இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

செவ்வாய், நவம்பர் 17, 2020

தொற்று நோய்கள் - ஒரு குறிப்பு கொரோனா-19 சிறப்பு பார்வையுடன் (சுகாதார அறிவியலில் ஒர் விழிப்புணர்வு ஆண்டு 2020-2021) A Note on Infectious Diseases with Special Reference to COVID 19 (Year of Awareness on Science and Health - YASH 2020-2021)

தொற்று நோய்கள் - ஒரு குறிப்பு
கொரோனா-19 சிறப்பு பார்வையுடன்
சுகாதார அறிவியலில் ஒர் விழிப்புணர்வு ஆண்டு 2020-2021 (யாஸ்)
தேசிய அறிவியல் தொழில் நுட்ப தகவல் தொடர்புத்துறை (NCSTC) சுகாதார விழிப்புணர்வுக்காக ஒரு நிகழ்ச்சியை இந்த விழிப்புணர்வு ஆண்டில் அறிமுகப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கொரோனா (கோவிட்19) வைரஸ் மிக முக்கிய இடம் பெறுகிறது.
சுகாதார அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்கள்:-
மக்கள் தொடர்பு சாதனங்களின் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளும் மக்களைச் சென்றடையச் செய்து பாதிப்பு அளவை அனைத்து தரப்பிலும் குறைப்பது.
மக்களிடையே குறைந்தபட்ச அறிவியல் அறிவை வளர்த்து உடல்நலப் பாதுகாப்பை உறுதிசெய்து, தனிமனித சுகாதாரம், உடல்நலம், சமூக இடைவெளி, விரும்பதக்க கூட்டுமுயற்சி ஆகியவறை மேம்படுத்துதல்.
அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்களைப் பயன்படுத்தி தொற்று நோய் பற்றிய மக்களின் அச்சத்தைப் போக்கி மன தைரியத்தை வளர்த்திட படங்களுடன் கூடிய அறிவியல் பூர்வமான தகவல்களை வழங்கி தேவையான புரிதலை ஏற்படுத்துதல்.
மக்களின் தயார் நிலையையும், இது போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள உள்ள நிலைப்பாட்டினையும் மதிப்பீடு செய்தல்.
நிரந்தரமான சுகாதார வாழ்க்கை முறைகளுக்கு அறிவியல் பண்பாட்டை வளர்ப்பதற்கு தேவையான அறிவுரைகளை மக்கள் சமுதாயம் பின்பற்றச் செய்ய அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல்.

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடிய அழையா விருந்தினராக, மிகக்குறைந்த நுண்ணிய அளவைக் கொண்ட பொருள் ஒன்று உலகின் நுழைவு வாயிலில், உலகின் உள்ளே நுழைய முதல் நாள் இரவு வரை காத்துக் கிடந்தது. அதுதான் 2013-ல் உருவான சார்ஸ் என்னும் கொரோனா வைரசின் சகோதரன்/சகோதரியான கோவிட்-19 நுண்கிருமி (வைரஸ்). அது நம் உடலில் உள்ளே நுழைவதற்கு முன்பு அமல்படுத்தப்பட்ட பல மாத கால ஊரடங்கானது, கண்ணுக்கு தெரியாது உட்புகுந்த சார்ஸ் வைரஸை விரட்டியடிக்க போதுமானதல்ல என்பதை காலம் தற்போது நிரூபித்துள்ளது. நம் சுகாதாரம், அதன் முறைகள்/ திட்டங்கள் மற்ற அவசர கால தேவைக்கான ஆயத்த ஏற்பாடுகள் என அனைத்தும் சீர் தூக்கிப் பார்க்கப்பட்டது. அனுமதியின்றி உள்ளே நுழைந்த திருடனான கொரோனா வைரஸ் யார் என முழுமையாகக் கண்டுபிடிக்க மற்றும் எதிர்கொள்ள எந்த அறிகுறியும் தெரியவில்லை. அது எப்படி இருக்கும் என்று தெரியாமல் கடந்த நூற்றாண்டு முழுவதும் பல இன்னல்களை, இடர்பாடுகளை, பேரிடர்களை, அழிவுகளை நாம் எதிர்கொண்டுள்ளோம். இது ஏற்படுத்திய துயரம் ஏறத்தாழ கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தடமாகப் பதிந்திருக்கிறது. இதன் முக்கியத்துவமானது என்னவெனில், நாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து எவ்வளவு கற்றுக்கொண்டுள்ளோம் என்பதுதான். இதிலிருந்து நாம் புத்தறிவினைப் பெற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
    மத்திய அரசின் தேசிய தொழில் நுட்பக்குழுமத்தின் அறிவியல் தொழில் நுட்பத்துறை…….யாஷ் விழிப்புணர்வு திட்டத்தின் மூலமாக ஒரு பெரும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
    கீழ் கண்ட வழிகாட்டுதல்கள் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள நல்ல புரிதலை நமக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்று நோய்கள் உருவாகுதல் மற்றும் மீண்டும் உருவாகுதலில் மக்கள் உடல் நலத்தின் முக்கியத்துவம்.
”கடந்த காலத்தைப் பற்றிய நினைவு இல்லாதவர்கள் இருண்ட காலத்தை மீண்டும் வரவேற்கின்றனர்” என ஜார்ஜ் சந்தயானா கூறுகிறார். நாம் முந்தைய காலங்களில் நுண்கிரிமிகளுக்கு எதிரான போரில் வெற்றி கண்டுள்ளோம் என்கிற எண்ணம் நம்மை இக்கட்டான நிலைக்கு விட்டுச் சென்றுள்ளது.
    21ம் நூற்றாண்டில் பொது சுகாதாரப் பிரச்சினைகளில், பெருந்தொற்று நோய் பரவல் என்பது மேலோங்கி நிற்கிறது. உலக அளவில் இறப்பு விகிதத்தில் நான்கில் ஒரு மடங்கு நுண்கிரிமிகளால் ஏற்படுகிறது. வளரும் நாடுகளில் இந்த விகிதம் குறிப்பிடத் தக்க அளவிற்கு அதிகமாக உள்ளது. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்துடன் தடுப்பு மருந்துகளைக் கொண்டு தொற்று நோயை ஒழிப்பது என்பது அந்த அளவிற்கு முன்னேரவில்லை; மற்றும் பாதுகாப்பு உணர்வு இல்லை என்ற நம்பிக்கையும் இதுபோன்ற நோய் பரப்பும் நுண்கிரிமிகளை அதிக அளவில் பரவச் செய்துள்ளது. இதுபோன்ற நோய்களைப் பரப்பும் அவ்வப்போது தோன்றும் மீள் தோன்றும் நுண்கிரிமிகளான விலங்குகள் மூலம் பரவும் நுண்ணுயிர் கிரிமிகள் நீர் மற்றும் உணவு மூலம் பரவும். பொதுவாக நுண்ணுயிர் கிரிமிகள் நோய் எதிர்ப்பு அளிக்கக்கூடிய உயிரிகளை பாதிப்படையச் செய்வது இந்திய நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
புதிய நுண்ணுயிர் கிரிமிகள் மற்றும் இதற்கு முன் பாதித்த யாதென்று தெரியாத நுண்கிரிமிகளால் பெரிய அளவில் பரவிவரும் தொற்று நோய்கள் உள் நாட்டிலும் உலக அளவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
    கடந்த 30 ஆண்டுகளில் தோன்றிய 30க்கும் மேற்பட்ட புதுவகையான நோய்கள் கோடிக் கணக்கான மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
    தொற்று நோய்களைப் பரப்புவதற்கான காரணிகளாக இருக்கக் கூடியவை பெரும்பாலும் வைரஸ்களாக (ரோட்டா, எபோலா, ஹாண்டான், எச்.ஐ.வி. வைரஸ், ஹெபாடிடிஸ் சி, இன்ஃப்ளூவென்ஸா எ, எச்5என்1, எச்1என்1, கொரோனா, நிபா) இருந்த போதிலும், பாக்டீரியா நுன்னுயிர் கிரிமிகளும் மாறுபட்ட உருவங்களில் தோன்றும் நோய் கிரிமிகளும் பேரபாயத்தை எற்பட்டுத்துகின்றன. இந்த நோய்கள் மனிதனிலிருந்து மனிதனுக்கும், பூச்சிகளாலும், விலங்குகளாலும், உணவாலும், மாசுபட்ட நீராலும் மிகப்பெரிய அளவிற்கு பரவுகின்றன. பலவகைகளிலும் இடம் விட்டு இடம் பரவுகின்றன.
படம்.174 .. பரிமாற்றம்
சுகாதாரத்தில் ஒரு இலக்கை அடைய நாம் ஒன்றை ஒன்று சார்ந்துள்ள மேற்கண்ட காரணிகளை, தகவல்களை புரிந்து கொள்ளல் வேண்டும். (ஆ.ம். சமூக உடல் நல வரலாறு…..)
    மறைந்தபின் மீண்டும் பரவும் தொற்று நோய்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. இருப்பினும் இவைகள் பற்றி அதிகமாக பொருட்படுத்தப் படுவதில்லை.
    மீண்டும் பரவும் தொற்று நோய்கள் பேரழிவை ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம்.  இதுபோன்ற தொற்று நோய்களுக்கான உதாரணங்களில் எழும்புறுக்கி நோய், காலரா, சிக்கன் குனியா, டெங்கு, மலேரியா, நிபா வைரஸ் போன்றவைகள் அடங்கும்.
நோய்களை மீண்டும் பரப்ப காரணமான காரணிகள்:
    தொற்று நோய்களை மீண்டும் பரப்புவதற்கு காரணமான காரணிகள் எவையெனில் திட்டமிடப்படாத அல்லது சரியாக திட்டமிடப்படாத நகர அமைப்புக்கள், மக்கள் தொகை நெருக்கம், மக்கள் தொகை அதிகரிப்பு, மோசமான சுகாதார வசதிகள், பற்றாக்குறையான பொதுச் சுகாதார வசதி, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, தொற்று வியாதி பரவுமிடங்களில் கூடி அவைகளுக்கு ஆளாகுதல், இயற்கையிலேயே வடிகாலின்றி நோய் பரப்பும் அபாயம், உலகளாவிய விரைவு பயணங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதலில் தளர்வு பழக்கங்கள், காடுகளை அழித்தல், நோய்களை பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த தவறுதல், தண்ணீர் தேங்கும் அபாயம் மற்றும் சுகாதார முறையில் தோல்வி, மரபியல் பண்பு மாற்றங்கள், மனித நடத்தை மற்றும் வாழ்க்கை முறையில் உள்ள அபாயங்கள்.
    நல்ல சுகாதாரத்தை பேணுவதற்கு சுகாதாரம் குறித்த நல்ல புரிதல் அவசியமாகிறது. இந்த கருத்து பண்பாடு சார்ந்த சிறந்த கருத்தாகும். இருப்பினும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு ஏற்ப இவைகள் மாறுபடும். மக்கள் உள்ளப் பூர்வமாக தாமாகவே சுகாதார முறைகளை நவீன அல்லது உள்ளூர் வசதிகளுக்கு ஏற்ப தெரிவு செய்து கொள்கின்றனர். நவீன வாழ்க்கை முறைக்கும், தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள நல்ல சுகாதார முறைகளுக்கும் இடையே வேறுபாடுகளை கலைந்து மக்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்கள் எங்கு சென்றால் அவர்களது உடல் ரீதியான தொடர் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்பதையும், அவர்களின் குடும்பங்களில் எங்கு சென்றால் வசதி கிடைக்கும் என்பதையும் பற்றிய அறிவை சரியாகவே பெற்றுள்ளனர். மேற்கண்ட காரணிகளும், சவால்களும் கொரோனா பேரிடர் காலத்தில் கிடைத்த அனுபவங்களே ஆகும்.

கொரோனா ஒரு சிறு குறிப்பு:
      கொரோனா வைரஸால் பரப்பப்படும் நுண்கிரிமித் தொற்று இன்று மனித சமுதாயத்தையே மிகப் பெரிய உடல் உபாய தொந்தரவு மற்றும் பேரழிவுக்கு ஆளாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்நோய் பாதிக்கப்பட்ட மனிதன் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் சிறு திவலைகளிலிருந்தும், மூக்கிலிருந்து வெளிவரும் சளியிலிருந்தும் பிறருக்கு பரவுகிறது.
    கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதை குணப்படுத்த உரிய மருத்துவமும் இல்லை, தடுப்பு மருந்தும் இல்லை என்ற நிலையில் புத்திசாலித்தனம் பரவலைத் தடுப்பதும், இதன் பரவும் வேகத்தைக் குறைப்பதுமேயாகும். இதற்கு இருமும்போதும், தும்மும்போதும் நாம் சில நல்ல சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். உதாரணமாக இருமும்போதும் தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை துணிகளால் மூடிக்கொள்ளுதல், கைகளை சோப்பால்/ தண்ணீரால் அல்லது ஆல்கஹால் கலந்த சுகாதார சனிடைசர்களால் கைகளை அடிக்கடி கழுவுதல், முகத்தை கைகளால் தொடுவதை தவிர்த்தல், நோயாளிகள் வீட்டிலேயே மருத்துவர்களின் ஆலோசணைப்படி தனிமைப் படுத்திக் கொள்ளுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியன இத்தொற்று நோய் வேகமாக பரவுவதைத் தடுக்கும்.
    இந்நோய் பலருக்கு சுவசக் குழலில் சிறிதளவு அல்லது ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தி உடல் நலக் குறைவுக்கு வித்திட்டு சிறப்பு மருத்துவம் தேவையின்றி தானாகவே குணமடைகின்றனர். இவ்வாறிருக்க மூத்த குடிமக்கள், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், தொடர் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், புற்று நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்கள் உடல் உபாதைக்கு உள்ளாகி இறப்பைத் தழுவுபவர்களாகலாம்/ இறக்கலாம் என்கிற நிலை உள்ளது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக காலதாமதமின்றி மருத்துவரை அனுக வேண்டும். எந்த சூழலிலும் யாரும் சுய மருத்துவத்தை பின்பற்றக் கூடாது.    
படம் 176. கொரோனா வைரஸ் மற்றும் அதன் குறுக்கு வெட்டுத் தோற்றம்……
கொட்டை எழுத்துக்களில் தரப்பட்டுள்ள வார்த்தைகள் கீழ்கண்டவாறு விளக்கப்படுகின்றன.

பேரிடர் நோய்த் தொற்றுப் பரவல்:
    நோய்த் தொற்று நிகழ்வானது பல்வேறு விதமாக விவரிக்கப்படுகிறது. அதன் தன்மை, வீரியம், னீடிக்கும் கால அளவு, ஏற்படும் நிகழ்வுகள், வந்த விதம்/ பாதை போன்ற பல்வேறு நிலைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இந் நிலைகளை ஒவ்வொன்றாக நாம் அறிந்து கொள்வோம்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படாத, ஒரே மாதிரி அல்லாத நோயினை அங்கொன்றும், இங்கொன்றும் என பரவும் நோய் எனக் கூறுகிறோம்.
தொற்று ஏற்படுவதற்கான காரணம் தெரியாமல் இருந்த போதிலும், அதிக அளவில் மக்கள் பாதிக்கப் படும்பொழுது, உதாரணமாக ரசாயன உலை வெடித்ததற்கு பின் ஏற்பட்ட புற்று நோயைப்போல, குறிப்பிட்ட பாதிப்பு எனக் கூறுகிறோம்.
    ஒரு நோய் தொற்றி ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் நிலையாக ஏற்பட்டால் அத்தகைய பாதிப்பிற்கு மண்டலத் தொற்று (எண்டமிக்) என்று பெயர். எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இவ்வகையில் கணக்கிடலாம். இதற்கு மலேரியா, மணல்வாரி அம்மை போன்றவைகள் உதாரணமாகும்.
    இருப்பினும் நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் இருந்தால், நீண்ட நாள் அதன் தாக்கம் இருந்தால் அதை ஹைப்பர் எண்டமிக் அதாவது அதிக பாதிப்பை ஏற்படுத்திய தொற்று என அழைக்கப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் ஏற்பட்ட எச்.ஐ.வி வைரஸ் பாதிப்பு. அங்கு பெரியோர்களில் ஐந்து பேருக்கு ஒருவர் வீதம் இந்த பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இதே எச்.ஐ.வி அமெரிக்காவில் கணக்கில் கொள்ளத்தக்க (எண்டமிக்) மிகச் சிரிய அளவில் உள்ளது. அங்கு எச்.ஐ.வியினால் பாதிப்பு 300ல் ஒருவருக்கு என்ற விகிதத்திலேயே உள்ளது.
    எண்டமிக் என்பது ஒரே நேரத்தில் குறிப்பிட்டப் பகுதியில் எதிர்பாராத அளவிற்கு குறிப்பிட்ட நோயால் அதிக அளவு எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படுவதாகும்.இது இரண்டு வார காலத்திற்குள்ளோ அல்லது அதற்கு குறைவாகவோ விரைந்து பரவுவதாகும். இது இயற்கை பேரிடர்களான புயல், வெள்ளம், பூகம்பம், வறட்சி பாதிப்பிற்கு பின் ஏற்படும் விளைவுகள் ஆகும். இந்த இயற்கை பேரிடர்களுக்குப் பிறகு ஏற்படும் வைரஸ் நோய்களான எபோலா, லைகா, சார்ஸ், பறவைக் காய்ச்சல், டெங்கு போன்றவைகள் எப்பிடமிக் நோய் பாதிப்புகளுக்கு உதாரணங்களாகும். விவரிக்கப் படும்போது எப்பிடமிக் அவுட் ப்ரேக் இரண்டும் ஒன்றுபோல் இருந்தாலும்கூட அவுட்பிரேக் என்னும் திடீர் நோய் உருவாகுதல்/பரவுதல் ஒரு குறிப்பிட்ட புவிசார் பகுதிக்குள் அடங்கும் ஒன்றாகும். தொடக்கத்தில் ஒரு பகுதியை திடீர் நோய் தொற்று பகுதியாக அறிவிக்க அங்கே குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருத்தல் வேண்டும். அப்ப்பகுதி மிகக் குறைந்த மக்கள் தொகையை கொண்டதாக இருக்கலாம். அல்லது அப்பகுதி மக்கள் பல நாடுகளில் பரந்து விரிந்து வசிக்கலாம். இப்படி உருவாகும் நோய்கள் (அவுட் பிரேக்) ஒரு சில நாட்கள் முதல் பல ஆண்டுகள் வரை நீடிக்கும். இது மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்குப் பரவும் மற்றும் சுற்றுச் சூழலில் இருந்தும் மற்ற மனிதர்களுக்குப் பரவும்.
படம் 178
எப்பிடமிக் பரவல் எனப்படுவது ஒரு நாட்டில் ஒரு சில இடங்களில் உருவாகும் தொற்று நோய் பல நாடுகளுக்குப் பரவி மிகப் பெரிய நோய்ப் பரவலை ஏற்படுத்தி, மிக அதிக எண்ணிக்கையில் பாதிப்பை எற்படுத்தி பெருந்தொற்று “பாண்டமிக்” என்ற நிலைக்கு அதன் பாதிப்பு மாறுவதாகும். இதற்கு உதாரனங்களாக இதற்கு முந்தைய ஆண்டுகளில் பரவிய காலரா, பெரியம்மை, பிளேக் நோய், இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் மற்றும் அன்மையில் பரவிய எச்.ஐ.வி/எய்ட்ஸ், எச்1என்1, எச்5என்1, கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்கள் ஆகும்.

தொற்று நோய்:
    சாதாரன உடல் செயல்பாட்டை சீர்குலைக்கும் எந்த ஒரு நிலைப்பாடும் தொற்று நோயின் அறிகுறியாகும். குறிப்பாக நோயை ஏற்படுத்தும் நுண்கிரிமிகளான, பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள் ஆகியவற்றால் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் அல்லது மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கும் பரவினால் அதற்கு தொற்று நோய் என்று பெயர்.

கொரோனா (கோவிட் 19):
2020 ம் ஆண்டு பிப்ரவரி 11ம் நாள் ஐ.சி.டி.வி என்னும் நுண்ணுயிர் வைரஸ் கிரிமிகளை வகைப் படுத்தும் உலக அமைப்பும், உலக சுகாதார நிறுவனமும் இந்த புதிதாகத் தோன்றிய வைரஸுக்கு நாவல் கொரோனா (கோவிட் 19) எனப் பெயரிட்டு அறிவித்தது. கோவிட் என்பது கொரோனா வைரஸின் சுருக்கமாகும். 19 என்பது 20019ம் ஆண்டின் சுருக்கமாகும். கோவிட் 19 (கொரோனா) என்பது சுவாச மண்டலத்தைத் தாக்கும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் தனியான ஆர்.என்.ஏ வை சூழ்ந்து வளர்ந்த; முதுகெலும்புள்ள குறிப்பாக பாலூட்டி வகை உயிரினங்களில் நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு வகை வைரஸ் ஆகும். லத்தீன் மொழியில் கொரோனா என்பதன் பொருள் க்ரௌன் என்னும் மகுடத்தையோ அல்லது ரீத் என்னும் மலர் வளையத்தையோ குறிக்கும். இதை நுண்ணோக்கியில் பார்க்கும்போது ஒரு மகுடத்தைப் போன்று தோற்றமளிக்கின்றன. அதன் வெளிப்புறத்தில் பந்து போன்ற தோற்றத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் பல பல்புகளைப் போன்ற அமைப்பு காணப்படுகிறது. அதனால்தான் அது பார்ப்பவர்களுக்கு க்ரௌன் அதாவது கிரீடம் போன்று தோற்றமளிக்கிறது. லத்தீன் மொழியில் வைரஸ் என்ற சொல்லுக்கு விஷம் என்று பொருள். உருவத்தில் பாக்ட்டீரியாவைவிடச் சிறியதான வைரஸ் உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருள்களுக்கு இடைபட்டதாக உள்ளது. அதாவது இது உயிருள்ளதும் அல்ல, உயிரற்றதும் அல்ல. இரண்டிற்கும் இடைப் பட்டது என கருதப்படுகிறது. இது நோய் பரப்பும் ஏஜென்ட் (முகவர்) ஆக உள்ளது. இவைகள் தனித்து நிலைக்காது. உண்மையிலேயே உயிர் செல்களில்தான் இருக்கும். மனிதனில் சார்ஸ் வைரஸ், மெர்ஸ் வைரசைப் போன்று கொரோனா வைரஸும் சுவாச மண்டலத்தில் சாதாரண சளித் தொல்லை கொடுத்து, அப்படிப்பட்ட சாதாரண சளியால் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி அவன் இறப்பதற்கு வித்திடுகிறது/காரணமாகிறது. கோவிட் 19 அதாவது கொரோனா வைரஸின் பாதிப்பு தன்மை சற்று மாறுபட்டது. மனிதனில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் இது கோழியில் மேல் சுவாச மண்டலத்தை பாதிக்கிறது. பசுவிலும், பன்றியிலும் இது வயிற்றுப் போக்கை ஏற்படுத்துகிறது. மனிதனை பாதிக்கும் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை தடுப்பு மருந்தும் இல்லை. சிகிச்சை முறையும் இல்லை.
வைரஸுக்கும், பாக்டீரியாவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
குணங்கள்/பண்புகள்
வைரஸ்
பாக்டீரியா

உருவம்
சிறியது (20-400 நா.மீ)
பெரியது (1000 நா.மீ)

செல்சுவர்
செல் சுவர் இல்லை. மாறாக புரதத்தாலான மேல்போர்வை காணப்படுகிறது.
சர்க்கரை மற்றும் அமினோ அமிலம் கொண்ட ஒரு பாலிமரைக் கொண்டு அமைந்துள்ளது

ரைபோசோம்கள்
உள்ளது
இல்லை

செல்களின் எண்ணிக்கை
காணப்படுவதில்லை
ஒரு செல் (யுனிசெல்லுலார்)

உயிருள்ள/அற்ற
இரண்டிற்கும் இடைப்பட்டது
உயிருள்ளவை

டி.என்.ஏ/ஆர்.என்.ஏ
டி.என்.ஏ/ஆர்.என்.ஏ புரோட்டின் போர்வையால் ஆனது
சைட்டோபிளாசத்தில் டி.என்.ஏ/ஆர்.என்.ஏ மிதக்கிறது

தொற்று
திட்டமிட்டு செயல்படுகிறது
நிலைகளுக்கு ஏற்ப, உள்ளுக்குள்ளேயே

மீள் உற்பத்தி
மீள் உற்பத்திக்கு உயிர் செல் தேவை
தானாகவே மீள் உற்பத்தியாகும்

இனப்பெருக்கம்
விருந்தினர்(புது) செல்லைத் தாக்கி வைரல் டி.என்.ஏ/ ஆர்.என்.ஏ வை உருவாக்கியபின் விருந்தினர் செல்லை அழித்து புதுசெல்லை உருவாக்கும்
இரண்டும் கலந்து உருவாக்கும்

நோய் நீடிக்கும் கால அளவு
2 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை
10 நாட்களுக்கு மேல் நீடிக்கும்

காய்ச்சல்
காய்ச்சலை வைரஸ் தொற்று ஏற்படுத்தாமல் இருக்கலாம்
வெளிப்படையான காய்ச்சலை ஏற்படுத்தும்

நுண்ணோக்கியால் கண்ணுக்கு புலப்படுபவை
எலெக்ட்ரான் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க முடியும்
சாதாரன நுண்ணோக்கியால் காண முடியும்

பயன்கள்/நன்மைகள்
வைரஸால் நன்மைகள் இல்லை. இருப்பினும் ஒரு குறிப்பிட்ட வைரஸ் மூளையில் ஏற்படும் கட்டியை கரைக்கவல்லது. மரபியல் பொறியியல் துறையில் வைரஸ் பயன்படுகிறது
சில பாக்டீரியாக்கள் பயனுள்ளவை (உ.ம். கட்ஃபுளோரா)

சிகிச்சை
நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு வயப்படாது/கட்டுப்படாது
நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படும்

உதாரணங்கள்
எச்.ஐ.வி/ஹெபாடிடிஸ் வைரஸ்/ ரைனோ வைரஸ்/கொரோனா வைரஸ்
ஸ்டஃபைலோ காக்கஸ் அரேயஸ்/ விப்ரியோ காலரா

நோய்கலள்/ நோய் தொற்று
எய்ட்ஸ், சாதாரண சளி,இன்ஃப்ளூயென்ஸா, மணல்வாரி அம்மை மேலும் பல
உணவு விஷமாகுதல், வாய்வுத் தொல்லை, குடல்புண், தலைவலி, நிமோனியா


படம்: வைரஸ் மற்றும் பாக்டீரியா விதியாசங்கள்.
தொற்று நோய்பரவல்/பரவுதல்:
    நேரடித் தொடர்பாலோ அல்லது மறைமுகத் தொடர்பாலோ தொற்று நோய்கள் பரவுகின்றன. நேரடித் தொடர்பு என்பது ஒரு நபர் மற்றோரு நபரை நேரடியாகத் தொடுதல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுதல், திவலைகள் பரவுதல் ஆகியனவாகும். மறைமுகத் தொடர்பு என்பது மாசுபட்ட பொருட்களைத் தொட்டுப் பெறுதல், காற்றில் பரவி வருபவற்றை உட்கொள்ளுதல், மாசுபட்ட உணவை, தண்ணீரை உட்கொள்ளுதல், விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவுதல், சூற்றுச்சூழல் மண் மாசுப்பாட்டால் பரவுதல் ஆகும்.
     படம்: HUMAN CHAIN (மனித சங்கிலி)
தொற்று நோயின் வெளிப்பாடு:
       இந்த புதிய தொற்று நோய் அடையாளம் கண்டுக்கொள்ள இயலாத கிரிமிகளினால் பரவிய போது, மக்களின் உடல்நலத்தை நாட்டிற்குள்ளும் நாடு தாண்டி அயல்நாட்டிலும் பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சில காலங்களே நீடிக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணூயிர் கிருமிகள் நாட்கள் செல்லச்செல்ல அதன் வீரியம் குறைந்து வருவதால், பொது சுகாதாரப் பிரச்சினையாக இது கருதப்படுவதில்லை. இப்படிப்பட்ட நுண்ணுயிர்கள் தொற்றுவதற்கு மீண்டும் வாய்ப்புள்ளது. கோவிட் 19 (கொரோனா வைரஸ்) முதன்முதலாகத் தோன்றிய பெரும் நோய் தொற்றிற்கு சிறந்த உதாராணமாகும்.
தொற்றின் தன்மை: ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கும் பரவும் நோய்களை தொற்றும் தன்மை கொண்ட நோய்கள் என்று சொல்லப்படுகிறது.
கைகழுவுதல்:
        நோய்த் தொற்றிலிருந்து ஒருவர் தன்னைத்தானே நோய்வாய்ப்படாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அவரது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கை கழுவுதல் என்பது சிறந்த பழக்கங்களில் ஒன்றாகும். இப்பழக்கம் வயிற்றுப் போக்கு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்றவை நோய் பரவலின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுதலை தடுக்கவல்லது. கீழ் கண்ட பழக்கங்களால் தொற்று நோய் பரப்பும் காரணிகள்/ஏஜெண்டுகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோயைப் பரப்புகின்றன.
(அ) கண்களை, மூக்கை, வாயைசுத்தம் செய்யாத கைகளால் தொடுதல். (ஆ) சுத்தம் செய்யாத கைகளால் உணவு உண்ணுதல், பாணங்கள் மற்றூம் உணவு தயாரித்தல் மற்றும் பருகுதல். (இ) அசுத்தமான பொருட்கள் இடங்களைத் தொடுதல் மற்றும் (ஈ) கைகளை மூடிக் கொண்டு பெருமூச்சு விடுதல், இருமுதல், தும்முதல், பின்னர் மூடிக்கொண்டு இச்செயல்களைச் செய்த கைகளால் மற்றவர்களின் கைகளைத் தொடுதல், மற்றும் பொருட்களைத் தொடுதல்.
    பொதுவாக கைகளக் கழுவுதல் அவசியமானதாகும். (1) உணவு தயாரிக்கும் முன்னர், தயாரித்த பின்னர், தயாரிக்கும்பொழுது கைகளைக் கழுவுதல் வேண்டும்.  (2) உணவு உட்கொள்ளுவதற்கு முன் (3) வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் வீட்டில் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ளுபவர்கள் முன்னும் பின்னும் கைகழுவுதல் வேண்டும். (4) உடலில் காயம்பட்ட பகுதிக்கு மருந்திட்ட பின்னும், முன்பும் கைகழுவுதல் வேண்டும். (5) கழிவறையை பயன்படுத்தியதற்கு பின் (6) கைகளில் படுமாறு சளி கொட்டுதல், இருமல் அல்லது தும்மலுக்கு பிறகு கைகழுவதல் வேண்டும். விலங்குகளைத் தொட்ட பின்னர், விலங்குகளுக்கு உணவு வைத்த பின்னர், விலங்குக் கழிவுகளை அகற்றிய பின்னர் கைகழுவுதல் வேண்டும்  (7) செல்லப் பிராணிகளுக்கு உணவு கொடுத்தபின், அவைகளை கையாண்டபின் (8) குப்பைகளை தொட்டு அள்ளியபின் கைகளை கழுவுதல் வேண்டும். இச்செயல்களைத் தவிர, இந்த கோவிட் 19 பேரழிவு நோய் தொற்றுக் காலத்தில் மக்கள் கூடும் பொது இடத்திற்கு சென்று வந்தபின், பொருளைத் தொட்டபின், மக்களால் அடிக்கடி தொடப்பட்ட பொருட்களைத் தொட்டவுடன், உதாரணமாக கதவு கைப்பிடிகள், மேஜைகள், எரிவாயு பம்புகள், பெரிய கடைகளில் உள்ள பொருள் கூடை வண்டிகள் அல்லது பதிவேடுகள், திரைகள் மற்றும் பல பொருட்களை கையாண்டபின் கைகளை கழுவுதல்; ந்ம் கண்களைத் தொடுதல், மூக்கு அல்லது வாயைத் தொடுதல் முதலியன நுண்ண்யிர் கிருமி உள்ளே செல்ல வழிவகுக்கும்.
கைகளைக் கழுவும்பொழுது கீழ் கண்ட 5 எளிய வழிகளைப் பின்பற்றவும்: (ஆ.ம்): நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய்ய இணையதளத்திலிருந்து)
கைகளை ஓடும்/கொட்டும் தண்ணீரில் நனைக்கவும். தண்ணீர் குழாயை மூடவும். சோப்பை கைகளில் தடவவும். ஏன் என்றால் பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் கழுவினால் தொற்றுக் கிருமிகள் அங்கேயே தங்கி மீண்டும் மாசுபடும் அபாயம் உள்ளது. இருப்பினும் பாத்திரங்களில் பிடித்து வைக்காத தண்ணீரால் கழுவுவது உடல் நலத்தை மேம்படுத்தும். கிருமிகளை அகற்ற தண்ணீரின் வெப்ப நிலை ஒரு பொருட்டல்ல. இருப்பினும் மிதவெப்பம் கொண்ட தண்ணீர் தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம். சுற்றுச் சூழல் ரீதியாக இது உகந்ததல்ல. கைகளை ஈரமாக்கிய பின் தண்ணீர் டேப்புகளை மூடுவது நீரை மிச்சப்படுத்த உதவும். கைகளுக்கும், தண்ணீர் டேப்புகளுக்கும் இடையில் நுண்ணுயிரிகள் பரிமாற்றம் நடக்கின்றன என்பதற்கு குறிப்பிடத் தக்க தகவல்கல் உள்ளன. கை கழுவுவதற்கு வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்துவதைவிட சோப்பையும் பயன்படுத்துவது நல்ல விளைவத் தரும். கைகளின் மேற்பரப்பில் படிந்துள்ள மண் மற்றும் நுண்கிருமிகளை இது நன்கு சத்தம் செய்து அகற்றுகிறது.
சோப்பு நீரை தடவுதல்/தேய்த்தல்: நுரை படிந்த/பட்ட கைகளை சோப்புடன் நன்றாக கழுவுகிறோம். கைகளின் மேற்பரப்பும், விரல்களுக்கு இடையேயும், நகங்களுக்கு அடியிலும் கை கழுவும்போது, போடும் சோப்பு நன்கு கழுவ பயன்படுகிறது. சோப்பு நுரையில் தேய்ப்பதால் ஏற்படும் உராய்வால் தோலில் படிந்துள்ள அழுக்கு, மை அல்லது எண்ணெய் அழுக்கு நுண்கிரிமிகள் அகற்றப்படுகின்றன. நுண்கிரிமிகள் கைகளிலும், தோளிலும், குறிப்பாக விரல் நகங்களுக்கு அடியிலும் படிந்து காணப்படுகின்றன. எனவே கை முழுவதுமாக நன்கு தேய்த்துக் கழுவப்படுதல் வேண்டும்.
கைகளைத் தேய்த்து கழுவுதல்: 20 வினாடிகளுக்கு ஒரு முறை நன்கு கைகளைத் தேய்த்துக் கழுவுதல் வேண்டும். கைகழுவ எடுத்துக்கொள்ள வேண்டிய நேரத்தை தீர்மாணித்து நிர்ணயம் செய்தல் கடினமான செயல் ஆகும். இருப்பினும் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின் முடிவின் அடிப்படையில் இந்த நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. நுண்ணுயிரிகளில் ஒரு சிறிய அளவு மட்டும்தான் நோய்களைப் பரப்பும் கிரிமிகளாக உள்ளன. ஆனால் அது எந்த அளவிற்கு உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அளவிட இயலாது. நோய்களைப் பரப்பும் நுண்கிரிமிகளின் அளவைக் குறைப்பதற்கும் நல்ல உடல் நலம் பேணுவதற்கும் தொடர்பிருக்க வேண்டிய அவசியமில்லை. கைகழுவும் நேரம் கூட பல காரணிகளைப் பொருத்தே உள்ளது. அது கையில் படிந்துள்ள அழுக்கின் அளவு, அதன் தன்மை அல்லது வகை ஆகியவற்றையும் பொருத்துள்ளது. உதாரணமாக தொற்று நோய் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவர்களின் கைகள் வாயிலாக எளிமையாக நோய்த் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட மருத்துவர்கள் நீண்ட நேரம் கைகழுவ எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். சொல்லப் போனால் வீட்டில் மதிய உணவு தயாரிக்கும் பெண்கள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். நுண்கிரிமிகளை அகற்ற 15 முதல் 30 வினாடிகள் வரை கைகழுவ நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை சான்றுகள் கூறுகின்றன. குறுகிய நேரம் எடுத்துக் கொள்வதைவிட இந்த 15 முதல் 30 வினாடிகள் வரை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதன் அடிப்படையில் உலக நாடுகளில் பல இந்த 20 வினாடிகளை கைகழுவ போதுமான நேரமாக பரிந்துறைத்துள்ளன.
கழுவுதல்/அலம்புதல்: கைகளை நல்ல ஓடும் தண்ணீரில் கழுவுதல்/அலம்புதல் வேண்டும். ஏனென்றால், சோப்பும், உராய்வும் அழுக்கு, எண்ணெய்ப்பசை, நோய்களை ஏற்படுத்தும் நுண்கிரிமிகளை அகற்றுவதுடன் கையிலிருந்தும் கிரிமிகளை அப்புறப்படுத்திவிடும். இவ்வாறு சோப்புப் போட்டு அலம்புவதும் தோல் எரிச்சலைக் குறைக்கும். ஏனென்றால், பாத்திரத்தில் உள்ள நீரில் கழுவினால், மீண்டும் அந்தத் தண்ணீர் அசுத்தமடைந்து நோய் மீண்டும் பரவும் அபாயம் உண்டு. எனவே சுத்தமாக ஓடும் தண்ணீர் பயன்படுத்தப்படுதல் வேண்டும். பயன்பாட்டிற்குப் பிறகு தண்ணீர் டேப்புகளை திசு காகிதத் துண்டுகளை பயன்படுத்தி மூடுதல் வேண்டும் என்ற சில பரிந்துரைகள், இப்பழக்கம் தண்ணீர் பயன்பாட்டு அளவை அதிகரிக்கும். இந்தப் பழக்கம் உடல் நலத்தை மேம்படுத்தும் என்பதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை.
கைகளை சுத்தமான துண்டுகள்/டவல்கல் கொண்டு அல்லது காற்றைக் கொண்டு உலர வைத்தல்: ஏன் உலரவைக்க வேண்டும் என்றால் ஈரக் கைகளின் வாயிலாக எளிதில் நுண்கிரிமிகள் பரவும். எனவே கைகளைக் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். இருப்பினும் இதற்கென கிடைத்த ஆய்வின் முடிவுகளில் சிறந்த முறை எது என்பது தெளிவாக இல்லை. கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளும் தெளிவின்றி உள்ளது. இவைகளுக்கு அப்பார்ப்பட்டு, இவ்வாய்வுகள் ஒட்டுமொத்த நுண்கிரிமிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதே தவிர நோய் பரப்பும் கிரிமிகளை மட்டும், பல்வேறுபட்ட கை உலர் முறைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்டவை அல்ல. நுண்கிரிமிகளை கைகளில் இருந்து அகற்றுவது நோய் கிரிமிகள் பரவாமல் தடுக்கும் என்பதும் தொடர்பு படுத்தப்படவில்லை. வேறொன்றும் கூறுவதற்கில்லை. ஆய்வுகள், தூய்மையான துண்டு அல்லது காற்று உலர்த்தியே கைகளை உலர்வைக்கச் சிறந்தது எனக் கூறுகிறது.

விலகியிருத்தல் அல்லது தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொள்ளுதல்: இரண்டு பதங்களுமே,அதாவது ”விலகியிரு”, :தனிமைப்படுத்து” எனப்படுவது ஒன்றுக்கு பதிலாக மற்றொன்றை மாற்றி பயன்படுத்திய போதிலும் இரண்டும் இருவேறு நடவடிக்கைகளைக் குறிக்கும். தனிமைப் படுத்திக் கொள்ள விரும்பும் நபர் உண்மையிலேயே உடல் நலம் குன்றியிருக்கிறாரா இல்லையா என்பதைப் பொறுத்தே வேறுபடும்.
உலக தொற்றால் பாதிக்கப் பட்ட ஒருவர், சுகமாக இருப்பவர்களிடம் இருந்து விலகியிருத்தல் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பில்லா நிலை (முற்றிலும் குணமாகி) ஏற்படும்வரை விலகியிருத்தல்.
தனிமைப்படுத்திக் கொள்ளுதல்: நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடமிருந்து அத்தொற்றுநோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும், மற்றவர்கள் தொற்றிற்கு ஆளாகாமல் இருக்கவும் மருத்துவர்களின் ஆலோசணைப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையாகும். இது முறையான சிறப்பு நிலையில் சுகாதார அலுவலர்களால் பிறரிடமிருந்து அவர்கள் பிரிக்கப்பட்டும் இருக்கலாம். அல்லது சாதாரண நிலையிலும் இருக்கலாம். சாதாரண நிலையில் இருப்பவர்கள் வீட்டில் சுகாதார ஊழியர்களின் பரிந்துரையின்படி இருக்கலாம். தாமாக தனிமைப் படுத்திக் கொள்ளுதல் நோய் தீவிரமாக மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்கிறது. தனிமைப் படுத்திக் கொள்ளும் கால அளவு கிரிமிகளின் உள்ளிருப்புத் தன்மையைப் பொறுத்தே அமையும். அல்லது நோய்த் தொற்று ஏற்பட்ட நபர் குணம் அடைந்த அறிகுறியை வெளிப்படுத்தும் காலம் வரை நீடிக்கலாம். நோய்த் தொற்றுக்காண அறிகுறியை வெளிப்படுத்தினால் அவர்கள் தாங்களாகவே விலகி இருந்து கொள்ளலாம்.
சமூக இடைவெளியைக் கடைபிடித்தல்:
இது விரைவாகப் பரவி வரும் நோய்த் தொற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். கல்வி நிறுவனங்களை மூடிவைத்தல், வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்தல், நிகழ்ச்சிகளை ரத்து செய்தல், மற்றும் மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்த்தல் போன்ற சில நடைமுறைகள் சமூக இடைவெளியைப் பின்பற்ற உதவுவதற்கான வழிமுறைகளாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி: நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை அண்ட விடாது விரட்டும் ஒரு வகை சக்தி என்றோ அல்லது அயல் நோய்க் காரணிகல் உடம்பினுள் சென்றுவிடாமல் எதிர்க்கும் சக்தி என்றோ புரிந்து கொள்ளப்படுகிறது. அது நுண்ணுயிர்களாக இருந்தாலும் சரி, விஷத் தன்மை கொண்ட நோயை ஏற்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களாக இருந்தாலும் சரி, அல்லது இவைகளைப் போன்ற பண்புகள் கொண்ட இதற பொருட்களானாலும் சரி ஒரு மனிதனில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றாக்குறயிருந்தால் அவன் எளிதில் நோய் வசப்படுகிறான். முக்கியமாக இரண்டு வகை நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளன. ஒன்று இயற்கையான சக்தி, மற்றொன்று பெறக்கூடிய சக்தி.
படம் 185…..
இயற்கையானது என்பது மறபுவழியாக பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெறுவதும், வாழ்நாள் முழுவதும் ஒருவனை பாதுகாப்பதுமாகும். உ.ம். நாயிலிருந்து பரவும் டிஸ்டம்பர் என்னும் வியாதிக்கு மனிதனிடம் மறபு ரீதியாக எதிர்க்கும் ஆற்றல் இயல்பாகவே உண்டு. குறிப்பிட்ட எதிர்ப்பு வகை என்றெல்லாம் இல்லை. அனைத்து வகையிலும் இந்த வைரஸ் மனித உடலுக்குள் நுழைவதிலிருந்து இயற்கையான தடுப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. இந்தத் தடுப்புக்கள் உடல் ரீதியாக தோள்களிலும், தசை ரீதியாக வயிற்றின் பி.எச் அமிலத்திலும், செல் ரீதியாக இரத்த வெள்ளை அணுக்களிலும், சைட்டோகைன் என்னும் புரதத்திலும் இயற்கையிலேயே இயல்பாகவே உள்ளன.
மனிதன் பிறந்தவுடன் தகவமைதல் மூலம் தானாகப் பெறுதல் என்ற வகையைச் சார்ந்த இந்த நோய் எதிர்ப்பு சக்தி செயல்படுத்தப்படும் பிறபொருளெதிரிகள் அல்லது நினனீர்க் கலங்கள் அல்லது இரண்டுமே உடலால் பெறப்பட்டு நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறுகிறது. இவ்வாறு கிடைக்கப்பெறும் நோய் எதிர்ப்பு சக்தி நோயாளியைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் அவன் தாக்கப்படுவதையும் தடுத்து நிறுத்துகிறது.
உடல் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். செயல்திறன்மிக்க/ நேர்முக நோய் எதிர்ப்பு சக்தி, சாதாரண மறைமுக நோய் எதிர்ப்பு சக்தி. செயல்திறன்மிக்க/ நேர்முக நோய் எதிர்ப்பு சக்தியில் தனிமனிதன் செல்கள் பிறபொருளெதிரிகளை உருவாக்கி நோய்களை எதிர்த்துப் போராடி தடுத்து வெற்றி கொள்ளும். இது மெதுவாக நடக்கும் ஒரு செயல். ஆனால், நீண்ட நாட்களுக்கு நோயை எதிர்த்து நிற்கும். பக்கவிளைவற்ற ஒன்றாகும். இது இயற்கையான வகையையோ, செயற்கையான வகையையோ சார்ந்ததாக இருக்கும். பெரியம்மையால் தாக்கப்பட்ட ஒருவர் இவ்வகை நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே கிடைக்கப் பெறுகின்றார். குழந்தைப் பருவத்தில் அம்மைக்கு எதிராக வழங்கப்படும் தடுப்பு மருந்திலிருந்து குழந்தைகள் கிடைக்கப் பெறுவது அம்மைக்கு எதிரான செயல்திறன்மிக்க செயற்கை நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
தொற்று நோய் பரப்பும் நுண்கிரிமிகளுக்கு எதிராக மறைமுக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய, தயார் செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் உடலினுள் செலுத்தப்படுகிறது. இது உடனடியாக வேலை செய்கிறது. ஆனால் இவ்வகையில் கிடைக்கப் பெறும் நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட நாள் நிலைத்திருப்பதில்லை. இதுவும் இரண்டு வகைப்படும். இயற்கையான மற்றும் செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி. இயற்கையான மறைமுக எதிர்ப்பு சக்தியானது கருவிலிருக்கும் சிசுவிற்கு தாயிடம் இருந்து நஞ்சுக்கொடி வழியாக பிறபொருளெதிரிகள் மாற்றம் பெற்று அதன் வாயிலாக எதிர்ப்பு சக்தியை கிடைக்கச் செய்தலாகும். இவ்வகை எதிர்ப்பு சக்தி சீம்பால் எனப்படும் முதல் தாய்ப்பால் மூலமாகவும், பிறந்து முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தைக்கு கிடைக்கிறது. மறைமுக செயற்கைமுறை வகை நோய் எதிர்ப்பு சக்தியானது டெட்டானஸ் எனப்படும் தோல் இருக்க நோய்க்கு எதிராக வழங்கப்படும் ஊசியின் மூலம் கொடுக்கப்படுகிறது.  
சுய மருத்துவ முறையை பின்பற்றுதல்:
    ஒரு தனியார் அல்லது குடும்ப உறுப்பினர் நோய் அறிகுறி தென்பட்ட உடனேயோ அல்லது தானாக கண்டறிந்த உடனேயோ மருந்துகளை மருத்துவர் ஆலோசணை இன்றி தாமே எடுத்துக் கொள்ளுதலே சுய மருத்துவ முறையாகும். இம்முறையின் பலன்கள் பிறதிபலன்களை அறிந்து தீமைகள் அதிகம் உள்ளன என்பதையும் தெரிந்தே இம்முறையைக் கையாள்கின்றனர். இதில் உள்ள மிகப் பெரிய அபாயங்கள் என்னவென்றால், தவறான நோய் அறியும் முறை, கிடைக்க வேண்டிய மருத்துவ உதவியில் தாமதம், எடுக்கும் மருந்துகளால் ஏற்படக்கூடிய தோராயமான எதிர் விளைவுகள், தவறான மருந்தின் அளவு, தவறான சிகிச்சை முறை தெரிவு, தொடர்பில்லா எதிர் விளைவை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களுக்கு எதிரான மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலையிலான அபாயங்கள் இவற்றுள் அடங்கும்.
சுகாதாரமான நெடிய வாழ்க்கைக்கு தேவையான சிறந்த வாழ்க்கை வழிகாட்டிகள்:
ஒருவரின் முன்னுரிமை எது? பணமா? உடல் நலமா? இதற்கு ஒருவன் பதில் சொன்னான். எனக்கு நல்ல உடல் நலம் உள்ளவரை பணம் தேவை. ஆம் அதே போல நான் சுகவீனம் அடையும்போது உடல் நலம் தேவை. இதன் தத்துவத்தை தனி மனிதன் துன்பப்படும் பொழுது உணர முடியாது. ஒட்டு மொத்த சமுதாயம் துன்பப்படும்பொழுது மட்டுமே உணர முடியும். தனித்திருக்கும், விலகியிருக்கும் உடலால் தனித்திருத்தல் மற்றும் சமூக இடை வெளியை விட்டு இருக்கும் காலம் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. மூலத்தை நோக்கி பின்னே செல்வது அத்தியாவசியமாக என்ன தேவையோ அதை வைத்துக் காலம் தள்ளுவது, சுற்றுச் சூழல் மாசுகளீலிருந்து தூய்மை அடைதல் என்பதெல்லாம் ஊரடங்கினாலேயே ஏற்பட்டிருக்கிறது.
நல்ல உடல் நலத்திற்காக, நிலைத்த உடல் நலத்திற்காக மூன்று காரணிகள் அவசியமானதாகும். 1. சமுதாயம், 2. பொருளாதாரம், 3. சுற்றுச் சூழல் ஆகிய மூன்றுமாகும். சமூக முன்னனியில் உடல் நலம் (குறிப்பாக குணமடைந்தவர்கள்) உள்ளத்தின் நலம் இரண்டிற்கும் முன்னுரிமை வழங்குதல் வேண்டும். மன நலத்தில் ஏற்பட்ட தாக்கம் (உடல் மற்றும் உள்ள ரீதியாக) பேரிடர் தொற்று அனுபவித்த காலத்திலும் பாதிப்பிற்கு பிந்தய காலத்தில் வாழ்வாதாரப் பாதிப்புகளும் அதிக கவனம் எடுத்து சிறத்தையுடன் செயல்பாட்டால் அழிவைத் தடுக்கலாம் என்பதைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பொருளாதாரத்தில் பாதிப்பிற்கு முன்னும் பின்னும் ஏற்பட்டுள்ள தாக்கம் வாழ்க்கை முறையிலும் வாழ்வாதாரத்திலும் குறிப்பிட்ட அளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றமடைந்த சூழலில் சுற்றுச் சூழல் புத்துயிர் பெறுவதற்கும், பராமரிப்பதற்கும் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் சில தொடர் முயற்சிகள் மேற்கொள்வது அவசியமாகும். நிலைத்த நீடித்த வாழ்க்கை நிலையை அடைய அன்றாடம் நாம் அற்பனிப்பு உணர்வுடனும், ஒழுக்க நெறியுடனும் செயல்படுதல் வேண்டும்.
அபூர்வத்திலும் அபூர்வமான அரிய வாய்ப்பு இந்த ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நல்ல உடல் நலத்துடன் வாழ உணர்வுடன் பின்பற்ற ஏதுவாக சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த கடமைகளை ஆற்றினால்தான் நல்ல சுகாதாரமான எதிர்காலத்தை நாம் கிடைக்கப் பெறுவோம்.   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக