இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, செப்டம்பர் 19, 2014

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 22வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தலைப்பு மற்றும் கருப்பொருள்.



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 22வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் தலைப்பு மற்றும் கருப்பொருள்.

தட்பவெப்ப நிலையையும், காலநிலையையும் புரிந்து கொள்ளுதல்
                                                துணைத்தலைப்பு 1
நம்மைச் சுற்றியுள்ள தட்பவெப்ப நிலையையும், காலநிலையையும் அறிதல்
இதனை நாம் 4  கூறுகளாக அறிய வேண்டும்
1. உற்று கவனித்தல்
2. அளத்தல்
3., புரிந்து கொள்ளுதல் 
4. முன்கூட்டியே கணித்தல்/எதிர்காலத்தைக் கணித்தல் 
அறிமுகம் 
 மனித இனத்தின் அங்கத்தினர்களாகிய நாம் அனைவரும் இந்த பூமியில்தான்  வாழ்கிறோம். நம்மைச் சுற்றி ஏராளமான பொருட்கள் உள்ளனபூமி உருவாகி சுமார் 437 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதில் வளிமண்டலம் உருவாகி 390 கோடி ஆண்டுகள் ஆகின்றன. நாமும் இந்த வளிமண்டலமும் ஒருவரை பாதிப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.இந்த பாகிப்பினால் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தட்பவெப்ப நிலை(weather ) :
    தட்பவெப்ப நிலை(weather ) எனபது பூமியைச்  சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றமும், அதன் நிலைபாடும்தான். அது எப்போதும் இடைவிடாமல்  நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தட்பவெப்ப நிலை எங்கும் வியாபித்து இருக்கிறது; நீக்கமற நிறைந்து இருக்கிறது. இதனை நீங்கள் புறந்தள்ளிவிட்டு வாழமுடியாது. நாம் இந்த தட்பவெப்ப நிலைக்குள்தான் வாழ்கிறோம். நாம் அதனை உணர்கிறோம். நாம் அதனை குறை சொல்கிறோம். அதன்மீது நமக்கு சமயத்தில் கோபம் கூட வருகிறது. ஆனால் ஒதுக்கிவிட்டு வாழமுடியாது. அப்படி செய்தால் அதன் விளைவுகள் ஆபத்து விளைவிப்பவையாக முடியும். அது எந்த நேரத்தில் இருக்கக் கூடிய தட்பவெப்ப நிலையாக இருந்தபோதும் கூட. எனவே நாம் தட்ப வெப்ப நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அதனை உற்றுக் கவனித்து அதன் கூறுகளை(parameters ) அளந்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதனை முன்கூட்டியே கணிப்பது என்பதும் கூட நம் வாழ்நிலைக்கு உதவியாக இருக்கும்

 ஒரு நாளின் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரத்திலும் நம்மைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் நிகழக் கூடிய மாற்றங்களே தட்பவெப்ப நிலை (weather ) எனப்படும்

இன்றைக்கு இருக்கும் நாள்காட்டி (calender) என்பதும் கூட, வரலாற்று ரீதியாக திரும்பிப்  பார்த்தால், தட்பவெப்ப நிலையையும், காலநிலையையும் முன்கூட்டியே கணித்த ஒன்றுதான்.

வளிமண்டல மாற்றங்கள் /தட்பவெப்ப நிலையின் கூறுகள் என்றால் என்ன? அவை எவற்றை உள்ளடக்கியவை?

உதாரணமாக,  சென்னை/மதுரையில் காலையில் மழை  .பெய்கிறது மதியம் மேகமூட்டமாக இருக்கிறது. மாலை நல்ல வெயில் காய்கிறது. என்றால் இதுதான் அந்த ஊரின் தட்பவெப்ப நிலையாகும்.  

தட்பவெப்ப நிலையின் விளக்கம்:
இன்று கோவையில் மழை பெய்கிறது. நேற்று வெயில் கொளுத்தியது.
இப்படி தட்பவெப்ப  நிலை பற்றி அறிதல்  meterology எனப்படுகிறது
  தட்பவெப்ப  நிலை என்பது பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. அவையாவன
  1. சூரியனின் கதிர் வீச்சு (Solar rays )
  2. வெப்பம் (Temperature )
  3. காற்று (Wind )
  4. மழையளவு (Precipitation )
  5. காற்றின் அழுத்தம் (Air Pressure )
  6. மேகம் (Cloud )
  7. காற்றின் ஈரப்பதம் (humidity )
இவையனைத்துக்கும் மூலாதாரம் சூரியனும், பூமியின் சாய்மானமும் தான்
  •  நாம் எப்படி உள்ளூர் தட்பவெப்ப நிலை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது?. 
  • தட்பவெப்ப நிலை பற்றிய உற்று நோக்குதலை எவ்வாறு செய்வது?
  • அனைத்துக்கும் ஒரே மாதிரி செயல்பாடுகள் தானா?
  • நமது முன்னோர்கள் இதற்காக என்ன செய்தனர்?
  • நாம் இதற்கான புது வழி முறைகளைக் கையாளலாமா?
  • இப்போது நம்மிடையேயுள்ள நவீன அறிவியல் தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்தி தட்பவெப்ப ம் நிலைகளை அறியலாமா?
அதெல்லாம் சரி? ஏன் தட்பவெப்ப நிலை என்பது அவ்வளவு முக்கியமானது?
 நாம் என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

தட்பவெப்ப நிலை எனபது அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதுதான் உயிரிகளின் வாழ்நாளை, வாழிட ,தன்மையை,அவற்றின் இனப் பெருக்கம் மற்றும் பரம்பரையை நிர்ணயிக்கக் கூடியதாகவும் கூட இருக்கிறது. நம்மால் தட்பவெப்ப நிலையைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நாம் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.அது நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களின் மேலும் ஆதிக்கம் செலுத்துகிறது. பாதிக்கிறது. நாம் எப்படி, எங்கே வாழவேண்டும், என்ன செய்யவேண்டும், என்ன அணியவேண்டும், என்ன உண்ணவேண்டும் என்பதையும் கூட தட்பவெப்ப நிலைதான் நிர்ணயம் செய்கிறது

தட்பவெப்ப நிலை விவசாய உற்பத்தியைப் பாதிக்கிறது. பூச்சிகள் நம்மக் கடிப்பதையும், பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை, இனபெருக்கம்,வியாதிகள் நமக்கு வருவது, பழங்கள் பழுப்பது, நமக்குக் கிடைப்பது எல்லாமே தட்பவெப்ப நிலையின் கருணைதான்.  பூக்களின் வாசனையை நாம் நுகர்வதும்உணர்வதும், ரசிப்பதும்,கூட தட்பவெப்ப நிலையால்தான்

எனவேதான்  நாம்  நம்மைச் சுற்றி நிறைந்துள்ள தட்பவெப்ப நிலை பற்றி நம்மால் முடிந்த அளவு அறிந்து கொள்ளவேண்டும்

இன்றைக்குள்ள தட்பவெப்ப நிலையையும், சுமார் 100 அல்லது 1000  ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தட்பவெப்ப நிலையையும் நினைத்துப் பாருங்கள்.அன்றைக்கு மனிதனின் வாழ்நாள எப்படி இருந்திருக்கும். அன்றைய தட்பவெப்ப நிலையின் தன்மை என்ன

அதுபோல, இன்னும் ஒரு 50 ஆண்டுகள் சென்ற பின் நீங்கள் உங்களின்  பேரக்குழந்தையிடம் " நான் சின்ன பிள்ளையாய் இருக்கும்போது, ஜூலை மாதம் வந்தால் எப்படி இருக்கும் தெரியுமா? "என இந்த 2010 ம் ஆண்டின் ஜூலையை கற்பனைக்கு இழுத்து பேசிக் கொண்டிருப்பீர்கள்.அதுதான் நீங்கள் பழைய காலத்தை இழுத்தப் பேசுவது என்பதுதான் காலநிலை, அதாவது ஒரு 50 ஆண்டுக்கால தட்பவெப்ப நிலையினைத் தொகுத்து அந்த அனுபவம் பேசினீர்கள் என்றால் அது காலநிலை.

காலநிலை (Climate ) என்பது குறைந்தது ஒரு 30 ஆண்டுக்கால தட்பவெப்ப நிலையின் சராசரி ஆகும்.அது 100 ,1000, 10,000 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம். அதாவது ஒருசில ஆண்டுகளில் இருந்து பல்லாயிரம் ஆண்டுகள் வரையிலான தட்பவெப்ப நிலையின் சராசரி காலநிலை ஆகும்

தட்பவெப்ப நிலை என்பது முன்பு குறிப்பிட்டது போல, வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம்,மற்றும் காற்றின் திசை வேகம் என்பது   வளிமண்டலத்தின் வெவ்வேறு  உயரங்களில் /உயர அடுக்குகளில் நிகழ்வதுதான். ஆனால் இவையனைத்து நிலவியல் தன்மையாலும்,அதாவது பூமியில் ஒரு ஊர் உள்ள உயரம், அதன் அட்சரேகை, தீர்க்க ரேகை போன்ற வற்றாலும் , சூரிய ஒளி படும் சாய்கோணம், தொலைவு , சூரியனின் செயல்பாடு (Solar  Activity ) சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்,ஒரு நாளின் நேரம் (Length of  the  day ) போன்றவற்றாலும் கூட நிர்ணயிக்கப்படும்.  
காலநிலை (Climate )
காலநிலை (Climate )எனபது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுமாராக 30 ஆண்டுகளில்  ஏற்படும்  தட்பவெப்ப நிலைகளின்  மாற்றத்தில் ஏற்படும் சராசரிதான். காலநிலையும் தட்பவெப்ப நிலை என்பதும் ஒன்றல்ல.இருப்பினும் கூட, ஒரு இடத்தின் தட்பவெப்ப நிலைகளின் சராசரி நிலைதான் காலநிலை.தட்பவெப்ப நிலை என்பது மிக மிக குறைவான கால கட்டத்தில் அதாவது ஒரு நாளில் ஏற்படும், வெப்பம், மழை,  ஈரம்,காற்றின் மாற்றங்களைச் சொல்வது. கால நிலை என்பது நீண்ட கால தட்பவெப்ப நிலையின் சராசரி..காலநிலை பற்றி அறிவது Climatology  என்று அழைக்கப்படும்.


காலநிலையின் விளக்கம்:
உலகில் பல வகையான காலநிலை நிலவுகிறது.பாலைவனத்தில் எப்போதும் வரண்ட காலநிலைதான். அண்டார்டிகாவில் எப்போதும் பனி மூடிக் கிடக்கும். ஆனாலும் வறண்டு காணப்படும்
காலநிலைக்குள் நாம் ஒரு இடத்தின் வளிமண்டலம், கடல் தன்மை, நிலத் தன்மை,பனிநிலம் உயரம், உயிரிக்கோளம் இணைத்து அறிந்து கொள்ள வேண்டும்.

இதிலிருந்து  நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?
நமது குறிக்கோள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை அறிய முயற்சி செய்வதே...
  1. நாம் தட்பவெப்ப நிலையின் எந்த கூறை (parameter )..நாம் உற்று நோக்க, அளக்க,புரிந்து கொள்ள, முன் கணிக்க எடுத்துக் கொள்கிறோம் என்பதே..
  2. நமது அறிக்கைக்கு என்னென்ன முறைகளைக் கடைப்பிடிக்கப்போகிறோம்  என்றும்.
  3. எந்தெந்த கருவிகளை, எதன் தேவைக்காக பயனடுத்தப்போகிறோம் என்றும்.
  4. அதற்குத் தேவையான நமது உற்று நோக்கல் மற்றும் அளவுகள் பற்றிய பதிவுகள் 
  5.  கிடைத்த தரவுகளை ஆராய்தல் 
  6. இவைகள் மூலம் எதிர்காலத்தில் என்னென்ன நிகழ்வுகள் உருவாகும் என்றும் அனுமானித்தல் 
இதில் முக்கியமானது..
நாம் முன்பே குறிப்பிட்டபடி, நம்மிடம் உள்ள பின்புல கருத்துக்கள்படி,நாம் தட்பவெப்ப நிலையை முன்கூட்டியே அனுமானித்து அறிந்து நடந்து கொள்ள  வேண்டும். இல்லையெனில் நாம் அதற்கான மிகவும் உயர்ந்த பட்சவிலை கொடுக்க நேரிடும்

அறிவுதான் சொத்து..அதுதான் சக்தியும் ஆற்றலும். முக்கியமாக அதுதான் ஆளுமை/அதிகாரம்.

அதனை அறிந்தவர்கள் நன்கு வாழமுடியும்.எதிர்காலம் நிர்ணயிக்க முடியும்.கொஞ்சம் மாற்றி யோசித்தாலும் அது .அபாயகரமானதாகிவிடும்.இதற்கான புதிய நடைமுறையைத் திட்டமிட வேண்டும். நமக்கெல்லாம் நன்றாத் தெரியும்..நம்மை இப்போது இந்த தட்பவெப்ப நிலை பாடாய்படுத்துகிறது..பொறுக்க முடியாத வெயில், திடீர் திடீரென புயல் மற்றும் சூறாவளி .. அதனால் வெள்ளம், எவைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும், இதன் காரணிகள் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும்

எப்படி இதனை தொடர்வது/செய்வது?
  • நாம் சின்ன சின்ன பரிசோதனைகள் மூலம் அறியலாம்.
  • ஒவ்வொன்றையும், குழந்தைகள் மூலம் ஆய்வு செய்து அதன் காரணிகளை, அவற்றின் கூறுகளைத் தனியாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தியும் செய்ய முடியும்
  • அவற்றை ஒரு புதிய கண்டுபிடிப்பு (Innovative )முறையில் செய்ய வேண்டும்
  • சோதனைகள் அவற்றின் கூறுகளை அதன் தன்மை, தரம், அளவு,பாதிப்பு  போன்றவற்றை நிர்ணயிப்பதாக இருக்க வேண்டும்
  • இறுதியில் செய்யப்பட்ட  ஆய்வு என்பது குழந்தைகளின் புரிதலுக்கு தகுந்தவாறு இருக்கவேண்டும்
  • அவர்கள் ஆய்வின் மூலம் தட்பவெப்ப நிலை மற்றும் காலநிலையை முழுமையாக உணர்ந்து கொள்ளும்படியும், அதன் காரணிகளின் ஆளுமைத் தன்மையை புரிந்து கொள்ளும்படியும்  இருக்க வேண்டும்.
  • காரணிகள் எவ்வாறு தட்பவெப்ப நிலையை மாற்றுகின்றன என்பதை குழந்தைகளின் புரிதலுக்கு உள்ளாக்க வேண்டும்
பரிசோதனையின் உட்கூறுகள் (Components ) 
  • சோதனைகள் அந்தந்த ஊரில், உள்ளூர் மாவட்டத்தில் உள்ளதாக  இருக்கவேண்டும்
  • அவை உற்று நோக்கலாகவோ,அளவீடுகளாகவோ அல்லது உங்களின் விருப்பிற்கேற்ப எந்த கூறாக வேண்டுமானாலும் இருக்கலாம்
  • ஆனால் அவை கிடைத்துள்ள தகவலுடன், தட்பவெப்ப  நிலை /கால நிலையுடன் ஒப்பிட்டு தொகுத்து தரவேண்டும்
  • குழநதைகள் செய்யும் ஆய்வின் முடிவுகள், தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக