TNSF நிர்வாக குழு கூட்டம்
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று மாவட்ட நிர்வாக குழு கூட்டம் கூட்ட வேண்டும் என்ற கடந்த மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் ஜூன் மாதத்திற்கான மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் 03/06/18 ஞாயிறன்று அறிவியல் இயக்க அலுவலகத்தில் மாலை 5:45 முதல் 7:45 முடிய நடைபெற்றது. 6 பேர் மற்றும் வீடியோ கால் மூலமாக சுரேஷ் என மொத்தம் 7 பேர் பங்கேற்றனர்.
இயலாமை தெரிவித்தவர்கள்
ஸாஹிரா, ராமமூர்த்தி சீனிவாசன்,செங்கோடன்.
1. அஞ்சலி:
மாவட்ட செயற்குழு உறுப்பினரும் நல்லணம்பட்டி ஆசிரியையுமான விஜயலட்சுமி அவர்களின் கணவர்( சின்னப்பிள்ளையூர் பள்ளியின் தலைமையாசிரியர்) மறைவிற்கும், தாரமங்கலம் கிளையின் தலைவர் வள்ளிமுத்து அவர்களின் தந்தையார் மறைவிற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராட்டு
1. 20 ஆண்டுகள் ஆசிரியப் பணி செய்து பணிநிறைவு பெற்ற மாவட்ட நிர்வாகி பவளவல்லி அவர்களுக்கும்
2.பணிநிறைவு பெறும் இரும்பாலை கிளைத்தலைவர் k. S. சர்மா அவர்களுக்கும்
3. ஹண்டே அவர்களிடம் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற மாவட்ட நிர்வாகி ஜெயக்குமார் அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
நடைபெற்ற வேலைகள் குறித்து விவாதிக்க பட்டது.
அமைப்பு-கிளைக்கூட்டங்கள்:
* கடந்த செயற்குழு முடிவின் படி ஜுன் மாதத்தில் அனைத்து கிளைகளும் கூட முயற்சி மேற்கொள்வது
* வாராந்திர கூட்டங்களை ஆடியோ பதிவு செய்து வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது
*வாராந்திர கூட்டங்களில் ஒவ்வொரு நிர்வாகியும் மாதத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் பங்கேற்பது
* மாதத்தின் முதல் ஞாயிறன்று நடைபெறும் மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தைக் கூட்டி காலை11- 1 மணி வரை ஒரு மாதமும் ,பிற்பகல் 2- 4 வரை ஒரு மாதமும் என சுழற்சி முறையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சமம் வெள்ளிவிழா மாநாடு
ஜூன் 9,10 சென்னையில் நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் இருந்து 4பேர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
NCSC பயிற்சி முகாம்:
ஜூன் 16,17 புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் இருந்து சீனிவாசன், செங்கோடன்,சந்தோஷ்,சுரேஷ் ஆகியோர் பங்கேற்க வேண்டும்.
துளிர் திறனறிதல் தேர்வு
ஜூன் 17 புதுக்கோட்டையில் . மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாரமங்கலம் ரமேஷ் பங்கேற்க வேண்டும்.
ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் தினம்
* ஜூன் 5 அன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கை விரல் பதிவு இடும் வகையில் பேனர் வைத்தல்
* ஜூன் 5 அன்று தாரமங்கலம் கிளை கூட்டம் நடத்துதல்
*ஜூன் 6 அன்று ஜலகண்டபுரம் கிளை கூட்டம் நடத்துதல்.
*AVS கல்லூரியில் ஜூன் 5 அன்று மரக்கன்று நடும் விழாவல் ஜெயமுருகன் மற்றும் கோபால் பங்கேற்றல்
என முடிவு செய்யப்பட்டது
மாவட்ட நிர்வாகிகள் கூட்ட அழைப்பு
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
அன்புமிக்க மாவட்ட நிர்வாகிகளே....!
வணக்கம்...!
நாளை...
ஜூன் மாதம் 3ந் தேதி...
ஞாயிற்றுக்கிழமை...
மாலை 4 முதல் 6 மணி வரை.... (மிரட்டும் மழையைக் கருத்திற்கொண்டு)
நமது மாவட்ட அலுவலகத்தில்....
இம்மாதத்திற்கான
நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது....!
விவாதப்பொருள்கள் :
1. நடைபெற்ற வேலைகள்
2. சமம் வெள்ளிவிழா மாநாடு
3. ராமகிருஷ்ணா அறிவியல் பார்க்
4. NCSC பயிற்சி முகாம்
5. குழந்தைகள் புத்தக திருவிழா
6. மாவட்டச் செயற்குழு முடிவுகள்-மீள்பார்வை
7. நிதிநிலை
8. இதர
மாவட்ட அளவில்....
சிறப்பாக நமது இயக்க நிகழ்வுகளை.... முன்னெடுத்துச் செல்ல...
அறிவியற்பூர்வமாய்த் திட்டமிட்டுச் செயலாற்ற...
அனைத்து நிர்வாகிகளும்....
இக் கூட்டத்திற்கு.... தவறாமல்....
அவசியம் கலந்துகொள்ள வாருங்கள் என்று...
அழைக்கின்றேன்....
🙏🙏🙏
இணைந்து செயல்படுவோம்...!
இயக்க நலன் காப்போம்...!
⭐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக