தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்ட இரண்டாவது நிர்வாககுழுக் கூட்டம் 16/09/2011 அன்று மாவட்ட இணைச்செயலாளர் திருமிகு. D.திருநாவுக்கரசு இல்லத்தில் மாவட்டத் தலைவர் திருமிகு Dr. R. சாம்சன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. 10 நிர்வாககுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
04/09/2011 அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டம்,
28/08/2011 அன்று நடைபெற்ற சேலம் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாநில மற்றும் மாவட்ட மாநாடுகள் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு வேலைகள் ஒவ்வொரு உபகுழுக்கள் சார்பாகவும் விவாதித்து திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மாநில செயற்குழுக் கூட்டம் நமது சேலம் மாவட்டத்தில் இரும்பாலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இடம், மற்ற வசதிகள் மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் அவர்கள் ஏற்பாடு செய்வது.
அடுத்த 2013ல் நடைபெறும் 17வது மாநில மாநாடு சேலத்தில் நடத்துவது.
அமைப்பு
தாலுக்கா ஒருங்கிணைப்பாளர்கள் அவரவர்களது தாலுக்காவில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்டு ஒரு கூட்டம் 2011 அக்டோபர் 15க்குள் நடத்துவது. அதில் கிளைகள் இல்லாத ஒன்றியங்களில் மற்றும் கிராமங்களில் 2011 நவம்பர் மாதத்துக்குள் கிளைகள் அமைக்க திட்டமிடுவது.
மாதம் ஒரு முறை மாவட்ட உபகுழுக்கள் கூட்டம் நடத்தி, அதில் வேலைகள் திட்டமிட்டு மாவட்டம் முழுவதும் நடத்துவது.
செப்டம்பர் 3வது வாரத்தில் அறிவியல் கல்வி பிரச்சாரம் மற்றும் வளர்ச்சி உபகுழுக்களின் மாவட்ட கூட்டம் நடத்துவது.
பெரியார் பல்கலைகழகத்தில் தொடர்பு கொண்டு கிளை, துளிர் இல்லம் மற்றும் மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வது. பொறுப்பு திருமிகு P. சகஸ்ரநாமம்.
அக்டோபர் 6ந் தேதி வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஒமலூரில் நிர்வாககுழு உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் குடும்பவிழா நடைபெற உள்ளது.
ஆத்தூர் கிளை மாநாடு 19/09/2011 அன்று நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்தின் சார்பாக ஆத்தூர் தாலுக்கா ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட இணைச்செயலாளருமான திருமிகு N. கோபால் மற்றும் திருமிகு G.சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்வது.
சென்னையிலுள்ள அறிவியல் இயக்க உறுப்பினர்களின் குழந்தைகளை ஒருங்கிணைத்து மாநிலத்தின் சார்பாக நடைபெறவிருக்கும் கூட்டதிற்கு, நமது மாவட்டத்தில் சென்னையில் தங்கியுள்ள நமது குழந்தைகள் பங்கு பெற, குழந்தைகளின் பெயர் மற்றும் கைப்பேசி எண்களை சேகரித்து மாவட்ட செயலாளர் திருமிகு ராமமூர்த்திக்கு 94864 86755க்கு குறுந்தகவல் அல்லது போனில் தகவல் கொடுக்கவும்.
அறிவியல் கல்வி பிரச்சாரம்
எளிய அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதம் பயிற்சி முகாம் 09/10/2011 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை சேலம் அரசுக் கலைக்கல்லூரியில் நடத்துவது. இதில் பொதுக்குழு, செயற்குழு, நிர்வாககுழு உறுப்பினர்கள் மற்றும் அறிவியல் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொள்வது. இதற்கு ஆகும் செலவிற்கு மேட்டூர் கிளை சார்பாக திருமிகு T.ஆண்டனி ஜோதி நம்பி அவர்கள் ரூ 1000 நன்கொடை அளித்துள்ளார்.
துளிர் வினாடிவினா காலம் குறைவாக உள்ளதால் முடிந்தளவு பள்ளிகளை தொடர்பு கொண்டு நடத்துவது. பொறுப்பு. மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார்.
துளிர் திறனறிதல் தேர்வு நவம்பர் 26ல் நடைபெறவுள்ளது. பொறுப்பு மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார்.
சேலம் Tree club, வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இணைந்து சாலையோரம் மரம் நடுவது. பொறுப்பு மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார்.
மகேந்திரா பொறியல் கல்லூரியுடன் இண்ந்து நடத்தவுள்ள நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார்.
அக்டோபர் 19,20 & 21 ல் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் நடைபெறவிருக்கும் அறிவியல் IYC – 2011 ஆசிரியர் பயிற்சி முகாமில் ஆசிரியர்களை பங்கு பெற செய்யவது.
மாநில அறிவியல் கல்வி பிரச்சார உபகுழு SEP 24 & 25 கூட்டத்திற்கு மாவட்ட அறிவியல் பிரச்சார உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு K.P.சுரேஷ்குமார், துளிர் இல்ல பொறுப்பாளர் திருமிகு G.சுரேஷ் கலந்து கொள்வது.
ஜேசிஸ்யுடன் இணைந்து நடக்கவுள்ள அறிவியல் நிகழ்ச்சியை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் திருமிகு விஜயகுமார் அவர்களுடன் இணைந்து மாவட்ட துணைத்தலைவர் திருமிகு K.P.சுரேஷ்குமார் நடத்துவது.
அறிவியல் வெளியீடு
மாநிலத்தில் நடைபெற்வுள்ள நவம்பர் தேசிய புத்தக வாரத்தையொட்டி நடைபெறும் பயிற்சி முகாமிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு N. கோபால் கலந்து கொள்வது.
நவம்பர் தேசிய புத்தக வாரத்திற்கான புத்தக விற்பனையை மாவட்ட அறிவியல் வெளியீடு உபகுழு கூடி திட்டமிடுவது.
3 மாததிற்கு ஒருமுறை இருப்பு பட்டியல் எடுத்து மாநிலத்திற்கு அனுப்புவது.
மாநில மாநாட்டில் மாவட்ட இணைச்செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் பணம் கொடுத்து ஆர்டர் செய்த துணிப்பை இன்னும் வரவில்லை. அதை அவர் துணிப்பை தயாரிப்பாளரை தொடர்புக் கொண்டு வரவழைப்பது.
மாவட்ட இணைச்செயலாளர் திருமிகு N. கோபால் அவர்களால் பாரதி புத்தகலாயத்தில் கொடுக்கப்பட்ட புத்தக ஆர்டரை, அவர்களை தொடர்பு கொண்டு வரவழைப்பது.
வளர்ச்சி
மாவட்ட வளர்ச்சி உபகுழுவை கூட்டி மாவட்டத்தில் கள ஆய்வு செய்து நாம் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுவது. எருமாபாளையம் கல்குவாரி பிரச்னை, வெங்காய தாமரை, முள்மரம், பார்த்தீனியம் செடிகள், பிளாஸ்டிக் போன்ற பிரச்னைகளை எவ்வாறு கையாளுவது என அக்கூட்டத்தில் திட்ட்மிடுவது. பொறுப்பு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு. D.திருநாவுக்கரசு. மாநில ஒருங்கிணைப்பாளர் திருமிகு டி.பி. ரகுநாத் அவர்களை அழைப்பது.
கல்வி
அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் அக்டோபர் மாதத்தில் நடத்துவது. புத்தகம் ஆளுக்கொரு கிணறு. பொறுப்பு மாவட்ட இணைச்செயலாளர் திருமிகு J. பாலசரவணன்.
ஆசிரியர் இணையம் அமைப்பது, உறுப்பினர்கள் சேர்ப்பது. பொறுப்பு மாவட்ட இணைச்செயலாளர் திருமிகு J. பாலசரவணன்.
சமம்
மாவட்ட சமம் உபகுழுவை கூட்டி அதற்கு நமது மாவட்டத்திற்கான சமம் பொறுப்பாளரை வரவழைத்து ஒரு கூட்டம் நடத்துவது. அதில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிடுவது. பொறுப்பு மாவட்ட சமம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு M.கற்பகம். அதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் அவர்களை அழைப்பது.
அன்புடன்
வெ. ராமமூர்த்தி,
மாவட்டச் செயலாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக