1.அமைப்பு
வாரம்தோறும் வியாழன் மாலை சரியாக 7 மணிக்கு வாரக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் நடைப்பெற்ற வேலைகள் மற்றும் நடைப்பெற வேண்டிய வேலைகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது . மாவட்ட அலுவலகம் தினந்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருமிகு நமசிவாயம் அவர்கள் பார்த்து கொள்கிறார்.
மாநிலச் செயற்குழு கூட்டம்
மாநிலச் செயற்குழு கூட்டம் 04/09/11 அன்று ஈரோட்டில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் திருமிகு V. ராமமூர்த்தி கலந்து கொண்டார். மாவட்ட நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பதற்கு மாநில செயற்குழு அறிக்கை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.
அடுத்த மாநிலச் செயற்குழு கூட்டம் சேலத்தில் உருக்காலையில் நடத்துவது. இடம் மற்ற வசதிகள் ஏற்பாடு செய்வது மாவட்டத் துணைத்தலைவர் திருமிகு K.P. சுரேஷ்குமார்.
நிர்வாககுழு கூட்டம் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு D. திருநாவுக்கரசு அவர்கள் இல்லத்தில் 16/09/11 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் Dr.R. சாம்சன் ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் திருமிகு V. ராமமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ், மாவட்டத் துணைத்தலைவர்கள் திருமிகு K.P. சுரேஷ்குமார், திருமிகு R. பவளவள்ளி, திருமிகு K. சந்திரசேகர், திருமிகு V. சீனிவாசன், மாவட்ட இணச் செயலாளர்கள் திருமிகு D. திருநாவுக்கரசு, திருமிகு N. கோபால் மற்றும் கருத்தாளர் இணைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு அந்தோணி ஜோதி நம்பி ஆகிய 10 பேர் கலந்துக் கொண்டனர்.
கிளை மற்றும் துளிர் இல்லம்.
தலைவாசல் கிளை, புனல் வாசல் பஞ்சாயத்து பகுதியில் துளிர் இல்ல துவக்கவிழா 30.08.2011 அன்று நடைபெற்றது, நிகழ்ச்சியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் மு.முருகேஷன் ஏற்பாடு செய்திருந்தார், பேராசிரியர் பிரகாஷ் ஒருங்கிணைத்தார், மாவட்ட துளிர் இல்ல ஒருங்கிணைப்பாளர் G.சுரேஷ் கலந்துக்கொண்டு அறிவியல் பாடல்களுடன் குழந்தைகளுடன் கலந்துரையாடினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான ஆசிரியர் சாமிநாதன் துளிர் இல்ல செயல்பாடுகள் பற்றி பாடல்களுடன் விவரித்தார், ஆசிரியர் சத்யமூர்த்தி காகித மடிப்புக்களை மூலம் குழந்தைகளுக்கு பல்வேறு தொப்பிகள் செய்யவைத்தார். கற்கும் பாரதம் ஒன்றிய பொறுப்பாளர் திருமிகு.சுப்பிரமணி உள்ளிட்ட அப்பகுதி நண்பர்கள் .பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர், சுமார் 30 குழந்தைகள் கலந்துக்கொண்டனர்.
ஆத்தூர் கிளைக் கூட்டம் 19/09/11 அன்று சின்னசாமி அய்யா நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. 5 பேர் மட்டும் கலந்து கொண்டதால் மீண்டும் ஒரு நிர்வாககுழுக் கூட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் திருமிகு G.சுரேஷ் மற்றும் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு N. கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
2. அறிவியல் கல்வி பிரச்சாரம்
பாண்டிச்சேரியில் நடைபெற்ற எளிய அறிவியல் பரிசோதனை பயிற்சி முகாமிற்கு நமது மாவட்டம் சார்பாக திருமிகு அய்யனார் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிப் பெற்றார்.
IYC
IYC யின் நிகழ்ச்சியாக விஞ்ஞான் பிரச்சார் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் சேர்ந்து மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 09,10 & 11 நவம்பரில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு திருமிகு டோமினிக், திருமிகு ராஜேந்திரசோழன், திருமிகு கணபதி ராணி மற்றும் திருமிகு சகிராபேகம் ஆசிரியர்களின் விண்ணப்பம் மதுரைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.
24 & 25/09/2011 அன்று Dr கெங்குசாமி மெட்ரிக் பள்ளி, மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநில அறிவியல் பிரச்சார உபக்குழுவின் திட்டமிடல் கூட்டத்திற்கு, நமது மாவட்டத்தின் சார்பாக திருமிகு G. சுரேஷ், திருமிகு பாலசரவணன் மற்றும் திருமிகு அய்யணார் கலந்து கொண்டனர்.
துளிர் வினாடி வினா
மாவட்ட துளிர் வினாடி வினா 13/10/11 அன்று உருக்காலை வித்யாமந்திர் பள்ளியில் நடத்த திட்டமிடப்பட்டது. பள்ளிகளூக்கு சுற்றறிக்கை ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P.சுரேஷ்குமார் அவர்களால் 29/09/11 அனுப்பப்பட்டது.
24,25 செப்டம்பரில் நடைபெற்ற மாநில அறிவியல் கல்வி பிரச்சார உபகுழுக் கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளர் திருமிகு G. சுரேஷ், மாவட்ட இணச் செயலாளர் திருமிகு பாலசரவணன் மற்றும் திருமிகு அய்யணார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
மாவட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக காகாப்பாளையம் நாலெட்ஜ் தொழில்நுட்ப கல்லூரியை திருமிகு G. சுரேஷ், திருமிகு K. சந்திரசேகர், கன்னந்தேரி கிளைச் செயலாளர் திருமிகு ஜெயக்குமார், கிளைப் பொருளாளர் திருமிகு பச்சமுத்து ஆகியோர் சென்று கல்லூரி முதலவர் அவர்களை சந்தித்து தேவைகள் பற்றி பேசப்பட்டது.
மாவட்ட மாநாட்டிற்கு தேவைபடும் நிதிக்கு 28/09/11 அன்று நிதிவசூல் செய்யப்பட்டது. கலந்து கொண்டவர்கள் திருமிகு இளங்கோ, திருமிகு ராமமூர்த்தி, திருமிகு G.சுரேஷ், திருமிகு அய்யணார் மற்றும் திருமிகு செங்கோட்டுவேல்.
3.கல்வி
மாலைநேர வகுப்புகள்
02/09/11 அன்று மாலை நேர வகுப்பு ஆசிரியர்களுக்கான கூட்டம் திருமிகு R. சசிகலா அவர்கள் வீட்டில் நடைபெற்றது. அதில் திருமிகு பாலசரவணன், திருமிகு சசிகலா, திருமிகு லால், திருமிகு சரண்யா, திருமிகு அய்யணார், திருமிகு சகஸ்ரமம் மற்றும் திருமிகு கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலை நேர வகுப்புகளை எடுப்பது பற்றியும், யார் எப்போது வகுப்பு எடுக்க செல்வது என்பது பற்றியும் திட்டமிடப்பட்டது.
05/09/2011 அன்று மாணவர்களால் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. திருமிகு அய்யணார் அவர்கள் கலந்து கொண்டார்.
மழை காரணமாக இடையில் தடைபட்டுள்ளது. ஆனால் திருமிகு கார்த்திக், திருமிகு மௌலீதரன், திருமிகு அருண்குமார் மற்றும் திருமிகு அய்யணார் அவர்களால் நடத்தபடுகிறது.
மாற்று திறனாளிகள் நிகழ்ச்சி.
25/09/2011 அன்று செவ்வாய்பேட்டை மாற்று திறனாளிகள் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் திருமிகு இளங்கோ அவர்கள் கலந்துரையாடினார். 30 பேர் கலந்து கொண்டனர். திருமிகு சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டார்.
புத்தக வாசிப்பு முகாம்
19/09/11 அன்று தலைவாசல் கிளையின் சார்பாக ஆத்தூரில் ஆப்டிக் கம்ப்யூடர் செண்டரில் ”பள்ளிக்கூட தேர்தல்” புத்தக வாசிப்பு முகாம் நடைபெற்றது. பேராசிரியர்கள் முருகேசன், ரமேஷ் மற்றும் ராசிபுரம் ஆசிரியைர் தனக்கோடி உள்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
4.அறிவியல் வெளியீடு
30 அறிவுதென்றல் வாங்கப்பட்டது.
துளிர் 20 ஆண்டு சந்தா, 3 உறுப்பினர் ஆயுள் சந்தா மற்றும் 127 உறுப்பினர் ஆண்டு சந்தா அனுப்பப்பட்டது.
50 விழுது சந்தா அனுப்ப்பபட்டது.
மாநில மாநாட்டில் மாவட்ட இணச் செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் ஆர்டர் செய்யபட்ட துணிப்பை மற்றும் பாரதி புத்தகலாயம் புத்தகம் இன்னும் வரவில்லை.
மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் மற்றும் தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் திருமிகு. சந்தோஷ், ரமேஷ், கார்த்திக், ஸ்ரீனிவாசகர் மற்றும் ராஜேந்திரசோழன் ஆகியோர் துளிர் முகவர்களாக மாவட்டத்தில் மொத்தம் 220 துளிர் விற்பனை செய்கின்றனர்.
புத்தக விற்பனை
இந்த மாதம் புத்தக விற்பனை எதுவும் நடைபெறவில்லை.
5.சமம்
மாவட்ட சமம் உபகுழுக் கூட்டத்திற்கு பாண்டிச்சேரி அறிவியல் இயக்க பொருளாளரும், சேலம் மாவட்டத்திற்கான சமம் பொறுப்பாளருமான் திருமிகு ரமேஷ் அவர்கள் கலந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
6.வளர்ச்சி
24 & 25 அன்று புதுகோட்டையில் நடைபெற்ற மாநில வளர்ச்சி உபகுழு திட்டமிடல் கூட்டத்திற்கு சேலம் நகர கிளை உறுப்பினர்கள் திருமிகு கார்த்திக் மற்றும் திருமிகு மௌலீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7.இதர
திருமிகு ஏற்காடு இளங்கோ மற்றும் திருமிகு அய்யணார் ஆகியோர் 09/09/11 அன்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அறிவியல் இயக்க வரலாறு தொகுக்கும் வேலையை செய்தனர். இதற்கு மற்றவர்களின் உதவியும் தேவை.
அக்டோபர் மாதம் செய்ய திட்டமிட்ட வேலைகள்
துளிர் திறனறிதல் தேர்வு 26/11/2011 அன்று நடைபெற உள்ளது. மாவட்ட இலக்கு 3000. ஆகையால் தங்கள் கிளைகளில் பதிவுகளை அதிகம் பதிவு செய்யும்படிக் கேட்டு கொள்கிறோம்.
06/10/11 அன்று சேலம் உருக்காலையில் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் குடும்பமாக சந்திக்கும் நிகழ்ச்சி.
09/10/11 அன்று எளிய அறிவியல் பரிசோதனை மற்றும் கணக்கு பயிற்சி முகாம் நடத்துவது.
13/10/11 துளிர் வினாடிவினா – உருக்காலை வித்யாம்ந்திர் பள்ளியில் நடத்துவது.
தேசிய குழந்தைகள் மாவட்ட மாநாடு 23/10/11 அன்று நாலெட்ஜ் இன்ஸ்டியுட்டில் நடத்துவது.
அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் நடத்துவது. திருமிகு பாலசரவணன் சேலம் நகரக் கிளை உதவியுடன் நடத்துவது. ”ஆளுக்கொருக்கிணறு” என்ற புத்தகம் வாசிக்க எடுத்து கொள்வது.
உபகுழுக்கள் மற்றும் தாலுக்கா குழுக்கள் கூட்டம் நடத்துவது.
பெரியார் பல்கலை கழகத்தில் கிளை மற்றும் துளிர் இல்லம் துவக்குவது.
மரக்கன்று நடுவது.
மகேந்திரா கல்லூரி நிகழ்ச்சி.
ஜேஸிஸ் உடன் விஜயகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சி நடத்துவது.
மாவட்ட அலுவலகத்தின் பெயர் பலகை இல்லை. பெயர் பலகையை மேட்டூர் சுப்ரமணி அவர்கள் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
அன்புடன் வெ.ராமமூர்த்தி -
94864 86755
மாவட்ட செயலாளர்,
சேலம் மாவட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக