1.அமைப்பு
நமது மாவட்டத்திர்க்கான மாநில பொறுப்பாளர்கள்
மாநிலத் தலைவர் Dr. N மணி (மாநில நிர்வாகக்குழு)
மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் (மாநிலச் செயற்குழு)
நமது மாவட்டத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
திருமிகு P. சகஸ்ரராமம்,
திருமிகு ஏற்காடு. இளங்கோ, திருமிகு V.ராமமூர்த்தி,
திருமிகு J. பாலசரவணன், திருமிகு K.P.
சுரேஷ்குமார், திருமிகு R. பவளவள்ளி மற்றும்
திருமிகு M. கற்பகம்.
நமது மாவட்டத்தின் மாநிலச்
செயற்குழு உறுப்பினர்கள்
திருமிகு
P.
சகஸ்ரராமம் மற்றும் திருமிகு V. ராமமூர்த்தி.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
சேலம் மாவட்டத்தின் 10
வது மாவட்ட மாநாடு 24-07-2011, ஞாயிறு அன்று
ஜான்சன் பேட்டையிலுள்ள LIC ஊழியர் சங்கத்தின் சுனில் மைத்ரா
நினைவரங்கில் நடைப்பெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், மற்றும் மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் ஆகியோருக்கு தபாலில் அனுப்பப்பட்டது அதற்கு பிறகு கடந்த ஓராண்டில்
நடைபெற்ற வேலைகள் சமர்பிக்கப்படுகிறது.
வாரம்தோறும் வியாழன் மாலை 7
மணிக்கு வாரக்கூட்டம் நடைபெறுகிறது.
அதில் நடைப்பெற்ற
வேலைகள் மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்படுகிறது .
திருமிகு S.நமச்சிவாயம் அவர்கள் ஒத்துழைப்புடன் மாவட்ட அலுவலகம் தினமும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை செயல்பட்டு
வந்தது. 2012 ஜுலை முதல் நமச்சிவாயம் அவர்கள் மருத்துவமனை பணிக்கு செல்வதால்
அலுவலகம் வியாழன் மாலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் செயல்படுகிறது. .
மாநில மாநாடு 2011
மாநில மாநாடு 2011 ஆகஸ்ட்
12,13,14 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் வானவில் திருமண மண்டபத்தில்
நடைப்பெற்றது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரராமம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு B.S.இளங்கோ, திருமிகு V. ராமமூர்த்தி, திருமிகு J.
பாலசரவணன், மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ்,
மாவட்டத் துணைத்தலைவர்கள் திருமிகு K.P. சுரேஷ்குமார்,
திருமிகு R. பவளவள்ளி, திருமிகு K. சந்திரசேகர்,
மாவட்ட இணைச் செயலாளர்கள் திருமிகு D. திருநாவுக்கரசு,
திருமிகு N. கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
திருமிகு S. அய்யனார், திருமிகு E. தில்லைக்கரசி,
திருமிகு சாந்தஷீலா, பேராசிரியர் முருகேசன் ஆகியோர் சேலம் மாவட்டம் சார்பாக
மாநாட்டுப் பிரதிநிதிகளாகக் கலந்து
கொண்டனர்.
செயற்குழுக் கூட்டம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
எண்ணிக்கை – 42
கூட்ட
எண்
|
தேதி
|
இடம்
|
தலைமை
|
மாநில
நிர்வாக / செயற்குழு பொறுப்பாளர்
|
மாவட்ட
செயற்குழு உறுப்பினர்களில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை
|
சிறப்பு
அழைப்பாளர்கள்
|
1
|
28/08/2011
ஞாயிறு
|
சேலம்
அரசு கலைக் கல்லூரி
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
______
|
34
|
|
2
|
24/12/2011
சனி
|
திருமிகு
சீனிவாசகரின் Nice
Kids College
|
உதவித்
தலைவர் திருமிகு K.P.
சுரேஷ்குமார்
|
______
|
16
|
திருமிகு
விஸ்வநாதன், திருமிகு முரளிதரன், திருமிகு சந்தோஷ்குமார்
|
3
|
27/05/2012
ஞாயிறு
|
விநாயகா
வித்யாலயா பள்ளி
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
________
|
8
|
திருமிகு
செங்கோடன், திருமிகு கலையரசன்
திருமிகு
தினேஷ்குமார்
|
இராண்டாவது மாவட்டச் செயற்குழு
கூட்டம் தாரமங்கலத்தில்
கிளைச் செயலாளர் திருமிகு ரமேஷ் மற்றும் உறுப்பினர்களால் 12/12/2011 திட்டமிடல்
கூட்டம் நடத்தி சிறப்பாகச் செய்யப்பட்டது.
மாவட்ட
நிர்வாகக்குழு கூட்டம்
மாவட்ட
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 15
நிரந்தர
அழைப்பாளர்கள் 1
கூட்ட எண்
|
தேதி
|
இடம்
|
தலைமை
|
மாநில நிர்வாக / செயற்குழு
பொறுப்பாளர்
|
மாவட்ட நிர்வாகக்குழு
உறுப்பினர்களில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை
|
சிறப்பு அழைப்பாளர்கள்
|
1
|
03/08/2011 புதன்
|
மாவட்ட
அலுவலகம்
|
திருமிகு
K.சந்திரசேகர்
|
___________
|
10
|
____________________
|
2
|
16/09/11 புதன்
|
திருமிகு
D.
திருநாவுக்கரசு இல்லம்
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
____________
|
11
|
_____________________
|
3
|
07/12/2011 புதன்
|
மாவட்ட
அலுவலகம்
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
Dr.N மணி
|
9
|
மாநிலச்
செயலாளர் திருமிகு S சுப்ரமணி
|
4
|
09/02/2012 வியாழன்
|
மாவட்ட
அலுவலகம்
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
____________
|
9
|
திருமிகு S.அய்யனார், திருமிகு P.செங்கோடன், திருமிகு R.
ஜெயகுமார், திருமிகு M கலையரசன்.
|
5
|
23/03/2012 வியாழன்
|
திருமிகு
N.
கோபால் இல்லம்
|
திருமிகு
M.கற்பகம்
|
____________
|
8
|
திருமிகு
R.K.லால்,
திருமிகு
P.செங்கோடன், திருமிகு R.ஜெயகுமார்
|
6
|
18/08/2012 சனி
|
மாவட்ட
அலுவலகம்
|
Dr.R.சாம்சன் ரவீந்திரன்
|
திருமிகு சேதுராமன்
|
8
|
திருமிகு
மீனாட்சி சுந்திரம், திருமிகு R. ஜெயகுமார்
|
மாநிலச் செயற்குழு கூட்டம்
முதல்
மாநிலச் செயற்குழு கூட்டம் 04/09/11 அன்று ஈரோட்டில் நடைப்பெற்றது.
மாவட்டச் செயலாளர் திருமிகு V. ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
இராண்டவது மாநில செயற்குழு கூட்டம்
7,8/1/2012 ஆகிய இரு நாட்கள் சேலத்தில் நடத்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில்
பேசி மாநில பொறுப்பாளர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அம்முடிவின்படி சேலம்
உருக்காலையின் திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு உருக்காலையின் பொது மேலாளரை மோகன்
நகர் கிளை தலைவர் திருமிகு சர்மா, கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்தரம் மற்றும்
திருமிகு.K.P.
சுரேஷ்குமார் ஆகியோர் சந்தித்து அனுமதி பெற்றனர்.
மாநிலச் செயற்குழு கூட்டத்திற்கு
வருகைத்தரும் மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு தொடர்பு எண்களாக திருமிகு
ராமமூர்த்தி, திருமிகு.K.P.
சுரேஷ்குமார் மற்றும் மோகன் நகர் கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி
சுந்தரம் அவர்களின் கைப்பேசி எண் மாநிலத்திற்கு கொடுக்கபட்டது.
18/11/2011 ஞாயிறு
அன்று மாநிலச் செயற்குழு கூட்டம் நடத்த திட்டமிடும் கூட்டம் மோகன் நகர் கிளை
சார்பாக உருக்காலை மனமகிழ் மன்றத்தில் நடைப்பெற்றது. அதில் மாவட்டச் செயலாளர்
திருமிகு ராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ்,
மாவட்ட துணைத் தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார், மாவட்ட
இணைச்செயலாளர் திருமிகு பாலசரவணன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு ஜெயமுருகன், மோகன் நகர் கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்தரம் மற்றும்
கிளை பொருளாளர் திருமிகு பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதி மற்றும்
கூட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் விரிவாக விவாதிக்கபட்டது.
இரண்டாவது மாநிலச் செயற்குழுக்
கூட்டம் 2012 ஜனவரி 6 மற்றும் 7ந் தேதிகளில் சேலம் உருக்காலை சமுதாயக்கூடத்தில் நடைப்பெற்றது.
உணவு மற்றும் வேண்டிய அனைத்தும் ஏற்பாடுகளும் மோகன் நகர் கிளைத்தலைவர் திருமிகு
சர்மா, கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், கிளைப் பொருளாளர்
திருமிகு பத்மநாபன், கிளை உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி மாவட்ட
உதவித் தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் திருமிகு T.ஜெயமுருகன் ஆகியோரால் சிறப்பாக செய்யப்பட்டது.
உபக்குழு நிகழ்ச்சிகளில் மாவட்டத்
தலைவர் Dr.R.சாம்சன் ரவீந்திரன், திருமிகு G.சுரேஷ், திருமிகு
J. பாலசரவணன், திருமிகு S. அய்யனார், திருமிகு
சஹிரா பேகம், திருமிகு K.சந்திரசேகர், திருமிகு
விஜியலக்ஷ்மி, ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர்
திருமிகு சீனீவாசன் ஆகியார் கலந்து கொண்டனர்.
6ந்தேதி இரவு தொலைநோக்கி நிகழ்ச்சி
திருமிகு T.ஜெயமுருகன் அவர்களால் நடத்தப்பட்டது.
6ந் தேதி மாலை கூடங்குளம் அணுமின்
உலை மற்றும் முல்லை பெரியாறு அணை பற்றிய இரு கருத்தரங்குகள் நடைப்பெற்றது. மாவட்ட
முழுவதும் இருந்து அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில்
திருமிகு P.சகஸ்ரநாமம்
மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டனர்.
மாநிலச் செயற்குழுக் கூட்ட உணவு
ஏற்பாடு ஊராட்சி தலைவர் திருமிகு சுமதி முருகேஷன் அவர்களால் செய்யப்பட்டது.
மூன்றாவது மாநிலச் செயற்குழுக்
கூட்டம்
மூன்றாவது மாநிலச்
செயற்குழுக் கூட்டம் 2012 மே 19 மற்றும் 20ந் தேதிகளில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்
நடைப்பெற்றது. திருமிகு V.ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
மாவட்ட நிர்வாக, செயற்குழு கூட்டத்தில்
விவாதிப்பதற்கு அனைத்து மாநில செயற்குழு அறிக்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
கிளைச் செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது
கிளை.
மாவட்டத்திலுள்ள
கிளைகள்
வ. எண்
|
கிளை
பெயர்
|
தலைவர்
|
செயலாளர்
|
பொருளாளர்
|
உறுப்பினர்
எண்ணிக்கை
|
1
|
சேலம் மாநகரம்
|
திருமிகு M.கற்பகம்
96594 53089
|
திருமிகு R.K.லால் 94436 97772
|
ஐடா பிரிசில்லா 99443 74623
|
18
|
2
|
மோகன் நகர்
|
திருமிகு சர்மா
94442 292918
|
திருமிகு மீனாட்சி
சுந்தரம் 75986
70004
|
திருமிகு பத்மநாபன் 94438 86900
|
|
3
|
குகை
|
திருமிகு ரேவதி
|
திருமிகு கோகிலா
99448 27126
|
திருமிகு தாரணி
|
|
4
|
ஆத்தூர்
|
திருமிகு ஆ. அர்த்தநாரி
94421 87457
|
திருமிகு ஸ்ரீனிவாசன் 90802 07097
|
திருமிகு K பதமினி விஸ்வநாதன்
98944 46810
|
36
|
5
|
தாரமங்கலம்
|
திருமிகு R ரமேஷ் 98941 66227
|
திருமிகு சந்தோஷ்குமார்
98439 15648
|
திருமிகு P கார்த்திக் 96004 40832
|
19
|
6
|
கன்னந்தேரி
|
திருமிகு K.சந்திரசேகர்
94439 39832
|
திருமிகு R. ஜெயகுமார்
99651 61955
|
||
7
|
நல்லண்ணம்பட்டி
|
திருமிகு மொட்டையக்
கவுண்டர்
|
திருமிகு T
விஜியலஷ்மி
95784 22902
|
திருமிகு P செங்கோடன்
94865 96174
|
13
|
மேட்டூர், கோனேரிப்பட்டி,
இடைப்பாடி போன்ற இடங்களில் கிளைகள் செயல்பாடு இல்லை. வருங்காலத்தில்
இப்பகுதியிலுள்ள நண்பர்கள் கிளைகளை உருவாக்கிச்
செயல்பட வேண்டும்.
ஆத்தூர் கிளைக் கூட்டம்
19/09/11 அன்று சின்னசாமி அய்யா நடுநிலை பள்ளியில் நடைப்பெற்றது. 5 பேர் மட்டும்
கலந்து கொண்டதால் மீண்டும் கிளை நிர்வாகக்குழுக் கூட்டம் நடத்துவது என முடிவு
எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் திருமிகு G.சுரேஷ் மற்றும் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு N. கோபால்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
29/04/2012 அன்று குகை
கிளை அமைப்புக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். 5 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக்கபட்டது.
தலைவராக திருமிகு ரேவதி அவர்களும், துணைத் தலைவராக திருமிகு செளடஸ்வரி அவர்களும்,
செயலாளராக திருமிகு கோகிலா அவர்களும், இணைச்செயலாளராக ராம்பிரசாத் அவர்களும்,
பொருளாளராக திருமிகு தாரணி அவர்களும் தெர்தெடுக்கபட்டனர்.
07/05/2012 அன்று குகை நிர்வாகக்குழுக்
கூட்டம் நடைப்பெற்றது. மாவட்டத்திலிருந்து திருமிகு G. சுரேஷ்
மற்றும் திருமிகு அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டார்.
துளிர் இல்லம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு G. சுரேஷ்
எண்
|
துளிர் இல்ல பெயர்
|
துவக்கம்
|
பதிவு
|
பெ/ஆ
|
ஒருங்கிணைப்பாளர்
|
கிளை / பகுதி
|
1
|
G.D.நாயுடு அறிவியல்
|
15.04.2005
|
உண்டு
|
10 / 8
|
பொ.பழனி
97877 38822
|
திரு சின்னசாமி அய்யா.அ.உ.ந.ப ஆத்தூர்
|
2
|
கலாம்
|
22.08.2011
|
உண்டு
|
9 / 11
|
தெ.வினோத்குமார்
94879 59725
|
மலர் மெட்ரிக் ஆத்தூர்
|
3
|
ஐன்ஸ்டீன்
|
உண்டு
|
9 / 11
|
S.மலர்
|
ஊ.ஓ.ந.ப
கன்னந்தேரி
|
|
4
|
சர்.சி.வி ராமன்
|
உண்டு
|
4 / 16
|
க.சந்திரசேகர்
94439 39832
|
ஊ.ஓ.ந.ப
கன்னந்தேரி
|
|
5
|
தாமஸ் ஆல்வா எடிசன்
|
உண்டு
|
12 / 8
|
இரா.ஜெயக்குமார்
99651 61995
|
ஊ.ஓ.ந.ப
கன்னந்தேரி
|
|
6
|
ஐன்ஸ்டீன்
|
உண்டு
|
6 / 9
|
97887 28669
|
ஊ.ஓ.ந.ப
நல்லண்ணம்பட்டி
|
|
7
|
ரூதர்போர்டு
|
உண்டு
|
9 / 6
|
ப.செங்கோடன்
94865 96174
|
ஊ.ஓ.ந.ப
நல்லண்ணம்பட்டி
|
|
8
|
ஜெகதீஸ் சந்திரபோஸ்
|
உண்டு
|
6 / 9
|
டி.விஜயலட்சுமி
95784 22905
|
ஊ.ஓ.ந.ப
நல்லண்ணம்பட்டி
|
|
9
|
டார்வின்
|
உண்டு
|
0 / 20
|
M.ஷாஹிரா
99654 76203
|
அ.உ.ப எருமாபாளையம்
|
|
10
|
G.D.நாயுடு
|
உண்டு
|
4 / 6
|
D.ஹேமா 98405 52366
|
அன்னதானப்பட்டி
|
|
11
|
விஞ்ஞானி ஹோமி பாபா
|
24.11.2010
|
உண்டு
|
10 / 10
|
வெ.சீனிவாசன்
94865 17865
|
ஊ.ஓ.ந.ப
பட்டுத்துறை
|
12
|
ரைட் சகோதரர்கள்
|
04.07.2011
|
உண்டு
|
13 / 7
|
சா.த.கணேசன்
96004 94585
|
ஊ.ஓ.ந.ப
பட்டுத்துறை
|
13
|
சர்.சி.வி ராமன்
|
உண்டு
|
9 / 6
|
G.மணிகண்டன்
99766 07093
|
ஊ.ஓ.ந.ப
சாத்தப்பாடி
|
|
14
|
நியூட்டன்
|
உண்டு
|
10 / 1
|
E.பாலாஜி 99944 77044
|
மோகன்நகர்
|
|
15
|
மார்கோனி
|
உண்டு
|
6 / 9
|
சத்யா
|
வேம்படித்தாளம்
|
|
16
|
எட்வர்ட் ஜென்னர்
|
உண்டு
|
4 / 5
|
ரேவதி
|
சிண்ணப்பம் பட்டி, எடப்பாடி
|
|
17
|
சந்திரசேகர்
|
உண்டு
|
8 / 8
|
பிரதாப்
|
மல்லிக்குட்டை, ஓமலூர்
|
|
18
|
கல்பனா சாவ்லா
|
உண்டு
|
8 / 6
|
அழகேசன்
|
பெரியப்பட்டி காலனி, ஓமலூர்
|
|
19
|
ஐன்ஸ்டீன்
|
உண்டு
|
9 / 11
|
அமுதா
|
விரக்கல்புதூர் காலனி, மேட்டூர்
|
|
20
|
சர்.சி.வி ராமன்
|
உண்டு
|
7 / 13
|
ஐயப்பன்
|
தாதப்பிள்ளையூர் காலனி, அமரகுந்தி
|
|
21
|
நியூட்டன்
|
உண்டு
|
7 / 6
|
இரத்தினம்மாள்
|
வெள்ளக்கல்பட்டி
ஓமலூர்
|
|
22
|
ஜெகதீஸ் சந்திரபோஸ்
|
உண்டு
|
8 / 12
|
செல்வி
|
இராசிமணியான்னூர்
காடையம்பட்டி
|
|
23
|
டார்வின்
|
உண்டு
|
10 / 10
|
பூர்ணிமா
|
ஏழுமத்தானூர் காலனி, இளம்பிள்ளை
|
|
24
|
கலிலியோ
|
உண்டு
|
12 /
7
|
மாணிக்கம்
|
துட்டம்பட்டி ஓமலூர்
|
|
25
|
ஆல்ஃப்ரட் நோபல்
|
உண்டு
|
6 / 14
|
K. தேன்மொழி
83657 48619
|
புதுப்பேட்டை, நகர், வனவாசி
|
|
26
|
புருனோ
|
உண்டு
|
8 / 12
|
S. ரேவதி 9865277561
|
பூமிரெட்டிப்பட்டி பெரியசோரகை
|
|
27
|
கோப்பர் நிகஸ்
|
உண்டு
|
11 / 9
|
P.செந்தில் 9003634258
|
பெரியசோரகை
|
|
28
|
டாவின்சி
|
உண்டு
|
7 / 7
|
R.J.மகேந்திரன் 9092767907
|
இளம்பிள்ளை
|
|
29
|
ஆர்க்கிமிடிஸ்
|
உண்டு
|
7 / 3
|
M.கவிதா 97914 07274
|
தொளசம்பட்டி
|
|
30
|
மலரும் பூக்கள்
|
இல்லை
|
3 / 13
|
தி.அஜித் குமார்
99432 76338
|
தாரமங்கலம்
|
|
31
|
கல்பனா சாவ்லா
|
இல்லை
|
1 / 8
|
திருமிகு.காந்தி
|
சேலம் அழகாபுரம்
|
|
32
|
சர்.சி.வி ராமன்
|
இல்லை
|
திருமிகு.ரேவதி
|
குகை, சேலம்
|
||
33
|
ஆல்ஃப்ரட் நோபல்
|
இல்லை
|
வனவாசி
|
|||
34
|
சர் ரூதர்போர்டு
|
இல்லை
|
ஊ.ஓ.ந.ப
கிருஷ்ணன்புதூர்
|
|||
35
|
இல்லை
|
செங்கோட்டுவேல்
|
ஊ.ஓ.ந.ப தாரமங்கலம்
|
|||
22/08/2011
அன்று ஆத்தூர் மலர் மெட்ரிக் பள்ளியில் துளிர் இல்ல துவக்க விழா நடைப்பெற்றது.
அதில் மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு N.கோபால், ஆத்தூர்
கிளைத் தலைவர் திருமிகு அர்த்தநாரி மற்றும் கிளைச் செயலாளர் திருமிகு P. ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
23/08/2011
அன்று கன்னந்தேரி கிளையின் சார்பாக கன்னந்தேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
துளிர் இல்ல துவக்க விழா நடைப்பெற்றது. அதில் மாவட்ட துணைத் தலைவர் திருமிகு K.சந்திரசேகர், மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ்,
கிளைச் செயலாளர் திருமிகு R.ஜெயக்குமார் மற்றும் கிளை
உறுப்பினர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 30 மாணவர்கள் கலந்து கொண்டனர். துளிர்
இல்ல ஒருங்கிணைப்பாளர்களாக பள்ளியின் முன்னாள் மாணவிகள் திருமிகு V.தெய்வாணை மற்றும் M. கோமதி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
30/08/2011 அன்று தலைவாசல்
கிளை சார்பாக பேராசிரியர் முருகேசன் மற்றும் பேராசிரியர் பிரகாஷ் ஆகியோரின்
ஒருங்கிணைப்பில் துளிர் இல்ல துவக்க நிகழச்சி நடைப்பெற்றது. மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டார். திருமிகு சாமிநாதன் துளிர் இல்லம் பற்றிய
விபரங்களை தெரிவித்தார். திருமிகு சத்தியமூர்த்தி காகித மடிப்பு கலை நிகழ்ச்சி
நடத்தினார்.
08/04/2012 அன்று செவ்வாய்பேட்டை
நரசிம்மன் ரோடு பகுதியில் 30 குழந்தைகளுக்கு திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யனார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் 3 மணி நேரம் பாடல், கதை,
விளையாட்டு, அறிவியல் என அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தினர். குழந்தைகள் அனைவரும்
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்.
15,22,29/04/2012
மற்றும் 06/05/2015 ஆகிய நான்கு நாட்கள் செவ்வாய்பேட்டை நரசிம்மன் ரோடு பகுதியில்
30 குழந்தைகளுக்கு திருமிகு G. சுரேஷ், திருமிகு தினேஷ்,
திருமிகு S. அய்யனார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர்
கருத்தாளர்களாக கலந்து கொண்டு அறிவியல் நிகச்சிகளை நடத்தினார்கள்.
13/05/2012 அன்று
குகையில் சர்.சி.வி.ராமன் துளிர் இல்லத்தில் திருமிகு கலையரசன் அறிவியல்
நிகச்சிகளை நடத்தினார். திருமிகு சண்முகசுந்திரம், குகை கிளைத் தலைவர் மற்றும்
துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளருமான திருமிகு ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
15/05/2012 அன்று
கன்னந்தேரியில் துளிர் இல்ல பயிற்சி மற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது, 60
குழந்தைகள் கலந்து கொண்டனர். கருத்தாளாராக திருமிகு மணிகண்டன் கலந்து கொண்டார்.
19/05/2012 நெத்திமேடு
ஜி.டி. நாயுடு துளிர் இல்லத்தில் திருமிகு ஹேமா அவர்களின் ஒருங்கிணைப்பில் முதல்
துளிர் இல்ல நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் திருமிகு G. சுரேஷ் மற்றும் திருமிகு ஐடா பிரிசில்லா கலந்து கொண்டனர்.
26/06/2012 அன்று வனவாசியில் “ஆல்ப்ரட் நோபல்”
துளிர் இல்லம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருமிகு G. சுரேஷ், திருமிகு சாகிராபேகம், திருமிகு
ரமேஷ், திருமிகு செங்கோட்டுவேல் மற்றும் தாரமங்கலம் கிளை நண்பர்கள் கலந்து
கொண்டனர்.
15/07/2012 அன்று அழகாபுரம் சின்னகுட்டை கல்பனா சாவ்லா துளிர் இல்ல
நிகழ்ச்சியாக அறிவியல்
கண்காட்சி நடைப்பெற்றது. திருமிகு
G. சுரேஷ் மற்றும் திருமிகு
காந்தி கலந்து கொண்டனர்.
30/08/2012 அன்று கிருஷ்ணன்புதூர்
ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சர் ரூதர்போர்டு துளிர் இல்ல துவக்கவிழாவில் மாவட்டச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு T.ஜெயமுருகன் கலந்து கொண்டு
குறும்படம், எளிய அறிவியல் பரிசோதனைகள் நிகழ்ச்சிகளை செய்தார்.
05/09/2012 அன்று தாரமங்கலம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் துளிர் இல்ல துவக்க நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில்
மாவட்ட துணைத் தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் மற்றும்
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு இமயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
துளிர்
இல்ல பயிற்சிமுகாம்
10&11/03/2012 இரு
நாட்கள் திருப்பூர் PEM Tech பள்ளியில் நடைபெற்ற மேற்கு
மண்டல துளிர் இல்ல கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் சேலம் மாவட்டம் சார்பாக
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு G. சுரேஷ், திருமிகு
S. அய்யனார் மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
01/04/2012 அன்று துளிர்
இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட அளவில் தாரமங்கலத்தில் கிராமப்
பெண்கள் மேம்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
திருமிகு G. சுரேஷ், திருமிகு S. அய்யனார்
மற்றும் திருமிகு ஏற்காடு இள்ங்கோ, திருமிகு கலையரசன் மற்றும் மாநிலச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு சேதுராமன், மாநில துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் திருமிகு
அமலராஜன் ஆகியோர் கருத்தாளர்களாக கலநது கொண்டு சிறப்பாக பயிற்சியளித்தனர்.
14/04/2012 அன்று தலைவாசலில்
துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
கருத்தாளர்களாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு பழனி, திருமிகு மணிகண்டன்
கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருமிகு G. சுரேஷ்,
திருமிகு N. கோபால், ஆத்தூர் திருமிகு P.
சீனிவாசன், தலைவாசல் திருமிகு V.சீனிவாசன், திருமிகு
சத்தியமூர்த்தி, திருமிகு கணேசன், திருமிகு மகேந்திரன், திருமிகு சித்ரா, திருமிகு
பாக்யராஜ் திருமிகு முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P. சுரேஷ்குமார்
மாநில உபக்குழுக் கூட்டம்.
ஜுலை 30,31 அன்று சென்னை
இந்திய கணிதவியல் மையத்தில் (IMSc) நடைபெற்ற அறிவியல் கல்வி
பிரச்சாரம் உபக்குழு மாநாட்டிற்கு, உபக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
(&மாவட்ட துணைத் தலைவர்) திருமிகு K.P. சுரேஷ்குமார்,
மாவட்ட பொருளாளர் திருமிகு G. சுரேஷ், திருமிகு அருண்குமார்,
திருமிகு மௌலீதரன் மற்றும் திருமிகு S. அய்யனார் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
24 & 25/09/2011 அன்று Dr கெங்குசாமி மெட்ரிக் பள்ளி, மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநில அறிவியல்
பிரச்சார உபக்குழுவின் திட்டமிடல் கூட்டத்திற்கு, நமது மாவட்டத்தின் சார்பாக
திருமிகு G. சுரேஷ், திருமிகு பாலசரவணன் மற்றும் திருமிகு அய்யனார்
கலந்து கொண்டனர்.
பயிற்சிமுகாம்
பாண்டிச்சேரியில் நடைபெற்ற
எளிய அறிவியல் பரிசோதனை பயிற்சி முகாமிற்கு நமது மாவட்டம் சார்பாக திருமிகு
அய்யனார் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிப் பெற்றார்.
ஒரு நாள் எளிய அறிவியல் மற்றும்
கணித பயிற்சி முகாம் 09/10/2011 அன்று அரசு கலைக் கல்லூரியில் முற்போக்கு
எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த திருமிகு நிறைமதி அவர்கள் வாழ்த்துரையுடன் துவங்கி நடைப்பெற்றது.
மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் கருத்தாளராக
பயிற்சி கொடுத்தார். ஆத்தூர் கிளைத் தலைவர் திருமிகு அர்த்தானாரி, செயலாளர்
திருமிகு ஸ்ரீனிவாசன், திருமிகு மணவழகன் ஆகியோருடன் மொத்தம் 20 பேர் கலந்து கொண்டனர்.
சர்வதேச
வேதியியல் ஆண்டு (IYC)
சர்வதேச வேதியியல் ஆண்டு (IYC) 2011ன் நிகழ்ச்சியாக விஞ்ஞான் பிரச்சார் மற்றும் தமிழ்நாடு அறிவியல்
இயக்கமும் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 09, 10 & 11 நவம்பரில்
நடத்திய பயிற்சி முகாமிற்கு சேலம் மாவட்டத்தின் சார்பாக திருமிகு டோமினிக்,
திருமிகு ராஜேந்திரசோழன், திருமிகு கணபதி ராணி மற்றும் திருமிகு சகிராபேகம்
ஆகியோர் கலந்து கொண்டனர். நால்வரும் பயிற்சி, களப்பணிகள் மற்றும் அனைத்து
ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பயிற்சியில் கலந்து
கொள்ள தகவல் கொடுத்து வாய்பளித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு தங்கள் நன்றியை
தெரிவித்து கொண்டதுடன் அறிவியல் இயக்க நிகழ்ச்சிகளில் கருத்தாளர்களாக தங்களால்
முடிந்த நிகழ்ச்சிகளை செய்வதாக கூறியுள்ளனர்.
03/12/2011 அன்று மகேந்திரா பொறியியல்
கல்லூரியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து கல்லூரி
மாணவர்களுக்காக நடத்திய IYC நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு
ஜெயமுருகன் அவர்களின் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திருமிகு அய்யனார், திருமிகு M கலையரசன்
மற்றும் ஆத்தூர் கிளைச் செயலாளர் திருமிகு.P.ஸ்ரீநிவாசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
15/12/2011 அன்று
திருப்பத்தூர் சேகர் கலைக்கல்லூரியில் IYC வினாடி வினா
போட்டி சேலம் மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பாக நடத்தப்பட்டது. போட்டியை திருமிகு
ஜெயமுருகன், திருமிகு K.P.சுரேஷ்குமார் மற்றும் சேலம் உருக்காலையில்
பணிபுரியும் நண்பர் திருமிகு சின்னதுரை அவர்களால் நடத்தப்பட்டது.
05,06 & 07/1/2012 ஆகிய
மூன்று நாட்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மகேந்திரா பொறியியல் கல்லூரியும்
இணைந்து மகேந்திரா பொறியியல் கல்லூரியில் நடத்திய IYC நிகழ்ச்சிக்கு கருத்தாளர்களாக மாநில செயற்குழு
உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரராமம், மாவட்டச் செயற்குழு
உறுப்பினர்கள் திருமிகு T. ஜெயமுருகன், திருமிகு
சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
2011
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு G.சுரேஷ்
2011
ஆம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு அக்டோபர் 23ந்தேதி ஞாயிறு
அன்று காக்காபாளையத்திலுள்ள நாலெட்ஜ் கல்லூரியில் நடைப்பெற்றது.
மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக
காகாப்பாளையம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியை திருமிகு G.சுரேஷ், திருமிகு K. சந்திரசேகர், கன்னந்தேரி கிளைச்
செயலாளர் திருமிகு ஜெயக்குமார், கிளைப் பொருளாளர் திருமிகு பச்சமுத்து ஆகியோர்
சென்று கல்லூரி முதலவர் அவர்களை சந்தித்து தேவைகள் பற்றி பேசி ஏற்பாடு செய்யப்பட்டது.
மாவட்ட மாநாட்டிற்கு தேவைப்படும் நிதிவசூல்
திருமிகு இளங்கோ, திருமிகு ராமமூர்த்தி, திருமிகு G.சுரேஷ்,
திருமிகு அய்யனார் மற்றும் திருமிகு செங்கோட்டுவேல் ஆகியோர் செய்தனர்.
15/10/2011 அன்று நடந்த திட்டமிடல்
கூட்டத்தில் திருமிகு T.அந்தோணி ஜோதி நம்பி, திருமிகு S.ராம்பாபு, திருமிகு K.செங்கோட்டுவேல்
மற்றும் திருமிகு G. சுரேஷ்
கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஆய்வு கட்டுரைகளை G. சுரேஷ் மற்றும் திருமிகு கார்த்திக் பெரியார்
பல்கலைகழகத்தில் கல்லூரி பேராசிரியர்களிடம் கொடுத்து மதிப்பீடு செய்து வாங்கி
வந்தார்.
அழைப்பிதழ்கள் திருமிகு ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ், திருமிகு அருண்குமார், திருமிகு மௌலீதரன் மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோரால் கொடுக்கபட்டது.
22/10/2011 அன்று நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு சென்று முன்னேற்பாடுகளை பார்த்து, வேண்டிய
வசதிகளை கல்லூரி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து திருமிகு
K.செங்கோட்டுவேல்,
திருமிகு K.சந்திரசேகர், திருமிகு
அருண்குமார், திருமிகு மௌலீதரன் மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோர் செய்தனர்.
காலை நடைபெற்ற துவக்க
விழாவில் அறிவியல் எழுத்தாளர் திருமிகு.ஏற்காடு இளங்கோ, மாநிலப்
பொதுக்குழு உறுப்பினர் தலைமையில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாநில
செயலாக்கக் குழு உறுப்பினரும், மாவட்டத் துணைத் தலைவருமான திருமிகு K.P. சுரேஷ்குமார் அவர்களின்
ஒருங்கிணைப்பில் நடந்தது. மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.சந்திரசேகர்
வரவேற்றுப் பேசினார். மாநாட்டைப் பற்றி மாவட்டப்
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு.T.அந்தோனி ஜோதி நம்பி
உரையாற்றினார். நாலெட்ஜ் பொறியியல் கல்லூரித் தலைவர் திருமிகு.T.மாரப்பன், கல்லூரி முதல்வர் முனைவர்
P.S.S.சீனிவாசன், கல்லூரி
துணை முதலவர் ஆகியோர் உரையாற்றினார்கள். மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.N.கோபால் நன்றியுரையாற்றினார்.
தொடர்ந்து இணை
நிகழ்வுகளாக மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களுடன் கல்வியும் குழந்தைகளும் எனும் தலைப்பில் மாவட்டக் கருத்தாளர்
இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. R.சசிகலா அவர்கள்
கருத்துரையாற்ற, மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.J.பாலசரவணன்
ஒருங்கிணைத்தார். மக்களுக்கான மருத்துவம் எனும் தலைப்பில் மாவட்ட செயற்குழு
உறுப்பினர் திருமிகு.S.ராம்பாபு அவர்கள் கலந்துரையாட மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.N.கோபால் ஒருங்கிணைத்தார். மதியம் மாநில செயற்குழு
உறுப்பினரும், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின்
மண்டல ஒருங்கிணைப்பாளருமான திருமிகு.S.சேதுராமன் அவர்களின் மந்திரமா?
தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். நிகழ்வை மாவட்டத் துணைத் தலைவர் திருமிகு.R.பவளவல்லி ஒருங்கிணைத்தார்.
மாலை நடைபெற்ற நிறைவு
விழா நிகழ்ச்சியை மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம்
தலைமையேற்று நடத்தினார். கல்லூரித் தலைவர் திருமிகு.T.மாரப்பன், கல்லூரி முதல்வர் முனைவர் P.S.S.சீனிவாசன்
மாணவர்களை வாழ்த்திப் பேசினார்கள். தொடர்ந்து சேலம் மாவட்டப் பத்திரிகையாளர்கள்
மன்ற மாவட்ட தலைவர் திருமிகு. வை.கதிரவன் குழந்தைகளுக்கு
மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் மரக்கன்றுகளை வளர்க்கும், பராமரிக்கும் புதிய
முறைகளை ஆத்தூர் கிளை செயலாளர் திருமிகு.P.ஸ்ரீநிவாசன்
விளக்கினார். தேசிய அளவிலான மாநாட்டில் பங்கேற்ற இளம் விஞ்ஞானி கணேஷ் தன்
அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ் முடிவுகளை அறிவித்தார்.
தொடர்ந்து ஆய்வு கட்டுரைகளை
சமர்ப்பித்த மாணவர்கள்,
பள்ளிகள், வழிகாட்டி ஆசிரியர்கள், நடுவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட இணை
ஒருங்கிணைப்பாளர் திருமிகு K. செங்கோட்டுவேல் நன்றி
உரையாற்றினார்.
கல்லூரியின்
சார்பில் பல்வேறு வகைகளில் திருமிகு.ஞானவேல் மற்றும் நண்பர்கள் உதவினார். அறிவியல்
புத்தக கண்காட்சியில் திருமிகு.S.நமசிவாயம் அவர்கள் சிறப்புற
செயல்பட்டு புத்தக விற்பனை மற்றும் உறுப்பினர், துளிர், ஜந்தர் மந்தர் சந்தா சேகரித்தார். ஆய்வு
அறிக்கைகளை தொகுத்தல், பதிவேற்றுதல், பத்திரிக்கை செய்தி ஆகிய வேலைகளையும் மற்றும்
மாநாடு நடைபெற்ற நாள் காலை முதல் மாலைவரை முழுவதும் வேலைகளில் மாவட்ட செயற்குழு
மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு.S.அய்யனார், திருமிகு.J.கார்த்திக், திருமிகு.மௌலிதரன், திருமிகு.அருண்குமார், திருமிகு.மூர்த்தி
மற்றும் நண்பர்கள் திருமிகு M கலையரசன் திருமிகு D தனசேகர், திருமிகு கேசவன் ஆகியோர் சிறப்புடன் செயல்பட்டனர்.
இந் நிகழ்வின்
மூலம் சேலம் மாவட்டத்தின் பல்வேறுப் பகுதிகளில்
இருந்து 26 பள்ளிகளை [அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 12 (இதில் மேல்நிலைப்பள்ளி 2, உயர்நிலைப்பள்ளி 2, நடுநிலைப்பள்ளி 8), மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 8, ஆங்கிலோ இந்தியன்
பள்ளி 1, முறைசாரப் பள்ளிகள் 5 (கஸ்துரிபா
காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி 3, உண்டு உறைவிடப் பள்ளி
சிறப்பு பயிற்சிமுகாம் 2)] சார்ந்த 143 பெண்
குழந்தைகளும் 140 ஆண் குழந்தைகளும் மொத்தம்
283 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இவர்களில் முறையே 153 பேர் கிராமப்புறங்களில் இருந்தும் 120 பேர்
நகர்ப்புறங்களில் இருந்தும் (10 முதல்13 வயதுடையோர் 180 பேர், 14 முதல்17
வயதுடையோர் 103 பேர்) கலந்துக்கொண்டனர்.
மாநாட்டின் சிறப்பாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் இடைநின்ற குழந்தைகள் பயிலும் முறைசாராக் கல்வி பயிலகங்களான கஸ்துரிபா காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி (KGBV) மற்றும் உண்டு உறைவிடப் பள்ளி சிறப்பு பயிற்சி முகாம்களை (RSTC) சார்ந்த ஏழு குழுவினர் (35 குழந்தைகள்) விஞ்ஞானிகள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்து பயனடைந்தனர்.
மற்றும் இவர்கள் அனைவருக்கும் பள்ளியில் கல்வி
கற்பித்தலையும் தாண்டி தன்னார்வத்துடன் குழந்தைகளுக்கு ஆய்வுகளை
மேற்கொள்ள வழிகாட்டிய ஆசிரியர்கள் 44 பேர்
கலந்துக்கொண்டனர்.
மேலும் பெரியார் பல்கலைக்கழக புவி அமைப்பியல் துறை ஆராய்ச்சி படிப்பு
பயிலும் மாணவர்களும்,
தமிழ்நாடு அரசின் மண்பரிசோதனை மைய வல்லுனரும், ஓய்வுப்பெற்ற தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறை
இணை இயக்குனர்களும், சேலம் உருக்காலை தரக்கட்டுப்பாட்டு
அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை
உதவி பொறியாளரும் என பலரும் நடுவர்களாக செயல்பட்டு உதவிபுரிந்தனர்.
சேலம் விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த K.தீட்சிதா குழுவினர் தமிழ் முதுநிலைப் பிரிவிலும், தாரமங்கலம் லட்சுமியாயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சார்ந்த M.செல்வராஜ்
குழுவினர், ஆத்தூர் திரு சின்னசாமி ஐய்யா
அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியை சார்ந்த D.விமலேஸ்
குழுவினர் மற்றும் ஏற்காடு புனித
ஜோசப் உயர்நிலைப் பள்ளியை சார்ந்த V.கமலேஷ் குழுவினர் தமிழ் இளநிலைப் பிரிவிலும், சேலம்
குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த R.ரேஷ்மி குழுவினர், சேலம் உருக்காலை ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த J.ராகுல் குழுவினர் ஆங்கிலம் முதுநிலைப் பிரிவிலும், மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த T.பவன் கல்யான் குழுவினர் ஆங்கிலம் இளநிலைப் பிரிவிலும் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு
மாநில மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
19,20/11/2011 ஆகிய நாட்களில் ஈரோட்டில்
திருமிகு K.P.
சுரேஷ்குமார், திருமிகு G சுரேஷ், திருமிகு
அருண்குமார், திருமிகு ஜனார்த்தன் மற்றும் திருமிகு மௌலீதரன் ஆகியோர் கலந்து
கொண்டு மாநில மாநாடு வேலைகளை பகிர்ந்து செய்தனர்.
19,20/11/2011
ஆகிய இரு நாட்கள் ஈரோட்டில் மாணவர்களின் ஆய்வு அறிக்கையை மதிப்பீடு செய்வதற்கும்
மற்றும் 24,25&26/11/2011 சத்தியமங்கலம் பன்னாரிஅம்மன் தொழில் நுட்பக்
கல்லூரியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நடுவர்களாகவும் சேலம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் மண்பரிசோதனை மைய வல்லுனர் திருமிகு பாலசுப்ரமணியம்,
தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திருமிகு
சியமளா மற்றும் சேலம் உருக்காலையில் மெட்டலார்ஜிகள் பொறியாளரும், இளநிலை
மேலாளருமாகிய திருமிகு திரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பெரியார்
பல்கலைகழக ஆராய்ச்சி மாணவர்கள் திருமிகு அனில், திருமிகு சுரேந்திரபாபு
மற்றும் திருமிகு சுதாகர் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.
24,25/11/2011
ஆகிய இரு நாட்கள் திருமிகு K.P. சுரேஷ்குமார் மற்றும்
திருமிகு G சுரேஷ் கலந்து கொண்டு மாநாட்டு வேலைகளைப்
பகிர்ந்து கொண்டனர்.
மாநில அளவிலான தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பன்னாரிஅம்மன்
தொழில் நுட்பக் கல்லூரியில் நவம்பர் மாதம் 24 வியாழன் 25 வெள்ளி மற்றும் 26 சனி ஆகிய தேதிகளில் நடைப்பெற்றது. சேலம் மாவட்டத்திலிருந்து
7 குழு கலந்து கொண்டது. மாநில அளவில் தேசிய மாநாட்டிற்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட 30 குழுவில் சேலம் உருக்காலை ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த J.ராகுல் குழுவினர் ஆங்கிலம் முதுநிலைப் பிரிவிலும், ஆத்தூர் திரு சின்னசாமி ஐய்யா
உதவிபெறும் நடுநிலைப் பள்ளியை சார்ந்த D.விமலேஸ்
குழுவினர் தமிழ் இளநிலைப் பிரிவிலும் தேர்வு பெற்றனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாவட்ட மற்றும் மாநில அளவில்
சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மாவட்டக் குழுவின் சார்பில் வாழ்த்துக்கள்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
2012
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமிகு மீனாட்சி சுந்திரம்
தேசிய
குழந்தைகள் அறிவியல் மாநாடு 2012 க்கு ஒரு திட்டமிடல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்
திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்களின இல்லத்தில் நடைப்பெற்றது. திருமிகு K.P. சுரேஷ்குமார்,
திருமிகு G சுரேஷ், திருமிகு V. ராமமூர்த்தி,
திருமிகு T. ஜெயமுருகன், திருமிகு மீனாட்சி சுந்திரம், மாவட்ட
கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஆண்டனி ஜோதி நம்பி மற்றும் திருமிகு பாலாஜி
கலந்து கொண்டனர்.
22
முதல் 24 ஜுன் 2012 வரை கரூர் பரணி பார்க் பள்ளியில் மண்டல அளவில் நடைபெற்ற மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் திருமிகு மீனாட்சி சுந்தரம் மற்றும்
மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஆண்டனி ஜோதி நம்பி கலந்து கொண்டனர்.
23/07/2012
அன்று மாவட்ட
முதன்மை
கல்வி அலுவலரிடம் NCSC
வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் 28/07/2012 சனியன்று நடத்த
அனுமதி கடிதம் பெறப்பட்டது. பள்ளிகளுக்கு தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும்
தகவல் தரபட்டது.
வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்
28/07/2012
சனியன்று விநாயகா வித்யாலயாவில் காலை 10
மணிக்கு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் தலைமையில் நடந்தது. 30 அரசு மேல்நிலை
மற்றும் உயர் நிலைபள்ளி, 10 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, 2 அரசு உதவி பெறும்
பள்ளி மற்றும் 25 மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 80 ஆசிரியர்கள் மற்றும்
20 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
கருத்தாளர்களாக மாவட்டத் தலைவர் திருமிகு Dr.R.சாம்சன் ரவீந்திரன், மண்டல செயலாக்க குழு உறுப்பினர் திருமிகு.K.P.
சுரேஷ்குமார், கெம்ப்ளாஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்த திருமிகு
சந்திரசீலன், சோனா தொழில்நுட்ப கல்லூரியின் EEE துறை தலவர் Dr. பத்மா அவர்களும் கலந்து கொண்டனர். திருமிகு மீனாட்சி சுந்திரம், திருமிகு
G சுரேஷ், திருமிகு V. ராமமூர்த்தி,
திருமிகு கோபால், திருமிகு பவள்வள்ளி, திருமிகு K.சந்திரசேகர்,
திருமிகு R. ஜெயக்குமார், திருமிகு செங்கோடன், திருமிகு
கலையரசன் மற்றும் திருமிகு விஜயபாலு ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு
வேண்டிய ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். நிகழ்ச்சியை மண்டல செயலாக்க குழு
உறுப்பினர் திருமிகு.K.P. சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட கல்வி
ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஆண்டனி ஜோதி நம்பியும் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.
புத்தக விற்பனை ரூ 6000க்கு நடைப்பெற்றது.
மின்னாம்பள்ளி
மஹா பொறியியல் கல்லூரியில் நடத்துவதற்கு கல்லூரி முதல்வர் அவர்களை திருமிகு.K.P. சுரேஷ்குமார் மற்றும் திருமிகு மீனாட்சி சுந்தரம் ஆகியோர் 05/09/2012
புதனன்று சந்தித்து அனுமதி பெறப்பட்டது.
துளிர்
திறனறிதல் தேர்வு 2011
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P. சுரேஷ்குமார்
26/11/2011 அன்று நடைபெற்ற துளிர் திறனறிதல்
தேர்வு நமது மாவட்டத்தில் 4 இடத்தில் நடைப்பெற்றது.
1. ஆத்தூரில்
சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி - மாவட்டப் பொதுகுழு உறுப்பினர் திருமிகு
மூர்த்தி,
2
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கன்னந்தேரி –
திருமிகு பார்த்திபன்,
3
ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி நல்லண்ணம்பட்டி – திருமிகு.மகேந்திரன்,
4
கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளி - திருமிகு ஆண்டனி, திருமிகு.சுப்ரமணி ஆகியோர்
தேர்வுகளை நடத்தினர்.
தமிழ்
மூத்தோர் பிரிவில் 52, இளையோர் பிரிவில் 259, ஆங்கிலம் மூத்தோர் பிரிவில் 8,
இளையோர் பிரிவில் 20
என மவட்டதில் மொத்தம் 339
பேர் கலந்து கொண்டனர்.
தேர்வு மையத்தில்
அனுபவமுள்ளவர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என வாராந்திர கூட்டதில் ஆலோசனை
வழங்கப் பட்டது.
மாவட்ட அளவில் நிகழ்வை மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு.K.P. சுரேஷ்குமார்
ஒருங்கிணைத்தார்.
ஹிரோசிமா நாகசாகி தினம்
2011ஆம்
ஆண்டு ஹிரோசிமா நாகசாகி தினம் நிகழ்ச்சி கன்னந்தேரி கிளை சார்பாக கன்னந்தேரி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், நல்லண்ணம்பட்டி கிளை சார்பாக
நல்லண்ணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் மற்றும் நமது மாவட்ட
அலுவலகத்திலும் நடைப்பெற்றது. நிகழ்ச்சி கருத்தாளர்கள் –மாவட்ட துணைத் தலைவர்
திருமிகு K.P.
சுரேஷ்குமார், திருமிகு பார்த்திபன். நிகழ்ச்சிகளில் திருமிகு
மாவட்ட துணைத் தலைவர் K.சந்திரசேகர், திருமிகு R. ஜெயக்குமார், திருமிகு செங்கோடன், திருமிகு V. ராமமூர்த்தி,
திருமிகு S.அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2012 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு
R. ஜெயக்குமார்
2012ஆம் ஆண்டு ஹிரோசிமா
நாகசாகி தினம் கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு தகவல் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும்
பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கபட்டது. ஹிரோசிமா நாகசாகி தினப்போட்டிகள் கல்லூரிகள்,
பள்ளிகள், அறிவியல் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி,
கவிதைப்போட்டி ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு
மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
துளிர்
வினாடி வினா 2011
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P. சுரேஷ்குமார்
மாவட்ட துளிர் வினாடி
வினா 13/10/11 அன்று உருக்காலை வித்யாமந்திர் பள்ளியில் ஒருங்கிணைப்பாளர் திருமிகு
K.P.சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.
18 பள்ளிகள் கலந்து
கொண்டது. திருமிகு திரவியம், மோகன் நகர் கிளை தலைவர் திருமிகு சர்மா, திருமிகு
டோமினிக், திருமிகு ஆண்டனி ஜோதி நம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு
ஜெயமுருகன் ஆகியோர் க்விஸ் மாஸ்டர்களாக செயல்பட்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநிலச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம், ஸ்ரீவித்யாமந்திர்
மேனிலைப் பள்ளி முதல்வர் Dr. கண்ணபிரான் மற்றும் உதவி
முதல்வர் திருமிகு நாவலி அவர்களும் பரிசு வழங்கினார்கள்.
நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய அனைத்து
உதவிகளும் மோகன் நகர் கிளைத் தலைவர் திருமிகு சர்மா, திருமிகு வேலுச்சாமி,
உறுப்பினர்கள் திருமிகு பாலாஜி, திருமிகு அண்ணாதுரை, திருமிகு பார்த்திபன் மற்றும்
திருமிகு மனோஜ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
மாநில போட்டியில் குளூனி மேனிலை பள்ளி மாணவிகள் மூத்த
முதியோர் பிரிவில் முதல் இடமும், ஸ்ரீவித்யா மந்திர் மேனிலைப் பள்ளி, சேலம்
உருக்காலை இளையோர் பிரிவில் இராண்டாம் இடமும் பெற்றனர்.
துளிர்
வினாடி வினா 2012
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு M. கற்பகம்
04/08/2012
துளிர் வினாடி வினா சேலம் கோட்டையிலுள்ள CSI குட்செப்ர்டு மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது. 16 தமிழ் வழிப்பள்ளி மற்றும் 10 ஆங்கில
வழிப்பள்ளிகளைச் சேர்ந்த 58 குழுக்கள் பங்கு பெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
திருமிகு M. கற்பகம், திருமிகு.K.P. சுரேஷ்குமார்
மற்றும் திருமிகு ஆண்டனி ஜோதி நம்பி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.
திருமிகு திரவியம், திருமிகு
பெலிக்ஸ், திருமிகு பாலாஜி, திருமிகு சந்திரசீலன், திருமிகு டோமினிக், திருமிகு
விஜயபாலு, திருமிகு ஞானவேல், திருமிகு சற்குணம், திருமிகு ஜெயமுருகன் ஆகியோர்
க்விஸ் மாஸ்டர்களாக செயல்பட்டனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு திருமிகு பவளவள்ளி
மற்றும் பள்ளி முதல்வர் திருமிகு ராணி தியோடர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய அனைத்து
உதவிகளும் திருமிகு ஜெயகுமார், திருமிகு செங்கோடன், திருமிகு அய்யனார், திருமிகு
கேசவன், திருமிகு விஜயபாபு, திருமிகு பவளவள்ளி மற்றும் திருமிகு ராஜேந்திரசோழன்
ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
2012 மாநில துளிர் வினாடி
போட்டிக்கு கோட்டை சிஎஸ்ஐ பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மேனிலைப் பள்ளி, சேலம் உருக்காலை ஸ்ரீவித்யா மந்திர்
மேனிலைப் பள்ளி, நிர்மலா மேனிலைப் பள்ளி கொளத்தூர் ஆகிய பள்ளிகள் கலந்து கொண்டது.
அறிவியல் கண்காட்சி
12/08/2011
அன்று சேலம் மரவனேரி பகுதியிலுள்ள செயின்ட்பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
அறிவியல் கண்காட்சி துவக்க விழாவிற்கு மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியை துவக்கி
வைத்து உரையாற்றினார்.
அறிவியல்
நிகழ்ச்சி
13/10/2011 அன்று அரசு
கலைக் கல்லூரியில் DRDO விஞ்ஞானி ராஜ்குமார்,
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திருமிகு ஜெயமுருகன் மற்றும் திருமிகு சுப்ரமணி,
மேட்டூர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 200 கல்லூரி
மாணவர்கள் கலந்து கொண்டனர்.
14/11/2011 அன்று திருச்செங்கோடு
வேலாகவுண்டம்பட்டி கொங்கு மெட்ரிக் பள்ளியில் அறிவியல் எழுத்தாளரும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான திருமிகு.ஏற்காடு
இளங்கோ, அவர்களின் அறிவியல் உரையும், மாவட்ட கருத்தாளர் திருமிகு
தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. 200 பள்ளி மாணவர்கள்
கலந்து கொண்டனர். அறிவியல் இயக்கத்திற்கு நன்கொடையாக பள்ளியின் சார்பில் ரூ 500
வழங்கப்பட்டது.
10/11/2011 அன்று Department
of Science and Technolgy நடத்திய Inspire அறிவியல்
கண்காட்சியில் நடுவர்களாக அறிவியல் இயக்கம் சார்பாக திருமிகு திரவியம், திருமிகு
பெலிக்ஸ், திருமிகு சதிஸ் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு.D.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
03/01/2012 அன்று
ஆத்தூர் மலர் மெட்ரிக் பள்ளியிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அறிவியல்
எழுத்தாளர் திருமிகு ஏற்காடு இளங்கோ கலந்து கொண்ட அறிவியல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
கலந்து கொண்டோர் 250 மாணவர்கள்.
மல்லசமுத்திரம்
மகேந்திரா பொறியியல் கல்லூரியில் 2012 ஜனவரி 5,6 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற்ற
அறிவியல் கண்காட்சியில் அறிவியல் இயக்க கருத்தாளர்கள் கலந்து கொண்டனர்.
16/01/2012 அன்று மேட்டூர்
தாய் தமிழ் பள்ளியில் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின்
நிகழ்ச்சி நடைப்பெற்றது. கலந்து கொண்டோர் 100 மாணவர்கள்.
02/02/2012 அன்று
உத்தமசோழபுரத்தில் DIET ல் திருமிகு T.ஜெயமுருகன்
அவர்களின் நிகழ்ச்சி நடைப்பெற்றது. கலந்து கொண்டோர் 150 மாணவர்கள்.
13/04/2012 அன்று சேலம் மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலமையில் நடைபெற்ற தமிழ்புத்தாண்டு
நிகழ்ச்சியில் திருமிகு தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா? தந்திரமா? மற்றும்
திருமிகு G. சுரேஷ் அறிவியல் பாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
12/04/2012 அன்று
மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா?
நிகழ்ச்சி நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைப்பெற்றது.
20/04/2012 அன்று மாநிலச்
செயற்குழு உறுப்பினர் திருமிகு சேதுராமன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி
காடையாம்பட்டி, மாசிகவுண்டனூர் மற்றும் K.K. நகர் பள்ளிகளில்
நடைப்பெற்றது.
13/06/2012 அன்று மாலை 3 மணிக்கு தியாகராஜா
பாலிடெக்னிக்கில் மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு D. திருநாவுக்கரசு
அவர்கள் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 300 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி
சிறப்பாக இருந்தது என்று நிர்வாக தரப்பில் தெரிவித்தனர்.
28/06/2012 அன்று
உத்தமசோழபுரத்திலுள்ள DIET-ல் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த DIET
ஆசிரியர்களின் பயிற்சி முகாமில் திருமிகு T.ஜெயமுருகன்
அவர்களின் வானியியலும் மற்றும் பெளதிகமும்
நிகழ்ச்சி நடைப்பெற்றது. 200 பேர் கலந்து கொண்டனர்.
15/07/2012 ஞாயிறு
அன்று அம்மாபேட்டை மாணிக்கவிநாயகர் கோவிலில் செங்குந்த முதலியார் பள்ளியில் +2வில்
முதல் 3 மார்க் வாங்கிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் திருமிகு G.
சுரேஷ், திருமிகு தினேஷ், திருமிகு S. அய்யனார்
மற்றும் திருமிகு கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை செய்தனர்.
03/08/2012 அன்று வேலூர்
பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் வானியியலும் வடிவமைப்பும் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மாற்று
திறனாளிகள் பள்ளியில் நிகழ்ச்சி.
25/09/2011 அன்று செவ்வாய்பேட்டை
மாற்று திறனாளிகள் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் திருமிகு இளங்கோ
அவர்கள் கலந்துரையாடினார். 30 பேர் கலந்து கொண்டனர். திருமிகு சந்திரசேகர் அவர்கள்
கலந்துகொண்டார்.
தேசிய
அறிவியல் தினம் 2012
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார்
2012 தேசிய அறிவியல்
தினப்போட்டிகள் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி
கொடுக்கபட்டது. தேசிய அறிவியல் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல்
ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி,
சொலவடை மற்றும் கதை போட்டிகள் நடைப்பெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 5 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநில அளவில் கட்டுரைப்
போட்டியில் இள்மபிள்ளை ஜோதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவ்ர் திருமிகு ஹரி
முதலாம் இடமும், கதைப் போட்டியில் திருமிகு மாலதி அவர்கள் இரண்டாம் இடமும்,
சொலவடைப் போட்டியில் திருமிகு நிர்மலா முதல் இடமும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேசிய அறிவியல் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமிகு R. ஜெயகுமார் மற்றவர்களின் உதவியுடன் சிறப்பாக
செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ்
வழங்கபட்டது.
28/02/2012 அன்று அன்னபூர்ணி பொறியியல்
க்ல்லூரியில் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி நடைப்பெற்றது. கருத்தாளாராக
திருமிகு T.ஜெயமுருகன் அவர்களும், திருமிகு K. சந்திரசேகர் மற்றும் திருமிகு R. ஜெயகுமார்
அவர்களும் கலந்து கொண்டனர். 200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வானியியல்
இந்திய வான் இயற்பியல் மையம்,
பெங்களூரில் 18,19/11/2011 ஆகிய இரு நாட்கள் நடத்திய பகல் நேர வான் நோக்கு
பொருட்கள் தயாரிப்பு பயிற்சி முகாமிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு T ஜெயமுருகன் அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மாநில அளவில்
ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அதில் அவர் நமது மாவட்டத்தில் இயங்கி வரும்
வானியியல் கழகம் மற்றும் தொலைநோக்கிகளை பரவலாக நமது அறிவியல் இயக்க நண்பர்கள்
பயன்படுத்துவது சம்பந்தமாக ஒரு கருத்துரை வழங்கியுள்ளார். பக்கத்திலுள்ள
மாநிலத்தின் வானியியல் கருத்தாளார்களின் தொடர்பு கிடைத்துள்ளது. வானவியலைப் பற்றி
பயிற்சி முகாம் நடத்தும்போது மாநில, மாவட்ட அளவில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து
கொள்ள ஆவலுடன் உள்ளார். இந்நிகழ்ச்சி அகில இந்திய அளவில் 50 பேர் மட்டும் கலந்து
கொண்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
வெள்ளி இடைநகர்வு
27/05/2012
அன்று வெள்ளி இடைநகர்வு பற்றிய பயிற்சி முகாம் விநாயகா வித்யாலயா பள்ளியில் மதியம்
2 மணிக்கு நடைப்பெற்றது. கருத்தாளர்கள் திருமிகு T ஜெயமுருகன்,
திருமிகு ராஜேந்திரசோழன். 18 பேர் கலந்து கொண்டனர்.வெள்ளி இடைநகர்வு பற்றிய
செய்திகளை திருமிகு ஜெயகுமார் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு கொடுத்தார்.
06/06/2012
வெள்ளி இடைநகர்வு நிகழ்ச்சி பழைய, புதிய பேருந்து நிலையங்கள், CSI பாலிடெக்னிக் கல்லூரி, கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளி போன்று சேலம்
மாவட்டத்தில் மொத்தம் 33 இடங்களில் சிறப்பாக நடைப்பெற்றது.
தொலைநோக்கி நிகழ்ச்சி
மோகன்நகர்
கிளை சார்பாக 24/08/2011 அன்று தொலைநோக்கி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்தாளர்கள் திருமிகு ஜெயமுருகன் மற்றும் சிக்காகோ ராமசாமி. 50 பேருக்கு மேல்
கலந்து கொண்டனர்.
சென்னை கோமஸ் நிறுவனத்தில் தொலைநோக்கி வாங்கபட்டுள்ளது. திருமிகு
S. அய்யனார் மற்றும் திருமிகு தினேஷ் இருவரும் சென்னை சென்று
தொலைநோக்கி பயிற்சி எடுத்து கொண்டு தொலைநோக்கியை வாங்கி வந்தனர்.
19/07/2012 வியாழன் அன்று லச்சிமாயூர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலை பள்ளியில் திருமிகு T.ஜெயமுருகன் அவர்களின்
வான்நோக்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இளைஞர்
அறிவியல் திருவிழா
மாநில
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகேசன்
இளைஞர் அறிவியல் திருவிழா-க்கான கடிதம் மதுரை திருமிகு
கண்ணன், திருமிகு S. கிருஷ்ணச்சாமி, மாநிலத் தலைவர் திருமிகு மணி, மாநிலச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் மற்றும்
திருமிகு சசிகலா ஆகியோரின் துணையுடன் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டச்
செயலாளர்களுக்கும் அனுப்பபட்டது.
20/07/2012 வெள்ளியன்று இளைஞர் அறிவியல் திருவிழா
திட்டமிடல் கூட்டம் மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் மாவட்டத்
தலைவர் திருமிகு Dr.R.சாம்சன் ரவீந்திரன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கல்லூரி சார்பாக 10
டீன் உட்பட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் இயக்கம் சார்பாக மாநிலத்
தலைவர் மணி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம்,
திருமிகு ராமமூர்த்தி, திருமிகு K.சந்திரசேகர்,
மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு முருகேசன், திருமிகு மணிகண்டன், மாநிலச் செயலாளர்
திருமிகு முகம்மது பாதுஷா, மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் திருமிகு சரவணன் கலந்து
கொண்டனர். கல்லூரி சார்பாக இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக Dr.ராஜராஜன் அவர்கள் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற வேலைகள் திட்டமிடப்பட்டது.
இளைஞர் அறிவியல் திருவிழா-க்கான கடிதம் தமிழ்நாட்டிலுள்ள
அனைத்து பொறியியல் கல்லூரிகளூக்கும், சேலம் மாவட்டத்திலுள்ள கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இளைஞர் அறிவியல் திருவிழா-க்கான அழைப்பிதல் மஹேந்திரா
பொறியியல் கல்லூரியில் தயாரிக்கப்பட்டது. அழைப்பிதல் அறிவியல் இயக்க மாநில
நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து மாவட்டச் செயலாளர்கள், சேலம்
மாவட்டத்திலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளுக்கும், மஹேந்திரா பொறியியல்
கல்லூரியுடன் தொடர்புடைய பொறியியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி நிர்வாகத்தால்
அனுப்பி வைக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலமும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும்
அனுப்பி வைக்கப்பட்டது.
28/08/2012 செவ்வாய் அன்று மாநிலச் செயற்குழு உறுப்பினர்
திருமிகு P.சகஸ்ரநாமம்
மற்றும் திருமிகு ராமமூர்த்தி மல்லசமுத்திரம்
மஹேந்திரா பொறியியல் கல்லூரிக்கு சென்று மாவட்டத் தலைவர் திருமிகு Dr.R.சாம்சன் ரவீந்திரன் மற்றும் Dr.ராஜராஜன் இருவரையும்
சந்தித்து அக்டோபர் 6,7 தேதி நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
கருத்தாளர்களுக்கு பயணம், மற்ற ஏற்பாடுகள் பற்றி விவாதித்து இறுதி
செய்யப்பட்டது.
உலகபுகைபடத்தினம்
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார்
ஆகஸ்ட் 19ந் தேதி உலகபுகைபடத்தினத்தையொட்டி
சேலம் மாவட்ட அறிவியல் இயக்கமும், சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றமும், லேனா
ஸ்டியோ மற்றும் KCP Sixwell நிறுவனமும் இணைந்து புகைபடப் போட்டி
பெரியார் பல்கலைகழகத்தில் நடத்தினோம். இதில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள்
மற்றும் பொதுபிரிவு என மூன்று வகைகளில் மொத்தம் 75 பேர் கலந்து கொண்டனர். திருமிகு
நிறைமதி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு இமயபாலன் ஆகியோர் சிறந்த
புகைபடங்களை ஆய்வு செய்துதேர்வு செயதனர்.
நிகழ்ச்சிக்கு
பெரியார் பல்கலைகழக இதழியல் துறை தலைவர் பேராசிரியர் நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது.
திருமிகு சசிகலா அவர்களின் அறிவியல் பாடலுடன் துவங்கியது. நிகழ்ச்சியில் பெரியார்
பல்கலை கழக பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள், KCP அருள்முருகன், மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம்
ஆகியோர் உரையாற்றினர். பிறகு KCP Sixwell
நிறுவன உரிமையாளர் KCP அருள்முருகன், பெரியார்
பல்கலைகழக இதழியல் துறை தலைவர் பேராசிரியர் நடராஜன், பத்திரிகையாளர் மன்ற
நிர்வாகிகள், முட்டைக்குள் ஓவியம் வரைந்து உலக புகழ் பெற்ற ஓவியர் மேச்சேரி
கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பரிசு பொருட்கள் KCP Sixwell நிறுவன உரிமையாளர் KCP அருள்முருகன், லேனா ஸ்டியோ மற்றும் கன்னந்தேரி கிளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஜெயகுமார் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே
முடிந்தது.
அறிவியல் இயக்கம்
சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு ராமமூர்த்தி, திருமிகு K.சந்திரசேகர், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திருமிகு ஜெயகுமார், திருமிகு
செங்கோடன், திருமிகு பவளவள்ளி, திருமிகு கோபால், திருமிகு பெரியசாமி, திருமிகு
தினேஷ், திருமிகு கேசவன், திருமிகு இமயபாலன், திருமிகு ரமேஷ், திருமிகு S. அய்யனார் மற்றும் திருமிகு கலையரசன், பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக
மாவட்டச் செயலாளர் திருமிகு தங்கராஜ் மற்றும் மன்ற நிர்வாகிகள், புகைபட கலைஞர்கள்,
உறுப்பினர்கள் மற்றும் KCP Sixwell நிறுவன
உரிமையாளர் KCP அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
3.கல்வி
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு
பாலசரவணன்
மாநில கல்வி உபக்குழு கூட்டம்
09/10/2011 அன்று
திருப்பத்தூரில் மாநில கல்வி உபக்குழு கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு பாலசரவணன் அவர்கள் கலந்து கொண்டார்.
புத்தக வாசிப்பு முகாம்
19/09/11
அன்று தலைவாசல் கிளையின் சார்பாக ஆத்தூரில் ஆப்டிக் கம்ப்யூடர் செண்டரில் ”பள்ளிக்கூட தேர்தல்” புத்தக வாசிப்பு முகாம் நடைப்பெற்றது.
பேராசிரியர்கள் முருகேசன், ரமேஷ் மற்றும் ராசிபுரம் ஆசிரியர் தனக்கோடி உள்பட 16
பேர் கலந்து கொண்டனர்.
26/01/2012 அன்று மாலை 6
மணிக்கு திருமிகு R.பவளவள்ளி அவர்கள் வீட்டில் புத்தக வாசிப்பு முகாம் நடைப்பெற்றது. புத்தகம்
”ஆளுக்கொறு கிணறு” திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு R.சசிகலா திருமிகு
R.பவளவள்ளி, திருமிகு K.சந்திரசேகர், திருமிகு கோபால்,
திருமிகு S. அய்யனார், திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர்
கலந்து கொண்டனர்.
26/01/2012 அன்று மாலை 6
மணிக்கு திருமிகு R. சசிகலா அவர்கள் வீட்டில் புத்தக
வாசிப்பு முகாம் நடைப்பெற்றது. புத்தகம் ”வினயா”. திருமிகு R.,
சசிகலா, திருமிகு R.பவளவள்ளி, திருமிகு G. சுரேஷ், திருமிகு ஐடா பிரிசில்லா, திருமிகு நமச்சிவாயம், திருமிகு குரு அறுமுகம்,
திருமிகு P.செங்கோடன் மற்றும் திருமிகு V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
28/04/2012 அன்று
நல்லண்ணம்பட்டியில் 3 துளிர் இல்ல குழந்தகளுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடைப்பெற்றது.
புத்தகம் “சார்லஸ் டார்வின்”. 30 புத்தகங்களை நல்லண்ணம்பட்டி பள்ளி தலைமயாசிரும்
மாவட்ட பொதுகுழு உறுப்பினருமான திருமிகு P.செங்கோடன் துளிர்
இல்ல குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து புத்தக வாசிப்பு முகாம் நடத்தினார்.
கருத்தாளராக திருமிகு ஏற்காடு இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.
மாற்றுக் கல்விக்கான புத்தக
வாசிப்பு முகாம்
07/08/2011 அன்று ஆத்தூரில்
புத்தக வாசிப்பு முகாம் நடைப்பெற்றது. பேராசிரியர் முருகேசன் கலந்து கொண்டார்.
மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். “கரும்பலகையில் எழுதப்படாதவை” என்ற புத்தகம்
வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பள்ளி
மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பு
26/08/2011 அன்று நகரமலை அடிவாரம்
பகுதியில் நண்பர் காந்தி அவர்கள் இல்லத்தில் மாலை நேர வகுப்பு மாலை 7-30
மணியள்வில் துவக்கப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரராமம் மாணவர்களிடையே கலந்துரையாடினார். மாவட்டப் பொருளாளர் திருமிகு G.
சுரேஷ் ஒருங்கிணைத்தார். 12 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
02/09/11
அன்று மாலை நேர வகுப்பு ஆசிரியர்களுக்கான
கூட்டம் திருமிகு R.
சசிகலா அவர்கள் வீட்டில் நடைப்பெற்றது.
அதில் திருமிகு பாலசரவணன், திருமிகு சசிகலா, திருமிகு லால், திருமிகு சரண்யா,
திருமிகு அய்யனார், திருமிகு சகஸ்ரமம் மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோர் கலந்து
கொண்டனர். மாலை நேர வகுப்புகளை எடுப்பது பற்றியும், யார் எப்போது வகுப்பு எடுக்க
செல்வது என்பது பற்றியும் திட்டமிடப்பட்டது.
05/09/2011 அன்று மாலை நேர வகுப்பு
மாணவர்களால் ஆசிரியர்
தினம் கொண்டாடப்பட்டது. திருமிகு அய்யனார் அவர்கள் கலந்து
கொண்டார்.
மழை மற்றும் நீண்ட நாட்களுக்கு தொடர இயலாத
காரணமாக நிறுத்தபட்டுள்ளது.
சக்சார் பாரத்
25/11/2011 அன்று ஈரோடு
மாவட்டம், சத்தியமங்கலம் பன்னாரிஅம்மன் தொழில் நுட்பக்
கல்லூரியில் இரவு 9 மணிக்கு நடைபெற்ற ”சாக்சர் பாரத் திட்டம்” –க்கான திட்டமிடல்
கூட்டத்தில் திருமிகு G சுரேஷ் மற்றும் திருமிகு பழனி
ஆகியோர் மாவட்ட கல்வி உபக்குழுவிற்காக நமது மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.
01/01/2012 அன்று மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டம் மாவட்ட
கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. அதில் மாநிலச் செயலாளர் திருமிகு S சுப்ரமணி, திருமிகு P.சகஸ்ரநாமம், திருமிகு K.சந்திரசேகர் மற்றும் திருமிகு
V.ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண் எழுத்தறிவு 50%க்கு குறைவாக உள்ள
மாநிலங்களில் BGVS
மற்றும் NHR இணைந்து நடத்தும் ”சக்சார் பாரத்”
என்னும் அகில இந்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென் மாநிலங்களில் கலைப்பயணம் நடைப்பெற்றது ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக விழுப்புரம் செல்லும்
வழியில். கலைநிகழ்ச்சி எடப்பாடி, சேலம், தர்மபுரி, ஆத்தூர் ஆகிய இடங்களில் பிப்ரவரி 5,6,7 ல் நடைப்பெற்றது.
இந்நிகழ்வையொட்டி “எனது கனவுகளில் எனது
கிராமம்” என்னும் தலைப்பில் மக்கள் கருத்துதாள் எழுதி வாங்குவது, விவாதங்கள்
நடத்தி அதை தொகுப்பது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கு மாவட்ட
ஒருங்கிணைப்பாளராக திருமிகு K.சந்திரசேகர் இருந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை
நடத்தி கொடுத்தார்.
கிராமக் கல்வி குழு பயிற்சி முகாம்
27,28 மற்றும்
29ந் தேதிகளில் சென்னையில் நடந்த மாநில அளவிலான கிராமக் கல்வி குழு பயிற்சி
முகாமில் திருமிகு J.பாலசரவணன் கலந்து கொண்டார்.
30,31/01/2012ல்
கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாமில் ஆத்தூர்
கிளைத்
தலைவர் திருமிகு அர்த்தநாரி, கிளைச் செயலாளர் திருமிகு சீனீவாசன், திருமிகு
கற்பகம், திருமிகு தமிழய்யன் ஆகியோர் நமது இயக்கத்தின் சார்பில் கலந்து கொண்டு
பயிற்சி பெற்றனர்.
கிராம
கல்வி குழு பயிற்சிகளில் கருத்தாளர்களாக கன்னந்தேரியில் திருமிகு K.சந்திரசேகர், நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், அரிசிப்பாளையத்தில் திருமிகு M.கற்பகம்,
திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P.
சீனிவாசன், திருமிகு தமிழய்யன், திருமிகு சாமிநாதன், திருமிகு V.சீனிவாசன், திருமிகு சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி
கொண்டப்பநாய்க்கன்பட்டியில் நடைபெற்ற பள்ளி
மேலாண்மைக் குழு மாவட்ட பயிற்சிக்கு
திருமிகு
M.கற்பகம், திருமிகு சஹிரா பேகம், திருமிகு சீனிவாசன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
வாழப்பாடி பள்ளி
மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் இரு இடங்களில் கருத்தாளராக திருமிகு
N.
கோபால் கலந்து கொண்டார். அதில் வேப்பிலைபட்டியில் 150
உறுப்பினர்களும், வாழப்பாடியில் 40 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கன்ன்ங்குறிச்சி,
கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் சொர்ணபுரி பகுதியில் கருத்தாளராக திருமிகு சஹிரா
பேகம் கலநது கொண்டார்.
தாரமங்கலத்தில் திருமிகு
செங்கோட்டுவேல், திருமிகு ரமேஷ், மேட்டூரில் திருமிகு இமயபாலன், திருமிகு
சுப்ரமணி, ஆத்தூரில் திருமிகு A.அர்த்தநாரி, திருமிகு P.
சீனிவாசன், காக்காபாளையத்தில் திருமிகு இமயபாலன், நல்லண்ணம்பட்டியில் திருமிகு P.செங்கோடன், திருமிகு G. சுரேஷ், கன்னந்தேரியில்
திருமிகு K.சந்திரசேகர் ஆகியோர் கருத்தாளர்களாக
கலந்து கொண்டு பயிற்சியளித்தனர். மேற்கண்ட பயிற்சிகள் 2012 மார்ச் 19,20 & 21
தேதிகளில் நடைப்பெற்றது.
பொதுப்பள்ளிக்கான கல்வி மேடை
03/06/2012 அன்று தமிழ்சங்கத்தில்
நடைபெற்ற பொதுப்பள்ளிக்கான கல்வி மேடை நிகழ்ச்சியில் திருமிகு தம்ழய்யன்
மனைவியுடனும், திருமிகு D.திருநாவுக்கரசு
மனைவியுடனும், திருமிகு ராமமூர்த்தி, திருமிகு G. சுரேஷ்,
திருமிகு K.சந்திரசேகர், திருமிகு பாலசரவணன், திருமிகு ரமேஷ், திருமிகு.S.அய்யனார், திருமிகு M கலையரசன்
மற்றும் திருமிகு தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜூன் 30 ஜுலை 1
ஆகிய இரு தேதிகளில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுப்பள்ளிக்கான அகில
இந்திய மாநாட்டில் திருமிகு
பாலசரவணன், திருமிகு G. சுரேஷ், திருமிகு ராஜேந்திரசோழன், திருமிகு சாஹிரா மற்றும் திருமிகு
முனுசாமி, திருமிகு V.சீனிவாசன், என
8 பேர் சேலம் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டனர்.
பொதுப்பள்ளிக்கான கல்வி
மேடை நிகழ்ச்சிக்கு திருமிகு K.சந்திரசேகர், திருமிகு G. சுரேஷ், திருமிகு
ஜெயகுமார், திருமிகு செங்கோடன், திருமிகு டோமினிக், திருமிகு ராமமூர்த்தி ஆகியோர்
நிதியுதவி (ரூ.1000 + 750) அளித்தனர்.
தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறை
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை
பற்றி திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு காமாட்சி, திருமிகு செந்தில்குமார்,
திருமிகு சண்முகம், திருமிகு செங்கொடன், திருமிகு ஜெயகுமார், திருமிகு
கீர்த்திவாசன் மற்றும் திருமிகு சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்ட ஒரு
கலந்துரையாடல் நடைப்பெற்றது. 8 பேர் கலந்து கொண்டனர். கருத்துக்கள் மாநிலத்திற்கு
தொகுத்து அனுப்ப்பட்டது.
4.அறிவியல் வெளியீடு
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு N. கோபால்
மாநில அறிவியல் வெளியீடு உபக்குழு
கூட்டம்
திருச்சி உறையூரில் 20/10/2011 அன்று நடந்த மாநில அறிவியல் வெளியீடு உபக்குழு
கூட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம் கலந்து கொண்டார்.
புத்தக
விற்பனை
அரசு
ஊழியர்கள் சங்க மாநாட்டில் ரூ 405,
மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ரூ 2830 மாவட்ட
துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில் ரூ830 இக்கு
புத்தக விற்ப்பனை நடைப்பெற்றது,
11/08/2011
அன்று LIC
ஊழியர்களின் மாவட்ட மாநாட்டில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்
திருமிகு S.நமச்சிவாயம் மற்றும் திருமிகு S.அய்யனார் ஆகியோரால் புத்தக விற்பனை செய்யப்பட்டது.
20/08/2011
அன்று மாலை 5 முதல் 9.30 வரை மாவட்ட அலுவலகத்தில் மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ், S.நமச்சிவாயம் மற்றும் திருமிகு S.அய்யனார் ஆகியோரால் புத்தகங்கள் கணக்கெடுக்கப்பட்டது.
13/10/11
மாவட்ட துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில்
புத்தக விற்பனை ரூ710, உறுப்பினர் 2, துளிர் சந்தா 4.
ஆத்தூரில் 14,16/11/2011
ஆகிய இரு நாட்கள் ஆத்தூர் கிளை நூலகத்திலும், 15/11/2011 அன்று பாரதியார்
மேல்நிலைப் பள்ளியிலும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு.நமசிவாயம்
அவர்களால் புத்தக விற்பனை ரூ.5397 செய்யப்பட்டது. இப்புத்தக விற்பனைக்கு
ஆத்தூரில் கிளைச் செயலாளர் திருமிகு சீனிவாசன். கிளைத் தலைவர் திருமிகு.அர்த்தநாரி
மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பழனி உள்ளிட்ட கிளை நண்பர்கள் வேண்டிய
ஏற்பாடுகளையும், உதவிகளையும் செய்துள்ளனர்.
துளிர் திறனறிதல் தேர்வு
நடைபெற்ற கன்னந்தேரியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திருமிகு நமசிவாயம்
அவர்களால் புத்தக விற்பனை ரூ 1592, நல்லண்ணம்பட்டியில் மாவட்டச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு S.அய்யனார்
அவர்களால் புத்தக விற்பனை ரூ430 செய்யப்பட்டது. ஜனவரி 5
பட்டு வளர்ச்சி துறை நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு
நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.542, துணிப்பை ரூ720)
சீலநாய்க்கன்பட்டியில்
வருமானவரி ஊழியர் சங்க மாநில மாநாட்டு 2012 ஜனவரி 6,7ந்
தேதிகளில்
நடைப்பெற்றது. திருமிகு நேதாஜி அவர்கள் உதவியுடன் திருமிகு நமச்சிவாயம்
G. சுரேஷ் அவர்கள் விற்பனை செய்யப்பட்டது. (ரூ3011)
சேலம்
உருக்காலையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் புத்தக விற்பனை திருமிகு
நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.1655)
26/01/2012 அன்று சேலம் தெய்வீக
திருமண மண்டபத்தில் LIC கலைவிழா நிகழ்ச்சியில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.3068). விற்பனையில் திருமிகு
N.
கோபால், திருமிகு நேதாஜி, திருமிகு R.பவளவள்ளி
ஆகியோர் பங்கு பெற்றனர்.
02/02/2012 அன்று உத்தமசோழபுரத்தில் DIET ல் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம்
அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.2615).
10/02/2012
அன்று கன்னந்தேரியில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது.
(ரூ.1137).
28/02/2012
அன்று அன்னபூர்ணி பொறியியல் க்ல்லூரியில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.986).
01/04/2012 அன்று தாரமங்கலம் துளிர்
இல்ல ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.440).
12/04/2012
அன்று நல்லண்ணம்பட்டி பள்ளியில் நடைபெற்ற மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியில் புத்தக விற்பனை
திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.255).
14/04/2012
அன்று தலைவாசலில் துளிர் இல்ல
ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.280).
16/04/2012 அன்று நல்லண்னம் பட்டி துளிர் இல்ல
ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.280).
22/04/2012 அன்று சாலைப் பணியாளர்கள்
சங்க மாநாட்டில் புத்தக விற்பனை திருமிகு நமச்சிவாயம் அவர்களால் செய்யப்பட்டது.
(ரூ.300).
28/04/2012- தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலை இரவு நிகழ்ச்சியில் புத்தக விற்பனை
திருமிகு நமச்சிவாயம் திருமிகு G. சுரேஷ் அவர்களால்
செய்யப்பட்டது. (ரூ.1645).
19/05/2012 அன்று குஜராத்தி திருமண மண்டபத்தில் வணிகர்
சங்க நிகழ்ச்சியில் புத்தக
விற்பனை திருமிகு நமச்சிவாயம் மற்றும்& கற்பகம் அவர்களால் செய்யப்பட்டது. (ரூ.1935).
15/07/2012
ஞாயிறு அன்று அம்மாபேட்டை மாணிக்கவிநாயகர் கோவிலில் செங்குந்த முதலியார் பள்ளி
நிகழ்ச்சியில் திருமிகு கலையரசன் மற்றும் திருமிகு அய்யனார் ஆகியோரால் புத்தக
விற்பனை செய்யப்பட்டது. (ரூ 600)
28/07/2012
NCSC
வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாமில் புத்தக விற்பனை செய்யப்பட்டது.
(ரூ 6000).
04/08/2012
அன்று துளிர் வினாடி வினா நிகழ்ச்சியில் புத்தக விற்பனை திருமிகு பவளவள்ளி
ஒருங்கிணைப்பில் செய்யப்பட்டது. (ரூ 1840).
19/08/2012 ஞாயிறு அன்று உலக புகைபடத்தின போட்டி நடந்த
பெரியார் பலகலைகழகத்தில் புத்தக விற்பனை திருமிகு பவளவள்ளி ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.
(1090).
08 &
09/09/2012 சனி ஞாயிற்றுக்
கிழமையில் இரண்டு நாள் சேலம் தெய்வீக திருமண
மண்டபத்தில் அறிவியல் இயக்க புத்தக விற்பனை Rs . 195 / Rs.2405
நடைப்பெற்றது. அதில் திருமிகு G. சுரேஷ்,
திருமிகு லால், திருமிகு மணிகண்டன், திருமிகு ராம்பாபு, திருமிகு கற்பகம், திருமிகு
காஸ்ட்ரோ, திருமிகு செங்கோட்டுவேல், திருமிகு ஸ்ரீனிவாசன், திருமிகு கலையரசன்
மற்றும் திருமிகு அய்யனார் புத்தக விற்பனையில் கலந்து கொண்டனர்.
5.சமம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம்
மாநில சமம் உபக்குழு மாநாடு
ஜுலை 30 அன்று மாநில சமம்
உபக்குழு மாநாட்டிற்கு சேலம்
மாவட்டத்திலிருந்து யாரும் செல்லவில்லை.
சமம் மாநில உபக்குழு சார்பாக மதுரை மூட்டா அலுவலகத்தில்
25,26/02/2012 நடைபெற்ற கூட்டத்தில் சேலத்தின் சார்பாக சமம் மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம் அவர்கள் கல்ந்து
கொண்டார்கள்.
சர்வதேச மகளிர் தினப்போட்டி
2011 ஆம் ஆண்டு சர்வதேச
மகளிர் தினப்போட்டியில் மாநில அளவில் ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசு ஆத்தூர்
திரு சின்னசாமி அய்யா நடுநிலைப்பள்ளி மாணவன் மு. ரமேஷ், எட்டாம் வகுப்பு
அவர்களும், கட்டுரைப் போட்டியில் (கல்லூரி அளவில்) மூன்றாம் பரிசு நங்கவள்ளி
கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவி நிரோஷா, முதலாம் ஆண்டு, ஆங்கிலத் துறை அவர்களும்
வெற்றி பெற்றுள்ளனர்.
03/10/2011 அன்று பெண்களும்
வேதியியலும் எனும் சர்வதேச மகளிர் தின கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற கைலாஷ்
கல்லூரி மாணவி திருமிகு P நிரோஷா அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு
வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியில் கல்லூரி முதல்வர் திருமிகு ஜெயந்தி தலைமையில் நடைப்பெற்றது.
மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார் மற்றும்
மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், சேலம் மாவட்ட சர்வதேச மகளிர் தினப் போட்டி
ஒருங்கிணைப்பாளருமான திருமிகு செங்கோட்டுவேல் கலந்து கொண்டனர்.
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் திருமிகு R. ஜெயகுமார்
2012 சர்வதேச மகளிர்
தினப்போட்டிகள் பற்றி பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் பத்திரிக்கைகளில் செய்தி
கொடுக்கபட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகள் கல்லூரிகள், பள்ளிகள், அறிவியல்
ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, மற்றும்
கதை போட்டிகள் நடைப்பெற்றது. ஒவ்வொன்றிலும் மாவட்ட அளவில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு
மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினப்போட்டிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திருமிகு R. ஜெயகுமார் ஆகியோர் மற்றவர்களின் உதவியுடன்
சிறப்பாக செய்திருந்தார். போட்டியில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் மாவட்ட அளவில் சான்றிதழ்
வழங்கபட்டது.
6.வளர்ச்சி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு D. திருநாவுக்கரசு
மாநில வளர்ச்சி உபக்குழு மாநாடு
சேலம் மாவட்ட மாநாடு
24/07/2011 நடைபெற்றதால், மாநில வளர்ச்சி உபக்குழு மாநாட்டிற்கு சேலம்
மாவட்டத்தில் இருந்து யாரும் செல்லவில்லை.
24 & 25 அன்று புதுகோட்டையில்
நடைபெற்ற மாநில வளர்ச்சி உபக்குழு திட்டமிடல் கூட்டத்திற்கு சேலம் நகர கிளை
உறுப்பினர்கள் திருமிகு கார்த்திக் மற்றும் திருமிகு மௌலீதரன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
7.இதர
மாவட்ட
அறிவியல் இயக்க வரலாறு
திருமிகு ஏற்காடு இளங்கோ மற்றும் திருமிகு அய்யனார்
ஆகியோர் 09/09/11 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அறிவியல் இயக்க வரலாறு
தொகுக்கும் வேலையை செய்தனர். இதற்கு மற்றவர்களின் உதவியும் தேவை.
தலைவாசலில் நடைபெற்ற தமிழக முதல்வரின் பிறந்தநாள்
விழாவில் திருமிகு N.
கோபால் அவர்கள் கலந்து கொண்டு தலைவாசல் ஊராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கு அறிவியல் வெளியீடு புத்தகங்களை பரிசளித்தார்.
தானே புயல்
தானே புயல் நிவாரணநிதி ரூ 11,200 வசூல் செய்யபட்டு கடலூர் மாவட்டச் செயலாளர் திருமிகு ரஜினி அவர்களிடம்
அளிக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன்
அவர்கள் முதலவராக இருக்கும் மகேந்திரா பொறியியல் கல்லூரி நிர்வாகம் மூலம் சுமார்
ரூ. 2,00,000க்கு மேல் மதிப்புள்ள
போர்வை மற்றும் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களை கடலூர் மாவட்ட மக்களுக்கு அளித்து
உத்வினார்கள்.
சமச்சீர்
கல்வி வழக்கு நிதி
சமச்சீர்
கல்விக்கான பிரின்ஸ் கஜேந்திரபாபு நடத்திய வழக்குக்கு நிதி மாநில செயற்குழுவில்
கேட்டு கொண்டதற்கிணங்க ரூ 11000 வசூல் செய்யபட்டு, மாநில மையத்திடம் தரப்பட்டது.
குடும்ப
சந்திப்பு விழா
06/10/2011
அன்று மாலை 4.30 மணிக்கு சேலம் உருக்காலை வளாகத்தில் உள்ள நேரு பூங்காவில்
அறிவியல் இயக்க நிர்வாகக்குழு உறுப்பினர்களின் குடுமப சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் மாநில தலைவர் திருமிகு N.மணி, மாநிலச் செயற்குழு
உறுப்பினர் திருமிகு P. சகஸ்ரநாமம், மாவட்டச் செயலாளர்
திருமிகு V. ராமமூர்த்தி, மாவட்டப்
பொருளாளர் திருமிகு G. சுரேஷ், மாவட்டத் துணைத்தலைவர்கள்
திருமிகு K.P. சுரேஷ்குமார், திருமிகு R. பவளவள்ளி, திருமிகு K. சந்திரசேகர், திருமிகு V. சீனிவாசன், மாவட்ட இணைச்
செயலாளர்கள் திருமிகு D. திருநாவுக்கரசு, திருமிகு N.
கோபால், திருமிகு M. கற்பகம், கருத்தாளர் இணைய
ஒருங்கிணைப்பாளர்கள் திருமிகு T.அந்தோணி ஜோதி நம்பி, திருமிகு R. சசிகலா, மாவட்டச் செயற்குழு
உறுப்பினர்கள் திருமிகு கார்த்திக் அம்மாப்பேட்டை, திருமிகு அய்யனார், திருமிகு மீனாட்சி சுந்தரம் (மோகன்நகர்
கிளைச் செயலாளர்), திருமிகு பத்மனாபன் (மோகன் நகர் கிளைப் பொருளாளர்), மாவட்ட
பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு சர்மா (மோகன்நகர் கிளைத்தலைவர்), அம்மாப்பேட்டை
திருமிகு அருண்குமார், திருமிகு மௌலீதரன், திருமிகு கண்ணன் ஆகியோர் குடும்பத்துடன்
கலந்து கொண்ட குடும்ப சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. 38 பேர் கலந்து
கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு தேவையான
ஏற்பாடுகளை மோகன் நகர் கிளைச் செயலாளர் திருமிகு மீனாட்சி சுந்திரம், பொருளாளர்
திருமிகு பத்மனாபன், தலைவர் திருமிகு சர்மா உதவியுடன் மாவட்டத் துணைத்தலைவர்
திருமிகு K.P. சுரேஷ்குமார் செய்தார். இரவு சிற்றுண்டி
மாவட்ட இணைச் செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால்
திருமிகு K.P. சுரேஷ்குமார் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்புடன்,
V. ராமமூர்த்தி
மாவட்டச்
செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக