இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், நவம்பர் 17, 2020

அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு பற்றிய குறிப்பு..: செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்...

 

மையப் பொருள்: நிலைப்புரு வாழ்க்கைக்கான அறிவியல்.

பேரா.சோ.மோகனா, மேனாள் மாநில தலைவர், NCSC 2020

அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு பற்றிய குறிப்பு..:

செய்யவேண்டியவையும்... செய்யக்கூடாதவையும்...

 

ü  ஆய்வு செய்யும் குழந்தைகள் 10 -17 வயதினராய் இருக்க வேண்டும்.

ü  அவர்களின் வயது டிசம்பர் 31 ம் நாள் என்ன வயதோ, அதுவே அவர்களின் ஆய்வுக் குழுவின் வயதாகும்,

ü  10 - 13+ வயதினர் இளநிலை/கீழ் நிலை என்றும், 14 - 17 வயதினர், முது நிலை/ மேல் நிலை என்று சொல்லப் படுகிறது.

ü  கீழ்நிலை/இளநிலை மாணவர்கள் (10  to 13+ ), 2 ,500 வார்த்தைகளும், மேல்நிலை / முதுநிலை மாணவர்கள் (14  to 17) 3500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும்.

ü  மேலும், ஒரு குழுவில் அதிக பட்ச வயது என்னவோ, அதுதான் அந்த குழுவின் வயதாகும்.

ü  குழந்தைகள்,பள்ளியில் படிக்கலாம். பள்ளியில் படிக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யலாம்.வயது மட்டுமே ஆய்வுக்கான நிர்ணயம். முறைசாரப் பள்ளி,/இரவுப் பள்ளி/சிறார் பள்ளி/துளிர் இல்லத்திலிருந்தும் கூட ஆய்வுகள் செய்யலாம்.

ü  ஆய்வு பதிவு செய்த உடனேயே, சுமார் ஒரு பக்கத்தில், ஆய்வு பற்றி எழுதி மாநில மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

ü  குழந்தைகள், கட்டாயமாய் 2 பேர் கொண்ட குழுவாகத்தான் செய்ய வேண்டும்.

ü  தனி ஒருவராக ஆய்வு அறிக்கை தயார் செய்ய கூடாது.

ü  ஆய்வறிக்கைக்கு உதவிட, ஒரு வழிகாட்டி ஆசிரியர் வேண்டும்.

ü  அவர் பள்ளி ஆசிரியராகவோ, துளிர் இல்ல பொறுப்பாளராகவோ,அல்லது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்

ü  பொதுவாக சோதனை முறையில் ஆய்வு செய்தால், அதனை சரியாக முறைப்படி செய்ய வேண்டும். . ,

ü  .ஆய்வின் கருத்து புதிதான, எளிதான, செயல் முறையுடன் கூடியதாய், கூட்டு செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.

ü  ஆய்வு செய்யும் விஷயங்கள், உள்ளூர் பிரச்சினைகளை மையமாக வைத்து, தகவல்கள், கணக்கெடுப்பு ,சோதனைகள் போன்றவற்றை தங்களின் மாவட்டத்துக்குள்ளேயே தெரிவு செய்து, ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

ü  மாவட்ட எல்லை தாண்டுதல் கூடாது.

ü  தலைப்பே தன்னிலை விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.

ü  புள்ளிவிபரங்கள் போதுமானதாக இருக்க வேண்டும்.

ü  புள்ளிவிபரம்/கணக்கெடுப்பு, நேர்காணலுக்கான வினாத்தாள் தயாரிக்கும்போது, அதில் குறைந்த பட்சம் 20 வினாக்கள் இருக்க வேண்டும்.

ü  அதே போல் ஆய்வுக்காக நேர்காணல் செய்யப்படும் நபர்கள், குறைந்தது 50 நபராவது இருக்க வேண்டும்

ü  கட்டாயமாக , மனிதனின் மேலோ, மனிதன் உண்ணும், குடிக்கும் எந்த பொருளிலும் ஆய்வு செய்யக் கூடாது.

ü  மேலும், மருத்துவம், மருந்துகள் , வியாதி தொடர்பாகவும்.ஆய்வு செய்யக் கூடாது.

ü  ஆய்வறிக்கையை இணையதளத்தில் இருந்து இறக்கி போடக்கூடாது.

ü  ஆய்வறிக்கையை கையால் எழுதலாம்; தட்டச்சும் செய்யலாம்.

ü  ஆய்வறிக்கையில் அதிகபட்சமாக 4 - நிழற்படங்கள் / அட்டை/விளம்பரப் படம் மட்டுமே இருக்க வேண்டும்.

ü  அதிகபட்சமாக உள்ள நிழற்படங்கள் / அட்டைக்கு எவ்வித மதிப்பீடும் கிடையாது.

ü  கட்டாயமாக VCD அனுமதிக்கப்பட மாட்டாது.

ü  ஆய்வறிக்கைக்கான செலவை ரூ.250க்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ü  ஆய்வறிக்கையின் போது கட்டாயமாக தினசரி LOG book எழுத வேண்டும்.

( தினசரி..நாட்குறிப்பு போலத்தான் அது.)

ü  மாநாட்டின் போது, ஆய்வின் சுருக்கம், ஆங்கிலத்தில் 250 வார்த்தைகள் தட்டச்சு செய்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கொடுக்க வேண்டும்.

ü  மாவட்ட மாநாட்டின் பொது கட்டாய மாக log book சமர்ப்பிக்க வேண்டும். ,

ü  LOG book இல்லாத குழந்தைகள் மாநாட்டில் பங்கெடுக்க முடியாது.

ü  ஒவ்வொரு மாநாட்டுப் பிறகும்,குழந்தைகள், ஒரு 5 பக்கம் ,மாநாட்டிற்குப்பின் என்ன செய்தார்கள் என்பது பற்றிய Follow -up Action பற்றிய தகவல் கட்டாயமாய் இணைக்க வேண்டும். இதனை தனியாக மதிப்பீடு செய்வார்கள்,

ü  குழந்தை விஞ்ஞானிகள் மாநாட்டிற்குப்பின் சமூகத்திடம் எவ்வாறு சென்று செயல் படப் போகிறார்கள் என்பதனையும், மாநாட்டில் அவசியம் சொல்லவேண்டும்.

ü  குழந்தைவிஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை, நேர்காணலின் போது 8  (2 நிமிடம்-ஆய்வரிக்கை குறித்த சந்தேகங்கள்-நாடுவர்/பார்வையாளர்) நிமிடத்தில் சொல்லி முடிக்க வேண்டும்.

ü  வழிகாட்டி ஆசிரியர்கள் குழந்தை விஞ்ஞானிகளை ஆய்வறிக்கை சொல்லும்போது, நாங்கள் செய்தோம், கண்ணன் குழி தோண்டினான், நான் மண் போட்டேன், கலா விதைப் போட்டு தினம் நீர் ஊற்றினாள் என குழுவின் அனைத்து குழந்தைகளையும் இணைத்துப் பேச பழக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு கூட்டு செயல்பாடு என்பதும், கூட்டு செயல்பாடு , நடவடிக்கைக்கு தனியான மதிப்பீடு உண்டு என்பதை, குழந்தை விஞ்ஞானிகளும், வழிகாட்டி ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

ü  மேலும் விபரங்களுக்கு :

ü   

ü  P.ராஜாங்கம், 79042 22932 / 94426 67952   

ü  மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு- 2020,  சேலம்.

ü                                                                                                             

ü  Dr. D.திருநாவுக்கரசு - 9751456001  /  97893 21056

ü  மாநில நிபுணர் குழு,   மாநில இணை முதன்மை ஆய்வாளர்,

ü   

ü  திருமிகு P. வெங்கடேசன் -  94432 41690 - மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்,

ü   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக