதிரி அடிப்படையிலானது
அமைப்பு மற்றும் திட்டமிடல் அடிப்படையில்
வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் கவனம்
சூழல்
சுற்றுச்சூழல் (நிலம், மண், நீர், காற்று போன்றவை)
இயற்கை வளங்கள்
உயிரியை போல செய்தல்
பல்லுயிர்
வாழ்விடம் / சூழல் அமைப்பு
-நிலவாழ்வன
-நீர்வாழ்வன
- நில பயன்பாடு
- நிலப்பரப்பு
காலநிலை மற்றும் காலநிலை மாற்றம்
பேரழிவு வரைபடம் தயாரித்தல்
பேரழிவு மேலாண்மை
பேரழிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கான வடிவமைப்பு
சமூகம்
கட்டுமானம் மற்றும் மேம்பாடு
வாழ்விட – திட்டமிடல்
ஆற்றல் மற்றும் நிலைத்தன்மை
தயாரிப்பு வடிவமைப்பு
வாழ்விட வடிவமைப்பு
- கட்டுமானம்
- அமைப்பு
- சுற்றுச்சூழல்
உடல்நலம் மற்றும் நோய்கள்
மனித திறன் மற்றும் ஆற்றொழுக்கு
சிறப்பு தேவைக்கான வடிவமைப்பு
பொருளாதாரம்
விவசாயம்
மீன்வளம்
கால்நடை வளர்ப்பு
உற்பத்தி மற்றும் நுகர்வு
கொள்கை மேம்பாடு
மாதிரி திட்டங்கள்
திட்டம் - 1: இயற்கை மற்றும் கலாச்சாரப் பரப்பில் நில பயன்பாட்டு மாற்றத்தின் தாக்கம்
பின்னணி
நில பயன்பாட்டு மாற்றம் என்பது மனித நடவடிக்கைகளின் விளைவாக இயற்கையான நிலப்பரப்பை மாற்றியமைக்கும் ஒரு செயல்முறையாகும். இது பொதுவான நோக்கத்தில் நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிக்கிறது. நில பயன்பாட்டு மாற்றங்கள் பெரும்பாலும் நேர்கோட்டில் இருக்கும் சில நேரங்களில் சுற்றுச்சூழலுக்கு பல பரிமாண தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, நில பயன்பாட்டு மாற்றங்களுக்கு மதிப்பீடு தேவை, மேலும் நிலைப்புறு நிலைமைகளை உறுதி செய்வதற்காக, அனுமானங்களின்படி எதிர்கால நிலைமைகளை மாதிரியாக்குவதும் சாத்தியமாகும்.
குறிக்கோள்கள்
1. ஒரு காலப்பகுதியில் நில பயன்பாட்டு மாற்றங்களை மதிப்பிடுதல்
2. நில பயன்பாட்டு மாற்றங்களை சரிபார்க்கவும் ஆவணப்படுத்தவும் கள அளவிலான கணக்கெடுப்பை நடத்துதல்.
3. நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை அளவிடுதல்.
ஆய்வு முறை
ஆய்வை நடத்துவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி, படி நிலை நடைமுறை பின்பற்றப்படுதல்.
1. கூகிள் எர்த் படத்தில் எளிதில் அடையாளம் காணக்கூடிய, இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட எல்லையுடன், ஆய்வின் பகுதியை அடையாளம் காணுதல்.
2. கிடைக்கக்கூடிய ஆண்டுகளில் கூகிள் எர்த் பகுதியின் படங்களை சேமித்தல்.
3. காடு, விவசாய நிலம், கட்டப்பட்ட பகுதி, நீர்நிலை போன்ற நில பயன்பாட்டு வகைகளை ஒவ்வொரு ஆண்டும் வரையறுத்தல்.
4. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகை பரப்பளவைக் கண்டறிதல் (கூகிள் எர்த்; பரப்பு கருவியைப் பயன்படுத்தி)
5. தரவை அட்டவணைப்படுத்தி, சதவீதங்களைக் கணக்கிடுதல்
6. ஒவ்வொரு வகைக்கும் சதவீத மாற்றங்களைக் கணக்கிடுதல்
2002 2010 2018
படம் -4.1.1. மூன்று வெவ்வேறு ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் படங்கள் (கூகிள் வரைபடத்திலிருந்து)
வ. எண்
நில பயன்பாட்டு வகை
பரப்பு ச.கி.மீ
பரப்பு %
பரப்பளவில் மாற்றம்
2002
2010
2018
2002
2010
2018
2002-2010
2010-2018
2002-2018
1
வனம்
0
0
0
0
0
0
0
0
0
2
விவசாய பூமி
18
17
15
72
68
60
-4
-8
-12
3
கட்டிடங்கள்
6
7
9
24
28
36
+4
+8
+12
4
நீர் நிலைகள்
1
1
1
4
4
4
0
0
0
மொத்தம்
25
25
25
100
100
100
0
0
0
அட்டவணை -4.1.1: வரைபடங்களிலிருந்து கணக்கிடப்பட்ட வெவ்வேறு நிலப் பயன்பாடுகளின் கீழ் உள்ள பகுதிகள்
படம் 4.1.2: (அ) நிலப்பரப்புகளில் தசாப்த மாற்றங்கள் (சதவீதத்தில்) இரண்டு வெவ்வேறு தசாப்தங்கள் மற்றும் (ஆ) இரண்டு தசாப்தங்களில் மாற்றங்கள்
எதிர்பார்க்கப்படும் முடிவுகள்
1. இப்பகுதியில் முக்கிய நில பயன்பாட்டு பிரிவுகள்
2. வெவ்வேறு ஆண்டுகளில் ஒவ்வொரு நில பயன்பாட்டின் நீட்சி
3. இந்த ஆண்டுகளில் நில பயன்பாட்டில் மாற்றங்கள்
4. அந்தந்த நில பயன்பாட்டு வகைகள் காலப்போக்கில் குறைவு அல்லது அதிகரிப்பு
எதிர்பார்த்த முடிவுகள்
1. உள்ளூர் புரிதலுக்கு இலவச செயற்கைக்கோள் படத் தரவைப் பயன்படுத்துதல்
2. காலப்போக்கில் நில பயன்பாட்டின் வடிவத்தில் மாற்றங்கள்
திட்டம்- 2: மேலாண்மைக்கு அன்னிய ஆக்கிரமிப்பு தாவர இனங்களை மாடலிங் செய்தல்
பின்னணி
பூர்வீகமற்ற, பரவலான மற்றும் ஒரு புதிய சுற்றுச்சூழல் அமைப்பில் ஊடுருவும் பல அன்னிய ஆக்கிரமிப்பு தாவர இனங்கள், பூர்வீக பல்லுயிரியலுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பொருளாதார இழப்புகள் உட்பட பல சரிசெய்ய முடியாத இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. ஆக்கிரமிப்பு இனங்கள் உள்ளூர் இனங்கள் வளர அனுமதிக்காது மற்றும் வனவிலங்கு நடமாட்டத்திற்கு தடையாக இருக்கும். லந்தானா போன்ற இனங்கள் விரிவாக வளர்ந்து, பல்லுயிர் குறைவிற்கு மற்றும் அழிவிற்கு வழிவகுக்கிறது. உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தொகையை சமநிலைப்படுத்துவதன் மூலம் மட்டுமே சுற்றுச்சூழல் அமைப்பின் சூழல் சமநிலையை பராமரிக்க முடியும். எவ்வாறாயினும், பல்லுயிரியை மேம்படுத்துவதற்காக அன்னிய உயிரினங்களை அகற்றுவதை ஒரு படி நிலையிலும் பூர்வீக தாவரங்களை நடவு செய்வது / விலங்குகளுக்கான சூழலை மேம்படுத்துவது மூலம் இருக்க வேண்டும் என்று சூழலியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அன்னிய ஆக்கிரமிப்பு உயிரினங்களுக்கான கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளுக்கு கணிசமான அளவு மனித சக்தி மற்றும் பணம் தேவைப்படுவதால், தலையீடு செய்வதற்கான பரப்பை முடிவு செய்தல், அவற்றின் அடர்த்தியை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால சூழ்நிலைகளின் முன்கணிப்பு ஆகியவற்றை வரையறுக்க வேண்டியது அவசியம். ஆய்வின் பொருட்டு, பார்த்தீனியம் ஹைஸ்டரோபொருசஸ் தாவரத்தை நாம் கருத்தில் கொள்வோம்.
கருதுகோள்
அன்னிய தாவர இனங்கள் ஒரு சில தசாப்தங்களில் பரவலாக வளர்ந்து உள்ளூர் தாவர இனங்களின் வளர்ச்சியை பாதிக்கும்.
குறிக்கோள்
நோக்கத்திற்காக, பின்வரும் பண்பு கூறுகள் முடிவு செய்யப்பட்டுள்ளன:
1. வட்டாரத்தில் பரவக்கூடிய அன்னிய ஆக்கிரமிப்பு இனங்கள் அடையாளம் காண்பதும், கால அளவிலான அதன் நிகழ்வின் அதிர்வெண்ணை மதிப்பிடுவதும்.
2. அதன் அடர்த்தியை கணிக்க ஒரு பெரிய பூர்வீக இனத்துடன் ஒப்பீட்டு கணித மாதிரியை உருவாக்குதல்
ஆய்வு முறை
இவ்வாய்வு முறை மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது- சோதனை, மாதிரியின் உருவாக்கம் மற்றும் மாதிரியின் சரிபார்ப்பு. மூன்று பிரிவுகளும் கீழே விளக்கப்பட்டுள்ளன.
(I) பரிசோதனை
படி - 1: உங்கள் வட்டாரத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டிய அதிகபட்ச உயிரினங்களை சேர்க்க போதுமான அளவு ஒரு பெரிய பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
படி - 2: ஆய்வுக்கு கருதப்பட வேண்டிய உயிரினங்களை அடையாளம் காணவும். இங்கே, ஒரு அன்னிய (இனங்கள் - அ) மற்றும் ஒரு பூர்வீக / உள்ளூர் (இனங்கள் - ஆ) இனங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
படி - 3: கட்டம் முறைகளைப் பயன்படுத்தி கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்-
| | | | |
l l
l
l l l
l l
l
l
l l l
l
l
l l l
l
l l
l l
|
|
|
|
|
|
|
| |
|
| |
|
| |
|
|
| |
| |
| |
|
| | |
|
|
|
|
|
|
| | | | | | | |
குறிப்பு: உங்கள் பாட புத்தகத்தில் கொடுக்கப்பட்ட முறையைப் பின்பற்றவும்.
இருப்பினும், தொடங்குவதற்கு முன், களத்தில் உள்ள தரவைப் பதிவுசெய்ய கீழே காட்டப்பட்டுள்ள அட்டவணையைத் தயாரிக்கவும். பின்னர், கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரத்தின் படி அதிர்வெண் சதவீதத்தைக் கணக்கிடுங்கள்
அதிர்வெண் = [(உள்ள இனங்களை கொண்ட மாதிரி அலகுகளின் எண்ணிக்கை) / (ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் மாதிரி அலகுகளின் மொத்த எண்ணிக்கை)] X 100
இது சதவீதத்தில் (%) வெளிப்படுத்தப்பட்டு ‘F.’ என குறிக்கப்படுகிறது.
அட்டவணை - 4.2.1. ஆறு கட்டங்களில் உள்ள தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அதிர்வெண்கள்
இனம்
கட்டம்
மொத்த எண்ணிக்கை (N)
அதிர்வெண் % [(N/6)x100
1
2
3
4
5
6
இனம் ’அ’
67
55
62
59
62
44
349
58.1
இனம் ;ஆ’
38
47
33
40
33
54
245
40.8
படி - 4: சில தாவர மாதிரிகளை எடுத்து ஒரு ஹெர்பேரியம் தயார் செய்யுங்கள்.
படி - 5: கிராமவாசிகளைச் சந்திப்பதற்கு முன், கீழே காட்டப்பட்டுள்ளபடி ஒரு அட்டவணையைத் தயாரிக்கவும்-
பங்கேற்போர்
அதிர்வெண்
2018
2017
2016
2015
2010*
1
2
3
* இது முதலில் அடையாளம் காணப்பட்ட ஆண்டாக இருக்கலாம்
படி - 6: அப்பகுதியில் வசிக்கும் சில வயதானவர்களைத் தேர்ந்தெடுத்து, ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவர இனங்கள் குறித்து முன்பே வடிவமைக்கப்பட்ட கேள்விகளைக் கேளுங்கள். கீழே உள்ள பெட்டியில் சில மாதிரி கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன-
படி - 7: ஒவ்வொரு தனிப்பட்ட பதிலளித்தவரிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களை கீழே காட்டப்பட்டுள்ளபடி அட்டவணையில் வைக்கவும். இங்கே சில அனுமான தரவுகள் தரப்பட்டுள்ளது.
பங்கேற்போர்
அதிர்வெண்
2018
2017
2016
2015
2010*
1
50
45
40
45
5
2
55
60
50
40
5
3
60
50
45
40
10
சராசரி
55.0
51.7
45.0
41.7
6.7
அட்டவணை - 4.2.2. இனங்கள் ‘அ’ நிகழும் அதிர்வெண் - ஆண்டுகளுக்கு, கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்டவை
பங்கேற்போர்
அதிர்வெண்
2018
2017
2016
2015
2010*
1
40
45
45
50
80
2
45
50
55
55
80
3
45
50
55
55
75
சராசரி
43.3
48.3
51.7
53.3
78.3
* புரிந்துகொள்வதில் உங்கள் தெளிவுக்காக சோதனக்கு உள்ளாகும் அனைத்து உயிரினங்களுக்கும் தனித்தனியாக செயல்முறை செய்யவும்.
அட்டவணை -4.2.3. இனங்கள் ‘ஆ’ வில் நிகழும் அதிர்வெண் – ஆண்டுகளுக்கு, கணக்கெடுப்பிலிருந்து சேகரிக்கப்பட்டவை.
(II) மாதிரி மேம்பாடு
எச்சரிக்கை: இத்தகைய மாதிரியின் வளர்ச்சிக்கு நீண்ட கால தரவு தேவைப்படுகிறது, பொதுவாக 2-3 பத்தாண்டுகளாக, ஆனால் குழந்தைகள் புரிந்து கொள்ள, ஒரு குறுகிய கால தரவு கருதப்படுகிறது. தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், அதிக கால இடைவெளி, இன்னும் துல்லியமாக இருக்கும்.
எனவே, ஒரு மாதிரியை உருவாக்கும் தேடலில், எளிய கணித உறவு முயற்சிக்கப்பட்டுள்ளது.
படி - பின்பற்றப்பட்ட படி வாரியான வழிமுறை கீழே விவரிக்கப்பட்டுள்ளது:
படி - 1: கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆய்வு ஆண்டுகளை எண்ணிக்கையில் மாற்றவும்:
அட்டவணை -3: தொடர்புடைய ஆண்டுகளுக்கு எண்ணை ஒதுக்குதல்
2010
2015
2016
2017
2018
2019
-9
-4
-3
-2
-1
0
[குறிப்பு: தற்போதைய ஆண்டு (2019) சுழியமாக (0) கருதப்பட்டு களத்தில் தரவுகள் பதிவு செய்யப்படும் மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டுகள் (அதாவது இந்த துறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு) எதிர்மறை (-) மற்றும் 2019 க்கு பிந்தைய உள்ள ஆண்டுகள் நேர்மறை (+) எனக் கொள்ளப்படுகிறது.]
படி 2: அட்டவணையிலிருந்து மதிப்பீடுகளை இடவும் – 4.3.1., 4.3.2. & 4.3.3.
தவர இனம்
2010
2015
2016
2017
2018
2019
-9
-4
-3
-2
-2
0
அ
6.7
41.7
45.0
51.7
55.0
58.1
ஆ
78.3
53.3
51.7
48.3
43.3
40.8
அட்டவணை-4.2.4.: இனம் ‘அ’ வின் வருடாந்திர அதிர்வெண்
படி - 3. பியர்சன் தொடர்பு குணக மதிப்புடன் ஆண்டுகளின் எண்ணிக்கையுடன் அதிர்வெண்ணின் உறவைக் கணக்கிடுங்கள் (பெட்டி –I இல் கணக்கிடும் முறையைப் பார்க்கவும்).
படி - 4. அட்டவணை -4 இல் தரவை முறையே x மற்றும் y அச்சில் ஆண்டு (ஆண்டு) மற்றும் அதிர்வெண் (அ.எ.) எண்ணிக்கையுடன் ஒரு மில்லிமீட்டர் வரைபட தாளில் வகுக்கவும். கீழே காட்டப்பட்டுள்ளபடி, சிறந்த பொருத்தப்பட்ட நேர் கோட்டை வரையவும்.
படம் -4.3.1. இனங்கள்-’அ’வின் அதிர்வு எண்ணுடன் ஆண்டுகளின் எண்ணிக்கை உறவு
படம் -4.3.2. இனங்கள்-’ஆ’வின் அதிர்வு எண்ணுடன் ஆண்டுகளின் எண்ணிக்கை உறவு
படி– 5. வடிவியல், இயற்கணித அல்லது முக்கோணவியல் முறையைப் பயன்படுத்தி மேலேயுள்ள வரைபடத்திலிருந்து (படம் -1) நேர் கோடு சமன்பாட்டின் (y = mx + c) ‘m’ மற்றும் ‘c’ இன் மதிப்புகளைக் கண்டறியவும்.
குறிப்பு: y- அச்சில் c ஐ இடைமறிக்கும் மற்றும் சாய்வு m ஐக் கொண்ட கோட்டின் சமன்பாடு y = mx + c ஆல் வழங்கப்படுகிறது. முறையே y- அச்சின் நேர்மறை அல்லது எதிர்மறை பக்கத்தில் இடைமறிப்பு செய்யப்படுவதால் c இன் மதிப்பு நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்க.
பள்ளியில் கற்பிக்கப்பட்ட முறையைப் பின்பற்றுங்கள்.
படி - 6. கீழே காட்டப்பட்டுள்ளபடி அட்டவணையில் உள்ள மதிப்புகளைக் கவனியுங்கள்-
தாவர இனம்
இடைமறிப்பு & மற்றும் சரிவு
தொடர்பு மதிப்பு (r)
C
M
அ
61.54
5.85
0.98
ஆ
39.20
-4.29
0.97
அட்டவணை -4.2.5. தொடர்பு மதிப்புகள் (F மற்றும் T க்கு இடையில்) மற்றும் கோடுகளின் குறுக்கீடுகள் மற்றும் சரிவுகள்
படி - 7. இரண்டு மாறிகள் இடையேயான உறவின் தன்மை மற்றும் வலிமை பற்றி விளக்குங்கள் – F & T.
படி - 8. சமன்பாடுகளை எழுதுங்கள், அவை இரண்டு தாவர இனங்களின் தனிப்பட்ட மாதிரிகள்.
Fஅ = 5.85 T + 61.54 …….. (i)
Fஆ = -4.29 T + 39.20 …….(ii)
இங்கே, F சதவீதம் அதிர்வெண் மற்றும் T என்பது எண்ணிக்கையில் உள்ள ஆண்டுகள். ‘a’ மற்றும் ‘b’ பங்களிப்புகள் முறையே ’அ’ மற்றும் ’ஆ’ இனங்களைக் குறிக்கின்றன.
(III) மாதிரியின் சரிபார்ப்பு
உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மாதிரியும் திட்டமிடல், செயல் மற்றும் மேம்பாட்டு நோக்கத்திற்காக மதிப்பிடப்பட்ட மதிப்புகளை முன்வைப்பதன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். எனவே, இரண்டு தாவர இனங்களின் மதிப்பிடப்பட்ட அதிர்வெண்களைக் கணக்கிடும் மாதிரிகளை சரிபார்க்க ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்பற்றப்பட்ட படிகள் கீழே விளக்கப்பட்டுள்ளன-
படி - 1: கீழே காட்டப்பட்டுள்ளபடி, 2019 க்கு அப்பால் ஆண்டுகளில் Ta மற்றும் Tb க்கு எதிரான மதிப்புகளை வைத்து, Fஅ மற்றும் Fஆ இன் கணிக்கப்பட்ட மதிப்புகளைக் கணக்கிடுங்கள்.
தாவர இனங்களின் இடைமறிப்பு மற்றும் வரியின் சாய்வு தொடர்பு மதிப்பு (r)
படி - 2: அட்டவணை -5 இல் காட்டப்பட்டுள்ளபடி மதிப்புகளை அட்டவணை வடிவத்தில் வழங்கவும்.
விவரங்கள்
2019
2020
2021
2022
2023
2024
Fஅ
58.1
73.24
79.09
79.09
90.79
96.64
Fஆ
40.8
30.62
26.33
22.04
17.75
13.46
அட்டவணை -4.2.6. நேரியல் மாதிரியைப் பயன்படுத்தி இரண்டு தாவர இனங்களின் மதிப்பிடப்பட்ட அதிர்வெண்கள்
படி - 3: நீங்கள் கணிக்க விரும்பும் ஆண்டுகளுக்கு எதிராக , Fஅ மற்றும் Fஆ இன் மதிப்புகளை வைக்கவும் (இங்கே இது 2020 - 2025). இரண்டு இனங்களுக்கும் வளைவுகளை வரையவும். இறுதியாக, ஒவ்வொரு புள்ளியையும் தூர பட்டிகளுடன் சேர்க்கவும்.
படம் -4.2.3. ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய தாவர இனங்களின் கணிக்கப்பட்ட மக்கள் தொகை அதிர்வெண்கள். புள்ளியிடப்பட்ட கோடுகள் ஊகித்தறிந்த (extrapolated)தரவு.
அனுமானம்
2018 முதல் அல்லது அதற்கு முன்னதாகவே உயிரினங்களுக்கிடையேயான தூரம் ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருவதாக படம் - 3 இலிருந்து தெரிகிறது. ஆண்டு முன்னேற்றத்துடன், அன்னிய உயிரினங்களின் தொகை பரிசீலனையில் உள்ள பூர்வீக உயிரினங்களின் எண்ணிக்கையை மீறும். எனவே, இது நீண்ட காலத்திற்கு பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை மோசமாக்கும். அடுத்த சில ஆண்டுகளில் பூர்வீக இனங்கள் அழிந்துபோக வாய்ப்பில்லை.
எனவே, பரிசீலனையில் உள்ள கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
திட்டம் -3: வள-அழுத்த நிலைமைகளின் கீழ் வளர்ந்த ஒரு உயிரினத்தின் திறன் மற்றும் அதன் தொகை கணிப்பு
பின்னணி
ஒரு குறிப்பிட்ட சூழலில் நிலைப்புறு தன்மை தக்கவைக்கக்கூடிய உயிரினங்களின் அதிகபட்ச தொகை, அவ்வுயிரியின் ஏற்புத்திறன், சுற்றுச்சூழலில் கிடைக்கும் உணவு, வாழ்விடம், நீர் மற்றும் பிற தேவைகளைப் பொறுத்தே அமையும். சூழல் அமைப்புகள் நீண்ட காலத்திற்கு அவற்றின் ஏற்ப்புத்திறனை மீற முடியாது. குறிப்பிட்ட உயிரினத் தொகையின் அடர்த்தி சுற்றுச்சூழல் அமைப்பின் ஏற்புத்திறனை மீறும் நிலைகளில், அவ்வினங்கள் சூழலில் உள்ள அவற்றின் உணவு, நீர் அல்லது பிற தேவைகளை குறைத்துவிடும். விரைவில், அவற்றின் உறுப்பினர்கள் இறக்கத் தொடங்குவார்கள். சுற்றுச்சூழலின் ஏற்புத்திறனை அடையும் வரை மட்டுமே அவற்றின் தொகை வளர முடியும். நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வளர அனுமதிக்க வளங்கள் போதுமானதாக இருக்காது.
ஆய்வின் நோக்கத்திற்காக, மண்புழு ஒரு சோதனை விலங்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கருதுகோள்
உணவு மற்றும் சூழல் தரத்தின் செல்வாக்கு, மற்றும் மண்புழுக்களின் இனப்பெருக்கம்.
குறிக்கோள்கள்
1. மண்புழுக்களின் எண்ணிக்கை வளர்ச்சியில் பல்வேறு வகையான தீவனங்களின் செல்வாக்கை ஆராய்வது
2. ஏற்ப்புத்திறனைக் கண்டுபிடிக்க
3. வழங்கப்பட்ட ஒவ்வொரு வகை ஊட்டத்தின் கீழும் அதன் தொகையை கணிக்க
[குறிப்பு: உங்கள் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், மண்புழுக்கள், அவற்றின் உணவு, உயிரியல் மற்றும் அவற்றை எவ்வாறு ஒழுங்காக தயாரிப்பது மற்றும் பராமரிப்பது என்பது குறித்து ஒரு சிறிய பின்னணி ஆராய்ச்சி செய்யுங்கள். உங்கள் பாட புத்தகத்தில் அல்லது பிற மூலங்களிலிலிருந்து நிலையான நடைமுறையைப் பின்பற்றவும்.]
சோதனை செயல்முறை
படி - 1. மூன்று வகையான ஊட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) இறுதியாக நொறுக்கப்பட்ட முட்டை ஓடுகள்
(ii) தோல்களுடன் பழ துண்டுகள்
(iii) காய்கறி துண்டுகள் மற்றும் அவற்றின் தோல்கள்
(iv) புல் துண்டுகள் மற்றும் உலர்ந்த இலைகள்
(v) ஈரப்பதமான துண்டாக்கப்பட்ட செய்தித்தாள் (வண்ண பக்கங்களைத் தவிர்க்கவும்)
(vi) பருப்புகள் மற்றும் தானியங்கள்
(vii) மேலே உள்ளவற்றின் கலவை
(viii) நீங்கள் விரும்பும் வேறு ஏதேனும் பொருட்கள்
படி– 2: சேர்க்க வேண்டிய உணவு வகையைத் தீர்மானியுங்கள். அனைத்து நடத்துமுறைகளுக்கும் ஒரே மாதிரியான தீவனம் வழங்கப்பட வேண்டும்; ஆனால் அளவு நடத்துமுறை வாரியாக மாறுபடும்.
‘X’ வகை ஊட்டத்துடன் பின்வரும் சோதனை பயன்படுத்தலாம் -
தொட்டி - A: X கிராம்
தொட்டி - B: 2/3 X கிராம்
தொட்டி - C: 1/2 X கிராம்
படி - 3: அதிகப்படியாக இல்லாவிட்டால் குறைந்தது 30 செ.மீ விட்டம் கொண்ட ஒன்பது பிளாஸ்டிக் அல்லது மண் தொட்டிகளை சேகரிக்கவும். இவற்றில், ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று மூன்று தொட்டிகளை சேர்க்கவும், இதனால் ஒவ்வொன்றிலும் மூன்று தொட்டிகளைக் கொண்ட மூன்று தொகுதிகள் இருக்கும். ஒவ்வொரு தொட்டியிலும் வடிகால் துளைகளை உருவாக்குங்கள்.
படி - 4: மூன்று தொகுதிகளையும் ‘A’, ‘B’ மற்றும் ‘C’ என்று லேபிளிடுங்கள். ஒவ்வொரு தொகுதிகளையும் A1, A2, A3 என பெயரிடுவதன் மூலம் நீங்கள் மேலும் செல்லலாம்…. இது போன்ற B1, B2, & B3 மற்றும் C1, 2, & C3.
படி - 5: வயலில் இருந்து மண் சேகரிக்கவும்
படி - 6: ஒவ்வொரு தொட்டியிலும் மண்ணை முக்கால் பங்கு வரை வைக்கவும். மண் மீது சிறிது தண்ணீர் தெளிக்கவும், அதனால் ஈரம் சேரும், ஆனால் ஈரம் அதிகம் ஊறாதபடி இருக்கட்டும். தேவைப்பட்டால், அதிக ஈரப்பத மண்ணைச் சேர்க்கவும்.
படி - 7: உள்நாட்டில் கிடைக்கும் மண்புழு சேகரிக்கவும். ஒத்த அளவு மற்றும் நீளமுள்ள புழுக்களை முடிந்தவரை தேர்வு செய்யவும்.
படி - 8: புழுவை ஒன்பது குழுக்களாகப் பிரிக்கவும். குழுக்களை எண்ணி எடை போடவும்.
படி - 9: தொட்டியின் மண்ணில் ஒவ்வொரு கோப்பையிலும் புழுக்களை மெதுவாக வைக்கவும். புழுக்களின் மேல் அதிக ஈரமான மண்ணைச் சேர்க்கவும், மண்ணின் அளவு பானையின் மேல் விளிம்பிலிருந்து கீழே சுமார் 5 செ.மீ (2 அங்குலங்கள்) அடையும் வரை.
படி - 10: ஈரமான செய்தித்தாள்களால் அனைத்து தொட்டிகளையும் மூடவும்.
படி - 11: ஒவ்வொரு தொட்டியையும் இருண்ட பிளாஸ்டிக் பையால் போர்த்தவும். பைகளின் மேல் சில சிறிய காற்று துளைகளை உருவாக்க மறக்காதீர்கள்.
குறிப்பு: அனைத்து தொட்டிகளிலும் வெப்பநிலை, ஈரப்பதம் போன்றவை ஒத்த நிலைமைகள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
படி - 12: பானைகளை குளிர்ந்த இடத்தில் வைக்கவும்,
படி - 13: நீங்கள் பானையில் வைப்பதற்கு முன்பு ஒவ்வொரு வகை உணவையும் வெகு கவனமாக எடைபோட்டு பதிவு செய்யுங்கள்.
படி - 14: செய்தித்தாளின் கீழ் அந்தந்த தொட்டிகளில் ஒரு அடுக்கு உணவு வைக்கவும். ஈரமான செய்தித்தாளுடன் உணவை மூடி வைக்கவும்.
படி - 15: உணவு, மண் மற்றும் செய்தித்தாள் ஈரப்பதமாக இருக்க, தேவைப்பட்டால், மேலே சிறிது தண்ணீர் தெளிக்கவும்.
படி - 16: கருப்பு பிளாஸ்டிக் பைகளால் பானைகளை மூடவும்; காற்று துளைகள் பானையின் உச்சியில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
படி - 17: ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் மண்ணின் அமிலத்தன்மை (pH), நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P) மற்றும் பொட்டாசியம் (K) ஆகியவற்றை அளவிடவும். இது ஆரம்ப தரவுகளாக இருக்கும்.
படி - 18: ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் தொட்டிகளைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் உணவு மற்றும் / அல்லது தண்ணீரைச் சேர்க்கவும். புதிய தொகுதி உணவைச் சேர்ப்பதற்கு முன்பு பெரும்பாலான உணவுகள் மறைந்து விட்டனவா என்று சோதிக்கவும்.
படி - 19: உணவு மற்றும் தண்ணீரின் ஒவ்வொரு சேர்த்தலின் அளவையும் பதிவு செய்யுங்கள். உணவு எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்கவும். மண்ணின் மேற்பரப்பில் அல்லது தோற்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா? மேற்பரப்பில் புழுவின் கழிவுகளை (புழுவின் உடலில் கடந்து சென்றபின் ஒரு புழு வெளியேற்றும் மண் தொகுப்பு) தேடுங்கள்.
படி - 20: ஒவ்வொரு தொட்டிக்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பதிவுசெய்து கவனிக்கவும். கீழே காட்டப்பட்டுள்ளபடி தரவு அட்டவணையைத் தயாரிக்கவும். உள்ளடக்கு: தொடக்க தேதி, புழுக்களின் ஆரம்ப எண்ணிக்கை, புழுக்களின் குழு நிறை போன்றவை.
சோதனை
ஆரம்ப தொகை
இறுதி தொகை
இறப்பு %
எண்ணிக்கை
எடை கி.
எண்ணிக்கை
எடை கி.
A
B
C
அட்டவணை -4.3.1. சோதனைக்கு முன்னும் பின்னும் புழுக்கள் தொகை பண்புகள்
படி - 21: ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட மண்ணின் அமிலத்தன்மை (pH), நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P) மற்றும் பொட்டாசியம் (K) ஆகியவற்றை அளவிடவும். இது இறுதித் தரவாக இருக்கும். உங்கள் ஆய்வக பதிவேட்டில் ஒவ்வொரு தொட்டிக்கும் மண் பகுப்பாய்வு முடிவுகளை பதிவு செய்யுங்கள். அனைத்து கூறுகளின் சராசரியையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
முடிவுகள்
(அ) புழு எண்ணிக்கை மற்றும் மண் பகுப்பாய்வு
1. இரண்டு மாதங்களுக்குப் பிறகு (நீண்ட காலம் இன்னும் சிறப்பாக இருக்கலாம்), ஒவ்வொரு தொட்டிகளிலும் புழுக்களின் எண்ணிக்கையையும் அவற்றின் குழுவின் அனைத்து புழுக்களின் எண்ணிக்கையையும் எண்ணி பதிவு செய்யுங்கள். செய்தித்தாளுடன் வரிசையாக இருக்கும் ஒரு பெரிய தட்டில் அல்லது கடாயில் தொட்டியிலிருந்து மண்ணை கவனமாக வெளியேற்றுவதன் மூலம் இதைச் செய்யுங்கள். புழுக்களைக் கண்டுபிடிக்க மண்ணை மெதுவாகத் தள்ளுங்கள்.
2. வெற்று காகித கோப்பை ஒன்றை எடைபோட்டு, கோப்பையின் எடையை (W1) கிராம் அளவில் பதிவு செய்யுங்கள். கோப்பையில் புழுக்களைச் சேர்த்து அதை எடை போடவும் (W2) அவற்றை எண்ணவும்.
3. அட்டவணை 1 உள்ளதைப் போன்று உங்கள் அட்டவணையில் ஒவ்வொரு பானையிலும் நீங்கள் கண்டெடுத்த புழுக்களின் எண்ணிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. W2 - W1 இன் வித்தியாசத்தை எடுத்துக்கொண்டு புழுக்களின் குழு எடையை கணக்கிட்டு உங்கள் அட்டவணையில் பதிவு செய்யுங்கள்.
5. ஒவ்வொரு தொட்டிக்கும் ஏற்ப்புத்திறனைக் கணக்கிடுங்கள். கணக்கீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது:
(ஆ) ஏற்கும் திறன் கணக்கீடு
மண்புழு எங்கள் சோதனை விலங்கு. எல்லா ஆய்வுகளும் 10 எண்ணிக்கையிலான மண்புழுக்களுடன் ஆரம்பிக்கப்பட்டன, இது P0 என குறிக்கப்படுகிறது. எனவே, 2 மாதங்களுக்குப் பிறகு, பரிசோதனையின் காலம், P1 எனக் குறிப்பிடப்படும் புழுக்களின் தொகை மாற்றம் 6,4 மற்றும் 2 என அதிகரிக்கும். மறுபுறம் இறப்பு விகிதம் 0, 2 மற்றும் 4 ஆகும்.
அட்டவணை 4.3.2. f (கழிவு), d (இறப்பு) மற்றும் r (உள்ளார்ந்த வளர்ச்சி) ஆகியவற்றிற்கான கணக்கிடப்பட்ட மதிப்புகளைக் காட்டுகிறது.
சோதனை
P0
P1
தொகை மாற்றம் (P1-- P0)
இறப்பு எண்கள் (D)
d-மதிப்பு (d/P0=D/10)
அதிர்வெண் (f)
f-d
R = (1+f-d)
A
10
16.1
6.1
0
0
0.61
0.61
1.61
B
10
14.4
4.4
2.3
0.23
0.44
0.21
1.21
C
10
12.6
2.6
2.8
0.28
0.26
0.26
1.02
அட்டவணை -4.3.2. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புழுக்களின் தொகை, கழிவு மற்றும் இறப்பு
எனவே, உள்ளார்ந்த வளர்ச்சி விகிதம் (r) என்பது r = 1 + (f - d).
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள சூத்திரத்தின் மூலம் ஏற்புத் திறன் கணக்கிடப்படும்
R- [(P1 - P0) / P1] = (r x P1) / K
இங்கே, K என்பது ஏற்புத் திறன்.
P0, P1 மற்றும் r க்கான மதிப்புகள் அறியப்படும்போது, K இன் மதிப்பை கணிதத்தின் எளிய விதியைப் பயன்படுத்தி கணக்கிட முடியும்.
Ka
Kb
Kc
21.12
19.27
15.79
அட்டவணை -4.3.3. a, b மற்றும் c ஆகிய மூன்று வெவ்வேறு சோதனையின் திறன் (K) ஐக் கொண்டு கணக்கிடப்பட்ட மதிப்புகள்.
படம் - 4.3.1. மூன்று (a, b & c) சூழ்நிலைகளில் திறன் (K) கொண்டு செல்வதற்கான வேறுபாடு
புழுக்களின் எண்ணிக்கை கணிப்பு
மூன்று வெவ்வேறு K- மதிப்புகளைப் பயன்படுத்தி, எதிர்கால எண்ணிக்கை கணிக்கப்பட்டுள்ளது, கீழே உள்ள சமன்பாட்டைப் பயன்படுத்தி-
P = P + [P *r (1-p/K)]
குறிப்பு: எந்தவொரு உயிரினங்களுக்கும் அந்தந்த மாற்றங்களுடன் செய்ய இது சாத்தியமாகும்.
சோதனை
மாதங்கள்
0
2
4
6
8
10
12
14
16
A
10
16.11
22.21
20.25
21.50
20.80
21.23
20.95
21.12
B
10
14.00
15.82
19.24
19.28
19.27
19.17
19.27
19.27
C
10
12.60
13.74
15.56
15.79
15.79
15.79
15.79
15.79
அட்டவணை - 4.3.4. ஒவ்வொரு இரண்டு மாத இடைவெளியிலும் மக்கள் தொகை
இம்மதிப்புகள் ஒரு வரைபடத் தாளில் புள்ளிகளாக இணைக்கப்படும்போது, படம் 2 இல் உள்ளபடி சுமந்து செல்லும் திறன் குறித்த தெளிவான படத்தை தருகிறது.
படம் -4.3.2: மூன்று வெவ்வேறு சிகிச்சையின் கீழ் நேரத்துடன் கணிக்கப்பட்ட மக்கள் தொகை.
புள்ளியிடப்பட்ட கோடுகள் மூன்று வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு எடுத்துச் செல்லும் திறன்களைக் காட்டுகின்றன.
குறிப்பு: வரைபடத்தில் காணப்பட்ட கண்டுபிடிப்புகளை வெளிப்படையாக விளக்குங்கள் (படம் -4.3.2)
மண்ணின் தரத்தின் ஒப்பீடு
சிறந்த விளக்கத்திற்கு, பள்ளியில் கிடைக்கும் எளிய மண் பரிசோதனை கருவியைப் பயன்படுத்தி மண்ணின் இயற்பியல்-வேதியியல் பண்புகளை சோதிக்க வேண்டியது அவசியம். தரவு அட்டவணையில் பதிவு செய்யப்பட வேண்டும் (அட்டவணை -5 இல் காட்டப்பட்டுள்ளபடி). மாற்றங்களைக் கவனித்து, வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் வெளிச்சத்தில் விமர்சன ரீதியாக சிந்திக்க முயற்சிக்கவும்.
விபரங்கள்
ஆரம்பம்
இறுதி
அதிகரிப்பு/குறைவு
pH
Organic Carbon
N
P
K
அட்டவணை -4.3.5. சோதனைக்கு முன்னும் பின்னும் மண்ணின் வேதியியல் பண்புகள்
கூடுதலாக, மண்ணின் தரம் பற்றி பட்டி வரைபடத்தில் வரைந்து ஏற்படும் மாற்றங்களைக் காண்பி, மாற்றங்கள் மற்றும் ஆய்வில் உயிரினத்தின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வில் அவற்றின் தாக்கத்தை விளக்குங்கள்.
அனுமானம்
இந்த மூன்று நிகழ்வுகளிலும் உணவு கிடைப்பது மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் மண்புழு வளர்ச்சிக்கு காரணமாக இருந்தன. வரைபடம் -2 இல் இது தெளிவாக உள்ளது. எவ்வாறாயினும், உணவு கிடைப்பதன் அளவு மற்றும் காலத்தின் முன்னேற்றத்துடன் சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றின் காரணமாக அவற்றின் இனப்பெருக்கம், வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே, ஆய்வுக்கு கருதப்படும் கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பு: இதேபோன்ற செயல்களை வேறு எந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளுடனும் முயற்சி செய்யலாம்.
திட்டம் -4: தொற்று நோய் மாடலிங்
வரலாறு முழுவதும், பேரழிவு தரும் தொற்றுநோய்கள் மக்கள் தொகையில் பெரும் சதவீதத்தை அழித்துவிட்டன. பிளாக் டெத், பிளேக் தொற்றுநோய், சிக்கன் பாக்ஸ், ஃப்ளூ, எய்ட்ஸ் போன்ற ஒரு சில உள்ளன, தற்போது COVID-19. மருத்துவ முன்னேற்றங்கள் சில தொற்று நோய்களின் விளைவுகளை குறைத்துள்ள போதிலும், தொற்றுக்குப்பின் சிகிச்சையளிப்பதை காட்டிலும் முதலில் தொற்றுநோய்களை தடுப்பதே சிறந்தது. ஒரு கேள்வி எழுகிறது, ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டவுடன், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? ஒரு சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் தேவையா? இதுபோன்ற பல கேள்விகள். அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நோய் பரவும் இயக்கவியலைப் புரிந்துகொள்வது அவசியம், மேலும் கணித மாதிரி இங்கே ஒரு பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட நோயின் முன்னேற்றம் மற்றும் பரவலின் முக்கிய அம்சங்களைக் அறிந்து ஒரு மாதிரி வடிவமைக்கப்பட்டவுடன், நோய் ஒழிப்பு அல்லது கட்டுப்பாட்டுக்கான வெவ்வேறு உத்திகளின் விளைவுகளை கணிக்க இதைப் பயன்படுத்தலாம்.
தொற்றுநோய் பற்றி அறிய எளிமையான மாதிரியானது SIR மாதிரி. இதில் மக்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், தொற்றுநோயாளிகள், மீண்டவர்கள் என மூன்று வகையினராக பிரிக்கப்படுகின்றனர். நோயின் பிடியிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் வரை நோய்த்தொற்றுகள் தொற்று காலத்தை கடந்து செல்கின்றன; அகற்றப்பட்ட நபர் மீண்டும் ஒருபோதும் ஆபத்திற்குள்ளாவதில்லை.
திட்டப்படியான மாதிரி :- பாதிப்பு ( தொற்று ( அகற்றப்பட்டுதல்
கருதுகோள்
இந்நோய் ஒரு தொற்றுநோய் அல்ல
குறிக்கோள்கள்
1. இந்நோய் சமூகத்தில் ஒரு தொற்றுநோயாக மாறுமா என்பதைக் கண்டறிய
2. சமுதாயத்தில் காலப்போக்கில் நோயின் பரவல் மற்றும் அதிகரிப்பின் தன்மையைப் அறிந்து முன்கணிப்புக்கான மாதிரியை உருவாக்குதல்.
வழிமுறை
பொருட்கள்
(I) நோய் ஏற்படுத்தும் உயிரினத்தின் வகை பற்றிய தரவுகளை சேகரிக்கவும். (ii) அப்பகுதியின் மக்கள்தொகை அளவு, (iii) நோய் ஏற்பட்ட தேதி, (iv) தொற்று, மீட்கப்படுதல் மற்றும் குறைந்தது 6-7 நாட்களுக்குள்ளான இறப்பு. (iv) உயிரினத்தின் அடைகாக்கும் காலம்
SIR மாதிரியின் விளக்கம்
கணித ரீதியாக- S + I + R = N எந்த நேரத்திலும் (t)
இங்கே, S, எளிதில் பாதிக்கப்படக்கூடியது; I, தொற்று; R, அகற்றப்பட்டது (மீண்டவர் + இறந்தவர்); N, மக்கள் தொகை; மற்றும் t, நேரம்
மற்ற கணித மாதிரியைப் போலவே, இந்த மாதிரியும் கீழே குறிப்பிட்டுள்ளபடி சில அனுமானங்களைக் கருதுகிறது-
(i) மாதிரியின் சிக்கலைத் தவிர்க்க புதிய பிறப்புகள் மற்றும் நடைபெற்ற இடப்பெயர்வு எதுவும் கருதப்பட மாட்டாது.
(ii) ஆய்வின் கீழ் உள்ள மக்கள் ஒரே மாதிரியாக கலக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், மக்களில் அனைத்து உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் ஒரே அளவிற்கு தொடர்பு கொள்கிறார்கள் (கலக்கிறார்கள்).
இப்போது, நமது மாதிரியை உருவாக்கத் தொடங்க, ஒவ்வொரு முறையும், மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி, மக்கள் தொகை N ஐ 3 (மூன்று) பிரிவுகளாகப் பிரிக்கிறோம்.
பாதிக்கப்பட்ட நபருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும்போது நோய் பரவுகிறது. பின்னர் அது தொற்றுநோயாக மாறும். கணித ரீதியாக, பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் இடையில் ஒரு வழக்கமான எண்ணிக்கையிலான சந்திப்புகளின் விளைவாக ஒரே மாதிரியான கலக்கும் நிலையில், (வெகுஜன நடவடிக்கைக் கொள்கையின்படி) SI விளைவை வழங்குகிகிறது.
இருப்பினும், ஆரோக்கியமான மற்றும் நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு இடையிலான எல்லா தொடர்புகளும் தொற்றுநோயை உண்டாக்குவதில்லை. எனவே, பரவல் குணகம் (transmission coefficient) எனப்படும் ஒரு காரணியைப் பயன்படுத்துவோம், அது á ஆல் குறிக்கப்படுகிறது. பாதிக்கப்படக்கூடிய மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு இடையேயான தொடர்பு புதிய தொற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளின் அளவீடு இது. ஏனெனில், காலப்போக்கில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர் எண்ணிக்கை St குறைகிறது. இதை பாதிக்கப்படக்கூடிய மற்றும் தொற்றுநோய்க்கு இடையிலான தொடர்பு என வேறு விதமாகவும் அழைக்கலாம். எனவே கணித ரீதியாக இதை பின்வரும் சமன்பாட்டின் மூலம் வெளிப்படுத்தலாம் -
St + 1 = St - ItSt It ………. (i)
காலப்போக்கில், புதிதாக பாதிக்கப்பட்டவர்களைச் சேர்ப்பதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்கள் வகுப்பு வளர்கிறது.
அதே நேரத்தில், தொற்றுக்குள்ளானவர்களில் சிலர் குணமடைவது அல்லது இறந்துவிடுவது உண்டு. அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகுப்பின் கீழ் கருதப்படக்கூடாது, மேலும் இரு குழுக்களும் அகற்றும் வகுப்பாக இருக்கும்.
அகற்றும் வீதம், ã ஆல் குறிப்பிடப்படுகிறது, தொற்றுநோயாக தொடர்வதை நிறுத்துகின்ற தொற்று வகுப்பின் பகுதியை அளவிடுகிறது, இதனால் அது t நேரத்தில் அகற்றப்பட்ட வகுப்பிற்கு நகரும். தெளிவாக, பாதிக்கப்பட்ட வகுப்பு குறையும் அதே அளவில் அகற்றப்பட்ட வகுப்பு அதிகரிக்கிறது. இது கீழே குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது:
It+1 = It + áSt It - ÒIt………. (ii)
R t+1 = Rt + ÒIt………. (iii)
இங்கே, S = எளிதில் பாதிக்கக்கூடியது; I = தொற்று; மற்றும் R = மீட்கப்பட்ட நபர்கள்; N = மக்கள் தொகை அளவு; á = பரவல் குணகம்; மற்றும் ã = அகற்றும் வீதம்; t என்பது கால இடைவெளி. வழக்கமாக ஒரு குறுகிய கால அளவு பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, மேலே உள்ள மூன்று இணைந்த வேறுபாடு சமன்பாடுகள் SIR மாதிரியை உருவாக்குகின்றன.
எவ்வாறு தொடர வேண்டும்
நாம் தொடர்ந்து செல்வதற்கு முன், கீழே உள்ளதைப்போல சில அடிப்படை தகவல்கள் தேவை,
காரணமான உயிரினம் எது (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை)?
உயிரினத்தின் தொற்று காலம் எவ்வளவு? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொற்றைத் தொடர்ந்து, அதன் ஓம்புயிரில் நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்த (காண்பிக்க) எவ்வளவு காலம் ஆகும்.
உயிரினத்தின் அதிக தாக்கு இலக்கு குழு எது? குறிப்பிட்ட வயது குழந்தைகளா? ஆணா அல்லது பெண்ணா? மற்றும் எந்த வயதினர்? (எ.கா. கோவிட் -19 பெரும்பாலும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது).
கணக்கிடுவதற்கான படிகள்
இந்த மூன்று சமன்பாடுகளைப் பார்த்தால், அறியப்படாத அளவுருக்கள், மாறிலிகள் á மற்றும் ã ஆகும். N இன் மதிப்பு நமக்குத் தெரியும். எனவே, இந்த இரண்டு அறியப்படாத மதிப்புகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
படி - 1. சமன்பாடு (i) ஐ கருத்தில் கொள்வாம்
St+1 = St - áSt It
அல்லது, St+1 - St = - áSt It [இச்சமன்பாடு S = - áSt + ãIt என வெளிப்படுத்தப்படுகிறது]
அல்லது, áSt It = - St+1 + St = St - St+1 (எதிர் எதிர் பக்கங்களை மாற்றுவதன் மூலம்)
எனவே, á = (St - St+1)/ (St It) ……. (iv)
St , St+1) மற்றும் It பற்றிய தரவு கிடைத்ததும், á இன் மதிப்பை சமன்பாட்டிலிருந்து (iv) கணிதத்தின் எளிய விதியைப் பயன்படுத்தி கணக்கிட முடியும்.
படி - 2. ஒரு குறிப்பிட்ட காலத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களைச் சேர்ப்பதன் மூலம் தொற்று வகுப்பு வளர்கிறது. அதே நேரத்தில், சிலர் குணமடைகின்றனர் அல்லது இறக்கின்றனர், எனவே நோயின் நீக்கப்பட்ட நிலைக்கு முன்னேருவர். அகற்றும் வீதம் (Ò) தொற்றுநோயை நிறுத்தும் தொற்று வகுப்பின் பகுதியை அளவிடுகிறது, இதனால் அகற்றப்பட்ட வகுப்பிற்கு நகரும். உண்மையில், பாதிக்கப்பட்ட நபர்களைக் கவனிப்பதன் மூலம் உண்மையான நோய் அளவு Ò ஒருவர் மதிப்பிடலாம், சராசரி நோய்த்தொற்று காலத்தை 1/ Ò.ஆக நிர்ணயிப்பதன் மூலமும் நிர்னயிக்கலாம்,
Ò.= 1 / (தொற்று காலம்) …… (v)
படி - 3. இப்போது அடிப்படை இனப்பெருக்க எண்ணைக் கணக்கிடுவதற்கான நேரம் (R0 ஆல் குறிக்கப்படுகிறது) நோயின் சிறப்பியல்புகளைக் குறிக்கிறது - இது ஒரு தொற்றுநோயா அல்லது இல்லையா.
எனவே, R0 = ( á/Ò)S0 (இங்கே, S0 = N)
R0 > 1 1 என்றால், நோய் தொற்றுநோயாக வெடிக்கும்; R0= 1,எனில், ஒரு நோயுற்ற நபர் ஒரு நோயாளியை மட்டுமே உருவாக்குகிறார், மேலும் தொற்றுநோய் ஏற்படாது; R0< 1 ,போது, நோய் மறைந்துவிடும்.
எனவே, அடிப்படை இனப்பெருக்கம் எண் R0 > 1 என்றால் மட்டுமே தொற்றுநோய் ஏற்படுகிறது.
குறிப்பு: பொது இனப்பெருக்கம் எண் (R0) பொது சுகாதார முடிவுகளில் ஒரு பங்கை வகிக்கிறது, ஏனெனில் ஒரு நோய் தடுப்பு திட்டம் R0 ஐ உறுதி செய்யும் போது மட்டுமே வெடிப்பதைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
பிரச்சினை
500 மக்கள் தொகையை கொண்ட ஒரு சிறிய சமுதாயத்தை கருத்தில் கொள்வோம், சில உயிரிகளால் ஏற்படும் தொற்று நோய்களால் சிலர் பாதிக்கப்படுகிறர்கள், தொற்று / அடைகாக்கும் காலம் 10 நாட்கள் மற்றும் முதல் நாளில் 1 நபர் பாதிக்கப்பட்டுள்ளார். கொடுக்கப்பட்ட தகவலுடன், சமன்பாட்டை (iv) பயன்படுத்தி கணக்கிடலாம் -
ã = (500 - 499.5) / (500x1) = 0.001
ã = 1/10) = 0.1 சமன்பாடு (v)ஐ பயன்படுத்துதல்
எனவே, R0 = (0.001 / 0.1) * 500 = 5, இது 1 ஐ விட அதிகமாக உள்ளது, எனவே நோய் ஒரு தொற்றுநோயாகும்.
á மற்றும் ã இன் மதிப்புகள் தெரிந்தவுடன், மூன்று சமன்பாடுகளையும் பயன்படுத்தி மூன்று வகுப்புகளுக்கும் பின்வரும் தரவை (அட்டவணை - 4.4.1) கணக்கிடலாம், பின்னர் நபர்களின் எண்ணிக்கையை வரைபட தாளில் புள்ளிகளிட்டு மதிப்புகள் திட்டமிட வேண்டும். சார்பு மாறி மற்றும் நேரம் y- அச்சில், சார்புறா மாறி x- அச்சில்.
நாள்
பாதிக்கப்படக்கூடியவர்
பாதிப்பு
குணமடைந்தவர்
நாள்
பாதிக்கப்படக்கூடியவர்
பாதிப்பு
குணமடைந்தவர்
1
500.00
1.00
0.00
21
135.59
244.91
120.50
2
499.50
1.40
0.10
22
102.38
253.62
144.99
3
498.80
1.96
0.24
23
76.42
254.23
170.36
4
497.82
2.74
0.44
24
56.99
248.23
195.78
5
496.46
3.83
0.71
25
42.84
237.55
220.60
6
494.56
5.35
1.09
26
32.67
223.98
244.36
7
491.91
7.46
1.63
27
25.35
208.90
266.76
8
488.24
10.38
2.37
28
20.05
193.30
287.65
9
483.17
14.42
3.41
29
16.18
177.85
306.98
10
476.21
19.94
4.85
30
13.30
162.94
324.76
11
466.71
27.44
6.85
31
11.13
148.81
341.05
12
436.88
37.50
9.59
32
9.48
135.59
357.35
13
436.88
50.78
13.34
33
8.19
123.31
370.91
14
414.70
67.88
18.42
34
7.18
111.99
383.24
15
386.54
89.25
25.21
35
6.38
101.60
394.44
16
352.05
114.82
34.13
36
5.73
92.09
404.60
17
311.63
143.76
45.62
37
5.20
83.40
414.76
18
266.83
174.18
59.99
38
4.77
75.50
423.97
19
220.35
203.24
77.41
39
4.41
68.31
431.52
20
175.57
227.70
97.73
40
4.11
61.78
438.35
அட்டவணை - 4.5.1. நாளுக்கு நாள் மூன்று வெவ்வேறு வகுப்புகளின் கணக்கிடப்பட்ட மதிப்புகள்
படம் -4.4.1. மூன்று வகுப்புகளில் நோயின் இயக்கவியலின் தன்மையைக் குறிக்கிறது
முடிவுரை 1. 4.4.1 என்ற புள்ளிவிவரத்திலிருந்து தோன்றுவது; இது முதல் தகவல் அறியப்பட்ட நாளிலிருந்து 23 வது நாளுக்குள் தொற்றுநோயாக இருக்கும், அதே நேரத்தில் சுமார் 250 நபர்கள் அல்லது 50% மக்கள் தொகை பாதிக்கப்படும் (கருப்பு புள்ளியிடப்பட்ட கோட்டால் காட்டப்படுகிறது). எனவே தொற்றுநோய் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு கிடைநிலையை நோக்கி வளைவைக் குறைக்க தலையீடு அவசியம்.
2. ஆனால் 12 வது நாளில் 40 நபர்களை பாதிக்கும் நிலையை அடைந்தவுடன் தடுப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது நல்லது, அதாவது 8 சதவிகித மக்கள் (சிவப்பு புள்ளியிடப்பட்ட கோட்டால் காட்டப்பட்டுள்ளது)
கூடுதல் திட்ட ஆலோசனைகள்
(அ) வடிவமைப்பு
1. உங்களைச் சுற்றியுள்ள இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி தண்ணீரை சுத்திகரிக்க வெவ்வேறு முறைகளை வடிவமைத்து அவற்றை ஒப்பிடுங்கள்.
2. நீர் கொண்டுசெல்லுதலில் வெவ்வேறு அமைப்புகளைப் ஆராய்ந்து, மூலத்திலிருந்து வீட்டிற்கு நீரைக் கொண்டு செல்ல மேம்பட்ட தயாரிப்பை வடிவமைக்கவும்.
3. தொழிலாளர்களின் ஹெட்லோடுகளின் சுமையை குறைக்க மேம்பட்ட தயாரிப்பை வடிவமைக்கவும்.
4. பூகம்பத்தைத் தடுக்கும் வீட்டிற்கு உங்கள் சொந்த கட்டமைப்பை வடிவமைக்கவும்.
5. எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிக்கு ஒரு வீட்டை வடிவமைக்கவும்.
6. காலநிலை நிலைமைகள் தொடர்பாக உங்கள் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய வீட்டுவசதிகளின் வடிவமைப்பைப் படியுங்கள்
7. உங்கள் சுற்றுப்புறங்களில் கிடைக்கும் இயற்கை கழிவுகளிலிருந்து பயன்பாட்டு அடிப்படையிலான தயாரிப்பை வடிவமைக்கவும். அந்த தயாரிப்பை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் கையாளப்படும் அறிவியல் கொள்கைகளை ஆராயுங்கள்.
8. உங்களைச் சுற்றியுள்ள வெவ்வேறு தயாரிப்புகளில் உள்ள ’தங்க விகிதம்’ கண்டுபிடித்து, அத்தங்க விகிதத்தைப் பயன்படுத்துவதற்குப் பின்னால் உள்ள அறிவியலை விளக்குங்கள்.
9. இலை, சிலந்தி வலை, பறவைக் கூடு, பூக்கள் போன்ற இயற்கையில் ஒரு சுவாரஸ்யமான உறுப்பைக் கண்டுபிடித்து, அதன் அறிவியல் கொள்கையையும் சாத்தியத்தையும் புரிந்துகொண்டு, அதிலிருந்து ஈர்க்கப்பட்ட ஒரு தயாரிப்பை வடிவமைக்கவும்.
10. உங்கள் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை அல்லது தேவையை கண்டறியவும். அந்த தேவையை நிவர்த்தி செய்யும் பங்கேற்பு வடிவமைப்பு கொள்கையின் அடிப்படையில் ஒரு தயாரிப்பை வடிவமைக்கவும்.
11. உங்கள் வட்டாரத்தில் உள்ள ஆற்றல் நுகர்வு மாதிரியை உருவாக்கி, வெவ்வேறு வீட்டு வடிவங்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில் ஒரு ஒப்பீடு செய்யுங்கள்.
(ஆ) திட்டமிடல்:
1. ஒரு மாநகரம் அல்லது நகரத்தில் வீட்டில் சமைத்த உணவை கொண்டு செல்லும் வேளையாட்களின் விநியோகச் சங்கிலியைப் படிக்கவும். அவர்களின் சவால்களைப் புரிந்து கொள்ளுங்கள், தீர்வை முன்மொழியுங்கள்.
2. வெள்ளம் அல்லது பூகம்பத்தின் பின்னணியில் உங்கள் பள்ளியில் உண்டாக உள்ள பாதிப்பை வரைபடமாக்குங்கள்.
3. தீ விபத்து ஏற்பட்டால் உங்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றும் திட்டத்தைத் தயாரிக்கவும்.
4. உயிர் கழிவு அமைப்பின் திறனை அதிகரிப்பதற்கான யோசனைகளை உருவாக்குங்கள்.
5. உங்கள் வட்டாரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை அமைப்பின் தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, சிறந்த சிறந்த யோசனைகளை முன்மொழியுங்கள்.
6. உங்கள் பகுதியில் பொதுப் போக்குவரத்து அமைப்புக்கான திட்டமிடல் தேவை தொடர்பாக வரைபடம். அமைப்பின் மேம்பாட்டிற்கான சாத்தியமான யோசனைகளை பரிந்துரைக்கவும்.
(இ) மாடலிங்:
1. உங்கள் வட்டாரத்தின் காலநிலை காரணிகள் குறித்து ஆய்வு செய்யுங்கள்
2. உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் (BMR) இடையே கணித உறவை நிறுவுதல்
3. மழைப்பொழிவுக்கும் நீரோடை ஓட்டத்திற்கும் இடையிலான உறவின் வரைபடம்
4. தங்க விகிதத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு தாவர இனங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வு
5. உங்கள் வட்டாரத்தின் 3 கி.மீ சுற்றளவில் மருத்துவமனைகள், அலுவலகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற அருகிலுள்ள வசதிகளை வரைபடம்
6. உங்கள் பகுதியில் உள்ள கிணறுகளைப் ஆய்வதன் மூலம் உங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை வரைபடம் செய்யுங்கள்
7. உங்கள் பகுதியில் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட வடிகால் வசதிகளை வரைபடமாக்கி, அவற்றின் நன்மை தீமைகளைப் புரிந்துகொள்வதும் வகைப்படுத்துவதும்.
8. கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் மாற்றங்களை வரைபடமாக வரைக.
9. உள்ள நிலத்தன்மை மற்றும் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது உங்கள் பகுதியின் பச்சை பரப்பை வரைபடமாக்குங்கள்.
10. வரைபடத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தைப் பயன்படுத்துதல் மற்றும் விவசாய தன்னிறைவு மற்றும் உணவுப் பாதுகாப்பை மதிப்பீடு செய்தல்.
11. உங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள விலங்குகளின் வாழ்விடங்களில் காணப்பட்டும் மாற்றங்களை வடிவமைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக