01/12/2012 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாத இதழான துளிர் இதழ் 25வது வருடம் ஆனதை கொண்டாடும்விதமாக “துளிர் வெள்ளி விழா போட்டிகள்” கவிதை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு ஜெயக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பாளாராகவும், திருமிகு செங்கோட்டுவேல் மற்றும் திருமிகு சஹிரா இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் இருந்து நடத்தினார்கள்.
இப்போட்டிகளில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிருந்து 25 பள்ளிகளிலிருந்து 350 மாணவ, மாணவிகள்
கலந்து கொண்டனர்.
காலை 11.00 மணிக்கு துவக்க விழாவில் அறிவியல் இயக்க மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு சந்திரசேகர் தலைமையில், வரவேற்பு திருமிகு ஸ்ரீனிவாசன், கல்லூரி தாளாளர் திருமிகு மணிகண்டன், முதல்வர் திருமிகு ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் திருமிகு நிறைமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அறிவியல் எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் துளிர் இதழ் பற்றியும், வெள்ளிவிழா பற்றியும் உரையாற்றினார்.
மதியம் 02.30
மணிக்கு “கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு
50% இட ஒதுக்கீடு தேவையா? இல்லையா?” என்ற தலைப்பில் மாணவர்களின் கலந்துரையாடலும், “மாணவர்களின்
வளர்ச்சிக்கு தேவை கட்டுபாடா? சுதந்திரமா?” என்ற தலைப்பில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்வை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு இமயபாலன் அவர்கள்
ஒருங்கிணைத்தார்.
மாலை 04.00
மணிக்கு பரிசளிப்பு விழா அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் டாக்டர் சாம்சன்
ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. திருமிகு சிவக்குமார்,
மாவட்டச் சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர், முதன்மை
கல்வி அலுவலகம், சேலம் அவர்கள் பங்கேற்று “குழந்தைகள் தினவிழா” பற்றி உரையாற்றினார்.
பிறகு வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் டாக்டர் சாம்சன் ரவீந்திரன், திருமிகு சிவக்குமார், தங்கமயில் ஜுவல்லர்ஸ் மேலாளர்
திருமிகு முத்துகுமார், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திருமிகு
ராமமூர்த்தி, துணைத் தலைவர்கள் திருமிகு பவளவள்ளி, திருமிகு சந்திரசேகர் ஆகியோர் பரிசளித்தனர். திருமிகு
கோபால் அவர்கள் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
எ
ண்
|
போட்டி
|
தலைப்பு
|
வகு
ப்பு
|
கலந்து
கொண்
டவர்கள்
|
பரிசு
பெற்ற
மாணவர்
|
பள்ளி
|
ஊர்
|
|
1
|
கவிதை
|
கனவு
|
6,
7,
8
|
23
|
முதல்
|
பா. கோகுல்
|
சரஸ்வதி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
ஆத்தூர்
|
இரண்டு
|
அ. புவனேஸ்வரி
|
ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி
|
வன்னியனூர்
|
|||||
மூன்று
|
இளவரசன்
|
செங்குந்தர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
|
தாரமங்கலம்
|
|||||
ஏக்கம்
|
9,
10
|
20
|
முதல்
|
ச. திரேகா
|
ஹோலி
ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
சேலம்`
|
||
இரண்டு
|
S.
சுதா
|
அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளி
|
ஜலகண்டாபுரம்
|
|||||
மூன்று
|
ம. காவியா
|
செயின்
ஜான் பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலை பள்ளி
|
காமலாபுரம்
|
|||||
மெளனம்
|
11,
12
|
15
|
முதல்
|
வி. விகேக்
|
சரஸ்வதி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
ஆத்தூர்
|
||
இரண்டு
|
வ. வீணாஸ்ரீ
|
ஹோலி
ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
சேலம்`
|
|||||
மூன்று
|
வி. பொன்சிகா
|
மால்கோ
விதயாலாயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
மேட்டூர்
|
|||||
2
|
பேச்சு
|
எதிர்கால
இந்தியா குழந்தகளின் கையில்
|
6,
7,
8
|
57
|
முதல்
|
எ. தீபா
|
ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி
|
கிருஷ்ணன்புதூர்
|
இரண்டு
|
வி. நந்தினி
|
சரஸ்வதி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
ஆத்தூர்
|
|||||
மூன்று
|
பி. லோகநாயகி
|
அரசு
மகளிர் மேல்நிலைப் பள்ளி
|
ஜலகண்டாபுரம்
|
|||||
புதியதோர்
உலகம் செய்வோம்
|
9,
10
|
21
|
முதல்
|
வி. சபரி ஆனந்த்
|
அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
|
ஆத்தூர்
|
||
இரண்டு
|
எஸ். ஜனனி
|
ஹோலி
ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
சேலம்`
|
|||||
மூன்று
|
பி. வைரவேல்
|
நிர்மலா
மேல்நிலைப் பள்ளி
|
கொளத்தூர்
|
|||||
கனவுகளை
விதைப்போம் நனவுகளை அறுப்போம்
|
11,
12
|
11
|
முதல்
|
எம்.விஜய சூர்யா
|
நிர்மலா
மேல்நிலைப் பள்ளி
|
கொளத்தூர்
|
||
இரண்டு
|
ஜெ. திவ்ய பாரதி
|
சரஸ்வதி
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
ஆத்தூர்
|
|||||
மூன்று
|
JR ரமா பிரபா
|
ஹோலி
ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
|
சேலம்`
|
நன்றி
இப்படிக்கு,
வெ. ராமமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
சேலம்
மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக