தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் 19/08/2012 புதன் அன்று சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டத்தை மாவட்ட
தலைவர் முனைவர்.R.சாம்சன்ரவீந்திரன் அவர்கள் தலைமையேற்று “சர்வதேச நீடித்த நிலைத்த ஆற்றல் ஆண்டு-
2012” முன்னிட்டு ’ஆற்றல் வளங்கள்’ எனும் தலைப்பில்
கருத்துரையாற்றி துவங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு P.சகஸ்ரநாமம்
முன்னிலை வகித்தார், மாநில செயலாளர் திருமிகு S.சுப்பிரமணி ’கல்வியும் இன்றைய நிலையும்’ எனும்
தலைப்பில் கருத்துரையாற்றினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினரும் அறிவியல்
எழுத்தாளருமான திருமிகு. ஏற்காடு இளங்கோ அவர்களின் 43வது
புத்தகமான ‘தன்னம்பிக்கையின் நாயகன் ஸ்டீஃபன் ஹாக்கிங்’ புத்தகத்தை மாவட்ட
தலைவர் முனைவர் R.சாம்சன்ரவீந்திரன் வெளியிட இளைஞர் அறிவியல் திருவிழாவின்
மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் M.முருகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயலாளர்
திருமிகு.ராமமூர்த்தி கடந்த ஓராண்டின் செயல் அறிக்கையையும், மாவட்ட பொருளாளர்
திருமிகு.சுரேஷ் கடந்த ஓராண்டின் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்,
அறிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அடுத்த
ஓராண்டிற்கான வேலைகள் திட்டமிடபட்டது. நிகழ்வில் தலைவாசல், ஆத்தூர், ஏற்காடு,
கன்னந்தேரி, நல்லண்ணம்பட்டி, தாரமங்கலம், கோனேரிப்பட்டி, மோகன்நகர், சேலம் மாநகரம்
உள்ளிட்ட அறிவியல் இயக்கக் கிளைகளிலிருந்து 38 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக