1. 2017 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட நடத்த உத்தேசித்துள்ள நிகழ்சிகள்
துளிர் இல்ல குழந்தைகள் அறிவியல் திருவிழா
மாவட்டச் செயலாளர் கேட்டு கொண்டதற்கிணங்க 2017 ஜனவரி 28,29ந் தேதிகளில் சேலம் மாவட்டத்திலுள்ள துளிர் இல்ல குழந்தைகள் பங்கு பெறும் எங்கள் தேசம் – துளிர் இல்ல குழந்தைகள் அறிவியல் திருவிழாவை கொங்கணாபுரம் யுனிவர்செல் பள்ளியில் நடத்தி தருவதாக கொங்கணாபுரம் அறிவியல் இயக்க கிளைத் தலைவரும், யுனிவர்செல் பள்ளியின் தாளாளருமான திருமிகு சீனிவாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியை பற்றிய தகவலை நிர்வாகக்குழுவில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு நிகழ்ச்சிகள் பற்றியும் பேசப்பட்டது.
எங்கள் தேசம் – குழந்தைகள் பரிமாற்ற நிகழ்ச்சி
மாநில நிர்வாகி திருமிகு தியாகராஜன் அவர்கள் திருப்பூரில் நடைபெற்ற கேரள தமிழக குழந்தைகள் பரிமாற்ற நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிவித்தார்கள். அதனையொட்டி சேலத்திலுள்ள துளிர் இல்ல குழந்தைகள் மற்றும் கேரள பாலக்காடு குழந்தைகள் பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. 2017 பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களில் கேரள பாலக்காடு அறிவியல் இயக்க நண்பர்களுடன் கலந்து கொண்டு குழந்தைகள் எவ்வளவு பேர் பங்கேற்பது, தேதிகள் ஆகியவற்றை முடிவு செய்து குழந்தைகள் பரிமாற்ற நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்திலும் நடத்துவது.
மேற்கண்ட இரு நிகழ்வுகளை நடத்துவதற்கு கொங்கணாபுரம் மற்றும் சங்ககிரி பகுதியில் துளிர் இல்லங்கள் அதிகமாக உள்ளதால் கொங்கணாபுரத்தில் 2017 ஜனவரி 8ந் தேதி ஞாயிற்று கிழமை சேலம் மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் முடிந்தபிறகு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பாலக்காடு அறிவியல் இயக்க நண்பர்களை அழைத்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
கொங்கணாபுரம் கிளைச் செயலாளர் திருமிகு தினேஷ் அவர்களிடம் பேசியதில் ஜனவரி 8ந் தேதி சேலம் மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை கன்னந்தேரி பள்ளியில் கொங்கணாபுரம் கிளை சார்பாக நடத்தி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பயிற்சி
கர்நாடாக மாநிலத்தில் 2017 ஜனவரியில் நடைபெறும் குழந்தைகளுக்கான ஒரிகாமி மற்றும் கணித பயிற்சியில் பங்கு பெற சேலத்திலிருந்து இரு பள்ளி மாணவர்களை (ஒருவர் பெண் ஒருவர் ஆண்) அனுப்புவது.
கேரள இளைஞர் பயிற்சி முகாம்
2017 ஜனவரியில் நடைபெறும் கேரள இளைஞர் பயிற்சி முகாமிற்கு கல்லூரி மாணவர்களை அனுப்புவது. அரசு கலைக் கல்லூரி சேலம் 7,8வில் பேசுவது.
பையோ வாக்
2017 பிப்ரவரி மாதம் 2ந் தேதி “WED LAND” தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள், அறிவியல் இயக்க நண்பர்கள் பங்கு பெறும் பையோ வாக் நடத்துவது. பையோ வாக்கிற்கு மாநில நிர்வாகி பேராசிரியர் தினகரன் அவர்கள் வருவதாக கூறியுள்ளார். ஜனவரி 20ந் தேதிக்குள் பங்கு பெறுபவர்கள் பெயர் பட்டியலை மாவட்டத்திற்கு தரவும்.
Bird watch
2017 ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் நமது NCSC அலுமினியும், பறவைகள் ஆர்வலருமான திருமிகு கணேஷ்வர் அவர்களின் துணையுடன் பறவைகள் நோக்குதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் பார்ப்பதில் ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் பங்கு பெற கேட்டு கொள்ளப்படுகிறது. விபரங்களுக்கு மாவட்டச் செயலாளர் அல்லது திருமிகு லால் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
நிகழ்ச்சிகள்
வரலாற்று நடைப்பயணம் போல் சேலம் மாவட்டத்திலுள்ள ஜியாலாஜி சம்பந்தபட்ட இடங்களை பெரியார் பல்கலைகழக பேராசிரியர் திருமிகு வெங்கடஜலபதி அவர்களின் உதவியுடன் சுற்றி பார்ப்பது, மாவட்டத்தலைவர் திருமிகு இளங்கோ அவர்களின் உதவியுடன் மரங்கள் மற்றும் செடிகள் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள், அறிவியல் இயக்க நண்பர்களுக்கு நடத்துவது.
மொபைல் பிளானடேரியம்
திருப்பூர் மாவட்டத்தில் மொபைல் பிளானடேரியம் (mobile planetarium) உள்ளது. காலையில் 9 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும். ஒரு இடத்திலேயே ஏற்பாடு செய்து பார்வையாளர்கள் வந்து பார்ப்பது போல் ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 250 பேர் பார்ப்பது போல் ஏற்பாடு இருக்க வேண்டும். கருத்தாளர்கள் 3 பேர், வேன் போன்றவை வருவதால் கட்டணம் ஒருவருக்கு ரூ 40 ஆகும். தங்கள் பகுதிலுள்ள பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு காட்டுவதற்கு ஏற்பாடு செய்யவும்.
YSF – மாநில இளைஞர் அறிவியல் திருவிழா
மேற்கண்ட நிகழ்வுகளுக்கு நண்பர்கள் தங்களால் முடிந்த உதவிகளையும், ஆலோசனையும் வழங்கும்படி அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக