இயக்கம் பற்றி

எனது படம்
சேலம், தமிழ்நாடு, India
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிபபுணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.

நாள்காட்டி

சனி, பிப்ரவரி 26, 2011

வாராந்திர கூட்டம் 24-02-2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சேலம் மாவட்டத்தின் வாராந்திர கூட்டம் அறிவியல் இயக்க அலுவலகத்தில் 24-02-2011 ( வியாழன் ) அன்று மாலை சரியாக 7 மணியளவில் நடைபெற்றது,

I) நடைபெற்ற வேலைகள்

1) மாநில கல்வி உபகுழு கூட்டம் :
சென்னை தரமணி இந்திய கணித அறிவியல் மையத்தில் 19/02/2011 அன்று நடைபெற்ற மாநில கல்வி உபகுழு கூட்டத்தில் சேலம் மாவட்டம் சார்பாக கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் திருமிகு.பாலசரவணன் கலந்துகொள்ள இருந்தார், ஆனால் குழந்தை பிறந்த காரணத்தினால் கலந்துகொள்ள இயலவில்லை,

2) அறிவியல் தினத்திற்கான துண்டறிக்கை தயார் செய்யப்பட்டது,

II)திட்டமிட்ட வேலைகள்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் - மாவட்ட கருத்தாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெரைள்ளது சேலம் மாவட்ட கருத்தாளர் திருமிகு.கற்பகம் கலந்துகொள்ள உள்ளார்.

1) தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28

சேலம் மாவட்டம் - விநாயகா வித்யாலய பள்ளியில் - சர்வதேச வனவள ஆண்டு - நலுவுபட காட்சி - மாவட்ட இணை செயலாளர் திருமிகு.K.P.சுரேஷ்குமார், அறிவியல் விநாடி வினா - கருத்தாளர் இணையம் ஒருங்கிணைப்பாளர் திருமிகு.திருநாவுகரசு, சர்வதேச வேதியல் ஆண்டு குறும்படம் & தொலைநோக்கி நிகழ்ச்சி - திருமிகு. ஜெயமுருகன்.

ஆத்தூர் கிளை மற்றும் G.D.நாயுடு துளிர் இல்லம் சார்பாக சின்னசாமியா நடுநிலை பள்ளியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு.தில்லைக்கரசி அவர்களின் மந்திரமா தந்திரமா அறிவியல் விழிப்புணர்வு மற்றும் அறிவியல் சிறப்புநிகழ்ச்சி நடத்த உள்ளனர்,

மோகன் நகர் கிளை - ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி

தாரமங்கலம் கிளையில் - அறிவியல் நிகழ்ச்சி

ராஜாஜி தொழில்நுட்ப கல்லூரியில் எளிய அறிவியல் பரிசோதனை - மாவட்ட இணை செயலாளர் திருமிகு.K.P.சுரேஷ்குமார், மனிதன் தோன்றியது எப்படி - நலுவுபட காட்சி - மாநில செயற்குழு உறுப்பினர் திருமிகு.சகஸ்ரநாமம் ,அறிவியல் புத்தக கண்காட்சி - திருமிகு.நமசிவாயம், திருமிகு. முகுந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக