இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, மார்ச் 03, 2013

உடனடியாக ஒரு வானவியல் செயல்பாடு

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 2009ம் ஆண்டின் சர்வதேச வானவியல் ஆண்டு நிறைவுபெற்றாலும் அதையொட்டிய சில செயல்பாடுகள் இன்னும் உலகம் முழுவதும் தொடர்ந்து செயல்படுத்துப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று Globe at Night.  
நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.
இரவு 7.30 மணிக்குமேல் வேட்டைக்காரன் (Orion) விண்மீன் தொகுதி வானில் நம் தலைக்கு மேலாக வந்துவிடும். அப்போது அந்த விண்மீன் தொகுதியில் பிரகாசமான நட்சத்திரங்கள்  நம் வெறும் கண்களுக்கு ஏற்படுத்தும் தோற்றத்தினை இந்த மடலுடன் இணைக்கப்பட்டுள்ள 7 படங்களில்  எத்தப் படத்துடன் ஒத்துள்ளது எனச் சொல்லவேண்டும். அவ்வளவுதான்.



உதாரணமாக இன்று கல்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு வானம் மேகம் இல்லாது இருந்தபோது Chart4-ஐ ஒத்திருந்தது.

மிக எளிய செயல்பாடு. எந்த வயதினரும் எந்த அனுபவம் இல்லாதரும் பங்கு கொள்ளக்கூடிய எளிய வானவியல் செயல்பாடு.  வேட்டைக்காரன் விண்மீன் தொகுதி அறிமுகம் இல்லாதவர்கள் துளிர் புத்தகத்தில் வரும் இரவு வான் பகுதியை உபயோகித்துக்கொள்ளலாம்.

தங்கள் மாவட்டத்தின் அனைத்துப்பகுதியிலும் இச்செயல்பாட்டை அங்குள்ள நண்பர்களோ அல்லது துளிர் இல்லக் குழந்தைகளோ செய்யலாம்.

பார்த்தவர்கள் தங்கள் report -ஐ கீழ்கண்ட படிவத்தில் எனக்கு அனுப்பிவைக்கவும். 

1. தேதி
2. பார்த்த நேரம்:
3. கிராமம்/பஞ்சாயத்து/தாலுகா/மாவட்டம்
4. தங்கள் பார்வையுடன் ஒத்துபோகும் Chart Number
5. வானம் எவ்வாறு இருந்தது  (i ) தெளிவாக  (ii) ¼ பகுதி மேகமாக (iii ) ½ பகுதி மேகமாக (iv) >
½பகுதி மேகமாக

இவற்றை தொகுத்து TNSF இயக்கத்தின் செயல்பாடாக நான் அனுப்பிவிடுகிறேன்.

குறிப்பு : செயல்பாடு செய்ய வேண்டிய தேதி மார்ச் 3 - 12

விவரம் தேவையெனில் என் மொபைல் எண்: 9444731336.

மேலும் Globe at Night பற்றி தெரிந்துகொள்ள http://www.globeatnight.org/

அன்புடன்
சே. பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக