இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

வெள்ளி, பிப்ரவரி 15, 2013

தேசிய அறிவியல் தினம் - 2013 போட்டிகள்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடி வருவதுதாங்கள் அறிந்ததேநமது இயக்கம் மட்டுமே அறிவியல் தினத்தை பள்ளிகல்லூரிகளிலும் மற்றும்கிராமங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதுஅதேபோல் இந்தஆண்டும் அனைத்து மட்டத்திலும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


போட்டி
பிரிவு
போட்டிகள்
தலைப்புகள்
6,7,8 வகுப்புகள்
ஓவியப்போட்டி
புத்தம் புது பூமி வேண்டும்
முதல் 12 வகுப்புவரை
கட்டுரைப்போட்டி
21ம் நூற்றாண்டில் இந்தியா
கல்லூரிமாணவர்கள்
கவிதைப்போட்டி
விளைநிலமா..?விலைநிலமா..?
ஆசிரியர்கள்
கட்டுரைப்போட்டி
இன்றைய கல்விமுறை
பார்வை – பிரச்சனை - தீர்வுகள்



ஓவியப்போட்டிக்கான விதிமுறைகள்
·         A ‘5’ சார்ட்டில் வரையப்பட வேண்டும்ஒருவர் ஒரு ஓவியம் மட்டுமே வரைய வேண்டும்.

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள்
·         கட்டுரைப்போட்டி 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
·         A ‘4’ வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்டைப் செய்யாமல் கையெழுத்தால்மட்டுமே எழுதி அனுப்பவேண்டும்.

ஆசிரியர்களுக்கு கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள்
·         10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
·         A ‘4’ வெள்ளைத்தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்டைப் செய்யாமல் கையெழுத்தால்மட்டுமே எழுதி அனுப்பவேண்டும்.
·         கட்டுரைகள் சொந்த அனுபவத்தின் வாயிலாக இருக்க வேண்டும்.

கவிதைப்போட்டிக்கான விதிமுறைகள்
·         கவிதைகள் புதுக்கவிதையாகவோ மரபுக்கவிதையாகவோ இருக்கலாம்.
·         குழந்தைகளை ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம்.எனவே குழந்தைகள் சொந்தமாக எழுதவேண்டும்.
·         கையெழுத்தாக இருக்கவேண்டும்டைப் செய்து அனுப்பக்கூடாது.
```````````````````````
·         சிறந்த படைப்புக்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்  இதழ்களான துளிர்ஜந்தர் மந்தர்விழுது,விஞ்ஞானச்சிறகுஅறிவுத்தென்றல் ஆகியவற்றில் வெளியிடப்படும்.
·         மாநில அளவில் பங்கேற்கும் படைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.மாநில அளவில் தேர்வுசெய்யப்படுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்மாவட்டத்தில் பரிசுகள் வழங்கவும் திட்டமிடலாம்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக