அன்புடையீர்,
வணக்கம்,
கொடூரமான "தானே" புயல் காரணமாக கடலோர மாவட்டங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது, குறிப்பாக கடலூர் மற்றும் பாண்டிச்சேரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பெரிதும் பாதித்துள்ளது, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததலும், கடும் புயல் காற்றினாலும் மக்கள் பெரும்பாலான கூரை மற்றும் ஓட்டு வீடுகளை இழந்துள்ளனர். இருக்க இடம் இல்லாமலும் அனைத்து பொருட்களையும் இழந்தும் உள்ளனர். குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளகியுள்ளனர். மரங்கள் வேருடன் வீழ்ந்துள்ளதாலும் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காத நிலையும் போக்குவரத்தும் முடங்கியும் உள்ளது, மின்கம்பக்கள் பெரும்பாலனவை முறிந்துள்ளதால் மின்வசதி இல்லாத நிலையில் இருளில் மூழ்கியுள்ளனர். உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும்,பால்விலை கடுமையாக உயர்ந்தும் உள்ளது. அங்குள்ள நம் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளரிடம் கேட்டப்போது,பால், பால்பவுடர், பிஸ்கட், பாய், போர்வை போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவ வேண்டியுள்ளார்,
ஆகையால் நண்பர்களே தங்களால், இயன்ற பொருட்களையோ நிதியோ கொடுத்து உதவ வேண்டுகிறோம்,
(உதவ தொடர்புக்கொள்ளவும்: 94864 86755, 98945 35048)
இப்படிக்கு
வெ.ராமமூர்த்தி - 94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக