இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

ஞாயிறு, ஜூலை 17, 2011

சேலம் மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2011 வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம் - 2011


சேலம் மாவட்ட வழிகாட்டி ஆசிரியர் பயிற்சிமுகாம் கடந்த 09-07-2011(சனிக்கிழமை) மற்றும் 16-07-2011 (சனிக்கிழமை) அன்றும்  சேலம் நகரம் மற்றும் தாரமங்கலம் பகுதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற்றது..
சேலம்
நாள்    : 09-07-2011
இடம்  : அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை, சேலம், 636001.
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
தலைமை       : திருமிகு. சகஸ்ரநாமம், மாநில செயற்குழு உறுப்பினர்.

வரவேற்புரை  : திருமிகு.க.செங்கோட்டுவேல், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர், NCSC 2011

வாழ்த்துரை   :  திருமிகு. முகமது கலீல் - தலைமை ஆசிரியர்,
                                    அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டை, சேலம்

கருத்துரை (1) : முனைவர். என்.விஜயகுமார், உதவி பேராசிரியர்,  
     புவியியல் துறை, அரசு கலைக் கல்லுரி, சேலம்.

கருத்துரை (2) : திருமிகு. கே.பி.சுரேஷ்குமார், மாநில செயலாக்கக்குழு, உறுப்பினர், NCSC 2011

கருத்துரை (3) : திருமிகு. டி.திருநாவுகரசு, உதவி பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,                                                    
                      அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லுரி, சேலம்.

கருத்துரை (4) : திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி, மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர், NCSC 2011

பயிற்சிமுகாமில் மாவட்டத்தின் தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர், பெத்தநாயக்கம் பாளையம், வாழப்பாடி, ஏற்காடு, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, அயோத்தியாபட்டினம், சேலம் நகரம், சேலம் கிராமம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலார்கள் 107 பேர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட இணை செயாலாளர் திருமிகு.J.பாலசரவணன்  (உணவு, தேநீர்), கன்னந்தேரி கிளை பொறுப்பாளர் திருமிகு, K.சந்திரசேகர்(LCD projector, ஒலி பெருக்கி ) கன்னந்தேரிகிளை செயலாளர் திருமிகு.R.ஜெயகுமார்,  மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு.மௌலிதரன், மற்றும் திருமிகு,அருண் ( பிரதி எடுத்தல், அரங்க ஏற்பாடுகள், பதிவுகள், முன் ஏற்பாடுகள்), திருமிகு,நமசிவாயம் (புத்தக விற்ப்பனை), மாவட்ட செயலாளர் திருமிகு.ராமமூர்த்தி, திருமிகு.ஹேமா, திருமிகு.முகுந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறக்க உதவினர்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.G.சுரேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரின் அனுமதி ஆணை பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி முன்னேற்ப்பாடுகளை செய்தார்.  .

தாரமங்கலம்
நாள்    : 16 - 07 - 2011
இடம்  : ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி, தாரமங்கலம்.
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

தலைமை       : திருமிகு. சந்தோஷ்குமார் – தாரமங்கலம் கிளைத் தலைவர்,

வரவேற்புரை  : திருமிகு. ரமேஷ் – தாரமங்கலம் கிளைச் செயலாளர்,

நிகழ்ச்சி தொகுப்பு & NCSC விளக்கவுரை : திருமிகு. G.சுரேஷ்,
                 மாவட்ட ஒருங்கிணைப்பாளர், NCSC 2011

கருத்துரை (1) : முனைவர்.வெ.பாலசுப்ரமணியன்வேளாண்மை அலுவலர்.
                       தமிழ்நாடு அரசு மண்பரிசோதனை நிலையம், சேலம்.

அனுபவ பகிர்வு : 2010 தேசிய அளவில் கலந்துக்கொண்ட சேலம் மாவட்ட இளம் விஞ்ஞானிகள், ஜோட்ஷான மற்றும் குழுவினர் B.தனுஷ்ய  R.E.கிருஷ்ணா சங்கீதா  S.ஷர்மதா  R.பூஜப்ரிய.

கருத்துரை (2) : திருமிகு. டி.திருநாவுகரசு, உதவி பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை,                                                    
                      தமிழ்நாடு அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லுரி, சேலம்.

கருத்துரை (3) : திருமிகு.உமாசங்கர், மாநில கருத்தாளர், NCSC 2011
   
கருத்துரை (4) : திருமிகு. கே.பி.சுரேஷ்குமார், மாநில செயலாக்கக் குழு உறுப்பினர், NCSC 2011

நன்றியுரை      : திருமிகு. கார்த்தி – தாரமங்கலம் கிளைப் பொருளாளர்,



     பயிற்சிமுகமில் மாவட்டத்தின் சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம், கொளத்தூர், தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, காடையம்பட்டி ஆகிய ஒன்றியங்களில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலார்கள் 62 பேர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு.அந்தோனி ஜோதிநம்பி, மாவட்ட இணை செயாலாளர் திருமிகு.க.செங்கோட்டுவேல், தாரமங்கலம் கிளை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திருமிகு.ஜானகிராமன், திருமிகு.முரளிதரன், திருமிகு.சுரேஷ், திருமிகு.இமாயாபாலன், திருமிகு.பழனிவேல் உள்ளிட்டோர் நிகழ்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர்  மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திருமிகு.மௌலிதரன், மற்றும் திருமிகு,அருண் ( பிரதி எடுத்தல், அரங்க ஏற்பாடுகள், பதிவுகள், முன் ஏற்பாடுகள்), திருமிகு,நமசிவாயம் (புத்தக விற்ப்பனை), சேலம் மாநகரக் கிளை தலைவர் திருமிகு.கற்பகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி சிறக்க உதவினர்.


நிகழ்ச்சியில் 28 ஆசிரியர்கள் அறிவியல் இயக்கத்தில் உறுப்பினராகினர், ரூபாய் 2400 புத்தக விற்ப்பனை நடைப்பெற்றது. 
நிகழ்ச்சி பற்றிய செய்திகள் தொலைக்காட்சிகளிலும் நாளிதல்களிலும் வெளியிடப்பட்டது.
   
அன்புடன் 
G.சுரேஷ், 98945 35048 
மாவட்ட ஒருங்கிணைப்பாளர். NCSC - 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக