இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

திங்கள், டிசம்பர் 23, 2013

மாநில புத்தக வாசிப்பு முகாம் - 23-12-2013

தேதி : 23-12-2013

மாநில புத்தக வாசிப்பு முகாம்

            தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கான மாற்றுக் கல்விக்கான புத்தக வாசிப்பு முகாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்கள் தங்கி நடத்தபடுகிறதுஇதுவரை 8 முறை புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றுள்ளதுதற்போது ஒன்பதாவது முறையாக சேலத்தில் நடைபெறுகிறதுஎனவே தங்களுக்கு தொடர்புடைய ஆசிரியர்களை இப்புத்தக வாசிப்பு முகாமில் பங்கு பெறச் செய்யும்படி கேட்டு கொள்கிறோம்.

புத்தகம்
          திருமிகு இரா நடராஜன் அவர்களின்  யாருடைய வகுப்பறை

பதிவுக்கு
1.    திருமிகு நீலாபுத்தக வாசிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் – 97866 26273
2.    திருமிகு பாலசரவணன்மாநில இணை ஒருங்கிணைப்பாளர் – 94861 61283, 89031 61283.

நிகழ்ச்சி நடைபெறும் நாள் - 2013 டிசம்பர் 28ந் தேதி காலை 9.00 மணி முதல் 29ந் தேதி மாலை 05.00 மணி வரை.

நிகழ்ச்சி நடைபெறும்  இடம்
            சமுதாய கூடம்சேலம் உருக்காலைகணபதி பாளையம்கேட் எண்.1
            Admin Hall. Salem Steel Plant, Ganapathypalayam.

போக்குவரத்து
1.    சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ஜங்சன் இரண்டு இடங்களிலிருந்தும் தாரமங்கலம் செல்லும் அனைத்து டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்ஸும் செல்லும்.
2.    பஸ் நிறுத்தம் – சேலம் ஸ்டீல் பிளான்ட்முதல் கேட்.



தொடர்புக்கு
1.    திருமிகு ராமமூர்த்தி – 94864 86755,
2.    திருமிகு பாலசரவணன் - 94861 61283, 89031 61283
3.    திருமிகு K.P. சுரேஷ்குமார் – 94433 91777
4.    திருமிகு மீனாட்சி சுந்திரம் – 75986 70004.
புத்தக வாசிப்பு முகாம் நிகழ்ச்சி நிரல்
            தனியாக இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

புத்தக வாசிப்பு முகாம் நிகழ்ச்சி நிரல்
முதல் நாள் 28/12/2013 சனி

. எண்
நேரம்
நிகழ்ச்சி
தொகுப்பு
கருத்தாளர்
1.
காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
பதிவு


2.
காலை 10.15 முதல் 11.30 வரை
வரவேற்பு
பேராசிரியர் N. மணி, மாநிலத் தலைவர், TNSF.

3
காலை 11.30 மணி முதல் காலை 11.45 வரை
தேநீர் இடைவேளை


4
காலை 11.45 முதல் மதியம் 01.30 வரை
புத்தக வாசிப்பு


5
மதியம் 01.30 முதல்  02.00 வரை
மதிய உணவு


6
மதியம் 02.00 முதல் மாலை 04.00 வரை
தொடர்ந்து புத்தக வாசிப்பு


7
மாலை 04.00 முதல் மாலை 04.30 வரை
தேநீர் இடைவேளை


8
மாலை 04.30 முதல் இரவு 07.00 வரை
தொடர்ந்து புத்தக வாசிப்பு


9
இரவு 07.00 முதல் இரவு 08.15 வரை
கலந்துரையாடல் மற்றும் தொகுப்பு
திருமிகு பாண்டியராஜன்
திருமிகு S. மாடசாமி
10
இரவு 08.15 முதல் இரவு  09.00 வரை
இரவு உணவு


11
இரவு 09.00 முதல் இரவு  10.00 வரை
இரவு வான் நோக்கு நிகழ்ச்சி
திருமிகு ஜெயமுருகன்



இரண்டாம் நாள் 29/12/2013 ஞாயிறு

12
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை
கலந்துரையாடல் மற்றும் தொகுப்பு
திருமிகு தேனி சுந்தர்
பேராசிரியர் விஜியகுமார்
13
காலை 10.30 மணி முதல் காலை 11.00 வரை
தேநீர் இடைவேளை


14
காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 வரை
கலந்துரையாடல் மற்றும் தொகுப்பு
திருமிகு கிருத்திகா
திருமிகு ஹேமாவதி
15
மதியம் 12.00 மணி முதல் மதியம் 01.00 வரை
கலந்துரையாடல் மற்றும் தொகுப்பு
திருமிகு பிரேமலதா
திருமிகு J கிருஷ்ணமூர்த்தி
16
மதியம் 01.00 மணி முதல் மதியம் 02.00 வரை
கலந்துரையாடல் மற்றும் தொகுப்பு

திருமிகு பொன்சேகர்
17
மதியம் 02.00 மணி முதல் மதியம் 02.30 வரை
மதிய உணவு


18
மதியம் 02.30 மணி முதல் மதியம் 03.45 வரை
ஏற்புரை

திருமிகு இரா நடராஜன்
19
மதியம் 03.45 மணி முதல் மதியம் 04.30 வரை
எதிர்கால திட்டம்

ப்ரின்ஸ் கஜேந்திரபாபு


1 கருத்து:

  1. புத்தகம் வாசித்தலும், விவாதித்தலும்: பங்கேற்பாளர்களைக் குழுக்களாக பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் துணைக் குழுக்களாகப் பிரித்து உட்தலைப்புகளைப் படித்து விவாதித்தனர். இவ்வாறு ஒரே நாளில்(காலை 11: 30 மணி முதல் இரவு 7:30 மணி வரை(சில குழுக்கள் மறு நாள் காலையில் 8:45 மணி வரை)) 60-70% புத்தகத்தை படித்து விவாதங்களை மேற்கொண்டனர். இதனிடையே ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பைப் பற்றி மற்ற பங்கேற்பாளர்களுக்கு(மற்ற குழுவினர்களுக்கு) கருத்துகளை பரிமாறுவதற்கு கொடுத்தனர். அதனை முதல் நாள்(28/12/2013) மாலை 7:30 மணியளவிலிருந்து ஒவ்வொரு குழுக்களாக கருத்துகளை முன்வைத்தனர். (இதற்கிடையில் இரவு telescope மூலம் venus ஐ பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.) ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு கருத்தாளர்கள் என கருத்துகளை வழங்கினர். இது 29 ஆம் தேதி மதியம் வரை தொடர்ந்தது.
    இப்புத்தகத்தை படித்தோம், கருத்துகளை விவாதித்தோம், ஆனால் நம் பள்ளியிலுள்ள பிரச்சணைகளை எவ்வாறு அனுகுவது/களைவது? படித்த்தை இங்கேயே விட்டு விட்டுச் செல்வதா? நாம் மாறுவதற்கும், மாற்றத்தை உண்டாக்கவும் என்ன வழி? என்பதை குழுக்களில் கேல்விகளாக எழுப்பினர். அக்கேள்விகளைப் பற்றி விவாதிக்கவோ/ கலந்துரையாடவோ இல்லை.
    இப்புத்தகத்தின் மூலம் ஆசிரியர்களை கல்வி முறை, வகுப்பறை, கற்றல்-கற்பித்தல், கல்வி உளவியல், குழந்தை உரிமைகள் குறித்தும், நம் வகுப்பறையும், குழந்தைகளை அனுகும் முறையும் எவ்வாறு இருந்தால் நல்லது? தற்போதைய முறையின் காரணிகள் முதலியவை பற்றி “சிந்தனை செய் மனமே” என்று ஆசிரியர்களைத் தூண்டுவதே!
    இடைவெளியை நீக்குவது: புத்தக வாசிப்பு முகாம் வெருமனே வாசித்து இரு நாட்களுக்கு பின் தனது வேலை முன்பு செய்தது போல் எந்த மாற்றமின்றி செய்வதற்காக அமைக்கப்பட்டதல்ல. புத்தகத்தை ஆசிரியர் அதற்காகவும் எழுதவில்லை. பங்கேற்பாளர்கள் அதற்காகவும் வரவில்லை.
    பொது மக்கள் ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுகின்றனர். ஆசிரியர்களுக்கு துணைபுரிய வேண்டியவர்களான SCERT, DIET, BRC/BRTE, CRC முதலியோர், சிறந்த கல்வியை உருவாக்க ஆசிரியர்களுக்கு உதவாமல், குற்றங்களை ஆசிரியர்கள் மீது கூறுகிறார்கள். ஆசிரியர்களும் அவர்களுக்கு துணைபிரிகின்ற SCERT, DIET, BRC/BRTE, CRC முதலியோரையும், கல்வி முறையையும், இந்த record, அந்த record என்ற அறிக்கையை கேட்கும் கல்வி முறையையும் குற்றம் கூறுகிறாகள். ஆக அனைவரும் இது சரியில்லை, அது சரியில்லை என்று கூறுவதை விட்டு விட்டு, குழந்தைகளுக்கான கல்வியை சிறப்பாக அளிக்க நமது பங்கு என்ன? இந்திய அரசியலைப்பு முகவுரையில் குறிப்பிட்டுள்ள justice,socialist, equality, secularist, fraternity முதலியவற்றை வருங்கால குடிமகன்களான இன்றைய குழந்தைகளிடையே கல்வி மூலம் கொண்டு சேர்ப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? இப்புத்தகத்தை வாசித்து விவாதித்து தெரிந்து புரிந்து கொண்டு அதை நமது வகுப்பறையில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம்? என்பதை விவாதித்து;எதுவும் பொதுவாக அல்லாமல், தனித்தனியாக அவர்களது வகுப்பறைச் சூழலுக்கு ஏற்றவாரு(உதாரணத்திற்கு: எனது வகுப்பறையில் குழந்தைகளை “u” /”ப” வடிவில் இருக்கையில் அமரச்செய்யலாம். அதனால் குழந்தைகள் விவாதம் செய்ய வசியாக இருக்கும். அனைத்து குழந்தைகளும் ஆசிரியரையும் கரும்பலகையும் மற்ற குழந்தைகளையும் எளிதாக பார்க்க இயலும். இது போன்று எனது வகுப்பறையில் நிகழ்ந்த மாற்றங்களை பதிவு செய்து மற்ற அசிரியர்களிடம் எடுத்துறைக்கலாம்; புத்தகத்தில் குறிப்பிட்டது போல (“ராமலிங்கத்தை தெரியுமா?”) எனது வகுப்பிலுள்ள குழந்தைகளின் இருப்பிடத்திற்குச் சென்று அதன் வீட்டுச் சூழலையும் பெற்றோரைப்பற்றியும் அறிந்து கொண்டு அதற்கேற்ற வாரு activities ஐ திட்டமிட்டு வடிவமைக்கலாம். அதன் விளைவுகளை பதிவு செய்து மற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடலாம்.....)தீர்மாணங்களை எழுதி வைத்து, தனது வகுப்பறையில் நிறைவேற்றப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? எவ்வாறு? என்பதையும், நிறைவேற்றப்படாத தீர்மாணங்கள் என்னென்ன? எவ்வாறு அதை நிறைவேற்றலாம்? என்பதை அடுத்த முகாமில் விவாதித்தால், ஆசிரியரல்லாத இம்முகாமில் பங்கேற்றவர்கள் (மற்றவர்கள்) ஆசிரியகளின் சூழல் என்ன என்பதை புரிந்து கொண்டு, ஆசிரியர்களுக்கும், தனது குழந்தைகளுக்கும், தனது குழந்தைகளின் ஆசிரியர்களுக்கும் தங்களால் எவ்வாறு சிறந்த கல்வியை உருவாக்க துணைபுரிய இயலும் என்பதை தீர்மாணமாக தனது சூழலுக்கு ஏற்றவாரு(specific) எழுதி, அடுத்த முகாமில் நிறைவேற்றப்பட்டதை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்றும், நிறைவேற்றப்படாத்தை எவ்வாறு நிறைவேற்றப்படலாம்? என்பதை அடுத்த முகாமில் விவாதித்தால், இப்புத்தகம் வாசித்தலையும் தாண்டி நடைமுறை படுத்தப்பட்டால், கல்வி முறையில் மாற்றங்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு