வரும் சனிக்கிழமை பிப்ரவரி
16ம் தேதி அதிகாலை 1 மணி அளவில் 2012 DA14 என்ற விண்கல் நம் புவிக்கோளிற்கு மிக அருகாமையில்
கடந்த செல்ல இருக்கின்றது. இந்த விண்கல் தரையிலிருந்து சுமார் 27,700 கி.மீ. உயரத்தில்
கடந்து செல்லும். இந்நிகழ்வு பெரும்பாலவர்களிடையே அச்சத்தைவிட ஆர்வத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த சில கேள்விகளும் பதில்களும்.
இந்த
விண்கல்லை இந்தியாவிலிருந்து காணமுடியுமா?
இரவுப்பொழுதில் இந்தோனேசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின்
கிழக்குப்பகுதிகளின் வழியாக தெற்கு திசையிலிருந்து வடக்கு நோக்கி செல்கிறது. தோற்றப்
பொலிவு குறைந்த இதை வெறும்கண்களால் காணமுடியாவிட்டாலும் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலிருந்து
பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவிகொண்டு இதைக் காணலாம்.
இந்த
விண்கல்லினைப் பற்றிய சிலதகவல்கள்?
சுமார் 50 மீட்டர் நீளமும் (
கால்பந்து மைதானத்தில் பாதியளவு), சுமார் 2லட்சம் டன் நிறையும் உடையது. இந்த விண்கல்
வினாடிக்கு 6.1கி.மீ வேகத்தில் சூரியனை 366 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவருகின்றது.
(பூமி வினாடிக்கு சுமார் 30கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது). பூமியை நெருங்கும்போது
அதன் வேகம் வினாடிக்கு 7.8கி.மீ. ஆகும். இதன் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதைக்கு
10டிகிரி சாய்வாக உள்ளது. இது சிலிகேட் பாறை வகையைச் சார்ந்த்தது.
இது
பூமியின் மீது மோதுவதற்கு வாய்ப்பு உள்ளதா?
பொதுவாக இதுபோன்ற புவி அருகாமை
விண்கற்கள் புவியை நெருங்கும் சில தினங்களுக்கு முன்பாகத்தான் கண்டுபிடிக்கப்படும்.
ஆனால் 2012 DA14 என்ற இந்த விண்கல்லை கடந்த ஆண்டே ஸ்பெயினிலுள்ள ஒரு வான்நோக்குக்கூடம்
இதே பிப்ரவரி மாதத்தில் பூமிக்கு 26லட்சம் கி.மீ. தொலைவில் இருந்தபோது கண்டுபிடித்தது.
அன்றுமுதல் இன்றுவரை சுமார் ஒருவருட காலம் விஞ்ஞானிகள் இதனை தொடர்ந்து கண்காணித்து
அதன் சுற்றுப்பாதையைத் துல்லியமாக கணக்கிட்டுள்ளனர். இதன்படி 2012 DA14 விண்கல் புவியின்மீது
மோதுவதற்கு வாய்ப்பு சிறிதும் கிடையவே கிடையாது என்கின்றனர். ஆனால் ஒரு பதினைந்து நிமிடம்
இடைவெளியில் இவ்விண்கல் மோதுவது தவிர்க்கப்பட்டுள்ளது
என்பது நமக்கு ஆறுதல்தருவதாகும்.
இவ்விண்கல்
பூமியில் மோதினால் என்ன விளைவுகள் ஏற்படும்?
ஒருவேளை இந்தவிண்கல் பூமியில் மோதும்மாறு நெருங்கினால்
அது நம் வளிமண்டலத்திலேயே பல பகுதிகளாக வெடித்துச்சிதறும். அதாவது பூமியின்மேற்பகுதியை
அடைவதற்கு முன்பே எரிந்துவிடும். பூமிகோள் முழுவதும் பாதிப்படையாது. இருப்பினும் அதன்விளைவாக சுமார் (மும்மைபோன்ற நகரம்)
30 கி.மீ விட்டத்திற்குள் உள்ள பகுதி அனைத்தும் எரிந்துவிடும். அதன் ஆற்றல் சுமார்
2.4மெகாடன் TNT அல்லது ஹிரோஷிமா அணுகுண்டைவிட 200மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்.
ஒரு வேளை கடலில் விழுந்தாலும்
பெரிய பாதிப்புகிடையாது. சுமார் 500 அடிக்கும் பெரிதாக உள்ள விண்கற்களால்தான் குறிப்பிடத்தக்க
சுனாமி அலைகளை ஏற்படுத்த இயலும்.
விண்கற்கள்
ஏதும் சமீபத்தில் பூமியில் மோதியது உண்டா?
சைபீரியாவில் துங்கஸ்கா என்ற இடத்தில் 1908 ஆம் ஆண்டு
கிட்டத்தட்ட இதே அளவுடைய விண்கல் விழுந்த்தது. ஆனால் அது வளிமட்டலத்திலேயே எரிந்துவிட்டதால்
நிலப்பகுதியில் பள்ளங்கள் எதையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் சுமார் 1000சதுரமைல்
பரப்பளவிலுள்ள காடுகளிலுள்ள அனைத்து மரங்களும் எரிந்துவிட்டன.
எதிர்காலத்தில்
இதுபோன்று விண்கற்களிலினால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து உண்டா?
இதுவரை
சுமார் 9693 புவி அருகாமை விண்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 861 விண்கற்கள்
1கி.மீ அளவைவிட பெரியவை. மேலும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை 1378 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை பல ஆயிரகணக்கில் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்லது.
எனவே தற்போது இல்லாவிட்டலும் எதிர்காலத்தில் பூமிக்கு நிச்சயம் இவற்றால் ஆபத்து ஏற்படவாய்புள்ளது.
விண்கற்களினால்
ஏற்படும் ஆபத்திலிருந்து பூமியை எவ்வாறு காப்பற்றுவது?
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புவி அருகாமை விண்கற்களின்
பாதை நமக்குத் துல்லியமாக தெரியுமாதலால் ஆபத்து உண்டாக்கும் முன்னர் பூமியிலிருந்து
இராக்கட்டுகளைச் செலுத்தி அவற்றின் பாதையை மாற்றிவிடலாம் அல்லது வான்வெளியிலேயே வெடிக்கச்
செய்யலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் சிலர் அவற்றை கையகப்படுத்தி பூமிக்கு பத்திரமாக
கொண்டுவந்தால் அவற்றிலிருக்கும் விலைமதிப்புமிக்க கனிமங்களை நாம் பெறலாம் என்கின்றனர்.
ஆனால் உண்மையான பிரச்சனை இதுவரை கண்டுபிடிக்கப்படாத புவி
அருகாமை விண்கற்களே ஆகும். அவை நம்மை நெருங்குவதற்கு சிறிது காலத்திற்கு முன்பே கண்டுபிடித்தால்தான்
நான் தற்காப்பு நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்க அவகாசம் கிடைக்கும்.
நன்றி : சே. பார்த்தசாரதி - S.Partha sarathy
இன்று நள்ளிரவு பூமியை நெருங்கும் குறுங்கோள்
By காஞ்சிபுரம்,
First Published : 15 February 2013 06:02 AM IST
First Published : 15 February 2013 06:02 AM IST
விண்வெளி அதிசயத்தில் ஒன்றான குறுங்கோள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூமிக்கு அருகில் கடந்து செல்ல இருக்கிறது.
விண்வெளி அதிசயத்தில் ஒன்றான அஸ்ட்ராய்டு என்ற குறுங்கோள் ஒன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2012 ஈஅ 14 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தரையிலிருந்து சுமார் 27,700 கி.மீ. உயரத்தில் கடந்து செல்லும். இந்நிகழ்வு பெரும்பாலானவர்களிடையே அச்சத்தைவிட ஆர்வத்தையே ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் நள்ளிரவு 2 மணிக்குள் இந்த குறுங்கோள் இந்தோனேசியா மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் வழியாக தெற்கு திசையிலிருந்து, வடக்கு நோக்கி செல்கிறது. சுமார் 50 மீட்டர் நீளமும் (கால்பந்து மைதானத்தில் பாதியளவு), சுமார் 2 லட்சம் டன் நிறையும் உடையது. இந்த குறுங்கோள் வினாடிக்கு 6.1 கி.மீ வேகத்தில் சூரியனை 366 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவருகின்றது. (பூமி விநாடிக்கு சுமார் 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது). பூமியை நெருங்கும்போது அதன் வேகம் வினாடிக்கு 7.8 கி.மீ. ஆகும். இதன் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதைக்கு 10 டிகிரி சாய்வாக உள்ளது. இது சிலிகேட் பாறை வகையைச் சார்ந்த்தது.
இதுவரை புவி அருகாமையில் சுமார் 9,693 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 861 குறுங்கோள்கள் 1 கி.மீ அளவைவிட பெரியவை. மேலும் பூமிக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை 1,378 குறுங்கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை பல ஆயிரக்கணக்கில் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் முனுசாமி தெரிவித்தார்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் ஐயம்பெருமாள் கூறியது: இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதை விண்கற்கள் என்று கூறமுடியாது. இதை குறுங்கோள்கள் என்று அழைப்பதுதான் சரி. இதை பார்க்கமுடியும் என்று ஒருசிலர் கூறுகின்றனர். இக்கோள்களுக்கு ஒளிரும் தன்மை இல்லாததால் இதைப் பார்க்க முடியாது. வான்வெளி மையங்களில் உள்ள தொலைநோக்கியால் மட்டுமே இதைப் பார்க்க முடியும். அதில்கூட இது ஒரு புள்ளி அளவில்தான் தெரியும். இது பூமியில் விழுந்து நொறுங்கும் என்ற அச்சமும் பொதுமக்களுக்கு தேவையில்லை என்றார் ஐயம்பெருமாள்.
Source: Dinamani

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக